Wednesday, March 20, 2013

என்னய்யா சட்டம்...!

[ 'பெண்விடுதலை' 'பெண்ணுரிமை' எனும் வஞ்சக பெயரில்... ஆண்களின் வக்கிரத்துக்கு இறையாக... பெண்களின் அரைநிர்வாணமும், அட்ஜஸ்ட்மெண்டும் எங்கும் பெருகிவிட்டது.
கண்களுக்கு கவர்ச்சியும், தீயபார்வைகளும் நீக்கமற ஆண்களுக்கு எங்கும் நிரம்பிவிட்டது. ஆண் பெண் உடலளவில் ஒன்றாகக்கலப்பது சங்கோஜமின்றி எங்கும் சகஜமாகிவிட்டது.
http://www.marhum-muslim.com/
பச்சையான பேச்சுக்களும், மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும், சிகப்பு விளக்கு விடுதிகளும் படித்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. இதனை சுகிக்க கிராமத்தவர்களும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து விட்டது.
பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டன. ஆண்களின் கற்பிழப்பும், பெண்களின் கற்புபிழைப்பும் சாதாரணமாகிவிட்டன. இதன் விபச்சாரவிளைவான 'சிசுக்கொலைகளும்', 'குப்பைத்தொட்டி குழந்தைகளும்' மலிந்துவிட்டன.]
6-ல் செக்ஸ் OK..! But, 18/21-ல்தான் மேரேஜ்..! இது சட்டமாம்..!
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் தமக்குள் நடத்தும் உடலுறவுக்கான (Consensual Sex) வயது வரம்பை, 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் விபச்சாரத்துக்கான புதிய சட்டத்துக்கு, நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாம்..!
'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' (?)
'மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது' என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது.
சமீபத்தில், டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவியை கொடூரமாக பாலியல் வல்லுறவு கொண்டு பின்னர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி, அப்பெண் உயிர் கொலையில் முடிந்ததை தொடர்ந்து, அதில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 17 வயது ஆன 'மைனர்' என்பதால் அவனை தண்டிக்க முடியாமல் இருந்தது..!
எனவே, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் அவசர சட்டமொன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பல தரப்பில் இந்த சட்டம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஒருவழியாக ஒருமித்த முடிவு எட்டப்பட்டு, புதிய சட்டத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சமான, பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உடலுறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான், பல சிக்கல் உள்ளது..! 16 வயது மைனர்கள் இனி மேஜர்கள். அவர்கள் செய்யும் பாலியல் வல்லுறவு அட்டூழியத்துக்கு கடும் தண்டனை தேவைதான்.
ஆனால், அதோடு நிற்காமல்...
பெண் விரும்பாவிட்டால்தான்... அது பாலியல் வல்லுறவு..!
விரும்பிவிட்டால்...? அது பரஸ்பர சம்மத உடலுறவு..!'
'எனில், இதற்கான வயது வரம்பையும் குறைக்கத்தானே வேண்டும்'
...என்பது பல அறிவு ஜீவிகளின்(?) ஆர்கியூமென்ட்..!
இதன்படி, பரஸ்பர ஒப்புதலின் பேரில் உடலுறவு கொள்வதற்கான... அதாவது விபச்சாரத்துக்கான வயது வரம்பு இனி 16 வயதுக்கு குறைகிறது. 'இதனால், இவ்வயதுடைய பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு மென்மேலும் அதிகரிக்கும்' என்று... பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நியாயமான எதிர்ப்பு தான்..!
ஆனால், இதற்கு எதிர் வாதமாக... இதன்மூலம், 'பொய்யான கற்பழிப்பு புகார்களை தடுக்க முடியும்' (?!) என்பது, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பவர்களின் வாதமாக இருந்தது..! அடப்பாவமே..!
இதுபோன்ற அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பின்னர்... முடிவில், உடலுறவு வயது வரம்பை 16 ஆக குறைக்கும் முடிவு, சட்ட திருத்த மசோதாவில் ஏற்கப்பட்டது. அதேபோல், மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான 'பாலியல் பலாத்காரம்' என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, 'கற்பழிப்பு' என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும் உடன்பாடு ஏற்பட்டது..!
இந்த சட்ட மசோதா, வரும் திங்கட்கிழமையன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது.
இச்சட்டத்தில் என்னவெல்லாம் ஓட்டைகள் உள்ளன என்று பார்ப்போம்..! 'கற்பழிப்பு' என்ற வார்த்தை... ஏதோ பெண்ணுக்கு மட்டும் கற்பு என்பது போல சொல்லப்படும் ஆணாதிக்க வார்த்தை அது..! ஒரு ஆண் பாலியல் வல்லுறவு கொண்டால்... அங்கே ஆண் தான் கற்பிழக்கிறான்..! அப்புறம், திருமண உறவு இன்றி பரஸ்பர சம்மதத்தின் பேரில் இருவரும் கள்ள உடலுறவு கொண்டால்... இருவருமே ஒரு சேர கற்பிழக்கின்றனர்..! 'கற்பழிப்பாம்'... ஹூம்... இதற்கு சாத்தியமே இல்லை..! என்ன புரிதலோ..!
சரி, இதை விட அடுத்த பெரிய ஓட்டை என்ன என்றால்... குழந்தை தொழிலாளர்... பால்ய விவாகம்... சிறுவர் சீர்த்திருத்த பள்ளி... என்று பலவற்றுக்கு... மேஜர் வயது 18 என்று ஐநாவில் ஒப்பந்தம் போட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இனி இதெல்லாம் என்னாகுமோ தெரியவில்லை..!
அப்புறம் இதை விட இன்னொரு மிகப்பெரிய ஓட்டை ஒன்று இச்சட்டத்தில் உள்ளது.
அதாவது... தற்போது... வீட்டை விட்டு... ஸாரி.... ஒரு மேல் நிலைப்பள்ளி காதல் ஜோடி ஒன்று... பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி வந்து... மாலையும் கழுத்துமாக... பேனாவும் கையுமாக... எந்த ரிஜிஸ்டர் ஆஃபீஸ் முன்னால் திருமணம் செய்ய எண்ணி நின்றாலும்... ஆணின் வயது 21 ம், பெண்ணின் வயது 18 ம் ஆவணமாக அவர்களிடம் இருந்தால் தான்... பதிவு திருமணம் நடத்திவைக்க பதிவாளர் பதிவு புத்தகத்தை திறப்பார்..! அதாவது... இந்திய சட்டப்படி... ஆணுக்கு 21 ம் பெண்ணுக்கு 18 ம் பூர்த்தி ஆனால்தான் "சட்டப்படி" அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும்..!
இனி...?
16 வயது இருந்தாலே போதுமாம்... பரஸ்பர சம்மதத்தின் பேரில் சட்டப்படி உடலுறவு கொள்ளலாமாம்..! விபச்சாரம் பண்ணலாமாம்..! ஆனால்... அதே சட்டப்படி திருமணம் மட்டும் இவர்கள் பண்ண முடியாதாம்..! விபச்சாரம் செய்யும் போது மேஜர்கள்... கல்யாணம் என்றால் மைனர்கள்..! அடப்பாவிகளா..! என்னய்யா சட்டம் இது..?
'16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்றல்லவா முதலில் முன்பக்க முகப்புக்கதவு சட்ட திருத்தத்தை செய்ய வேண்டும்..? அதற்கு பிறகு அல்லவா... உங்கள் வசதிக்காக... 'கள்ள உறவுக்கும்', 'விபச்சாரத்துக்கும்' கொள்ளை புற கதவு திறக்கும், இந்த அபச்சார சட்டத்தினை போட வேண்டும்..!?
பாராளுமன்றத்தில் உட்காந்து கொண்டு இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை..! நமது நன்மைக்காக அறிவோடு சட்டம் இயற்றுவார்கள் என்று நம்பி நாமும் வாழ்கிறோம்..! ஹூம்ம்ம்ம்..!
இறைவா..! இனி, ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ மாணவர்களை எல்லாம் நீ தான் காப்பற்ற வேண்டும்..!
உடல் அளவில் திருமண வயதை எட்டி 16 வயதில் பெற்றோரால் திருமணம் செய்வித்தால்... அதை 'குழந்தை திருமணம்' என்று கூறி எதிர்ப்போர்தான்... இப்போது, 'குழந்தை விபச்சார ஆதரவு சட்டம்' கொண்டு வருகிறார்கள்..!
சகோஸ்..!
நாம் வாழும் இக்காலத்தில் மானக்கேடான அனைத்து வாயில்களும் சட்டப்பூர்வமாகவே திறந்துவிடப்படுகின்றன. ஷைத்தான் தனது சூழ்ச்சியால் தனது பாதையை அவனது நண்பர்களுக்கு மிகவும் எளிதாக்கிவிட்டான். அவனை பின்பற்ற பாவிகளும் மோசடிக்காரர்களும் அதிகரிக்க தொடங்கிவிட்டனர்.
'பெண்விடுதலை' 'பெண்ணுரிமை' எனும் வஞ்சக பெயரில்... ஆண்களின் வக்கிரத்துக்கு இறையாக... பெண்களின் அரைநிர்வாணமும், அட்ஜஸ்ட்மெண்டும் எங்கும் பெருகிவிட்டது. கண்களுக்கு கவர்ச்சியும், தீயபார்வைகளும் நீக்கமற ஆண்களுக்கு எங்கும் நிரம்பிவிட்டது. ஆண் பெண் உடலளவில் ஒன்றாகக்கலப்பது சங்கோஜமின்றி எங்கும் சகஜமாகிவிட்டது.
பச்சையான பேச்சுக்களும், மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும், சிகப்பு விளக்கு விடுதிகளும் படித்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. இதனை சுகிக்க கிராமத்தவர்களும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து விட்டது.
பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டன. ஆண்களின் கற்பிழப்பும், பெண்களின் கற்புபிழைப்பும் சாதாரணமாகிவிட்டன. இதன் விபச்சாரவிளைவான 'சிசுக்கொலைகளும்', 'குப்பைத்தொட்டி குழந்தைகளும்' மலிந்துவிட்டன.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 17:32)
source: http://pinnoottavaathi.blogspot.com/2013/03/16-ok-but-1821.html#more

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.