Wednesday, April 13, 2011

அரவானிகள்

மூ ன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-4

கடந்த மூன்று பதிவுகளின் முடிவாக, 'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரில் தவறாகவும், 'திருநங்கை' என திரித்தும் மற்றும் சில கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்"... உண்மையில் யார் யார் என்பதையும், அதில் அறுதிப்பெரும்பான்மையோர் (>95%) யார் என்பதையும் பார்த்தோம். 

=>'இவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது? 

வீட்டைவிட்டு ஓடிவந்த/விரட்டப்பட்ட இவர்களில் பெரும்பான்மையோர் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக என்ன தொழில் செய்கிறார்கள் என்பதையும் பல சுட்டிகள் வாயிலாக அறிந்துவிட்டோம். இனி, அந்ததொழிலுக்கு' அரசு அங்கீகாரம் இல்லாதது மட்டுமல்ல... சட்டப்படி குற்றமாகவும் பார்க்கப்பட்டு ஆயுள்தண்டனை வரை மிகக்கடுமையான தண்டனைகள் இருந்தன என்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய தடைக்கல்..! அப்போது என்ன செய்தார்கள்? '

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்” --- என்றுதான் சொன்னது.

இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் நிபுணர் குழுக்கள் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கில் ஆணுடன் ஆண் பாலியல் உறவு வைப்போர் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சம் என்று கூறியுள்ளது..! இத்தனை லட்சம் பேருக்கான 'தொழில்முன்னேற்றத்துக்காக' குரல்கொடுக்கும் ஒர் அமைப்புதான் Naz Foundation.

/// The petitioner in the Delhi High Court, Naz Foundation has been working for the rights of LGBT (Lesbian, Gay, Bisexual, Trans-gender) filed a public interest litigation (PIL)...///

---இதில் உள்ள அதீத நகைச்சுவையை கவனித்தீர்களா? இங்கே... public interest- பொதுநலன் என்றால் LGBT நலனா? எனில் பொதுமக்கள் எனப்படுவோர் LGBT-க்களா? அதெப்படி... யூதர் நலனுக்காக ஹிட்லர் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்..!?! ஆரம்பமே முரண்பாட்டிலே என்றால் அப்புறம் தீர்ப்பு எப்படி இருக்கும்..? 

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ டெல்லி ஹைக்கோர்ட் கடந்த ஜூலை, 2009-ல் தடை செய்து விட்டது..! இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல்-19, 2011 அன்றிலிருந்துதான் விசாரணையையே துவக்க உள்ளது. 'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று அறிவித்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 127-வது நாடாக சேர்ந்துள்ளது. 

ஆனால், எய்ட்ஸ் பரவ ஓரினச்சேர்க்கை மட்டுமே காரணம் அல்ல என நாஸ் அமைப்பு, கூறியுள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது..!?! இது 'சரி' என்றால், ஒரு கப்பலில் பல ஓட்டைகள் இருந்தால், 'இந்த ஒரு ஓட்டை மட்டுமே கப்பல் கடலில் மூழ்க காரணம் இல்லை' என்று கூறி... அப்புறம் எல்லா ஒட்டைகளுக்கும் இதே விதியை கூறி அனைத்தையுமே அடைக்காமல் அப்படியே திறந்த நிலையில் விட்டுவிடுவதா? இது... கப்பலை காப்பாற்றும் பொறுப்பான ஒரு கேப்டனின் வார்த்தை போல தோன்றவில்லையே..? இவ்விதிப்படி, இனி விபச்சாரம் கூட சட்டப்பூர்வம் ஆக்கப்படலாமே..? டிஸ்போசபில் சிரிஞ் கூட ஒழிக்கப்படலாமே..?

இவர்கள் எய்ட்சை எப்படி ஒழிக்க முயல்கிறார்கள்..? அதற்கான காரணிகளை முதலில் தடை செய்தார்களா? காண்டம் கம்பெனி காரர்கள் தங்கள் சரக்குக்கு செலவழித்து விளம்பரம் செய்ததைவிட, அதிகமாய் அரசு செலவு செய்து காண்டத்துக்கு விளம்ரம் செய்வதைத்தானே பார்க்கிறோம்..?  எந்த ஒரு ஒரு சட்டம் போட்டாலும் அதை  அமுல்படுத்தி  கண்காணிக்க  அதிகாரிகள் / கண்காணிப்பாளர்கள்   தேவை. அப்போதுதான் அந்த சட்டம் நடைமுறையில் பலனளிக்கும் என்பது நாம் அறிந்ததுதான். இந்த அடிப்படையில், இதுவரை எந்த அதிகாரியாவது அல்லது எந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியராவது இந்த 'எய்ட்ஸ் தடுக்க ஆணுறை உபயோகிங்கள்' என்ற ஒரு அறிவுரை 'சரியாக பின்பற்ற படுகிறதா' என்று விபச்சாரம் நடக்கும்போது சோதனை செய்ததுண்டா? இதுவரை, 'அறிவுரையை பின்பற்றாதவர்என எவரேனும் பிடிபட்டுள்ளாரா? பிறகு எப்படி இந்த விளம்பர முயற்சி எய்ட்ஸ் தடுப்பில் பலனளிக்கும் என்று இன்னும் நம்புகிறார்கள்?
 
இந்த சட்டத்தடை, இவர்களின் (மூன்றாம்பாலினம்..?) பாலுணர்வு வேட்கைக்கு ஒரு வடிகாலாக அமையும் என்று கூறினால், அதை தனி மனிதனாக எப்படி அவரால் நடைமுறைப்படுத்த இயலும்? இன்னொருவர் (முதல்பாலினம்..?)அல்லவா இதற்கு தேவைப்படுகிறார்? அதே அளவுகோலை மற்றதரப்பினரிடமும் ஏன் அரசும் நீதித்துறையும் கடைப்பிடிக்கவில்லை? 

அதாவது..., மனித உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பும் முக்கியத்துவமும்  உண்டுதானே..? எந்த வேலைக்கு எந்த உறுப்பு முக்கியமோ அது ஒருவரிடம் இல்லை என்றாலோ அல்லது அது இயங்காது என்றாலோ அவருக்கு அந்த வேலை அரசினால் வழங்கப்படாதுதானே..? மாறாக அவருக்காக உதவ முன்வரும் வேறு ஒரு உதவியாளருடனும் அதை அனுமதிப்பதில்லைதானே?

உதாரணமாக, கைகளில் ஒரு விரல் இல்லாவிட்டாலும் தட்டச்சர் ஆக ஆசைப்படும் ஒருவருக்கு அந்தபணியை தர மாட்டார்கள் அல்லவா?வாய்பேச முடியாதவர்அவர் ஆசைப்பட்டாலும் வானொலியில் செய்தி வாசிக்க விட மாட்டார்கள் இல்லையா? ஒரு காலை இழந்தவரை அவர் 'தனக்கு முடியும்' என்றாலும் அரசு பேருந்து ஓட்டுனராக்க மாட்டார்களே..? காது கேளாதோருக்கு அவர் விருப்பத்தின்படி எல்லாம் டெலிஃபோன் ஆப்பரேட்டர் போஸ்ட் கொடுப்பார்களா என்ன..? 'எங்கள் எண்ணத்துக்கு விரோதமாக உள்ளது' என இதற்கெல்லாம் யாரும் நீதிமன்றத்தை அணுகியது உண்டா..?

குள்ளமாக பிறந்ததும், மார்பு சுற்றவளவு குறைவாகவும் இருந்தால் அது யார் குற்றம்? இதனடிப்படையில் ராணுவத்திற்கோ காவல்துறைக்கோ ஊழியர்கள் சேர்க்கும்போது அவர்கள் கழிக்கப்படுகிரார்களே? இதற்காகவெல்லாம் அரசோ, நீதித்துறையோ ஒருபோதும் கரிசனப்பட்டது இல்லையே..? இதுதானே அனைவரும் ஏற்றுக்கொண்ட பொதுவான நடைமுறை?  

இது போலத்தானே பாலினப்பெருக்க உறுப்பும் ஒரு உறுப்பு..? அதற்கென்று வேலை கொடுக்க அரசிடம் எந்த பணியும் தற்சமயம் இல்லையே!?! இயக்கத்தில் அதிலேதும் குறை என்றால் சம்பந்தப்பட்டவரே தன்னை ஒருமாற்றுத்திறனாளி'  என்று கருதிக்கொண்டு, அவர் இந்த விஷயத்திலிருந்து தன் எண்ணத்தை வேறு செய்கைகளில், வேறு வேலைகளின் பக்கம் திருப்பி விடுவது தானே சரியான அணுகுமுறை? அதைவிடுத்து, 'அவர் விரும்பிவிட்டார்' என்பதால், 'அவருக்கு அந்த வேலையைத்தான் கொடுப்பேன்' என... முன்வாசல் வழியாக தர முடியாவிட்டாலும் அட்லீஸ்ட் பின்வாசல் வழியாகவாவது அவர் விருப்பத்துக்காக வேண்டி தீர்ப்பளிப்பதுஎன்பது எவ்வகையில் சரி? '

தமிழகஅரசு அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்திருக்கிறது. இதில் பயன்பெறுபவர்களுக்கு பாலியல் சான்று எந்த அரசுமருத்துவர் வழங்குவார்? இதில் யாரையெல்லாம் அரவாணிகள் என்று கருதுகிறது அரசு? என்ன வரைமுறை?

இருபாலோர் படிக்கும் கல்லூரிகளில் அரவாணிகளை  'மூன்றாம் பாலினம்' எனக்கூறி, 'மூன்றாம் பாலினத்தோருக்கு' என தனி இடம் ஒதுக்கப்படும்... என்றால், திடுதிப் என்று அவர்கள் எங்கனம் கல்லூரியில் முளைத்தார்கள்? கல்லூரிகளில் வழங்கப்படும் தனி இடம், பள்ளிகளில் ஏன்  வழங்கப்படவில்லை? பிளஸ் டூ தேர்வுக்கு பின்னால்தான் இவர்கள் 'பிறப்பார்களோ'..? 


'இவர்களுக்கு' உணவு விநியோக குடும்ப அட்டைகள் வழங்கப்படுமாம். ஒரே பாலினத்தவர் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தால் குடும்ப அட்டை கிடைக்கிறது எனில்பல ஆண்கள் பிரம்மச்சாரிகளாய் ஒரே வீட்டில் இருந்தால் குடும்ப அட்டை கிடைக்குமா? உழைக்கும் மகளிர் விடுதியில் ஒன்றாய் தங்கி இருக்கும் பெண்களுக்கும் இனி குடும்ப அட்டை கிடைக்குமா? 'குடும்பம்' என்றால் இனி தமிழக அரசு அகராதியில் என்ன அர்த்தம்?

இன்றைய ஓரினச்சேர்க்கை பிரியர்கள் எல்லாரும் அதன் முதல் தலைமுறையினர்தானே..? இவர்களுக்கு இப்போதுள்ள குஷி இன்னும் சில நாளில் மறையலாம். ஆனால், அரசுக்கும் நீதித்துறைக்கும் இனி புதுப்புது தலைவலிகள் ஆரம்பமாகி விடும் என்பது மட்டும் உறுதி. ஒரு மூன்றாம் பாலினம் தன்னை இன்னொரு பாலினம் 'டீசிங்' செய்வதாகவோ அல்லது தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வேறொரு பாலினத்தின் மீது புகார் தெரிவித்தாலோ, தந்தையின் சொத்துப்பிரித்தல் விவகாரத்திலோ, வாரிசு சுவீகாரம் செய்வதிலோ, திருமனச்சட்டத்திலோ பல பிரச்சினைகள் வருமே..! சட்டங்கள் எல்லாமே நம் நாட்டில் ஆண்-பெண்களுக்கானவை ஆகவே உள்ளனவே..? இனி மூன்றாம் பாலினத்துக்கு என புதிய சட்டங்கள் அல்லவா இயற்ற வேண்டும்?

பாஸ்போர்ட்டில் 'others' என்று போட்டுவிட்டால், அதை தடை செய்து இருக்கும் நாட்டிற்குள்  இவர்களால் எப்படி நுழைய முடியும்? ஆப்ரிக்க, மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகள் உட்பட 80 நாடுகள், இது சட்டவிரோதம் என்று கூறி, கடுமையான தண்டனை அளிக்கின்றனவே..!


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::