Showing posts with label இன்றைய செய்திகள். Show all posts
Showing posts with label இன்றைய செய்திகள். Show all posts

Sunday, January 11, 2015

இந்து தாய்மார்கள் இந்து மதத்தைக் காக்க 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்-பாஜக எம்.பி. சாக்‌ஷி !

இந்து தாய்மார்கள் இந்து மதத்தைக் காக்க 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்-பாஜக எம்.பி. சாக்‌ஷி !

இந்து தாய்மார்கள் இந்து மதத்தைக் காக்க 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்-பாஜக எம்.பி. சாக்‌ஷி !



இந்து மதத்தைக் காக்க இந்து தாய்மார்கள் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்த மதபோதக கூட்டத்தில் பேசிய சாக்‌ஷி மகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, “நாம் இருவர் நமக்கொருவர் என்ற கொள்கையை நாம் இப்போது பின்பற்றி வருகிறோம். ஆனால் சில வஞ்சகர்கள் ஆண்- ஆணுடன், பெண்- பெண்ணுடனும் உறவு கொள்வதில் தவறில்லை என பிரச்சாரம் செய்கின்றனர்.
முந்தைய ஆட்சியும் இத்தகைய கலாச்சார சீரழிவை தவறில்லை என்றனர். இந்து மதத்தை வளர்க்க இந்து தாய்மார்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.
ஒரு குழந்தையை தேச பாதுகாப்புக்காக ராணுவத்துக்கும், ஒரு குழந்தையை கலாச்சார பாதுகாப்புக்காக சந்நியாசியாகவும் ஆக்குங்கள்.
ஒரு குறிப்பிட்ட மதத்தில் நான்கு மனைவியரை வைத்துக் கொள்வதும் நாற்பது குழந்தைகளை பெற்றுக் கொள்வதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இனி அது எடுபடாது. இந்து தாய்மார்கள் இந்து மதத்தைக் காக்க 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பசுவதை செய்பவர்களுக்கும், மதமாற்றம் செய்பவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இக்குற்றங்களுக்கு அரசு விரைவில் மரண தண்டனை விதிக்கும். கர் வாப்ஸி நிச்சயம் மதமாற்றம் இல்லை. ராமர் கோவில் அயோத்தியில் நிச்சயம் கட்டப்படும். அதில் மாற்றமில்லை” என்று அவர் பேசினார்.
சாக்‌ஷி மகராஜ் கருத்துக்கு உ.பி. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, “இந்தியாவின் மக்கள் தொகை கொள்கையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாஜக தலைவர் என முக்கிய தலைவர்கள் இவ்விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மதரஸாக்களில் தீவிரவாதம் பயிற்றுவிக்கப்படுகிறது என்றும், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தர் என்ற கருத்துகளை கூறி ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்த சாக்ஷி மகராஜ்.
- See more at: http://www.thoothuonline.com/archives

Friday, August 1, 2014

காஸா படுகொலைகளும்-அரபு நாடுகளும்...

காஸா படுகொலைகளும்-அரபு நாடுகளும்...


இஸ்ரேலின் காஸா கொலைகளை அரபு நாடுகள் வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்ப்பதேன்?
 
தங்களது, இனம், மொழி, மார்க்கத்தையே சார்ந்த பாலஸ்தீன மக்களை, அதிலும் குறிப்பாக சின்னஞ்சிறு சிறார்களை கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை அரபு நாடுகள் சிறிதும் சஞ்சலமின்றி வேடிக்கைப்பார்த்துக்கொண்டு அசைவற்றிருப்பது உலகமக்களை வியப்பிலாழ்த்தியிருப்பது என்னவோ உண்மை.
ஆம்! அதுவும் தங்களது பரம எதிரி நாடான இஸ்ரேலாலேயே இந்த கொடூரம் நடைபெறுவதை அவைகள் கண்டும் காணாமல், குறைந்த பட்சம் நீலிக்கண்ணீர் கூட வடிக்காமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தாலும் இதற்குப் பின்னால் ஒவ்வொரு அரபு நாட்டின் அப்பட்டமான சுயநலமே காரணம் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் ''கொலைவெறி''யாட்டத்தை அரபு நாடுகள் சொல்லி வைத்தாற் போல அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ''கொலைவெறி''இஸ்ரேலுக்கு ஆதரவாக அவை ஓரணியில் நிற்கின்றன. காரணம் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எவ்வளவோ பரவாயில்லை என்று அரபு நாடுகள் நினைப்பதால்தான் இப்படி அமைதி காப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படியாவது ஹமாஸை ''கொலைவெறி''இஸ்ரேல் அழித்தொழிக்கட்டும் என்று அரபு நாடுகள் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. நம்மால்தான் ஹமாஸை தட்டி வைக்க முடியாது. இஸ்ரேலாவது அதைச் செய்யட்டும் என்று அரபு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தபோது அதற்கு அரபு நாடுகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இம்முறை அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் இஸ்ரேலின் ''கொலைவெறி'' மூர்க்கத்தனம் குதியாட்டம் போடுகிறது..
எகிப்துதான் இந்த இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகளின் தலைவர் போல திகழ்கிறது. கடந்த ஆண்டு எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தனர். அவர்களுக்குத் துணையாக ராணுவமும் இருந்தது. இப்போது எகிப்து ராணுவத்தின் வசம்தான் உள்ளது. தற்போது எகிப்து தான் இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறது.
அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் ஆகிய நாடுகளும் எகிப்துடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறியுள்ளன. சவூதி அரேபியாவும் இந்தப் பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது.
ஹமாஸ் தலையெடுத்து விட்டால், வலுவடைந்து விட்டால் தங்களது நாட்டையும் அது பாதிக்கலாம் என்ற அச்சத்தால்தான் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்த அரபு நாடுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் ஆய்வாளரும், முன்னாள் மத்திய கிழக்கு சமரசப் பேச்சுக் குழுவில் இடம் பெற்றவருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகையில், இது வரலாறு காணாத அமைதி. இப்படி ஒரு நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இந்த நாடுகள் வேடிக்கை பார்க்க காரணம் உள்ளது. ஹமாஸ்தான் அவற்றின் முக்கிய பயம். அதுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இவர்கள் திரும்பக் காரணம்.
உண்மையில் எகிப்துதான் ஹமாஸுக்கு முக்கிய ஆதரவாளராக ஒரு காலத்தில் திகழ்ந்த நாடாகும். ஆனால் இந்த முறை இஸ்ரேலுக்கு சாதகமான முறையில் அது ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை அறிவித்தபோது ஹமாஸ் அதிர்ந்து போனது. அந்த திட்டத்தை அது உடனடியாக நிராகரித்தது. அந்தத் திட்டத்தில் இஸ்ரேலின் கோரிக்கைகள்தான் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன. ஹமாஸின் பரிந்துரை எதுவுமே இடம் பெறவில்லை.
18 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். அதாவது அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்பு வலுவாகிக் கொண்டு அந்த நாடுகளின் மூலம், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்ப முயற்சிக்கிறது என்பதுதான் அது. ஆனால் இந்த எச்சரிக்கையைக் கண்டு இஸ்ரேல் கூட அவ்வளவாகப் பயப்படவில்லை. மாறாக அரபு நாடுகள்தான் பயந்து போயின. காரணம், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எங்கே தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பி விடுவார்களோ என்ற அச்சம். எனவேதான் இந்த முறை இஸ்ரேலின் தாக்குதலை அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இஸ்ரேலைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் ஹமாஸ் வலுவடைந்து விட்டால் அது தங்களுக்குத்தான் பெரும் ஆபத்து. இஸ்ரேலை விட ஹமாஸ்தான் பெரும் மிரட்டல் என்றும் அரபு நாடுகள் கருதுகின்றனவாம்.
தற்போது காஸாவில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதற்கு ஹமாஸ்தான், அதன் பிடிவாதம்தான் முக்கியக் காரணம் என்று எகிப்து அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் இஸ்ரேலைக் குறை சொல்வதில்லை.
அதை விட மோசமாக எகிப்து நாடு தனது எல்லையை மூடி விட்டது. அங்கிருந்து பாலஸ்தீனத்திதற்குள் உணவு, மருந்து, குடிநீர் என எதையுமே அது அனுமதிக்கவில்லை. இதுவும் காஸா மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட யாருமே இல்லாத அநாதைகளின் நிலையில் காஸா மக்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
யூதர்களை விட மோசமானவர்கள் எகிப்தியர்கள் - காஸா மக்கள்
இதுகுறித்து காஸாவைச் சேர்ந்த சல்ஹான் அல் ஹிரிஷ் கூறுகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதான்யஹுவை விட மோசமானவர் எகிப்து தலைவர் சிஸ்ஸி. யூதர்களை விட மிகக் கொடூரமானவர்கள் எகிப்தியர்கள். எங்களை அழிக்க அவர்கள் சதி செய்து விட்டனர் என்றார் கோபத்துடன்.
எகிப்துக்கு ஹமாஸ் பெரும் பிரச்சினை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும், சவூதி அரேபியாவும் வேறு கணக்கில் ஹமாஸை எதிர்க்கின்றன. அதாவது அவர்களின் பரம்பரை வைரியான ஈரான், ஹமாஸுக்கு பெருமளவில் பொருளுதவி, ஆயுத உதவியை அளித்த நாடாகும். எனவே ஈரான் கை ஓங்குவதைத் தடுக்க அவர்கள் ஹமாஸை எதிர்க்க முடிவெடுத்தன.
அரபு நாடுகளின் இந்த மாற்றம் காரணமாக சமரசம் பேச வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியே கூட குழம்பிப் போய் விட்டார். காரணம், ஹமாஸுடன் பேச யாருமே முன்வராத நிலை. இஸ்ரேலும் சொல் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால்தான் சமரசம் பேச வந்த கெர்ரி மீண்டும் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போய் விட்டார்.
இப்படி ஹமாஸ், இஸ்ரேல், அரபு நாடுகளின் மோதலால், கடைசியில் அப்பாவி பாலஸ்தீன மக்கள்தான் செத்து விழுந்து கொண்டுள்ளனர். இந்த அவலம் நிற்கப் போவது எப்போதோ... தெரியவில்லை.
ஒருபுறம் பாலஸ்தீனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது... அழிவுகளுக்குப்பிறகு அவர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பதாக உதவி செய்வது என்பன போன்ற முனாஃபிக் தனம் இன்றைய அரபு நாட்டு அரசுகளுக்கு ராஜதந்திரம்போல் தோன்றலாம். ஆனால் அனைத்து அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் அதிபதியான அல்லாஹ்வை இவர்கள் ஒருபோதும் ஏமாற்றவே முடியாது. கேள்விகணக்கு கேட்கப்படும் அந்த மறுமை நாளில் இவர்களின் கதி என்னவாகும் என்பதை அவர்கள் சிந்திப்பது நல்லது.

Sunday, June 22, 2014

ஸஹர் நிகழ்ச்சி தேவையா?

ஸஹர் நிகழ்ச்சி தேவையா?

இஃப்தார் நிகழ்ச்சி போல் ஸஹர் நிகழ்சிகளும் (அரசியல்) கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறிக் கொண்டிருக்கின்றன...
முன்பு ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும்.
ரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது.
தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும், அது பொது சமூக மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், தாமதமாகவேனும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், ஒளிபரப்பு ஊடகத்தை [visual media] ஒலிபரப்பு ஊடகமாக [broadcost media] நம்மவர்கள் கையாண்டு வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
திரையில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால் தான் அது காட்சி ஊடகம். ஒரு மணிநேரம் முழுவதும் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தால் அது என்ன ஊடகம்?
இங்கே தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஒவ்வொரு முஸ்லிம் நிகழ்சிகளிலும் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள், வேறு வழியே இல்லாமல் நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
காட்சி ஊடகத்தை காட்சி ஊடகமாகப் பயன்படுத்தக் கூடிய அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் இன்றி, தொழில் நுட்பப் புரட்சி மிகுந்த இந்த 2010 -லும் கூட நாம் சிந்தனை வறட்சியிலேயே இருக்கிறோம் என்பதைத்தான் நம்முடைய ஊடகப் பயன்பாடு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
சஹர் நேர நிகழ்ச்சிகளில் எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே பேச்சு மயம் தான். கற்குவியல்களுக்கு இடையே சில சோற்றுப் பருக்கைகளைப் போல ஒரு சில நிகழ்சிகளைப் பார்க்க முடிந்தது.
மார்க்க ரீதியான கேள்வி பதில்களும், குழந்தைகளை ஈர்க்கும் வினாடி வினா போட்டிகளும் சற்று மன நிறைவைத் தந்தன. ஆனால், கடந்த காலங்களில் வித்தியாசமான நிகழ்சிகளை வழங்கி வந்த சிலரும் கூட, காலப் போக்கில் பேச்சு என்கிற பழைய நிலைக்கே திரும்பியிருப்பது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.அவர்களும் வழக்கமான 'பேச்சு' நீரோடையில் கலந்து கரைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை சற்று ஆராய வேண்டி உள்ளது.
காயல் இளவரசு தொடங்கி வைத்த சஹர்நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்றைக்கு மதிமுகவின் சீமா பஷீர் வரை வளர்ந்திருக்கிறது. அதாவது, காயல் இளவரசு என்னும் தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று மதிமுக என்னும் அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது.
முன்பு சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை சஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும் என்பதைத்தான் மதிமுகவின் இவ்வருட சஹர் வருகை நமக்கு உணர்த்துகின்றது.
எப்படி இப்தார் நிகழ்ச்சி இன்றைக்கு அரசியல் கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறி விட்டதோ, அதைப் போலவே சஹர் நிகழ்சிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.ஆனால் அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.
இறைவனுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்றொரு சண்டை.
காதியானிகள் முஸ்லிமா இல்லையா என்று, ரொம்ப அவசியமான ஒரு விவாதம்.
சமுதாயத்திற்கு யார் உண்மையாக உழைப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் 'நீயா நானா' போட்டி.
இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது யார் என்பதில் நீடிக்கும் உரிமைப் போர்.
'அவன் முஸ்லிம் இல்லை, இவன் முஸ்லிம் இல்லை' என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சான்றிதழ் கொடுக்கும் கொடுமை.
ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம்.....
இப்படி நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள்.
அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
எதையாவது பேச வேண்டும் என்பதில் இருக்கும் முனைப்பும் வேகமும் எதைப் பேச வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
பிஜேயின் மார்க்கப் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்லி முழு நேர அரசியல் பேச வந்தவர்கள், அரசியலை விட்டு விட்டு மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களிடம் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு மிகுந்த ஒரு நேரத்தில், வலிமை மிகுந்த ஒரு ஊடகத்தின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களை எடுத்து வைத்து மக்களை ஈர்ப்பதை விட்டு விட்டு 'ஏய்..! நானும் ரவுடிதான்; நானும் ரவுடி தான்' என்பது போல மார்க்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊடகத்தின் வழியே யாருமே மார்க்கப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதல்ல நமது கருத்து.
அரசியல் எழுச்சியூட்ட வேண்டியவர்கள் ஊடகத்தை அதற்கு முழுமையாகப் பயன்படுத்தட்டும்,
மார்க்க விழிப்புணர்வூட்ட வேண்டியவர்கள் முழுமையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும்.
ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் நம்மில் துறை சார்ந்த வல்லுனர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிஜே மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் நானும் மார்க்கப் பிரச்சாரம் செய்வேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தால், அரசியல் விழிப்புணர்வை யார் ஊட்டுவது?
ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் இங்கே சமுதாயத்தின் பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர்கின்றன.அவரவர் கடமைகளில் இருந்து அவரவர் தவறுவதன் மூலம் சமுதாய மக்களின் பொருளாதாரமும்,
பொன்னான நேரமும் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நாம் மற்றவர்களிடம் இருந்து நிறைய பாடம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் வேர் பரப்பி, கிளை விரித்து, கோலோச்சி இருக்கிற இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் தங்களின் ஆற்றலை வீணாக்குவதில்லை. ஒரே வேலையை செய்வதற்காக அவர்கள் தங்கள் சமூகத்தின் பொருளாதாரத்தை விரயம் செய்வதில்லை.
அங்கே பாஜகவுக்கு ஒரு வேலை;பஜ்ரங் தளத்துக்கு ஒரு வேலை;விசுவ ஹிந்து பரிசத்துக்கு ஒரு வேலை;துர்கா வாகினிக்கு ஒரு வேலை;அபினவ் பாரத்துக்கு ஒரு வேலை;இந்து முன்னணிக்கு ஒரு வேலை..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள்.இவர்களையெல்லாம் கட்டி மேய்க்கிற பெரியண்ணன் வேலை ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை.
இவர்களில் எந்த அமைப்பும் இன்னொரு அமைப்பைத் தாக்குவதில்லை.தொலைக்காட்சியில் Slot எடுத்து சண்டை போடுவதில்லை. பாபர் மசூதியை இடித்தது நீயா நானா என்று ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு அமைப்பின் வேலையில் இன்னொரு அமைப்பு தலையிடுவதில்லை.ஒரு அமைப்பின் வேலையை இன்னொரு அமைப்பு செய்வதுமில்லை.
ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகள். ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பாதைகள்.ஆனால் எல்லோருக்கும் ஒரே இலக்குகள். ஆர்எஸ்எஸ் என்கிற தலைமை அமைப்புக்கு கட்டுப்பட்டவர்களாக,அது போட்டுக் கொடுத்த செயல் திட்டத்தின் படி வழி நடப்பவர்களாக இந்துத்துவ சக்திகள் இயங்கி வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்..
குர்ஆனும், ஹதீசும் இல்லாமல், முறையான வாழ்க்கைத் திட்டம் இல்லாமல், ஒருமுகப்பட்ட நல்ல கோட்பாடு இல்லாமல் அவர்கள் முறையாகவும் தெளிவாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் எல்லாம் இருந்தும் இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
எந்த வித திட்டமிடலும் இல்லாமல், தெளிவான வழிமுறைகளைக் கையாளாமல் அமைப்பு நடத்துவது போலவே இங்கே ஊடகமும் நடத்தப்பட்டு வருகிறது. பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் என ஒரே விசயத்தைப் பேசுவதற்கு பல அமைப்புகள் இயங்குவது போல, பல்வேறு அமைப்புகளும் தொலைக்காட்சியில் Slot வாங்கி ஒரே விசயத்தைப் பேசுகின்றன.
கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு, எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது, எந்தக் கருத்தைக் கேட்பது என்ற குழப்பம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும்,உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்பவும்,அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசவுமே ஊடகம் பயன்பட வேண்டும்.ஆனால் முஸ்லிம் ஊடகத்தின் மூலம் இன்று சமுதாயத்தில் குழப்பமும் பிரச்சனைகளும் தான் மலிந்து கொண்டிருக்கிறது.
குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியது எப்படி என்று, இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பேச வைத்து பதிவு செய்த தெஹல்காவின் அரும்பணியை நாம் மெச்சிக் கொண்டிருக்கிறோம்.
காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக்கை, கையும் களவுமாக காட்டிக் கொடுத்த ஊடகத்தின் மேன்மையை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக அம்பலப் படுத்திய ஹெட்லைன்ஸ் டுடேயின் கேமராவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நமது கைகளில் இருக்கும் கேமராக்கள், என்றைக்காவது நம் பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியதுண்டா?
சுய பரிசோதனை செய்யும் வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊடக நிறுவனங்களும் தங்களுக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிப் பாருங்கள்; வெட்கத்தால் தலை குனிவீர்கள்.
மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளையும், மசாயில் பிரச்சனைகளையும் எப்போதும் படம் பிடித்துக் கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் நம் கேமரா, ஏன் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களைப் படம் பிடிக்கவில்லை?
கோடான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்புச் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும், நிறுவனங்களையும், தனி நபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் புலனாய்வு வேலையை ஏன் நமது ஊடகம் செய்யவில்லை?
இஸ்லாத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார் தாசனை போட்டி போட்டுக் கொண்டு படம் பிடிக்கவும், பேட்டி எடுக்கவும் முனைப்பு காட்டுகின்ற நமது ஊடகம், 25 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த அப்துல்லாஹ் அடியாரின் இறுதி நாட்கள் வறுமை நிறைந்ததாக முடிவுக்கு வந்ததைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா?
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் இப்போது எப்படி இருக்கிறார் என்று எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்போதும் மொழிப் போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அவரது இன்றைய நிலையை சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா?
கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும் பல்வேறு கிராமங்களில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், இஸ்லாமியக் கருத்தியலை கற்றுக்கொள்ளும் மையம் ஒன்றை நிறுவ முடியாமல், அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உழல்வதை நமது ஊடகங்கள் ஏன் படம் பிடிக்கவில்லை?
பெரியார் தாசனை வாழ்த்த வந்த திருமாவளவன் எப்போது இஸ்லாத்திற்கு வருவார் என்று துரத்தித் துரத்தி கேள்வி எழுப்பி, அதை ஊடகங்களில் ஒளிபரப்பி, சமுதாய மக்களிடம் எதிர்பார்ப்பை கிளறி விட்டவர்களே...சென்னை கொருக்குப்பேட்டையில் வறுமையின் காரணமாக ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம் நடந்துள்ளதே..அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுவீர்களா?
சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் பற்றி முஸ்லிம் இதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரப் படுத்தினோம்.
முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எழுதினோம்.
ஆனால் நடைமுறையில், தொழில் தொடங்க கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் முஸ்லிம் இளைஞர்களை, வங்கி அதிகாரிகள் அலட்சியப் படுத்தி திருப்பி அனுப்புவதையும், வேறு வழியே இல்லாமல் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டும் நமது சமுதாய இளைஞர்களின் அவலங்களையும் என்றைக்காவது நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோமா? நமது ஊடக நிகழ்ச்சிகளில் இதையெல்லாம் விவாதப் பொருளாக்கி, பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்திருக்கிறோமா? சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி கேள்வி எழுப்பி இருக்கிறோமா?
பாதிக்கப் பட்ட இளைஞர் தன் பெற்றோருடன் சென்று வங்கி அதிகாரியை நோக்கி கேள்வி எழுப்புவதை விட, பத்து பேராகத் திரண்டு போய் வங்கியை முற்றுகை இடுவதை விட, ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு ஒரே ஒரு நபர் சென்றால் போதுமே! மறு நொடியே பிரச்சனைக்கு தீர்வு வந்து விடுமே. அதை ஏன் இதுவரை நமது கேமரா செய்யவில்லை?
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதை மாறி, இன்றைக்கு சினிமா துணை நடிகைகளாகவும், விபசாரத்தில் ஈடு படுபவர்களாகவும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இருப்பதை ஏன் நமது ஊடக அறிவு கண்டறியவில்லை?
இலங்கையில் இருக்கும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளைப் படம்பிடித்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பத் தெரிந்த நமது கேமராவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் அகதிமுகாம் வாழ்கையை ஆய்வு செய்யச் சென்ற பேராசிரியர் அ.மார்க்சுடன் பயணித்து அங்குள்ள அவல நிலைகளைப் படம் பிடித்து வந்து ஒளிபரப்ப மனம் வரவில்லையே ஏன்?
தமது இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் பித்ரா வினியோகத்தையும்,இரத்த தானத்தையும், மருத்துவ முகாம்களையும் மறவாமல் படம் பிடித்து ஆவணப்படுத்தி, அதை சமுதாய மக்களுக்கு காட்சிப் படுத்துவதில் இருக்கும் வேகத்தில் துளியளவாவது , முஸ்லிம் ஆளுமைகளின் சாதனை வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் படங்களை உருவாக்குவதிலும், இருந்திருக்க வேண்டாமா? அப்படி ஆவணப்படுத்தி இருந்தால், இன்றைய தலைமுறையினர் காயிதே மில்லத்தைப் பார்த்து நாகூர் ஹனிபா என்று சொல்லும் அவலம் நேர்ந்திருக்குமா?
முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் கீற்று இணையதளம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காவல்துறையின் அடக்குமுறைக்கு இலக்கான முஸ்லிம்கள் பலர் அந்நிகழ்ச்சியில் தோன்றி தங்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.கீற்று நடத்திய அந்நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படி புதிய கோணத்தில் நமது பிரச்சனைகளை விவாதப்பொருளாக்கும் வேலையை எப்போதாவது நமது ஊடகங்கள் செய்திருக்கிறதா?
கீற்றுக்கு இருக்கிற அக்கறை ஏன் 'மூன்' டிவிக்கு இல்லை?
ஏன் அது போன்ற ஒரு நிகழ்ச்சியை டி.என்.டி.ஜே மீடியா விஷன் செய்யவில்லை?
எந்நேரமும் பிஜேயுடன் வம்பு வளர்ப்பதையே முழு நேரச் செயல்திட்டமாகக் கொண்டு இயங்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின், ஆஷிக் மதீனா மீடியா நெட்வொர்க் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை?
இப்படிப் பேசுவதற்கும்,விவாதிப்பதற்கும்,காட்சிப் படுத்துவதற்கும் ஆயிரம் அவலங்கள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தச் சிந்தனையும் இன்றி முஸ்லிம் ஊடகம் பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
சமுதாயத்திற்குப் பயனுள்ள விசயங்களை காட்சிப் படுத்துவதை விட்டு விட்டு, நான்கு பணக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களைப் பேச வைத்துப் படம் பிடித்து, அதையே ஒரு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்பக் கூடிய தரகு வேலைதானே, இன்றைக்கு முஸ்லிம் ஊடக சேவையாக இருக்கிறது?
நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் தோன்றி 'ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள்,ரசூலுல்லாஹ் இப்படிச் சொன்னார்கள்' என்று சமுதாயத்திற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.
மார்க்கம் பேசினால் தான் வசூலாகும் என்ற நிலை தொடர்வதனால் தான், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இங்கே எல்லோரும் மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலைப் பற்றியும்,வரலாற்றைப் பற்றியும்,கலைகளைப் பற்றியும்,இலக்கியத்தைப் பற்றியும்,அரசியலைப் பற்றியும்,பொருளாதாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும்,உரையாடுவதற்கும்,நல்ல தீர்வுகளை நோக்கி நகருவதற்கும் யாருமே முன்வருவதில்லை.
அப்படி யாராவது முன்வந்தாலும் அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
மார்க்கம் பேசுகிறவர்களுக்கு மட்டுமே பொருளாதாரத்தை வாரி வழங்கும் சமூகப் புரவலர்கள், மற்ற விசயங்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டாமா?
பொதுவான தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு விளம்பரம் தரக்கூடிய வர்த்தக நிறுவனங்கள்,கண்டபடி எல்லோருக்கும் விளம்பரங்களைக் கொடுப்பதில்லை. எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள்,எந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது,எந்த நிகழ்ச்சி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்' என்னும் தரவரிசைப் பட்டியலைப் பார்த்து, அதில் சிறந்த இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் தருகிறார்கள்.
ஆனால் முஸ்லிம் ஊடக நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கும், தரவரிசைப் படுத்துவதற்கும் ஆளுமில்லை, அமைப்புமில்லை.
முஸ்லிம் நிகழ்சிகளுக்கு விளம்பரங்களைத் தரக்கூடிய நிறுவனங்களுக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.
இங்கே நிகழ்ச்சிக்காக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதை விட, நிகழ்ச்சியை நடத்தும் நபருக்காகவும், அமைப்புக்காகவுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்துகிறவர்களுக்கும்,வெறுமனே உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே விதமான பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
ஸஹர் நிகழ்ச்சிகளை தவிர்ப்பதே நல்லது. "ஸஹர் நேர உணவில் பரக்கத்(அபிவிருத்தி) உள்ளது" என்று இருக்கும்பொழுது, அந்த நேரத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு உணவருந்துவதால் நம்மால் எப்படி இறைவன் தரும் பரக்கத்தைப் பெறமுடியும்? அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஐந்து மணி வரை தொடர்வதால் ஃபஜர் தொழுகையை கூட்டாக தொழும் வாய்ப்பும் தவறிவிடுகிறதே? இதை பற்றியெல்லாம் மார்க்கம் பேசும் தலைவர்கள் சிந்திக்கமாட்டார்களா?

Monday, May 5, 2014

விபச்சார ஊடகங்களும் -முஸ்லிம்களும்...!

விபச்சார ஊடகங்களும் -முஸ்லிம்களும்...!

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பும் ஊடகங்களின் முஸ்லிம் விரோதப்போக்கும்
o மீடியாக்களின் கையூட்டு மந்திரம்
o தொடரும் கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு!
o வெட்ட வெளிச்சமாகும் ஊடகங்களின் பொய் பித்தலாட்டம்
o அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மறுமலர்ச்சி தமுமுக' ஒருங்கிணைப்பாளர் பேட்டி!
o  டிஜிபி யிடம் இந்திய தேசிய லீக் அளித்த புகார் மனு
o சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு... அலட்சியப்படுத்தும் ஊடகங்கள் 
o  ஊடக தர்மம் என்பது என்ன? 
மீடியாக்களின் கையூட்டு மந்திரம்
எங்கு குண்டுகள் வெடித்தாலும் அதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணம் என்று பரப்புவது மீடியாக்களின் கையூட்டு மந்திரம்.
இதற்குத்தான் இந்த மீடியாக்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடங்களிலிருந்தே தங்களது மூன்றாம் தர வேலைகளை காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றன.
இது போன்ற குண்டுவெடிப்பிற்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றவர்களை விட கடுமையான முறையில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு, அதனை அந்த அந்த மீடியா அலுவலகங்களுக்கே அனுப்பி வைத்தும் கூட அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, மீண்டும் மீண்டும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களை பொது மக்களிடமிருந்து பிரித்து வைப்பதிலேயே குறிக்கோளாக செயல்படுகின்றன.
இது போன்ற நடவடிக்கைகளில் இருந்தே இந்த மீடியாக்களின் இரவு நேர கள்ள உறவுகள் அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
மனசாட்சி என்பதை அடகு வைத்துவிட்டு நேரில் பார்த்தது போல கண்டபடி எழுதும் விபச்சார மீடியாக்கள். வெளியிட்ட செய்தி தவறென்றாலும் அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டார்கள். காவல்துறை பணியை இவர்களிடம் கொடுத்தது யார்? பத்திரிகை தர்மம் என்பது எங்கே போனது?
ஒவ்வொருமுறை குண்டு வெடிக்கும் போதும் காவல்துறை தனது விசாரணையை தொடங்கும் முன்னே மீடியாக்கள் தங்கள் கற்பனைகளையும், முஸ்லீம்கள் மீதான துவேசத்தையும் கட்டவிழ்கின்றன.
பல்வேறு குண்டுவெடிப்புகளில் குண்டு வைத்தது காவிகள் என்பது தெரிந்தப் பின்பும் அதுப் பற்றி தொடர்ந்து பேசுவதற்கு துப்பில்லாதவர்கள்.

தொடரும் கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு!
முதல்வர் ஜெயலலிதாவை தினமும் தாக்கிப் பேச வேண்டிய அரிப்பில் இருக்கும் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் 'சென்னையில் பிடிபட்ட ஜாகிர் உசேனை தீவிரமாக விசாரணை செய்து அவனது அடுத்தடுத்த நகர்வுகளை கண்டுபிடித்து அதற்கேற்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்த...ிருந்தால் இந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்க முடியும்' என்று சொல்ல, ஜெயலலிதாவும் கருணாநிதியை திருப்பி 'Arm chair Critic' என்று கிண்டல் செய்து இருக்கிறார். உண்மையில் அவரை 'Wheel chair Critic' என்று தான்சொல்லி இருக்க வேண்டும்.
ஆராயாமல் வெளியிடப்படும் இம்மாதிரியான அறிக்கைகளால் முஸ்லிம் சமுதாயத்துக்கு என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லாது கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளை அவருடன் தற்போது கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் அமைப்புகள் எடுத்து சொல்லவேண்டும். ஆனால் அப்படி சொல்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்த அறிக்கையை கண்டு நொந்துப் போன இந்திய தேசிய லீக் தலைவர் 'தடா' ரஹீம் என்பவர் நேற்று சென்னை காவல்துறை டிஜிபியை சந்தித்து, கருணாநிதியின் இந்த கண்றாவி அறிக்கை பற்றி புகார் கூறி, அவரை கைது செய்யுமாறு மனு செய்து இருக்கிறார். மேலும், முஸ்லிம்கள் எவரும் கருணாநிதியை இனியும் ஆதரிக்க வேண்டாமென்றும் கோரி இருக்கிறார். உண்மைதானே, இந்த அறிக்கையின் வலியை அவரால் தானே முழுமையாய் உணரமுடியும்.
முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஒரு நிரந்தர பகைவர் என்பதை இவர்கள் தான் சாமர்த்தியமாக மறைக்கிறார்கள். இன்று சிறையில் வாடும் முஸ்லிம்கள் பெரும்பாலும் திமுகவின் ஆட்சி கருணாநிதியால் கைது செய்யப்பட்டவர்கள் தான். கருணாநிதி ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்புகளுக்காக பல முஸ்லிம்கள் வீடு புகுந்து தேடப்பட்டார்கள். தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டார்கள். 'ஆயிஷா' என்று கற்பனையான பெண் தீவிரவாதி உருவாக்கப்பட்டாள். அவள் பேரால் முஸ்லிம் பெண்கள் ஆடை சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெண் இல்லவே இல்லை என்று முஸ்லிம் மக்கள் கதறினார்கள். 'அவள் பிறவி முஸ்லிமல்ல, சங்கீதா என்ற பெண் ஒரு தீவிரவாதி முஸ்லிமை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டு 'ஆயிஷா' என்று பெயர் மாற்றிக் கொண்டு தீவிரவாதி ஆகிப் போனாள்' என்று திரைக்கதை எழுதினார்கள். ஆனாலும் ஆயிஷா கடைசிவரை அகப்படவில்லை. கருணாநிதி வாஜ்பாய் அரசில் இருந்தபோது தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சும்மாதான் இருந்தார் கருணாநிதி. - Bhagyalakshmii Dhananjeyan

வெட்ட வெளிச்சமாகும் ஊடகங்களின் பொய் பித்தலாட்டம்
CBCID IG மகேஷ்குமார் அகர்வால் சென்னை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பின்னரும் பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகள் ஜாகிர் உசேன் செய்ததாக தான் வருகின்றன.
- ஏன் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதுகின்றன?
- யார் மேல் வெறுப்பை உண்டாக்க துடிக்கின்றன?
- இதனால் பத்திரிக்கைகளுக்கு என்ன லாபம்?
- யாரின் கைப்பாவையாக பத்திரிகைகள் செயல்படுகின்றன?
சென்னை சென்ட்ரல் வெடிகுன்டு விபத்தில் பலியான மாற்று மத சகேதரி!
இதுவே ஒரு ஹஜிரா, பாத்திமா என்ற முஸ்லிம் சகேதரியாக இருந்து இருந்தால், இன்நேரம் விபச்சார தொலைக்காட்சி ஊடகம், விபச்சார பத்திரிக்கை ஊடகங்கள் தொடர்ந்து இஸ்லாமிய பெண் மனித வெடிகுண்டு தாக்குதல் என்று குறைத்துக்கொன்டு இருந்து இருக்கும்.

அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மறுமலர்ச்சி தமுமுக'ஒருங்கிணைப்பாளர் பேட்டி !
சும்மா விடாது அப்பாவியின் சாபம் ; விரைவில் வெளுக்கும் போலீசின் சாயம் !!
'ISI' உளவாளி என பட்டம் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஜாகிர் ஹுசைன், ISI தரச்சான்று பெற்ற அப்பாவி என்கிறார், மறுமலர்ச்சி தமுமுக ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ஜைனுலாபிதீன்.
இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மறுப்பு பக்கத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:-
இலங்கை கண்டியை சேர்ந்த முஹம்மத் நுவைர் என்பவரின் மகனான ஜாகிர் ஹுசைன், கடந்த 1994 முதல் தமிழகத்துக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி வந்து செல்பவர்.
இந்தியப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதும், அங்கிருந்து சில சாதனங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிறு வணிகர், அவர்.
40 வயதுடைய ஜாகிர் ஹுசைனுக்கு, மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், தற்போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தன் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜாகிர் ஹுசைன்.
மீடியாக்களால் மிகப்பெரும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், இந்த சதியிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்.
அடிக்கடி தமிழக தலைநகர் சென்னைக்கு வியாபார நிமித்தமாக அவர் வந்து சென்றாலும், எப்போதும் மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸில் தங்குவது தான் வழக்கம்.
கடைசியாக ஏப்ரல் 10 ந்தேதியன்று சென்னை வந்து சென்ற அவர், மீண்டும் 18 ந்தேதி சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர் தன்னிடமிருந்த 'பிசினஸ் விசா' உள்ளிட்ட ஆவணங்களுடன், தற்போது செல்லத்தக்க வகையில் உள்ள பாஸ்போர்ட் மற்றும், காலாவதியான பாஸ்போர்ட் என அனைத்தையும் காண்பிக்கிறார்.
அவரிடமிருந்த ஆவணங்களை சரிப்பார்த்து பெற்றுக் கொண்ட போலீசார், குற்ற முகாந்திரம் ஏதும் இல்லாத காரணத்தினால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி விடுகின்றனர்.
8 நாட்கள், சென்னையில் வியாபார நிமித்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவரை 26 ந்தேதி மாலை 'மெட்ராஸ் யுனிவெர்சிட்டி' அருகில் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர்.
அதைதொடர்ந்து 29 ந்தேதி வரை சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரால் அடித்து துன்புறுத்தியுள்ள போலீஸ்,
வெற்றுத்தாள்கள் சிலவற்றிலும் எழுதப்பட்ட சில காகிதங்களிலும் கட்டாய கையொப்பம் வாங்கிக் கொண்டு,13 வது மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர்.
மாஜிஸ்டிரேட் கேட்டால், மோசடி வழக்கு என சொல்ல சொல்லி வற்புறுத்தியுள்ளது காவல்துறை.
இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன்:
இன்று சனிக்கிழமை என்பதால், இவர் மீது என்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தன்னால் உறுதிப் படுத்த முடியவில்லை என்றார்.
திங்கள் கிழமைக்குப் பிறகு தான் அதன் விவரங்கள் தெரிய வரும் என்று சொன்ன வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
ஒருவர், ஒரே நேரத்தில் ISI க்காக உளவு வேலைப் பார்த்துக் கொண்டே, கள்ள நோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டு மாட்டிக் கொள்வாரா என்பது தான் நம்முடைய கேள்வி.

டிஜிபி யிடம் இந்திய தேசிய லீக் அளித்த புகார் மனு (04 04 2014)
இன்று மாலை 4 மணி அளவில் டிஜிபி அவர்களை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தோம் அதில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் முக்கியமானவை
1) சென்னையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது அதே சமயம் குடியுரிமையில்லாமல் தங்கியிருந்த ஒரே காரணத்தை வைத்து ஜாகீர் உசேன் என்பவரை முஸ்லிம் தீவிரவாதி போல் சித்தரிப்பதையும்,சென்னை குண்டு வெடிப்புக்கும் அவருக்கும் சம்மந்தமுள்ளதைப் போன்றும் வரும் செய்திகளை தடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
2) பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை காவல்துறை சரியாக விசாரித்திருந்தால் ரயில் நிலைய குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது என காவல்துறையே அறியாத ஒரு விஷயத்தை முன்னால் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது  எனவே ஜாகீர் உசேனைப் பற்றி பல அறிய தகவல்களை தெரிவிக்கும் திரு கருணாநிதி அவர்களை விசாரணை வலையத்தில் வைத்து விசாரித்தால் இன்னும் காவல்துறைக்கு குண்டு வெடிப்பு சம்மந்தமாக பல தகவல்கள் கிடைக்கும் இதை தமிழக காவல்துறை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
3) சென்னை குண்டு வெடிப்பிற்கு பின் முஸ்லிம் சமூகத்தின் மீது அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த சில ஊடகங்களும்,அமைப்புகளும்,தனி நபர்களும் சென்னையில் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர் அதனால் அப்படிபட்டவர்களை கடுமையாக காவல்துறை எச்சரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம்
இதை கவனமுடன் கேட்டுக்கொண்ட டிஜிபி அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்
முதலில் முதல்வர் அவர்கள் திரு கருணாநிதி அவர்கள் உண்மைக்கு புறம்பாக ஜாகீர் உசேனை பற்றி கூறியதையும்,ஒரு வேலை அவருக்கு(கருணாநிதிக்கு)தீவிரவாதிகள் தொடர்பு இருந்து யாரேனும் தகவல் தந்தார்களேயானால் அதை விசாரணைக்கு அளித்து உதவுமாறும் பதிலடி கொடுத்தார்
பின்னர் சிபிசிஐடி ஐஜி அவர்கள் சென்னை குண்டு வெடிப்பிற்ரும் ஜாகீர் உசேனுக்கும் விசாரணை அடிப்படையில் எந்த சம்மந்தமும் இல்லை என மீடியா செய்தி வெளியிட்டார்
பின்னர் சென்னை கமிஷனர் அவர்கள் வதந்திகளை பரப்புகின்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்
சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த பேராசிரியர் பன்னீர்செல்வத்தின் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள் என்பவர் தங்கியிருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர். இன்று அருள் அறையில் பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதில் அருள் படுகாயமடைந்தார். அவரை மூன்று பேர் ஆட்டோவில் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
விபச்சார மீடியாக்கள்...இதை தீவிரவாத செயல் என்றோ, குண்டு தயாரித்தவர்கள் இந்து தீவிரவாதிகள் என்றோ கூறவில்லை!
சாட்சிகளோ, ஆதாரங்களோ கிடைக்காத பட்சத்தில், விசாரணையில் தடுமாறும் போதும்...இந்த நாய்களுக்கு கிடைக்கும் ஒரே ஆயுதம் ...இஸ்லாமிய தீவிரவாதம்! அதுதான் இந்திய முஹாஜிதீன்கள்

  அரசியல் இலாபம்   
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? 
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
மோடிVs லேடி
தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பின்னணியில் முன்னணியா?
தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம். பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.
அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.
ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.
நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?
அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்! (-முஹம்மது ஷாஃபிஈ Thanks: thoothu)

ஊடக தர்மம் என்பது என்ன? 
அசாமில் 32 இஸ்லாமியர்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட போடோ திவிரவாதிகளாள் சுட்டுப் படுகொலை மூடி மறைக்கும் பார்ப்பன ஊடகங்கள் ஒன்னும்மில்லாத செய்திகளுக் கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு விவாத மேடை நேர்படப்பேசு அந்தப்பேச்சு இந்தப்பேச்சு என்று அலசும் நடுநிலை நாக்குப்பூச்சிகளே செந்த நாட்டு மக்கள் உள் நாட்டு போடோ திவிரவாதிகளாள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏன் விவாதங்கள் நடைறெவில்லை இறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா?
இதே செயலை ஒரு முஸ்லிம் செய்திருந்தால் உங்கள் முகப்பு அட்டை படத்திலிருந்து முக்கிய தலைப்பு செயதியாக உலா வந்து கொண்டிருக்கும் அனைத்து டி வி சான்னல்களிலும் பத்திரிக்கைகளிலும் பார்பனர்களின் ஆதிக்கம் இந்த நாட்டிற்க்கு ஆபத்தானது திவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை வேறோடு கில்லி எறியவேண்டும்
மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது - மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் "மூன்று இந்து தீவிரவாதிகள்" கைது என்று சொல்லவேயில்லை! இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட "முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்" என்று செய்தி வரும் இந்நாட்டில்!
எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்! ஒரு குண்டு வெடித்தால் உடனே "யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்" என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!.
ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும். தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும்.
தொகுப்பு: www.nidur.info

Sunday, December 1, 2013

செல்போனும்...ஆபாசங்களும்...!

செல்போனும்...ஆபாசங்களும்...!

தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி’ என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், நாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் செல்போன். தொலைத்தொடர்பு வசதியின் உச்சம் செல்போன். நினைத்த நேரத்தில் நினைத்தவருடன் பேச இந்த குட்டியூண்டு உபகரணம் உதவுகிறது. நினைத்த நேரத்தில் வேறு சில ‘விஷ(ம)யங்களையும்’ செய்ய முடிவதுதான் வினை.
செல்போனும்...ஆபாசங்களும்...!புரியவில்லையா? கொஞ்சம் பிளாஷ்பேக்குக்குப் போங்கள். ஒரு காலத்தில் ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படும் இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி போவார்கள். இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்துவிட்டன.
சக மாணவன், தெருமுக்குக் கடை, இணையதளம் மூலம் செல்போனில் ‘ஆபாசங்களை’ அள்ளித் திணித்துக்கொள்ள முடிகிறது. விரும்பிய நேரம் பார்க்க முடிகிறது. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவர் கையிலும் லேட் டஸ்ட் செல்போன் தவழ்கிறது. யோசித்துப் பாருங்கள்… விபரீதம் புரியும்!
ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவையில்லை. யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த ‘கேப்’பில் சில நொடிகளில் சாதாரணமாய் செல்போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்துவிடும் வசதி. வாடிக்கையாளர்களின் இந்த ஆவலைப் புரிந்துகொண்டு அனேக ‘சப்ளையர்களும்’ உருவாகிவிட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’டுக்கு ஏற்ப சேவை செய்கிறார்கள்.
ஒரு செல்போன் சர்வீஸ்காரர் சொல்வதைக் கேளுங்கள்… ”இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஆபாசப் படங்களை விரும்புவதில்லை. அவற்றில் ‘எல்லாமே’ இயந்திரத்தனமாய், எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகின்றன என்கிறார்கள்.
மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிரபலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்கள், சிறுசிறு கிளுகிளு எம்.எம்.எஸ்.கள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்” என்கிறார். பெங்களூர், மைசூர் பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது.
செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 75 சதவீதம் பேர் தினமும் ஆபாசம் தரிசிக்கிறார்கள். அவர்கள் இதற்காக வேறு எந்த சாதனத்தையும் விட செல்போனை 6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆபாச தாகமுள்ளோர் அதிகரிப்பை அடுத்து, அவர்களுக்கு சேவை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது.
இதற்கு அடிமையானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆபாச வீடியோ கிளிப் பரபரப்பாக பரப்பப்படுகிறது. சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரிகள் இருவர் ராஜினாமா செய்தார்களே ஞாபகமிருக்கிறதா? அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை.
செல்போனும்...ஆபாசங்களும்...!
பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிருக்கிறது. மும்பை போன்ற ஜனசமுத்திரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நபரான ஜுனைத், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 250 ரூபாய் கேட்கிறார். இது ‘வழக்கமான’ படம் அல்ல என்று உத்தரவாதமும் அளிக்கிறார்.
16 கே.பி. என்றால் 400 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையாளர்களும் உண்டாம். செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது.
உடனடியாகப் பின்வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப்பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்துவிடுவார்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டு தான் காரணம். எனவே பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர்களுக்குத்தான் சேவை கிடைக்கும்.
கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல்மொழியிலேயே விஷயத்தை அறிந்துகொண்டு விசாரிப்பார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஏராளம். ஆக, தயாரிப் புச் செலவு என்பது வெகு குறைவு. எனவே வாடிக்கையாளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக்கிறார்கள்.
கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம்தான். ஆமதாபாத்தின் ரிலீப் ரோட்டில், இங்கு ‘டவுன்லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுடன் சிறு சிறு கடைகள் நிறைய இருக்கின்றன. இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 3ஜி செல்போனுடன் படையெடுக்கிறார்கள்.
இவர்களின் நிபந்தனையெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பதுதான். இந்த மாதிரி கடை ஒன்றின் உரிமையாளரான ராக்கி, ”நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்கள்தான் எனது வாடிக்கையாளர்கள்” என்கிறார்.
இவரிடம் 100 ரூபாய்க்கு ‘டவுன்லோடு’ செய்வதற்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர் விகாஸ், ”நாங்கள் 6 பேர் ஒரு ‘கேங்’. இந்த ‘கேங்’கில் பெண்களும் உண்டு. நாங்கள் பெறும் ஆபாசப் படங்களை எங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வோம்.
வெறும் 100 ரூபாய்க்கு எனக்கு 20-க்கும் மேற்பட்ட எச்.டி. வீடியோ கிளிப்கள் கிடைக்கும்” என்கிறார். ‘குரூப் ஸ்டடி’ போல விகாஸ் நண்பர் குழு (இதில் பெண்களும் உண்டு என்று சொன்னோமே!) வாரம் ஒருமுறை கூடி ஒன்றாக ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதும் உண்டாம்.
சில மாணவர்கள், தாங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள கடைகளுக்கே தங்களுக்குக் கிடைக்கும் புதிய வீடியோ கிளிப்களை அளித்து உதவி செய்வதும் உண்டாம். இதில் இன்னொரு பக்கமும் உண்டு. தற்போது பலரும் தங்கள் செல்போனே தங்களுக்கு வசதி என்று இறங்கிவிட்டதால், ஆபாச சி.டி., டி.வி.டி. விற்பனை செய்வோர் அடிவாங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு ‘பிசினஸ்’ பாதித்திருக்கிறதாம். ”சற்று வயதான பெண்கள் சிலர் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்டு, கேட்கிற காசை கொடுத்து சி.டி. வாங்குவார்கள். அதன் கவரை அவசரமாகக் கிழித்தெறிந்துவிட்டு தங்கள் ஹாண்ட் பேகுக்குள் திணித்துக் கொண்டு அவசரமாக நகர்வார்கள்.
அதெல்லாம் பழைய காலமாகிவிட்டன” என்கிறார் ஒரு திருட்டு சி.டி. விற்பனையாளர். இளசுகள் இயல்பாகவே இந்த ஆபாச அலையில் அடித்துச் செல் லப்படுகிறார்கள் என்றால், நடுத்தர வயதினர், பெரியவர்களும் பலரும் ஒரு ‘ரிலாக்ஸாக்காக’ ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.  அலுவலக வேலை நெருக்கடியில் இருந்து ஆறுதல் அளிப்பது இதுபோன்ற படங்கள்தான் என்கிறார் ஒருவர்.
வெளியே பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்திருக்கும் ஆபாச அலைக்கு அணை போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. பெண்கள் மீதான எல்லை மீறல், பாலியல் வல்லுறவு போன்றவற்றுக்கு எல்லாம் இதுபோன்ற காட்சிகளே தூண்டுதல் ஆகின்றன என்பது அவர்களின் கவலை.
அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது!
மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்!

Tuesday, November 26, 2013

கற்பழிப்புக் கோடாரி...!

கற்பழிப்புக் கோடாரி...!



கற்பழிப்புக் கோடாரி…!  (RAPE AXE)  


நாகரீகம் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில் கூட பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்களின் ஆதிகால குணம் இன்னமும் மாறவில்லை .  இந்த எண்ணம் மிகுதியாக இருப்பதால் தான் இன்றும் பெண்கள் கற்பழிக்கப்படும் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் வட இந்தியாவில் கற்பழிப்பு என்றால் நாடே கொதித்தெழுகிறது.
தென் இந்தியாவில் கற்பழிப்பு  என்றால் அந்தந்த மாநிலங்கள் கூட கண்டு கொள்வதில்லை. உலகில் தினந்தோறும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கற்ப்பழிக்கப்படுகிறார்கள். அதிலும் தென்னாப்பிரிக்காவின் நிலைமை படுமோசம் . உலகிலேயே அதிக கற்பழிப்பு நடக்கும் நாடுகளிலேயே முதலிடம் தென்னாப்பிரிக்காவுக்குத்தான். இங்கு 20 பெண்ணுக்கு ஒரு பெண் கற்ப்பழிக்கப்பட்டவராக இருக்கிறாள். ஆண்களில்28 சதவிகிதத்தினர் பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள்…அதனால் கற்பழிப்பு, இஙகுசாதாரண நிகழ்வாக மாறி விட்டது.
தென்னாப்பிரிக்கா  அரசும் என்னென்னவோ சட்டம் போட்டு பார்த்தது..? எதுவும் கற்பழிப்பைக் கட்டுபடுத்தியதாக தெரியவில்லை. அங்குள்ள மனித மனங்களும்  இதற்குப் பழக்கப்பட்டு மறத்துப் போய்விட்டது. ஆனால், பெண் மருத்துவரான சானட் எக்லெர்சால் அப்படியிருக்க முடியவில்லை..அவரின்  மருத்துவமனைக்கு கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த்து.
பாவப்பட்ட அந்தப் பெண்களைப் பார்க்கும்ப்போதெல்லாம் சானட்டுக்கு உள்ளம் கொதித்தது. கோபமும்,ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது
அப்போது ஒருநாள் 20 வயதுப் பெண் அவரைத் தேடி வந்தாள். அவள் உடலெங்கும் நகக்கீறல்களும், பற்களால் கடித்த காயமும் இருந்தன. ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது .கொடூரமான நான்கு ஆண்கள் விடிய விடிய….மாறி மாறி… அந்த பெண்ணைக் கற்பழித்திருந்தனர்..
வேதனையின் விளிம்பில் இருந்த அந்தப்பெண் வெறி பிடித்தவள் போல கத்தினாள். எனக்கு மட்டும் அந்த இடத்தில் பல் இருந்திருந்தால் அத்தனை பேரையும் கடித்து கிழித்திருப்பேன்” என்றாள்.
இந்த குரல்,கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒட்டு மொத்த  மனசாட்சியாக சானட்டுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது அந்தப் பெண்ணின் ஆற்றாமையை எப்படியாவது செயலாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார். 40 வருட தொடர் ஆய்வுக்குப்பின் கற்பழித்தவனை கையும் களவுமாக பிடித்து விடும் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அதுதான் “ரேப்ஆக்ஸ்”-கற்பழிப்புக் கோடாரி
கற்பழிப்புக் கோடாரி...!.
ரேப் ஆக்ஸ் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஆண்களுக்கு ஆணுறை என்ற  ஒன்று இருப்பது போல் பெண்களுக்கு பெண்ணுறை இருக்கிறது. இது குழந்தை பிறப்பை தடுக்கவும் பால் வினை நோய்கள் தொற்றாமல்  இருப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது ஆணுறையைக் காட்டிலும் சிறந்தது. இது மிகவும் மெலிதானது… மென்மையானது. எளிதாகப் பொருத்திக் கொள்ளக் கூடியது.
பெண்ணுறை பெண் பிறப்புறுப்பின் உள் வெப்பத்தால் ஈர்க்கப்பட்டு, அதன் உட்புறச் சுவரில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். கிட்டத்தட்ட இது யோனியின் இரண்டாவது தோல் போன்றது. ஒரு பெண் பெண்ணுறை அணிந்திருப்பது வெளிப் பார்வைக்கு தெரியாது. உறவுக் கொள்ளும் ஆணாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது. மிகவும் மென்மையானது என்பதால் இயற்கையான உணர்வே இருக்கும்.
டாக்டர் சானட் இந்த பெண்ணுறையில் தான் லேசான மாற்றங்களை செய்து  ரேப் ஆக்ஸை உருவாக்கினார். பெண்ணுறையில் உள் பக்கத்தில் பற்கள் போன்ற அமைப்பை உருவாக்கினார். அது “ஒன் வே” டெக்னிக் முறையில் அமைத்தார்.
ஒரு வழி என்பது உள்ளே போகும் போது எந்த வித்தியாசமும் தெரியாது. வெளியே இழுக்கும்போது பற்கள் கவ்விப் பிடித்து கொள்ளும்.எடுக்க முடியாது. வலுக் கட்டாயமாக இழுத்தால் பற்கள் குத்திக் காயம் ஏற்படுத்தி விடும்…இந்த தொழில் நுட்பம்தான் இந்த பெண்ணுறையில் அமைக்கப்பட்டது.
ரேப் ஆக்ஸ் பொருத்திக் கொண்டுள்ள ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்ச்சிக்கும் போது…. இறுதியாக உட் செலுத்தியவுடன் “லாக்”  ஆகி விடும். அதன் பின் அவனால் முன் பின் அசைய முடியாது. பற்களோடு இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும்…
பெண்ணுறை வெளியே எடுக்கும்போது மேலும் ஆழமாக பதிந்து நரக வேதனையைக் கொடுக்கும். அதையும் பொறுத்துக் கொண்டு முரட்டுதனமாக இழுத்தால், ஆணுறுப்பை இறுக்கமாகப் பிடித்திருக்கும் பெண்ணுறையும் கவ்விப் பிடித்தபடியே வெளியே வந்து விடும்.. தொடர்ந்து தன் பற்களால் கடித்தப்படியே இருக்கும்..
கற்பழிப்பு கயவனால் அதோடு நடக்க முடியாது..
சிறுநீர் கழிக்க முடியாது.
ஆடை அணிய முடியாது.
அதன் மீது எதுப்பட்டாலும் வலியால் உயிர் போய் விடும்..
அதை அவனால் விடுவிக்கவும் முடியாது.
டாக்டரால் மட்டுமே ஆபரேஷன் செய்து எடுக்க முடியும்.
ஆணுறுப்பின் தோல் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதால் அதை நீக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.ஆணிண் பாலுணர்வு உணர்ச்சி நரம்புகள் எல்லாமே தோலில்தான் குவிந்திருக்கின்றன…தோலை நீக்கிய ஆணுறுப்பு பாலியல் கிளர்ச்சியற்றதாகவே இருக்கும். இதை விட ஒரு பெரிய தண்டனை அந்த ஆணுக்கு வேறு யாராலும்  கொடுக்க முடியாது.
தென்னாப்பிரிக்காவில் இது மிகவும் புகழ் பெற்று உள்ளது.
அங்கு கற்பழிப்பின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
பெண்களுக்கு இது பாதுக்காப்பானது என்ற சான்றிதழும் கிடைத்துள்ளது.
30 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக பொருத்தியுள்ளார் டாக்டர் சானட்..
இப்போது தென்னாப்பிரிக்காவின் எல்லாக் கடைக்களிலும் கிடைக்கிறது.
ரேப் ஆக்ஸ் ஒன்றின் விலை  இரண்டு அமெரிக்க டாலர்கள்தான்.. நமது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ150 ஆகும்…
கற்பழிப்புக் கோடாரி...!இதை எல்லாப் பெண்களும் அணியும் படி செய்தாலேபோதும் எந்த  கற்பழிப்பும் நடைபெறாது..
இதை பொருத்தியிருப்பாள் என்ற எண்ணமே எந்த ஆணையும் பெண்ணிடம் நெருங்க விடாது.
நன்றி: ஜென்ட்ஸ்&ஸ்டைல்………… செப்டம்பர் 2013-இதழ்- பக்கம் 17,18

நம்ம கருத்து
மேன்மை தாங்கிய முதல்வர் அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்க்கு
எதைஎதையோ இலவசமாக கொடுக்கும் அரசு  இளம் பெண்களுக்கு ரேப் ஆக்ஸை இலவசமாகக் கொடுக்கலாமே……
தமிழத்தின் முதலமைச்சரான  பெண்ணினத்தை சார்ந்த  செல்வி. ஜெ .ஜெயலலிதா அவர்கள் இதற்கான முயற்ச்சியில்
 ஈடுபடுவார்  என எதிர்பார்க்கிறோம்…இன்ஷா அல்லாஹ்…..