
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
Thursday, May 3, 2018

Monday, May 5, 2014
ஒரு..நிமிஷம் ...பொண்ணு பார்க்க போறீங்களா....?
தம்பி! பொண்ணு பார்க்கவா போறீங்க?
[ பாலியல் வறட்சி நிரம்பிய நம் நாட்டில், திருமணம் என்பது அடிப்படையில் ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பான சமாச்சாரமாக மட்டுமே இருப்பது நம் துரதிர்ஷ்டம் தான். அதற்கு அடுத்தபடியாக திருமணம் என்பது வாழ்க்கையை வளப்படுத்த வரும் வாய்ப்பாக (வரதட்சணை, பெண்ணின் சம்பளம்..) பார்க்கப் படுகிறது.
இதற்கும் அப்பால் 'தன் தேவை என்ன? வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? அதற்காக நாம் இழக்கப்போவது எதை? நமக்கு எது முக்கியம்?' என ஒரு ஆணும், ஆணைப் பெற்றோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்களுக்குத் தேவை இன்னொரு தாய் தான் என்றால், அதற்கேற்றாற் போன்று பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வது நல்லது.
'கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை' என்பது நடைமுறையில் ஒத்துவராத ஒரு விஷயம். எனவே பொண்ணு பார்க்கக் கிளம்பும் தம்பிமார்கள் வாழ்க்கைத் துணியிடமிருந்து 'என்னவெல்லாம் வாங்கலாம்?' என்று மட்டுமே யோசிக்காமல், ' அதற்கு பிரதிபலனாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டி வரும்?' என்றும் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த பாவத்திற்கே நீங்கள் ஆளாக நேரிடும்.]
தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?
சமீபகாலமாக பொருளாதாரக் காரணங்களாலும், தாம்பத்தியப் பிரச்சினையினாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தித் தொகுப்பை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியதைப் பார்த்தேன். ஏதாவது உருப்படியாக தகவல்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது.
கருத்துச் சொன்ன சமூக ஆர்வலர்களும் மொன்னையாகப் பேசினார்களேயொழிய, பிரச்சினையின் மையத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் ஈகோ என்ற ஒற்றை வார்த்தையுடன் அதைக் கடந்து சென்றார். இந்தியாவில் 15-25% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகச் சொல்லப்பட்டது. சமீபகாலமாக அதிகரிக்கும் விவாகரத்திற்குக் காரணங்கள் என்ன?
வரதட்சணைக் கொடுமை என்பது தொடர்ந்து ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது, பல நேரங்களில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாலும் அதையடுத்து வேறு என்ன பிரச்சினை என்றால், கணவன் மனைவிக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினை. அதை அலசுவதற்கு என் தம்பி ஒருவரின் வாழ்க்கையையே எடுத்துக்கொள்வோம்.
தம்பி நல்ல பையன். ஐ.டி.துறையில் நல்ல வேலை. பேங்க் அக்கவுண்ட் நிறைய சம்பளம்.பிரச்சினை இல்லாத குடும்பம் என்பதால் பெண் கொடுக்க பலரும் போட்டி போட்டனர். தம்பியும் ஏறக்குறைய இதே பண்புகளைக் கொண்ட பெண்ணாகத் தேர்வு செய்தார். தம்பியின் குணநலன்கள் எனக்குத் தெரியும் என்பதால், அப்போதே எனக்கு டவுட்டாகிக் கேட்டேன் 'தம்பி, இது உனக்குச் சரிப்பட்டு வருமா?' என்று. அதற்குத் தம்பியும் நீண்ட விளக்கம் கொடுத்தார்.
"அண்ணே, இந்தக் காலத்துல ஒரு ஆள் வேலை செஞ்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. நான் ஃபிஃப்ட்டி தவுசண்ட் வாங்குறேன். அந்தப் பொண்ணு இப்பவே தேர்ட்டி தவுசண்ட் வாங்குது. இந்தியாலயே எயிட்டித் தவுசண்ட்ஸ்..இதை விட வேற என்ன வேணும்?" என்றார். இதைவிடவும் வேறு சில விஷயங்கள் வேண்டுமே என்று தோன்றினாலும், தம்பியின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை. தம்பியும் நான் சொன்னால் கேட்கக்கூடியவரும் இல்லை.
அதன்பின் திருமணமாகி, இரண்டாண்டுகள் கழித்து இப்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. சென்ற இந்தியப் பயணத்தில் தம்பியைப் பார்த்தபோது 'என்னா பொம்பளைண்ணே அது... என்னை பாத்திரம் கழுவச் சொல்றா... வீட்டுவேலை செய்யிங்கிறா... லீவுநாள்னா பத்துமணி வரைக்கும் தூங்குறா... வீட்டுல விளக்குப் பொருத்தறதே கிடையாது. எப்பவும் செல்ஃபோனை நோண்டிக்கிட்டு.... எங்க ஊருக்கு வர்றதேயில்லை... அய்யய்யோ... ஒரு ஸ்டேஜுக்கு மேல சமாளிக்க முடியலை...' என்று ஒரே புலம்பல்!
மிகப் பெரும்பாலான ஆண்கள், தன் அம்மா போன்றே குணநலன்கள் உள்ள பெண்ணைத் தேடுபவர்கள் தான். 'தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். சமையல் வேலை, வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும்' எனும் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காட்டுவது அவர்களது 'சென்ற தலைமுறை அம்மா' போன்ற பெண்ணையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழ்மன ஆசையே!
ஆனால் நம் அம்மாக்களுக்கு 'புராஜக்ட் டென்சன்' கிடையாது. காலையில் எழுந்ததும் போக்குவரத்து நெரிசலில் பஸ்/ஸ்கூட்டி பயணம் செய்யும் அவஸ்தை கிடையாது. கொஞ்சம் சிரித்துப் பேசினாலே எழும் 'புரபோசல்கள்' கிடையாது. பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் குவிவதால் அடையும் மன மாறுதல்களும் கிடையாது. அவர்களது வாழ்க்கை முறை எளிமையானது.
முந்தைய தலைமுறை வரை சம்பாதிப்பது புருஷ லட்சணமாக மட்டுமே பார்க்கப்பட்டது. அது கணவர்களின் கடமையாகவே இருந்தது. தற்போது கணவனின் கடமையை சரிபாதியாக மனைவிக்குப் பிரித்துக் கொடுக்கும் தற்கால தம்பிகள், மனைவியின் கடமையையும் சரிபாதியாக பிரிக்க வேண்டும் என்ற வாதத்தை முழுமனதாக ஏற்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அதுவே பிரச்சினைக்கு மூல காரணமாக ஆகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் மெயில் குரூப்பில் நண்பர் ஒருவர் 'நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா' என்று மெயில் போட்டார். மற்றொரு நண்பர் '*** கம்பெனியில் ஒரு பெண் இருக்கு' என்று பதில் போட்டார். அதற்கு நம்மாளு போட்ட பதில்: 'அய்யய்யோ..அந்தத் துறையா? ஆளை விடுங்கடா சாமீ!". அப்படிப் பதில் போட்ட நண்பரின் சொம்பு எங்களால் நெளிக்கப்பட்டது, எப்படி சிலரின் தவறை பொதுமைப்படுத்தலாம் என்று! அப்போது நடந்த விவாதங்களின் முடிவில் அந்த ஆணாதிக்கவாதி(!) 'சரிப்பா... அந்தப் பெண்களை கட்டிக்கும் தகுதி எனக்குக் கிடையாது... என்னை விட்டுடுங்க' என்று சரணடைந்தார்.
பெரும்பாலான ஆண்கள் என்ன தான் பெரிய படிப்பு, எம்.என்.சி.கம்பெனியில் வேலை என்று பெற்றிருந்தாலும், உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஒவ்வொரு துறையுமே தனக்கென்று தனிப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றன. இன்னும் நுணுக்கமாக ஆராயுமிடத்தில், ஒவ்வொரு பதவியுமே (ஜூனியர் இஞ்சினியர்-இஞ்சினியர்-புராஜக்ட் லீடு-மேனேஜர்) தனிப்பட்ட குணநலன்களைக் கொண்டிருக்கின்றன. சில கலாச்சாரங்கள்/குணநலன்கள் எவ்வித கவனிப்பையும் ஏற்படுத்தாதவை. சில தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. 'தாய்மை என்பது பெண்களை அடிமையாக வைத்திருக்க ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பண்பு' என்பது போன்ற நவீன கருத்துக்கள் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் நிலையில், ஆண்கள் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பாலியல் வறட்சி நிரம்பிய நம் நாட்டில், திருமணம் என்பது அடிப்படையில் ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பான சமாச்சாரமாக மட்டுமே இருப்பது நம் துரதிர்ஷ்டம் தான். அதற்கு அடுத்தபடியாக திருமணம் என்பது வாழ்க்கையை வளப்படுத்த வரும் வாய்ப்பாக (வரதட்சணை, பெண்ணின் சம்பளம்..) பார்க்கப் படுகிறது.
இதற்கும் அப்பால் 'தன் தேவை என்ன? வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? அதற்காக நாம் இழக்கப்போவது எதை? நமக்கு எது முக்கியம்?' என ஒரு ஆணும், ஆணைப் பெற்றோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்களுக்குத் தேவை இன்னொரு தாய் தான் என்றால், அதற்கேற்றாற் போன்று பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வது நல்லது.
'கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை' என்பது நடைமுறையில் ஒத்துவராத ஒரு விஷயம். எனவே பொண்ணு பார்க்கக் கிளம்பும் தம்பிமார்கள் வாழ்க்கைத் துணியிடமிருந்து 'என்னவெல்லாம் வாங்கலாம்?' என்று மட்டுமே யோசிக்காமல், ' அதற்கு பிரதிபலனாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டி வரும்?' என்றும் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த பாவத்திற்கே நீங்கள் ஆளாக நேரிடும்.
எனவே பரந்த மனதுடன் வாழ்க்கையை அணுகுங்கள்.
All the best!
source: http://sengovi.blogspot.in/2012/06/blog-post_25.html
Tuesday, March 11, 2014
மோடியும் ஜூனியர்-விகடனும்...!
''தமிழ் மக்களின் நாடித்துடிப்பு'' என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ''ஜூ.வி'' எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
[சரி, இதெல்லாம் விகடன் நிர்வாகம், முதலாளிகளுக்கு தெரியாதா, அவர்களுடைய நிலை என்ன என்ற கேள்வி எழலாம். முதலாளிகளைப் பொறுத்தவரை மோடி வெற்றி பெறுவார் என்பதற்காக தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் என்று பொய் சொல்வதெல்லாம் பிரச்சினை அல்ல. அந்த பொய்யினால் ஒரு முதலாளி என்ற முறையில் அவர்கள் அடையும் நிலை, ஆதாயம் என்ன என்பதுதான் முக்கியம். மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு குதிரையில் செலவே இல்லாமல் மூலதனமிடுவது ஒன்றும் குறையல்லவே?
நாளை தேர்தல் முடிந்து பாஜக கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் அதை நியாயப்படுத்தி தட்டச்சு விரல்கள் எழுத முடியாதா என்ன? இல்லை ஜூவி வாங்கும் வாசகர்கள்தான் செருப்பை எடுத்துக் கொண்டு அண்ணா சாலைக்கு கிளம்பி விடப் போகிறார்களா? ஆனால் ஓரிரு இலட்சம் விற்கும் ஜூவியை வைத்து ஐந்து கோடி தமிழக மக்களின் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம் என்று திருமாவேலன் நினைக்கிறாரே, உண்மையில் இதே ஜூவி இலட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ விற்பனை ஆனால் இவர் நூறு ஜெயலலிதா, ஆயிரம் மோடிகளுக்கு சமமாக இருப்பார் என்பது மட்டும் உண்மை.
பாஜகவையோ, வைகோவையோ தனிப்பட்ட முறையில் ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன்ஆதரிப்பது அவரது ஜனநாயக உரிமை. அதை அநீதியான ஆதரவு என்று நாம் விமரிசிக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையை அவரது தனிப்பட்ட விருப்பத்திற்காக பொய்யும், புனைவும் கலந்து பயன்படுத்துவது, இது வெறுமனே தனிப்பட்ட உரிமை என்பதைத் தாண்டி ஒரு சதித்திட்டம் என்ற எல்லையில் நுழைந்து விடுகிறது. முதலாளித்துவ ஊடகங்களுக்கென்று சொல்லிக் கொள்ளப்படும் நடுநிலைமை, செய்திகளை கருத்து சார்பு இன்றி வெளியிடுவது போன்ற மாய்மாலங்கள் கூட ஜூவிக்கு இல்லை. திருமாவேலன் அப்பட்டமாக தனது ஆசிரியர் பதவியை முறைகேடாக பயன்படுத்துகிறார். ]
மோடிக்காக பொய்யான கருத்துக்கணிப்பு வெளியிடும்
ஜூனியர் விகடனின்
அயோக்கியத்தனம் அம்பலம்!
''தமிழ் மக்களின் நாடித்துடிப்பு'' என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ''ஜூ.வி'' எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
டாடா இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மைய அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்று பர்கா தத்தும், நீரா ராடியாவும் ‘ஆத்மார்த்த’மாக உரையாடுவதைப் பார்க்கும் தமிழக ஊடக ஆசாமிகளுக்கும் அந்த ஆசை வராமலா இருக்கும்? இதனால் அதிமுக அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ‘அம்மா’வை சும்மா என்று எழுதினாலே சுளுக்கும், வழக்கும் உறுதி என்பதால் இவர்கள் பார்க்கும் தரகு வேலையில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதாவது அடிமைத்தனம் கண்டிப்பாக இருக்கும்.
டாடா இன்னபிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மைய அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்று பர்கா தத்தும், நீரா ராடியாவும் ‘ஆத்மார்த்த’மாக உரையாடுவதைப் பார்க்கும் தமிழக ஊடக ஆசாமிகளுக்கும் அந்த ஆசை வராமலா இருக்கும்? இதனால் அதிமுக அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ‘அம்மா’வை சும்மா என்று எழுதினாலே சுளுக்கும், வழக்கும் உறுதி என்பதால் இவர்கள் பார்க்கும் தரகு வேலையில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதாவது அடிமைத்தனம் கண்டிப்பாக இருக்கும்.
ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலனின் இலட்சிய பத்திரிகையாளர் தரகு வேலை பார்க்கும் பர்கா தத்
ஜூனியர் விகடனின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான ப.திருமாவேலன் தமிழ்நாட்டின் பர்கா தத்தாக படியேறுவதற்கு ஒரு தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியிருக்கிறார். தமிழகத்தில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளான பாஜகவை ஆளாக்குவதற்கு காவி போதையில் திளைக்கும் கண்றாவி காந்தியவாதி தமிழருவி மணியன் மாமா வேலை பார்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில் மீடியா பார்ட்டனர்களாக தினமலர், தினமணி, புதிய தலைமுறை, துக்ளக், குமுதம் இன்னபிற ஊடகங்கள் தீவிரமாக கதை எழுதி வருகின்றன. எனினும் மோடி பிரதமர் ஆக முடியவில்லை என்றால் ஜெயா பிரதமராக பாஜக உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் சோ போன்றவர்கள் பாஜகவை ஆதரிப்பது போன்று மற்ற பத்திரிகைகளும் அதிமுகவையும் விட்டுக் கொடுக்காமல் செய்திகளை படைத்து வருகின்றன.
இதில் மோடிக்கு பக்க மேளம் வாசிக்கும் கார்ப்பரேட் தமிழ் ஊடங்களையெல்லாம் விஞ்சும் தலைமைப் பார்ட்டனராக ஜூவியின் திருமாவேலன் அல்லும் பகலும் பொய்யும் புனைவுமாக பாடுபாட்டு வருகிறார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று பாஜக கும்பல், கார்ப்பரேட் மற்றும் ஊடக, இணைய விளம்பர நிறுவனங்களோடு கிளப்பி விட்ட புகையின் போதே திருமாவேலனும் ஜூவியை அதற்கு கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். முத்தாய்ப்பாக “எந்தக் கூட்டணி ஜெயிக்கும்ஸ. அடுத்த பிரதமர் யார்? ஜூ.வி மெகா சர்வே ரிசல்ட்” என்ற தலைப்பில் 19.01.14 தேதியிட்ட இதழில் ஒரு அட்டைப்பட செட்டப் கட்டுரை வந்திருக்கிறது.
இந்த ‘மெகா’ சர்வேக்காக ஜூ.வியின் 90-க்கும் மேற்பட்ட நிருபர் படை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி சுழன்று 9,174 பேர்களை சந்தித்து தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை ‘துல்லியமாக’ கண்டு பிடித்திருக்கிறதாம். ஒரு நிருபர் தலா 100 பேர்களை சந்தித்து, விரும்பிய பதில்களை வரவழைப்பதற்காகவென்றே திருமாவேலனால் தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகளை கேட்டு, பின்பு உதவி ஆசிரியர்களால் தொகுத்து இறுதியில் ஜூவியின் ஆசிரியர் மேஜையில் திருத்தம் போட்டு சிம்பிளாக அச்சடித்து விட்டார்கள். ஒரு பொய்யை உண்மையென காட்ட வழக்கமாக செய்யப்படும் தகிடுதத்தங்களையும், ஜிகினா வேலைகளையும் செய்யாமலேயேக் கூட மிகுந்த அலட்சியத்துடன் இந்த சர்வே நம் முன் வைக்கப்படுகிறது. படிப்பவன் நம்புவான் என்று அவனது அறிவு குறித்த எகத்தாளமான நம்பிக்கை இவர்களுக்கு.
இந்த சர்வேயில் எட்டு கேள்விகளுக்கான பதில்களை சதவீதக் கணக்கிலும், வரைபடமாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் முத்தாய்ப்பான கேள்வி “நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள்?”.
அதற்கு ஜூவியின் செட்டப் தயாரிப்பு படி பாஜக கூட்டணி 40.88% சதவீதமும், அதிமுக கூட்டணி 22.70%, திமுக கூட்டணி 21.77%, காங்கிரஸ் கூட்டணி 10.21%, பாமக கூட்டணி 4.44%மும் பெற்றிருக்கிறதாம். அதாவது வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி சுமார் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் வண்ணம் முதலிடத்தில் இருக்கிறதாம். தமிழகத்தில் இரண்டு அல்லது இரண்டே கால் சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத காவிக் கூடாரம், மதிமுக, பச்சமுத்து, கொங்கு வேளாளக் கட்சி போன்ற அனாமதேயங்களோடு சேர்ந்து இத்தகைய பெரு வெற்றி பெருமாம். ஒரு வேளை தேமுதிக, பாமக வந்தால் கூட இந்த கூட்டணிக்கு ஓரிரண்டு தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கலாமே ஒழிய வேறு ஒன்றும் கிடைத்து விடாது.
‘இல்லை இது உண்மை’ என்றால் அதற்குரிய அறிவியல்பூர்வமான முறையில் சர்வே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவில் ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்தும் கருத்து கணிப்பு கூட பாதிக்கு பாதி தவறாகவே நடந்திருக்கிறது. இருப்பினும் அந்த சர்வேக்கள் மிகுந்த தொழில்முறையில் நடப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்த வரலாறு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் பிரச்சினைகள், தேசிய நலன்கள், சாதி, மதம், மொழி இன்னபிற காரணங்கள், வயது, பாலினம், நகரம், கிராமம்,தொழில், வர்க்கம் போன்ற பிரிவுகள், கூட்டணி யதார்த்தங்கள், இன்ன பிறவற்றையெல்லாம் தொகுத்து யாரை, எங்கே, எப்போது சந்தித்து கணிப்பு நடத்த வேண்டும் என்பதிலிருந்து முடிவுகளில் தவறுகளுக்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் என்பது வரை சொல்லி விடுகிறார்கள். இதற்கு மேலும், சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கட்சி சார்பு, கார்ப்பரேட் நலனும் இதைத் தீர்மானிக்கும் என்பதோடு பல முடிவுகள் தவறாகவும் இருந்திருக்கின்றன.
இந்த இலட்சணத்தில் திருமாவேலனது சர்வே தரத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். இதை ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ் போன்ற தொழில்முறை தேர்தல் ஆய்வாளர்களிடம் காட்டினால் காறித் துப்புவார்கள். இப்படி ஒரு அபாண்டத்தை, அயோக்கியத்தனத்தை துணிந்து செய்ய வேண்டுமென்றால் ஜூவிக்கு ஒரு நோக்கம் இருந்தே ஆக வேண்டும். அது மோடி மற்றும் மோடியோடு கூட்டணி சேரும், சேர்ந்தே ஆக வேண்டிய கட்சிகளின் நலனோடு இணைந்திருக்கிறது.
பிப் – 5, 2014 தேதியிட்ட இந்தியா டுடேவிலும் அடுத்த தேர்தல் குறித்து ஒரு சர்வேயை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும், பாஜக 212, இதர கட்சிகள் 228 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 29 இடங்கள், திமுக 5, காங்கிரஸ் 0, பிற கட்சிகள் 5 என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதில் பிற கட்சிகள் என்பதில் போலிக் கம்யூனிஸ்டுகள் தொடங்கி பாஜக கூட்டணி வரை பலர் இருக்கின்றனர்.
ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன் – பாஜக கூட்டணி வெற்றிக்காக பொய்யும் புரட்டுமாக வேலை செய்கிறார்
இந்தியா டுடே போன்ற இந்திய பத்திரிக்கைகளுக்கு, தங்களின் கணிப்பை சரியாகக் கொடுத்தாக வேண்டிய சந்தை நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்களது தொலைக்காட்சிகளிலும் இந்தக் கணிப்பை வெளியிடுவார்கள். அதனால் அவர்களுடைய கணிப்பின் எதிர்பார்ப்பும் எடை போடப்படுவதும் அதிகம். ஆக தில்லிக்காரன் கூட இங்கே பாஜக கூட்டணி பெறு வெற்றி பெறும் என்பதை மறுக்கும்போது அண்ணாசாலை அம்பி பத்திரிகை இப்படி பொய்யாக பொளந்து கட்ட வேண்டிய தேவை என்ன? இவ்வளவிற்கும் இந்திய அளவில் காங் கூட்டணியை விட பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே கணித்திருக்கிறது. அது அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம் என்றாலும், தமிழக நிலவரத்தை அவர்கள் சாதகமாக காட்ட முடியாத அளவு யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதே உண்மை. பொய் கூறுவதைக் கூட பொருத்தமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே ஜூவி ஆசிரியரின் நம்பிக்கை.
இந்த சர்வேக்கு ஜூவி தயாரித்திருக்கும் கேள்விகள் கூட திருமாவேலனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக பலமான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று வைத்தவர்கள், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பிஜேபி அணியில் சேர்ந்தால் எனும் கேள்விக்கு பதில்களாக, முரண்பாடாக இருக்கும், பலமான அணியாக இருக்கும், இது காங்கிரஸ் எதிர்ப்பு அணி என்று வைத்திருக்கிறார்கள். ஏன் திமுகவிற்கு வைத்த பதில்களை இங்கே வைக்கவில்லை? திமுகவிற்கு சந்தர்ப்பவாதம், பாஜகவிற்கு முரண்பாடு என்று யோசிப்பதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் சாத்தியமில்லை.
மேலும் விஜயகாந்த் எப்படியாவது பாஜக அணிக்கு வரவேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று கேள்விகளை வைத்திருக்கிறார்கள். மூன்றாவது கேள்வியான “விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?” என்பதற்கு, பாஜகவுடன் சேர வேண்டும் என்று 26.59% பேரும், திமுகவுடன் சேர வேண்டும் என 20.91% பேரும், தனித்துப் போட்டியிட வேண்டும் என 33.14% பேரும் சொல்லியிருக்கிறார்களாம். இதன்படி விஜயகாந்த் பாஜக கூட்டணியோடு சேர்ந்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என்று சுட்டிக் காட்டுகிறார்களாம். இந்த சர்வேயைப் பார்த்து சாலிகிராமம் கேப்டன் மனசு மாற வேண்டும், சீக்கிரம் பாஜக கூட்டணியில் துண்டை போட வேண்டும் என்று அண்ணா சாலை எடிட்டர் சர்வேயைக் காட்டி வற்புறுத்துகிறார்.
ஜூவி - பாஜக கூட்டணி
பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக் கட்டி எழுதியிருந்தார்கள்.
26.1.14 தேதியிட்ட ஜுவியில் பிஜேபி கூட்டணி கணக்கு என்ற அட்டைப் படமே வெளியாகியிருந்தது. அதில் தேமுதிக – 11 இடங்கள், பாஜக -10, மதிமுக – 9, பாமக – 9 இடங்கள் என்று போட்டிருந்தார்கள். சரி, உள்ளே ஏதாவது பயங்கரமான ஆய்வு கட்டுரை வந்திருக்கும் என்று பார்த்தால் கடைசி பக்கத்தில் தமிழக இதழ்களில் அரசியலை கிசுகிசுவாக மாற்றிய அற்பம் கழுகாரின் அந்தப்புரத்தில்தான் இதை சொருகியிருந்தார்கள். அதாவது பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு, சண்டை என்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையோடு அதற்குரிய நியாயத்தையும் இட்டுக்கட்டி எழுதியிருந்தார்கள். நீரா ராடியா – பர்கா தத் வழியில் திருமாவேலன் எவ்வளவு தொலை நோக்கோடு சிந்திக்கிறார் பாருங்கள்.
கூட்டணியில் அதிக இடத்தில் போட்டியிடும் கட்சி என்பது விஜயகாந்த விருப்பமாம். அந்த வகையில் அவருக்கு 11 ஓகே, பாஜக இரட்டை இலக்கத்தில் போட்டியிட விரும்புவதால் அவர்களுக்கு 10, கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை விட தமக்கு மிகவும் குறைவாக இருக்கக் கூடாது என்று கருதும் வைகோவின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவருக்கு 9, பிறகு பாமக தற்போதே பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்திருப்பதால் அதற்கு பழுதில்லாமல் 9 என்று முடிவாகியிருக்கிறதாம். இதில் பாமகவிற்கு பாஜக கூட்டணி விருப்பமில்லை என்றாலும் அன்புமணி வலியுறுத்துகிறாராம். இல்லையேல் அவர் போட்டியிடுவது இல்லை என்னுமளவு அந்த போராட்டம் நடக்கிறதாம்.
விஜயகாந்த் மலேசியா சென்று எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை எழுதும் ஜூவி இதனால் திமுகவினர் நிம்மதி அடைய முடியாது என்பதாக செய்திகளை நெய்து போடுகிறது. மலேசியாவில் மமகவினர் பார்த்து பேசினாலும் அவர் திமுக கூட்டணிக்கு வருவதாக எந்த உத்திரவாதமும் அளிக்கவில்லையாம். எல்லாம் விழுப்புரம் மாநாட்டில் அறிவிப்பதாக மழுப்பினாராம். இப்படி பாஜக கூட்டணி சிக்கலில்லாமல் அமைய வேண்டும் என்று இதழுக்கு இதழ் தினுசு தினுசாக போட்டுத் தாக்குகிறார் திருமாவேலன்.
எது எப்படியோ அவர் விரும்பியபடி விஜயகாந்த் இன்னமும் பிடிகொடுக்கவில்லை என்பதால் 2.2.14 தேதியிட்ட ஜூவியில் “விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு” ஜூவி சர்வே ஷாக் ரிசல்ட் எனும் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒட்டு மொத்தமாக விஜயகாந்த் செல்வாக்கு இழந்து வருகிறார் என்பதாகவும் அதே நேரம் அவருக்கு ஓட்டு போடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பதாகவும் பெரும்பாலானோர் தெரிவித்தனராம். இதுவும் ஜூவி நிருபர் படை 8,721 பேர்களை சந்தித்து எடுத்த சர்வேயாம்.
விஜயகாந்த் சரிவு
விஜயகாந்திற்கு செல்வாக்கு குறைகிறது என்பது குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் திருமாவேலனது நோக்கம் என்ன? “கேப்டன் உங்களது செல்வாக்கு சரிந்து வருகிறது, உடனே பாஜக கூட்டணியில் வந்து சேருங்கள், இல்லையேல் உங்கள் எதிர்காலம் பணால்” என்று மிரட்டிப் பார்க்கிறது ஜுவி. நாளையே அவர் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவரது சரிந்த செல்வாக்கு ஜூவியால் சைக்கிள் சுற்றும் நேரத்தில் பிரம்மாண்டமாய் எழும். எல்லாம் கணினி தட்டச்சுப் பலகையில் உள்ள வார்த்தைகள் தானே. தேவைப்படும் போது மாற்றி மாற்றி எழுதமுடியாமல் இருப்பதற்கு இது ஒன்றும் கல்வெட்டல்ல அல்லவா!
தமிழக நிலவரத்தின்படி யதார்த்தமாக யோசித்துப் பார்த்தால் விஜயகாந்த் விரும்பினாலும் இனி அதிமுக கூடாரத்தில் நுழைய முடியாது. காங்கிரஸ், பாஜக இரண்டு கூட்டணியில் சேர்ந்தால் புது தில்லியில் தேமுதிக வாங்கிய வாக்குகளை விட கொஞ்சம் அதிகம் பெறலாம். இறுதியாக திமுக கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே ஓரிரு தொகுதிகளில் வெற்றியோ இல்லை கொஞ்சம் மரியாதையையோ அதாவது டெபாசிட்டையோ காப்பாற்றிக் கொள்ளலாம்.அதைத்தாண்டி அவருக்கு வேறு போக்கிடம் ஏதுமில்லை. எனினும் தனது பேரத்தை அதிகப்படுத்த அவர் நாட்களை கடத்துகிறார். வைஸ் கேப்டன் பிரேமலதாவும் அதற்கேற்றபடி திமிராக பேசுகிறார். இதெல்லாம் விஜயகாந்திற்கு தெரியாத ஒன்றல்ல என்றாலும் தமிழருவி மணியனும், திருமாவேலனும் அவரது மனதை ஊடக பலத்தால் மாற்ற முடியும் என்று தவமிருக்கிறார்கள்.
திருமாவேலனது மனங்கவர்ந்த அரசியல் தலைவர் வைகோவிற்கு இந்த தேர்தலில் ஏதாவது போக்கிடம் கிடைக்காதா என்ற சிக்கல் உள்ளது. இந்திய ராஜபக்சேவான மோடியின் தமிழக அடியாளாக 2002-லும் இப்போதும் கர்ஜிக்கிற இந்த கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியை ஒரு முன்மாதிரித் தலைவனாக இதயத்தில் போற்றுவதற்கு நிச்சயம் கொலவெறி மனது வேண்டும். அது திருமாவேலனுக்கு நிறையவே இருக்கிறது. ஒருவேளை இந்தக் கூட்டணியே வைகோவை கடைத்தேற்றுவதற்காக திருமாவேலன் செய்யும் முயற்சியோ என்று சிலருக்கு தோன்றலாம். ஜூனியர் விகடனை திறந்தாலே வாரம் ஒருமுறை வைகோ போட்டோவை போட்டு ஏதோ ஒரு அற்பமான விசயம் நேர்மறை செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. யாருமே சீந்தாத இந்த புரட்சிப் புயலுக்கு வலிந்து அடைக்கலம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
திருமாவேலன் புத்தகம்
ஈழப் பிரச்சனையில் போலி கம்யூனிஸ்டுகள் எந்தப் பக்கம் என்று தொடர் எழுதிய திருமாவேலன், இந்து மத வெறி மோடி பக்கம் போனது குறித்து யார் எழுதுவது?
இப்படி கடந்த ஆறு மாதங்களாக பச்சையாக பாஜகவிற்கும், மோடிக்கும் சொம்படிக்கும் திருமாவேலனது நோக்கம் என்ன? இதனால் என்ன ஆதாயம்? 21-ம் நூற்றாண்டு நிலவரப்படி கார்ப்பரேட் ஊழல் என்பது சிவப்பு சூட்கேசில் பறிமாறப்படும் பச்சைப் பணம் அல்ல. இத்தகைய நேரடி பொருளாதார ஆதாயங்களை விடுத்து அதிகாரம், செல்வாக்கு, பதவி போன்றவையும், எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாகவே ஆதாயம் கிடைக்கும் வசதிகளும்தான் இப்போதைய ட்ரெண்ட். இவை எதுவும் யாருக்கு, எதற்கு, எப்போது என்று நமக்கு உடனடியாக தெரியப் போவதல்ல. 2ஜி, நிலக்கரி ஊழல்களில் கூட ஊழல் என்பது கொள்கை முடிவு, சந்தை போட்டி என்று நியாயப்படுத்தப்படும் காலத்தில் நீரா ராடியாக்களை பொறி வைத்து பிடிப்பது கடினம்.
ஒரு ஏஜென்சி, ராஜ்ய சபா உறுப்பினர், பதவி மாற்றம், அதிகாரத் தரகு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் நீரா ராடியாக்கள் தமது சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளில் இருந்தே பலனை எதிர்பார்ப்பதால் அது முன்கூட்டியே ஒப்பந்தம் ஆகியிருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.
இவற்றைவிட தமிழகத்தில் ஏதுமற்று கிடந்த பாஜகவிற்கு ஒரு கூட்டணி அமைத்து அங்கீகரிக்கப்பட்ட வாழ்வு கிடைப்பதற்கு பணியாற்றி வரலாறு படைத்திருக்கிறேன் என்பதற்காக கூட திருமாவேலன் ஆசைப்படலாம். அப்படி தப்பித் தவறி பாஜக கூட்டணி ஒரு சில தொகுதிகளை வென்று மத்தியிலும் ஆட்சி அமைத்தால் அவரது ஆளுமை எப்படியெல்லாம் பொங்கி வழியும் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
சரி, இதெல்லாம் விகடன் நிர்வாகம், முதலாளிகளுக்கு தெரியாதா, அவர்களுடைய நிலை என்ன என்ற கேள்வி எழலாம். முதலாளிகளைப் பொறுத்தவரை மோடி வெற்றி பெறுவார் என்பதற்காக தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் என்று பொய் சொல்வதெல்லாம் பிரச்சினை அல்ல. அந்த பொய்யினால் ஒரு முதலாளி என்ற முறையில் அவர்கள் அடையும் நிலை, ஆதாயம் என்ன என்பதுதான் முக்கியம். மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு குதிரையில் செலவே இல்லாமல் மூலதனமிடுவது ஒன்றும் குறையல்லவே?
நாளை தேர்தல் முடிந்து பாஜக கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் அதை நியாயப்படுத்தி தட்டச்சு விரல்கள் எழுத முடியாதா என்ன? இல்லை ஜூவி வாங்கும் வாசகர்கள்தான் செருப்பை எடுத்துக் கொண்டு அண்ணா சாலைக்கு கிளம்பி விடப் போகிறார்களா? ஆனால் ஓரிரு இலட்சம் விற்கும் ஜூவியை வைத்து ஐந்து கோடி தமிழக மக்களின் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம் என்று திருமாவேலன் நினைக்கிறாரே, உண்மையில் இதே ஜூவி இலட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ விற்பனை ஆனால் இவர் நூறு ஜெயலலிதா, ஆயிரம் மோடிகளுக்கு சமமாக இருப்பார் என்பது மட்டும் உண்மை.
பாஜகவையோ, வைகோவையோ தனிப்பட்ட முறையில் திருமாவேலன் ஆதரிப்பது அவரது ஜனநாயக உரிமை. அதை அநீதியான ஆதரவு என்று நாம் விமரிசிக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையை அவரது தனிப்பட்ட விருப்பத்திற்காக பொய்யும், புனைவும் கலந்து பயன்படுத்துவது, இது வெறுமனே தனிப்பட்ட உரிமை என்பதைத் தாண்டி ஒரு சதித்திட்டம் என்ற எல்லையில் நுழைந்து விடுகிறது. முதலாளித்துவ ஊடகங்களுக்கென்று சொல்லிக் கொள்ளப்படும் நடுநிலைமை, செய்திகளை கருத்து சார்பு இன்றி வெளியிடுவது போன்ற மாய்மாலங்கள் கூட ஜூவிக்கு இல்லை. திருமாவேலன் அப்பட்டமாக தனது ஆசிரியர் பதவியை முறைகேடாக பயன்படுத்துகிறார்.
இசுலாமிய மக்களை நரவேட்டையாடிய மோடி எனும் கொலைகார பாசிஸ்ட்டை நெஞ்சில் ஏந்தி, பொய்யுரைத்து, மக்களை மாற்ற நினைப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது, ஈழத்திற்காக திருமாவேலன் எனும் இந்த ஆசிரியர் உகுத்ததெல்லாம் முதலைக் கண்ணீர் என்று.
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று முத்திரை வாக்கியத்துடன் வெளிவரும் ஜூவி எனும் இதழும் அதன் ஆசிரியரும் மோடிக்காக செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தமிழக மக்கள் காறி உமிழ வேண்டும்.
நன்றி: வினவு தளம்.
Sunday, March 9, 2014
பத்திரிக்கைகளும் பெண்களும்...!
[ செய்திகளை உள்வாங்கி உருவாக்கும் பொறுப்புக்களில் பெண்களின் பங்கு குறைவாகவும், செய்திகளை நளினத்தோடு வாசிப்பவளாகப் பெண்கள் ஊடகங்களில் தென்படும் மோசமான நிலையும் இருக்கின்றது.
ஊடகங்களில் வெற்றியாளராகவும், சாதனையாளராகவும், தலைமைத்துவம் சார்ந்த பெண்கள், தனித்துப் பயணிக்கக் கூடிய, பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய, பாலியல் பகுத்தறிவு மிக்கப் பெண்கள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதே இல்லை.
இங்கு உலகமயமாதலையும், ஊடகங்களின் நிலைப்பாட்டையும் எதிர்க்க வருவோரின் உள்ளக் கிடைக்கைபெண்கள் மீது கரிசனம் கொண்டுள்ளதா எனப் பார்த்தால் அதுவுமில்லை.
ஊடக வியாபாரிகள் பெண்களை வைத்துப் பணம் செய்ய யத்தனித்தால், இவர்கள் பெண்களைத் தாமே சுகிக்கவும், தமக்குக் கீழ் கொண்டு வரவும் பார்க்கின்றனர். இது பாலியல் சமத்துவமின்மையை பெருக்கிக் கொண்டே இருக்கின்றது. ஒன்று பெண்கள் முற்றும் முழுவதுமாக வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றனர், அல்லது அவளை ஒரு பாலியல் பண்டமாக்கப்பட்டு வீதிகளில் உலாவ விடுகின்றனர்.
அமெரிக்காவில் சராசரியாகப் பதின்ம வயதினர் நாள் தோறும் 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஊடகத் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். தொலைக்காட்சி, பாடல்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், இணையத் தளங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய ஊடகங்களில் தோன்றும் பெண்கள் தலைமைத்துவக் குணம் படைத்த, பொறுப்பான, அறிவில் சிறந்த பெண்ணாகக் காட்டப்படுவதில்லை, மாறாகப் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பண்டமாகவே காட்டப்படுகின்றனர். இது பெண்கள் குறித்தான பார்வையை இளம் சமூகத்தில் தவறாக விதைத்து வருகின்றது.]
ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா?
இன்றைய உலகச் சந்தையில் விற்கப்படும் பல பொருட்களில் பெண்ணின் தேகங்களும் ஒன்றாகி விட்டது என்பதில் ஐயமே இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு உலகம் இன்று ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் செய்தி தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், விளம்பர பதாகைகள் எனக் காட்சி ஊடகங்களே தினந்தோறும் நமது வாழ்வினை பெருமளவில் பாதிக்கின்றன.
மனித இனத்தின் இருப்பை ஊடகங்கள் தரும் தகவல் பறிமாற்றங்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் நாம் இன்று பெறுகின்ற தகவல்கள் அனைத்தின் நன்மை, -தீமைகளை, உண்மை - பொய்களைத் தீர்மானிக்கும் மிகப் பெரும் பொறுப்பும் நம் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான்.
அவற்றிலும் பெண்கள் இந்த உலக மயமாதல், ஊடகங்களால் எத்தகைய நன்மை - தீமைகளைச் சந்திக்கின்றார்கள் என்பதை நாம் பல சமயங்களில் சிந்திப்பதே இல்லை. ஆணாதிக்கச் சமூகம் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலே பெண்கள் பாலியல் அடையாளத்தோடு தான் நோக்கப்பட்டும் வந்துள்ளனர்.
இன்றைய ஊடகங்களின் சக்திகளை ஆணாதிக்கச் சமூகத்தின் கைகளில் கொடுப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மீதான ஊடக பூதக் கண்ணாடி அவர்களை ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாகவே காட்டி வருகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கின்றன.
ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா?
தினசரி நாம் வாசிக்கும் செய்திதாளாக இருக்கட்டும், பார்க்கும் தொலைக்காட்சியாக இருக்கட்டும், மேயும் இணையத் தளங்களாக இருக்கட்டும் பாலியல் அடையாளப் படுத்தப்பட்ட பெண்களை நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். பெண்களைப் பாலியல் சார்ந்த விடயமாகவும் இச்சைகள் தீர்க்கும், இனவிருத்தி செய்யப்படும் யந்திரமாகவும் நினைக்கும் பழம் சமூகத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியே இன்றைய ஊடகங்களின் இந்த நிலைப்பாடுகளுக்கு முக்கியக் காரணமாகும். ஊடகங்களை உருவாக்குவோரும், நுகர்வோரும் யாராக இருக்கின்றனர்? ஊடகங்கள் சமூகத்தில் எந்தப் பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்திப் பணம் பண்ணப் பார்க்கின்றனர் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இது வருங்காலச் சமூகங்களில் எத்தகைய மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?!
பெரும் நிறுவனங்கள் கொள்ளை லாபங்களைப் பெற சமூகத்தின் சரி பாதிப் பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தும் நிலைப்பாட்டைப் பற்றிச் சிந்திக்கவோ, மாற்றங்களைக் கொண்டு வரவோ பெரும்பாலான நமக்கு நேரமே இருப்பதில்லை.
இவ்வாறன நிலையில் அமெரிக்காவின் MissRepresentation.org என்ற அமைப்பு ஊடகங்களில் பெண்களை இழிவாக்கும் போக்கினைக் கண்டித்துப் போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் அண்மையில் ஒரு விவரணப் படத்தையும் வெளியிட்டு இருந்தனர். அதன் முன்னோட்டம் இதோ உங்களுக்காக ...
இவ் அமைப்பு பெண்ணின் அழகியல், பாலியல், இளமை சார்ந்த விழுமியங்களை, இலக்கணங்களை ஊடகங்களே தீர்மானித்து, அவற்றை இளம் சமூகத்தின் மீது திணிக்கும் கோர வியாபார உத்திகளைத் தகர்த்தெறிந்து வருகின்றது.
சினிமாவாக இருக்கட்டும், விளம்பரங்களாக இருக்கட்டும் அதன் முதன்மை கதாப்பாத்திரமாக இருப்பவன் ஆணாகவும், அவனது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பாலியல் பொம்மையாகவுமே பெண் சித்தரிக்கப்படுக்கின்றாள். இன்று நேற்றல்ல, மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டே இதே நிலைப்பாட்டைத் தான் உலகின் பல சமூகங்களும் பின்பற்றி வருகின்றன.
அமெரிக்காவில் சராசரியாகப் பதின்ம வயதினர் நாள் தோறும் 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஊடகத் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். தொலைக்காட்சி, பாடல்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், இணையத் தளங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய ஊடகங்களில் தோன்றும் பெண்கள் தலைமைத்துவக் குணம் படைத்த, பொறுப்பான, அறிவில் சிறந்த பெண்ணாகக் காட்டப்படுவதில்லை, மாறாகப் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பண்டமாகவே காட்டப்படுகின்றனர். இது பெண்கள் குறித்தான பார்வையை இளம் சமூகத்தில் தவறாக விதைத்து வருகின்றது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிர்பயா கூட்டு வன்புணர்வு கொலை சம்பவத்திற்குப் பின்னர் தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஊடகங்களில் பெண்களை எதிர்மறையாக, பொதுப்புத்தியில், இழிவாகச் சித்தரிப்பதன் பின்விளைவுகள் குறித்துக் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
"இன்றைய ஊடகங்கள் கலாச்சாரம் சார்ந்த ஒரு துறையாகப் பரிணமித்துள்ளது, உண்மையில் அதுவே ஆண், பெண் தோற்றத்தை உருவாக்கி, விற்பனை செய்தும் வருகின்றது. ஆனால் பெண்களின் தோற்றத்தை தொலைக்காட்சித் தொடர்களும், இசை நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் வேறு விதமாகச் சித்தரிக்கின்றனர், அது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை." எனப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்வி, மேம்பாட்டுத் துறையின் பேராசிரியர் ராஜேஸ் கில் கூறுகின்றார்.
இந்தியாவின் யதார்த்தமான பெண்களையும், குணங்களையும், அழகியலையும் இந்திய ஊடகங்கள் வெளிக்காட்டுவதில்லை. அது குறித்தான கவலையும் ஊடகப் படைப்பாளிகளிடம் இருப்பதில்லை. பெரும் சஞ்சிகைகள் கூட அட்டைப்படத்தில் பாலியல் மயமாக்கப்பட்ட பெண்ணின் படங்களைப் பிரசுரிக்கின்றனர். ஊடகங்களைப் படைப்பவர்கள் ஆண்கள். ஏனெனில் ஊடகங்களைக் கொள்முதல் செய்வோர் ஆண்கள். சமூகத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருப்போர் ஆண்கள்.
மேற்கு நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் பெண்களின் தொகை மூன்றில் ஒரு பங்கு உயர்வடைந்துள்ளது. இருந்த போதும் இது போதுமான அளவிற்கு இல்லையே எனலாம். ஊடகம், பாலினக் கண்காணிப்பகத்தின் தகவலின் படி, உலகம் முழுவதும் 24 % செய்திகள் மட்டுமே பெண்கள் குறித்தானவையா இருக்கின்றது. இவற்றில் எத்தனை சதவீதம் தலைமைத்துவம், சாதனைகள் போன்றவற்றைக் கூறுவார்கள் என்பதும், எத்தனை சதவீதம் சினிமா, இசை சார்ந்த பாலியல் மயமாக்கப்பட்ட பெண்களின் செய்திகள் என்பதையும் நாமே சிந்தித்துப் பார்க்கலாம்.
செய்திகளை உள்வாங்கி உருவாக்கும் பொறுப்புக்களில் பெண்களின் பங்கு குறைவாகவும், செய்திகளை நளினத்தோடு வாசிப்பவளாகப் பெண்கள் ஊடகங்களில் தென்படும் மோசமான நிலையும் இருக்கின்றது.
இந்திய ஊடகங்களில் வருகின்ற பெண் குறித்தான செய்திகள் ஒன்று பாலியல் காட்சிப் பொருளாக வருவார், அல்லது பாலியல் விடயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வலிமை இழந்த பெண்ணாகக் காண்பிக்கப்படுவார். இந்திய செய்தித் தாள்களில் 63 % செய்திகள் பெண்கள் பாதிக்கப்பட்ட குற்றச் செய்திகளாகவே இருக்கின்றது. இதனையே மக்கள் விரும்பிப் படிப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஒரு சில செய்திகளில் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடும் பெண்களின் வீரதீரங்களை வெளியிட்டு இருந்த போதும், அதனையும் பெண்கள் சட்டங்களைத் தவறாக வளைப்பதாக விமர்சனத் தொனியில் பலரும் எழுதி இருந்தமை மோசமான ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது.
பல இந்திய ஊடகங்களில் காண்பிக்கப்படும் பெண்கள் குற்றம் செய்யும் கொடூரக் குணமுடையவளாகவும், சுயநலம் மிக்கவளாகவும், அரசியல் ஞானமற்றவளாகவும், சமூக - கலாச்சாரங்களில் அதி நவீனத்துவத்தைக் கேள்விகள் இன்றி ஏற்பவளாகவும் காட்டப்படுகின்றாள். அது மட்டுமில்லாமல் அடக்கம் ஒடுக்கமாக, ஆண்களின் பேச்சை மதித்து, அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்து, தமக்கான கனவுகள், லட்சியங்களை இழந்து குடும்பம், உறவுகளுக்காக இருப்பவளே நல்லதொரு பெண்ணாகவும் அடையாளப்படுத்தப்படுவது பழமைவாத சிந்தனையின் பெரும் தாக்காக இருக்கின்றது. இரு நிலைப்பாடுகளும் பெண்கள் தம்மைத் தாம் எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் தவறான ஒரு வழிக்காட்டலை சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் தென்படும் பெண் கதாப்பாத்திரங்கள் யாவும் மணம் மீறிய உறவு வைத்திருப்பவளாகவும், பகட்டான ஆடை, நகைகள் அணிந்து கொள்பவளாகவும், மதப் பழமைத்துவங்களை, மூட நம்பிக்கைகளைத் தாங்கிப் பிடிப்பவளாகவும், குடும்பச் சண்டைகளை மூட்டுபவளாகவும், காதல் தோல்வியுடையவளாகவும், பெரும் வீடு, வாகனம், செல்பேசிகள், ஒப்பனைகள் செய்பவளாகவும், பழி வாங்கும் குணமுடையவளாகவும் காட்டப்படுகின்றாள். யதார்த்தத்தில் நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவ்வாறாகவா இருக்கின்றனர் சொல்லுங்கள்.
ஊடகங்களில் வெற்றியாளராகவும், சாதனையாளராகவும், தலைமைத்துவம் சார்ந்த பெண்கள், தனித்துப் பயணிக்கக் கூடிய, பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய, பாலியல் பகுத்தறிவு மிக்கப் பெண்கள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதே இல்லை.
பெண்கள் சதா ஆண் துணையோடு தான் போக வேண்டும் எனவும், பாலியல் விடயங்களில் தம்மைத் தாமே காக்கும் அறிவற்றவளாகவும் காண்பிக்கப்படுகின்றாள். அத்தோடு விளம்பர மகளிராக வருவோர் வீட்டுப் பொருட்களை விற்கவும், அழகியல் சாதனங்கள், ஒப்பனைப் பொருட்கள், உடைகள் விற்பவராகவுமே இருக்கின்றாள். ஆண்களோ வாகனங்கள் செலுத்துபவனாகவும், பெரும் முதலாளியாகவும், பெரும் பொருட்களை விற்பவனாகவும் காண்பிக்கப்படுகின்றனர். இது ஏற்றத்தாழ்வான விடயமில்லையா ?!
விளம்பரங்கள் உட்பட ஊடகங்களில் வரும் பெண்கள் மெல்லிடையும், வெளிர் நிறமும், பெருத்த அங்கங்களையும் கொண்டவளாக வருவதும். அவள் ஆண்களைப் பார்த்து நெளித்து, சிலிர்த்து மோகிக்கும் கதாப்பாத்திரங்களாகக் காட்டப்படுவதும் பெண்கள் குறித்தான தவறான எண்ணத்தை இளைய சமூகத்தில் விதைக்காதா ? ஒரு வேளை நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டுமோ எனப் பெண்களும், பெண் என்றாலே அவ்வாறானவர்கள் என ஆண்களும் நினைக்கச் செய்யாதா ?
திரைப்படங்களைப் படைக்கும் பெண்களின் பங்கு என்பதும் சொல்லும்படியாக இல்லை. அமெரிக்காவில் வெளியாகும் திரைப்படங்களில் மூன்றில் ஒரு கதாப்பாத்திரங்களே பெண்களாக இருக்கின்றனர். அதிலும் கூட அவர்கள் பாலியல் ஆடைகளை அணிந்து கொண்டும், அரை நிர்வாணமாகவும், ஆண் கதாப்பாத்திரங்களைக் கவரும் கதாப்பாத்திரங்களாகவுமே காட்டப்படுகின்றனர். அவற்றில் கூட 13- 20 வயது பெண்களே பெரும்பாலான கவர்ச்சியுடையவர்களாகக் காட்டப்படுகின்றனர் என்பது மிகவும் மோசமான ஒரு நிலைப்பாடாகவே இருக்கின்றது.
இந்திய சினிமாக்கள் ஒன்றும் சளைத்ததல்ல, இங்கும் கூட 60 வயது கதாநாயகனின் காமுகியாகத் தோன்றுபவர்கள் எல்லாம் இருபது வயதுக்கும் குறைந்த பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது, அதிலும் அவர்களை நல்ல ரீதியில் காட்டும் நிலை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. மலையாளத்தின் சியாமா பிரசாத் போன்ற ஒரு சில இயக்குநர்களைத் தவிர்த்து ஏனைய இந்திய இயக்குநர்களின் திரைப்படக் கதாப்பாத்திரங்கள் ஆணைச் சுற்றியே எப்போதும் நிகழ்வதாக இருக்கின்றது.
இங்கு உலகமயமாதலையும், ஊடகங்களின் நிலைப்பாட்டையும் எதிர்க்க வருவோரின் உள்ளக் கிடைக்கை பெண்கள் மீது கரிசனம் கொண்டுள்ளதா எனப் பார்த்தால் அதுவுமில்லை. அவர்களது நிலைப்பாடு சமூகக் குற்றங்கள், சமூகத் தோல்விகளுக்குக் காரணம் மேற்கத்திய சிந்தனைகள், வாழ்க்கை முறை எனப் பழிப் போட்டுவிட்டு, பெண்களை மீண்டும் வீடுகளுக்குள் முடக்கும் ஆணாதிக்கத்தின் மற்றுமொரு தொலைவெளியே ஆகும்.
பெண்களைக் கேவலமாகப் பொதுவில் வியாபாரம் செய்வோருக்கும், பெண்களை முடக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களது வாழ்வை முற்றும் முழுதாகத் தீர்மானிக்க நினைக்கும் பழமைவாதிகளின் நிலைப்பாட்டுக்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை. ஊடக வியாபாரிகள் பெண்களை வைத்துப் பணம் செய்ய யத்தனித்தால், இவர்கள் பெண்களைத் தாமே சுகிக்கவும், தமக்குக் கீழ் கொண்டு வரவும் பார்க்கின்றனர். இது பாலியல் சமத்துவமின்மையை பெருக்கிக் கொண்டே இருக்கின்றது. ஒன்று பெண்கள் முற்றும் முழுவதுமாக வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றனர், அல்லது அவளை ஒரு பாலியல் பண்டமாக்கப்பட்டு வீதிகளில் உலாவ விடுகின்றனர். இரு நிலைப்பாடுகளால் தமது வாழ்வை, உரிமையை, உணர்வை இழக்கும் அபாயமான சூழலிலேயே பெண்கள் இருக்கின்றனர்.
உண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கையும், உலக மயமாக்கலும், புதிய வாழ்க்கை முறையும் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியுள்ளது. விளிம்பு நிலை சமூகப் பெண்களுக்குக் கூட வாழ்வின் நற்கனிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை தந்துள்ளது. பொருளாதாரச் சுதந்திரம் என்பது பெண்ணை மட்டுமின்றி அக் குடும்பத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்துள்ளது. வீடுகளுக்கு முடங்கும் நிலை களையப்பட்டு, தொழில்துறைகள், கல்வித் துறைகள் என அனைத்துத் துறைகளில் தலைமைத்துவத்தை அடையும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. நடுத்தரக் குடும்பத்து பெண்களின் சுதந்திரமும், சமத்துவ உரிமைகளையும் இது நிச்சயம் உறுதி செய்து கொடுத்துள்ளது. சுயமான முடிவுகளை எடுக்கவும், குடும்பத்திலும், சமூகத்தில் சரி நிகரான பங்களிப்பு செய்யும் சூழலும் கிடைத்துள்ளது.
அடக்குமுறைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் கொடுமைகள், உளவியல், உடலியல் துன்புறுத்தல்கள் என அனைத்தையும் ஏறி மிதித்துக் கொண்டு போகும் அற்புதமான சூழலாக இன்றுள்ளது. அதே சமயம் இத்தகைய நடுத்தர, கல்விக் கற்ற, பணிகளில், தொழில்களில் முன்னேற்றம் கண்டு, தலைமைத்துவத்தை அடைந்துள்ள பெண்களை ஊடகங்கள் நிகராக, நேராக, முறையாக, நல்ல முறையில் சித்தரிக்காமல் போனது நிச்சயம் முறையற்ற ஒன்றே ஆகும். ஊடகத் துறையில் பெண்கள் அதிகளவு பிரவேசிக்க வேண்டும், ஊடகங்களில் படைப்பாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் முன்னேற்றம் காண வேண்டும். பெண்கள் குறித்தான நல்ல முறையிலான சித்தரிப்புக்களை இச் சமூகங்களில் ஏற்படுத்த வேண்டிய ஒரு மாபெரும் பணி பெண்களிடம் மட்டுமில்லை, பெண்ணிய உரிமைகளை விரும்பும் அனைத்து ஆண்களிடமும் கூட இருக்கின்றது.
நன்றி: கோடங்கி .காம்
Thursday, October 10, 2013
போலிஸின் கதைகளும் பிண்ணனியும்.....!
தமிழக சினிமா கதை ஆசிரியர்கள் தமிழக பொலிசாரிடம் பாடம் கற்க வேண்டும்! தமிழக போலீசாரிடம் அவ்வளவு கற்பனைத் திறனும் விஷயம் இருப்பதை இன்றுவரை கவனிக்காமல் சினிமா கதாசிரியர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது !
சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட புத்தூரில் பிலால் மாலிக் பன்னா இஸ்மாயில் ஆகியோர்களை ஜேம்ஸ்பாண்டு கணக்காக பிடித்ததாக சொன்ன கதை அந்த ரகமாகும்.!
சென்னையில் ஒரு லாட்சில் தங்கியிருந்த பொது, கைதுசெய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை ஓடும் பஸ்ஸில் பாலோவ் செய்து,அவனுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதாக கதை சொல்லி வருகிற போலீசார், பிடிபட்ட பக்ருதீனிடம் விசாரித்ததில் அவன் விசாரணையில் சொன்னதாக கூறும் கதைகள் எதற்கும் ஆதாரம் இல்லை! அதைபற்றிய அக்கறை பொலிசாரின் கதைகளை அப்படியே ,தங்களது பத்திரிகைகளில் பிரசுரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தேவையில்லை என்பது தெரிகிறது.!
ஊடகங்களுக்கு அவர்களின் செய்தி பரபரப்பாக இருக்கவேண்டும். வியாபாரம் நடக்கவேண்டும் என்பது ஒன்றே நோக்கமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. !
ஊடகங்கள் உதவியுடன் காவல்துறை அரங்கேற்றும் நாடகங்கள், அரங்கேற்றி வரும் கதைகள் எல்லாம் போலிசின் வீர பிரதாபங்களை பொதுமக்களிடம் நிலைநிறுத்துவதை கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.!
போலீசாரின் மோசமான செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, அவகளின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிசாரின் கையாலாகாத செயல்களை மூடிமறைக்கவும் உதவுவதை புரிந்து கொள்ள முடியும்.
. ஜே ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் கேட்ட பெயரை மறைக்கவும் நல்லாட்சி நடைபெறுவதாக பெருமை அடித்து பீற்றி கொள்ளவும் கூட இந்த கதைகள் வெகுவாக பயன்படுவதை நாம் காண முடிகிறது. !
. ஜே ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் கேட்ட பெயரை மறைக்கவும் நல்லாட்சி நடைபெறுவதாக பெருமை அடித்து பீற்றி கொள்ளவும் கூட இந்த கதைகள் வெகுவாக பயன்படுவதை நாம் காண முடிகிறது. !
முஸ்லிம்களில் மூன்று பேரை பிடித்து, அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் உயிரை துச்சமாக மதித்து அவர்களை பிடித்து இருக்கிறோம் என்று போலீஸு சொல்ல ஆகா..! என்று சிலாகித்து, பாராட்டி ஆளுக்கு ஐந்து லட்சமும், பதவி உயர்வும் ஜெ-வால் போலீசாருக்கு தரப்பட்டு உள்ளது.!
காவல்துறையின் எல்லைமீறிய கடமை உணர்வுகளை ஜே பாராட்டுவது குறித்து நமக்கு வருத்தம் இல்லை. என்றாலும் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட செயல்களைகூட செய்யாமல் இருக்கும் அவர்களின் போக்கை பற்றி கவலை படாமல் இருக்க முடியவில்லை.!
ஆயிற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ! திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கொலையுண்டு....இன்றுவரை ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை இந்த காவல்துறையால்!
இந்த போலிசுக்கு தண்டனை கொடுப்பது? ஜே.சொல்வாரா? சொல்ல மாட்டார்.!
மதுரையில் போட்டு சுரேஷ் கொலையாகி மாதங்கள் பல உருண்டோடி விட்டன. கொலையில் தொடர்பு இருப்பதாக சொல்லும் அட்டாக் பாண்டியை இன்றுவரை இந்த போலீசாரால் நெருங்க முடியவில்லை .!
தண்டனை கொடுப்பது? பதவி நீக்கம் உண்டா? தெரியாது. ஜே.சொல்ல மாட்டார்.!
மாட்டிக் கொண்டவன் முஸ்லிமா? போலீசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்! அவர்களுடன் .ஊடகங்களும் சேர்ந்து பக்கம் பக்கமாக விதவிதமாக காவல்துறையினர் சொல்லும் கதைகளோடு தங்கள் கற்பனைகளையும் சேர்த்து தங்கள் பத்திரிக்கைகளை அலங்கரித்து விடுகின்றன!
என்ன நடுவு நிலை என்று தெரியவில்லை! என்ன தொழில் தர்மம் என்றும் புரியவில்லை!
நாளைக்கு ஆயிரகணக்கான கொலைகள்,கொள்ளைகள் கற்பழிப்புகள், வரதட்சணை கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இவற்றை செய்பவர்கள் சாதாரண குடிமக்களாம் . சாதாரண குற்றவாளிகளாம்.!
அதில் எவனாவது ஒரு இளச்சவாயன் அதுவும் அவன் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் போதும், அவன்தான் தீவிரவாதி, பயங்கரவாத செயல்களை செய்பவன் என்று சொல்லி, மாட்டிகொண்டவனுடைய செல்போனில் உள்ள எல்லா நம்பர்களும், தொடர்புகளும் சோதனை இடப்பட்டு விடும்.! மேலும் எங்கே, எப்போது யாரால் என்ன குற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் , அந்த குற்றம் காவல்துறையின் கையாளாக தனத்தால் கண்டுபிடிக்க முடியாத குற்றங்கள் ஆகா இருந்தாலும் அவைகள் எல்லாம் மாட்டிகொண்ட முஸ்லிம் மீது காவல்துறையால் சுமத்தப்பட்டு விடுகிறது. !
மாட்டி கொண்டவன் குற்றவாளி,! தப்பித்து கொண்டவன் நிரபராதி என்ற பொது நியதியை காவல்துறை கடைப்பிடித்து வருகிறது!
இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிசு சொல்கிறது.! முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா இப்போது குற்றவாளியா? நிரபராதியா?
இப்போது குற்றவாளியாக போலீஸ் சொல்லும் பிலால் மாலிக் போன்றவர்களை சிறையில் அடைத்த பிறக்கு, கொஞ்சம்னாட்கள் கழித்து நான்தான் அரவிந்த ரெட்டியை கொன்றேன் என்று எவனாவது போலீசிடம் மாட்டிகொண்டவன் சொன்னால் என்ன அப்போது பொலிசார் என்ன செய்வார்கள்?
ஆக, போலிசார் சொல்லும் கதைகள,போலிசார் சொல்லும் குற்றவாளிகள் என்பவர்கள் உண்மையில் குற்றவாளிகளே அல்ல! பயங்கரவாதிகளே அல்ல. ! தீவிரவாதிகளும் அல்ல1 . என்பது நமக்கு தெரிகிறது!
.
போலிசுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஊடகங்கள் மூலம் காட்டவேண்டும்! .தங்களது கையாலாகாத தனத்தை மறைத்து, ஆட்சிக்கு நல்லபெயரை பெற்றுத்தரவேண்டும்! அத்துடன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சொல்லி, இந்துத்துவ வாதிகளை சந்தோசப் படுத்த வேண்டும் !
போலிசுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஊடகங்கள் மூலம் காட்டவேண்டும்! .தங்களது கையாலாகாத தனத்தை மறைத்து, ஆட்சிக்கு நல்லபெயரை பெற்றுத்தரவேண்டும்! அத்துடன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சொல்லி, இந்துத்துவ வாதிகளை சந்தோசப் படுத்த வேண்டும் !
அவ்வாறு செய்தால்தான் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையான மக்களின் ஓட்டுகளை -ஜே அரசு பெறமுடியும் என்று நினைக்கிறது. அதற்கு ஏற்ப,போலீசார் ஆலிவுட் ரேஞ்சுக்கு கதைகள் சொல்லி முஸ்லிம்களை குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக ஆக்கி வருகிறார்கள் என்ற உண்மை தெரிகிறது!
மோடிக்கு டப்பிங்...!
நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், செய்தியை திரித்து வெளியிடுகின்றன.
அக்டோபர் 3-ம் தேதி "குஜராத்தை புறக்கணிக்க முடியாது: இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர்" என்ற தலைப்பில் தினமணியிலும், 'Can't ignore Gujarat, says British High Commissioner' என்று 'The Hindu'பத்திரிகையிலும், "குஜராத் மாநிலத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது: பிரிட்டன் தூதர்" என்றுதினமலர் பத்திரிகையிலும் செய்தி ஒரே மாதிரியாக வெளியாகி உள்ளது.
குஜராத்தில் 2002-ல் நடந்த முசுலீம்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பிறகு மோடிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கான அனுமதியை தர தொடர்ந்து மறுத்து வருகின்றன.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காசுமீர் பற்றியெல்லாம் அவ்வப்போது சவடால் அடிக்கும் மோடி இது பற்றி கடந்த பத்தாண்டுகளாக வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் 2012 அக்டோபரில் மோடியை பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் சந்தித்தார். அச்சந்திப்பு முடிந்தவுடன் "மோடி மீதான பிரிட்டனின் பார்வை மாறிவிட்டதா" என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "இல்லை" என்றுதான் அவர் பதிலளித்திருந்தார்.
தற்போது மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்ட நிலையில் "மோடி குறித்த பிரிட்டன் நிலையில் ஏதேனும் மாற்றம் உண்டா ?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கடந்த ஆண்டு மோடியை சந்தித்தபோது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். மோடியை சந்திப்பதே அவரது முந்தைய செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகி விடாது" என்று தெளிவாகக் கூறி விட்டார்.
அப்படியானால் "மோடியை சந்திப்பதே அவரை அங்கீகரிப்பதாகி விடாது: பிரிட்டன் தூதர்" என்றுதான்பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், "குஜராத்தையும், மோடியையும் புறக்கணிக்க முடியாது" என பிரிட்டன் தூதர் சொல்லியதாக செய்தியை திரித்து வெளியிடுகின்றன. இப்படி கூஜா தூக்கும் வேலையில் தமிழ், ஆங்கிலம், நடுநிலை, தேசியம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பத்திரிகைகள் அனைத்தும் 'மோடி மேனியா'வால் பாதிக்கப்பட்டுள்ளன.
"எங்களால் புறக்கணிக்க முடியாத அளவுக்கு குஜராத் ஒரு முக்கியமான மாநிலம். அதன் முதல்வராக உள்ள மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இந்தியாவுடன் உறவைப் பேண விரும்பினால் குஜராத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது" என்றும் பிரிட்டிஷ் ஹை கமிசனர் ஜேம்ஸ் பெவன் கூறியுள்ளார்.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தையும் புறக்கணித்து விட்டு எப்படி ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒரு நாடு உறவு பாராட்ட முடியும். என்பதைத்தான் ஜேம்ஸ் பெவன் இங்கே குறிப்பிட்டுள்ளார். இது குஜராத்தை போலவே பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் தானே. எனினும் பத்திரிகைகள் மோடிக்காக இதனை ஒரு தனிச்சிறப்பான விசயமாக தலைப்பிட்டு புளங்காகிதம் அடைகின்றன. மக்களிடையே மோடி பற்றிய இமேஜை இப்படி ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த முயல்கின்றன.
போர்க்குற்றவாளியாக இருப்பினும் ராஜபக்ஷேவுக்கும் கூட இது பொருந்தும் தானே. ராஜபக்ஷேவை தவிர்த்து விட்டு இலங்கையைப் பற்றி பேச முடியாது தானே. இதனால் தான் இலங்கையில் குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கும்படி ஐ.நா செயலர் பணித்துள்ளார். இப்படித்தான் பாசிஸ்டுகள் உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம், "இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்களை சந்திப்பது எங்கள் கடமை. நான் எந்த ஒரு தனி நபருடன் பேசவில்லை. குஜராத் மாநிலத்துடன் தான் பேசினேன். எனவே இதனை மோடிக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று பிரிட்டிஷ் ஹை கமிசனர் கூறியிருந்தார்.
பிரிட்டன் எம்.பி. பாரி கார்ட்னர், மோடிக்கு பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் பேச அழைப்பு விடுத்ததைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது தனிப்பட்ட எம்.பி ஒருவரின் தனிப்பட்ட உரிமை மட்டுமே என்றும், அது அரசின் அழைப்பு அல்ல என்றும் அப்போது விளக்கமளித்திருந்தார் ஜேம்ஸ் பெவன். குஜராத் படுகொலையின் போது 3 பிரிட்டிஷ் பிரஜைகள் இறந்து போயுள்ளனர். அது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்போது கோரியிருந்தார்.
தொழில் துவங்க வாய்ப்பாக இருப்பதால் பன்னாட்டு முதலாளிகளுக்கு குஜராத் தேவைப்படுகிறது. அதற்காக மோடியுடன் பேசுவதற்கு முன்வருகிறார்கள். ஆனால் அவரது பழைய மனித உரிமை மீறல்களை தாங்கள் கைவிடவில்லை என்பதை சந்தையின் தேவைக்கேற்ப பேசுவதில் நாடுகளின் தூதுவர்கள் தனிப்பயிற்சி பெற்றுதான் இங்கு வருகின்றனர் என்பதற்கு உதாரணம்தான் ஜேம்ஸ் பெவனின் கூற்றுக்கள்.
தற்போது "இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், நாங்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க முடியுமே தவிர, விமர்சகர்களாக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார். தொழில் வாய்ப்புகளுக்காக சந்தித்து முடித்தவுடன், மோடியின் இனப்படுகொலையையும், குஜராத்தின் தொழில் வாய்ப்புகளையும் தராசின் இரு தட்டுகளில் வைத்து மதிப்பிடும் பிரிட்டிஷ் தூதர், ஒருவேளை மோடி பிரதமராகி விட்டால் என்ற வாய்ப்பை கணக்கிட்ட பின், அவரது மனித உரிமை மீறல் குறித்து பட்டும் படாமல் தனது கருத்தைச் சொல்கிறார்.
மோடிக்கு பிரிட்டனில் விசா மறுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விண்ணப்பித்தால் விசா வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு, "யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை" எனக் கூறி இதனை இன்னும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜெம்ஸ் பெவன்.
மோடிக்கு இந்துமத வெறி அடையாளத்தை தாண்டிய ஒரு பொது அடையாளம் பிரதமர் வேட்பாளர் பாத்திரத்திற்கு தேவைப்படுகிறது. அதற்கு காந்தியவாதிகளிடம் போகிறார், தன்னை பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தலைவனாக பீகாரில் இடைநிலை சாதிகளிடம் ரகசியமாக முன்வைக்கிறார்.
இப்போது வெளிநாட்டு தூதுவர்களின் வாயில் பிரம்மரிஷி பட்டத்தை எதிர்பார்த்திருக்கிறார். சங் பரிவாரங்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக இப்போதாவது ஆட்சியை பிடிக்க தவறினால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் மோடி நடத்தும் மோடி மஸ்தான் வேலைகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மேலை நாடுகளோ சீனாவோடு பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து கொண்டே மனித உரிமை மீறல் என்று ஒரு லகானை வைத்திருப்பது போல மோடியின் மீதும் வைக்க விரும்புகின்றன. ஒருவேளை மோடியின் அன்பால் அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்கான சலுகைகளால் அந்த லகான் மறையவும் வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும் ஒரு செய்தியை திரித்து மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று.
source: http://www.vinavu.com/
Saturday, October 5, 2013
செல்போன்....தீங்குகள்..!
அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.
மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. இயற்கையாக மனிதன் தீமைகளை செய்யவே அதிக நாட்டம் கொள்பவனாக இருப்பதால் இச்சாதனைங்களையும் தீமையான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் உலகில் ஒரு புறம் இக்கருவிகள் மூலம் பல நன்மைகள் குவிந்துகொண்டிருந்தாலும் இதேக் கருவிகள் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் மாபெரும் குவியலாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
இக்கருவிகளால் பலனடைந்து கொண்டிருந்த மக்கள் இதேக் கருவிகளால் பலத்த சங்கடத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை வருகிறது. கண்டுபிடிப்பு சாதனங்களால் ஏற்படும் விபரீதங்கள் படுபயங்கரமானதாக இருப்பதால் தங்களையும் தங்கள் குடும்பத்தார்களையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இக்கருவிகளால் நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி இச்சாதனங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார்கள்.
தீமைசெய்பவர்களுக்கு இக்கருவிகள் வலுமையான கூட்டாளியாகவும் உதவும் நண்பனாகவும் இருப்பதால் இச்சாதனங்களை தீயவர்கள் விரும்பி நேசிக்கிறார்கள்.
தீமைசெய்பவர்களுக்கு இக்கருவிகள் வலுமையான கூட்டாளியாகவும் உதவும் நண்பனாகவும் இருப்பதால் இச்சாதனங்களை தீயவர்கள் விரும்பி நேசிக்கிறார்கள்.
நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் சில தருணங்களில் தடம்புரண்டு செல்வதற்கு இச்சாதனங்கள் காரணமாகிவிடுகின்றது. இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருப்பதாலும் தீமைகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாகரீகம் என்று போற்றக்கூடிய படுமோசமான நிலை ஏற்படுகிறது.
பிஞ்சில் பழுத்த பழம்
மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய கருவிகளில் ஒன்று தான் செல்போன் என்பது. பழம் சுவையானதாகவும் உண்ணுவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டுமானால் நன்கு காய்த்தப் பின்பு தானாக கனியும் நிலையை அப்பழம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் காய்க்கும் பருவத்தை அடைவதற்கு முன்பு பிஞ்சாக இருக்கும் நிலையில் பழுத்துவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. குப்பைத் தொட்டி தான் அது சேர வேண்டிய இடம். செல்போன்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.
படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இன்றைக்கு திருமணமான தம்பதிகள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாசங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் கருவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தாய் தந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தந்தையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே தங்களது வாபத்தை வீணடித்து பருவ வயதை அடையும் போது எதற்கும் சக்தியற்ற கிளவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.
பூக்கடை சாக்கடையாகலாமா?
சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரும் பெரும் கல்லூரிகளில் படிக்கும் வாபர்களின் நிலையும் இதைப் போன்று தான் உள்ளது. அல்லது இதை விடவும் மோசமாக உள்ளது. படங்களை பார்ப்பதற்கான வசனதி செல்போன்களில் செய்யப்பட்டு இருப்பதால் ஆபாசக் காட்சிகள் மற்றும் சினிமாப் பாடல்களை அதில் பதிவு செய்துகொண்டு பார்த்து இரசிக்கிறார்கள். ஆபாசத்தின் இன்னொரு பெயர் தான் சினிமா என்பது. பாடல்களிலும் காட்சிகளிலும் ஆபாசத்தைக் கலக்காவிட்டால் அந்த படம் நீண்ட நாள் திரையரங்குகளில் ஓடாது என்கின்ற அளவிற்கு சினிமாவில் ஆபாசம் பெருகியிருக்கிறது.
இந்த சினிமாக்காட்சிகளும் பாடல் வரிகளும் இசையும் பூக்கடையாக இருந்த மனிதனுடைய மூளையை மழுங்கச் செய்து நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாற்றிவிடுகிறது. இந்தப் பருவத்தில் இரத்தம் அதிக துடிப்புடன் இருப்பதால் இவர்களின் கவனம் வழிகேட்டின் பக்கம் செலுத்தப்படும் போது தடம்புரண்ட குதிரையின் வேகத்திற்கு இவர்கள் வழிகேட்டை நோக்கி ஓடுகிறார்கள். திரையரங்குகளுக்குச் செல்வது பள்ளிக்கூடம் போகாமல் கட்டடிப்பது போன்ற பல தீமையான காரியங்களுக்கு பலரை கூட்டு சேர்த்து கொள்வதற்கு இக்கருவி அவர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.
இளமையில் கல். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போன்ற உபதேசங்களை கூட கற்க வழியில்லாமல் பொன்னான காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். விலைமதிக்க முடியாத கல்வி காலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மாணவன் இழப்பதற்கு செல்ஃபோன்கள் தான் மிக முக்கியமான காரணம். தற்போது காதல் என்ற உயிர்கொல் நோய் நாகரீகம் தெய்வீகம் என்ற போர்வையில் தற்போது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கிடையே காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த காதல் பைத்தியம் தலைவிரித்து ஆடுவதற்கும் இந்த செல்போன்களின் பங்கு இணையற்றது.
நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச எஸ்எம்எஸ்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் தமிழகத்தில் சில கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் செல்போன்களை கல்லூரி நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. பிறருக்கு ஆபாச செய்திகளையும் படங்களையும் அனுப்பி குறும்பு செய்வதால் அனுப்பிய மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் சிறைக்குச் சென்றுவிடுகிறான். பயத்துடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவிகள் வீட்டுக்கு வந்தப் பின்பும் நிம்மதியாக இருக்கமுடிவதில்லை.
அத்துமீறி நுழையும் அக்கிரமம்.
செல்போன்களில் காமிர வசதியுள்ளவைகளும் உள்ளன, பெண்கள் அஜாக்ரதையாக இருக்கும் போது வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் பெண்களின் மறைவிடங்களை செல்போன்களின் மூலம் படம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்டக் காட்சி ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிக்கொண்டு கடைசியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வருகிறது. இதற்குப் பிறகு அப்பெண்ணால் எப்படி தலை நிமிந்து நடக்க முடியும்?. இந்த அவமானம் தாங்க முடியாமல் மணமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் உண்டு. செல்போன்களில் ப்ளூடூத் என்ற ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் செய்திகளையோ பாடல்களையோ படங்களையோ பலருடை செல்களுக்கு அனுப்ப முடியும். இவ்வசதியை தவறாக பயன்படுத்திக் கொண்டு பலருடைய செல்போன்களுக்கு தப்பான விஷயங்களை பரப்புகிறார்கள். இதனால் ஆபாசத்தை எட்டிப்பார்க்காதவர்கள் கூட அவசியம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால் வந்த செய்தியை திறந்தால் தான் அது நல்லதா கெட்டதா என்பது தெரியவரும்.
ஒழுக்கமாக வாழ நினைப்பவனை இக்கருவிகள் வாழவிடுவதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவனும் அசிங்கமான விஷயங்களை அங்கீகரிக்கத் தொடங்கிவிடுகின்றான். இப்படி நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய பொருளில் அன்னியர்கள் விளையாடிவிடுகிறார்கள்.
வீடு தேடி வரும் அழைப்பு
கெட்ட எண்ணம் கொண்டவன் விபச்சாரத்திற்கு துணையை தேடும் நோக்கில் பலருக்கு போன் செய்து பேசுபவர் ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொண்டு பெண்ணாக இருந்தால் அவளை வலையில் சிக்கவைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்கிறான். விபச்சாரம் செய்வதற்கு அழைப்பு ஊர்கடந்து நாடுகடந்து வீடு தேடி வருகின்றது.
ஆண்களை தவறானப் பாதைக்கு அழைக்கும் பெண்களும் இத்தகயை யுக்தியை கையாளுகிறார்கள். எனவே தான் விபச்சாரிகள் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் போôது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியையும் சேர்த்தே சொல்லுவார்கள்.
கணவன் ஊரில் இல்லாத போது தனிமையில் வாடும் எத்தனையோ பெண்கள் தங்கள் கற்புக்களை காத்துக்கொண்டாலும் சில பெண்கள் அயோக்கியர்கள் வீசும் இந்த மாயவலையில் சிக்கிவிடுகிறார்கள். கணவனை நினைத்து வாடும் பெண்களிடம் எந்த ஆணாவது வேறு நோக்கத்தில் பேசினாலும் இப்பெண்களே அந்த ஆண்களை தவற்றுக்கு அழைக்கிறார்கள். தெரிந்த ஆண்களுக்கு போன் செய்து பலமணி நேரம் அவர்களிடம் உறையாடுகிறார்கள்.
எந்தவிதமான சிரமுமின்றி யாருக்கும் தெரியாமலும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும் வீட்டுக்குள் இருந்துகொண்டே விபச்சாரத்திற்கு ஆள் தேடுவது என்பது இக்கருவியால் எளிதாகிவிடுகின்றது. கள்ளத்தொடர்பு எங்கேயோ யாருடனோ முடிந்துவிடாமல் காலம் முழுக்க நீடிக்கும் பந்தமாக தொடர்வதற்கு இந்த செல்போன்கள் உறுதுணைபுரிகிறது.
பொன்னான காலம் வீணாய் போகிறதே !
சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாம் அனுப்பாவிட்டாலும் நமக்குத் தெரியாமல் எவனாவது நமது செல்போனை பயன்படுத்தி இத்தகைய செய்திகளை பிறருக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் பாதிப்பு நமக்குத் தான் வருகிறது.
ஏப்ரல் 1 ம் தேதியை பிறரை ஏமாற்றுவதற்குரிய நாள் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நாளில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பிறருடைய செல்போன்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனாலும் பல விபரீதங்கள் ஏற்படுகின்றது.
பேசுவதற்கு விஷயமே இல்லாவிட்டாலும் சிலர் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும். எத்தனையோ வேலைகள் பல இருந்தும் கூட அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பிரயோஜனம் இல்லாத பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். செல்போன்களில் பேசுவதையே பலர் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறார்கள்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது. பிறரை தொல்லை செய்வதற்காக ஒன்றும் எழுதப்படாத வெற்று மெஸ்úஸஜ்களை 50 100 என்ற கணக்கில் அனுப்பி தங்கள் காலத்தை விரையம் செய்துகொள்கிறார்கள். பிறரையும் துன்புறுத்துகிறார்கள். சென்றால் திரும்ப வராத நம் காலத்தையும் உயிரைûயும் அழித்துக்கொள்வதற்கு செல்போன் கருவிகள் உதவிபுரிகின்றன. நேரம் வீணாகுவதுடன் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகை செல்போன்களுக்காக வீண்விரயம் செய்யப்படுகின்றது.
அவதூறுக் கருவி
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த பாவங்களை பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இந்த பாவங்களில் ஒன்று தான் பிறரைப் பற்றி அவதூறு பேசுவது. இன்றைக்கு செல்போன்கள் இந்த மாபெரும் பாவத்தை நமக்கு சம்பாரித்து தந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனிநபரைப் பற்றி அல்லது ஒரு இயக்கத்தைப் பற்றி தவறான பொய்யான விஷயங்கள் இந்தக் கருவிகளின் மூலம் பரப்பப்படுகின்றது. தனக்கு வந்த தகவல் உண்மையானதா? பொய்யானதா? என்றெல்லாம் பார்க்காமல் வந்த மாத்திரத்திலேயே தன்னுடைய பங்கிற்கு ஒவ்வொருவரும் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பண்டையக் காலங்களில் ஒரு அவதூறு பலருக்குப் பரவ பலமணி நேரமானது. பல நாட்களானது. ஆனால் இன்றைக்கு செல்போன் கருவியின் மூலம் பல நூறு பேருக்கு ஒரு நிமிடத்தில் பல பொய்யான செய்திகளை பரப்பிவிடமுடியும். நாம் அனுப்பிய ஆதாரமற்ற தகவலை நம்பி யார் யாரெல்லாம் பரப்பினார்களோ அவர்களுடைய பாவத்தில் நமக்கும் கட்டாயம் பங்குண்டு. நாம் பாவியானதோடில்லாமல் பிறரையும் பாவியாக்கிக்கொண்டிருக்கிறோம்.
எனவே ஒருவன் பாவச்சுமையை சுமந்து நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவன் இதற்காக பெரும் சிரமத்தை எடுக்க வேண்டியதில்லை. ஒரு இயக்கத்தைப் பற்றி அல்லது ஒரு தனிநபரைப் பற்றி ஒரு பொய்யை போன்கள் மூலம் அனுப்பினாலே போதும்.. இங்கு சொல்லப்பட்ட விஷயங்கள் மட்டுமில்லாமல் நமக்குத் தெரியாத இன்னும் பல தீமைகளும் செல்போன்களால் ஏற்படலாம்.
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் நாமும் இதை வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். எனவே முடிந்த அளவு இக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கும் வீட்டுப் பெண்களுக்கும் வாங்கிக்கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. இக்கருவியின் பயன்பாடு நமக்கு அவசியப்பட்டால் இஸ்லாமிய வரம்பை மீறாத வகையில் பல கட்டுப்பாடுகளை நமக்குள் நாமே இட்டுக்கொண்டு முறையான அடிப்படையில் கையாளுவது அவசியம். மறுமை நாளில் செவியும் கண்ணும் நாம் செய்த குற்றங்களை ஆவணங்களாக தயாரித்து அல்லாஹ்வின் முன் நிறுத்தும். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் குறித்தும் செல்வம் குறித்தும் அல்லாஹ் விசாரணை செய்வான். இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக பதித்து அல்லாஹ்விற்கு பயப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.
எல்லாம் வல்ல இறைவன் நம்மை தீமைகளிருந்து காத்து நன்மைகளில் செலுத்துவானாக

