தமிழக சினிமா கதை ஆசிரியர்கள் தமிழக பொலிசாரிடம் பாடம் கற்க வேண்டும்! தமிழக போலீசாரிடம் அவ்வளவு கற்பனைத் திறனும் விஷயம் இருப்பதை இன்றுவரை கவனிக்காமல் சினிமா கதாசிரியர்கள் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது !
சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட புத்தூரில் பிலால் மாலிக் பன்னா இஸ்மாயில் ஆகியோர்களை ஜேம்ஸ்பாண்டு கணக்காக பிடித்ததாக சொன்ன கதை அந்த ரகமாகும்.!
சென்னையில் ஒரு லாட்சில் தங்கியிருந்த பொது, கைதுசெய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை ஓடும் பஸ்ஸில் பாலோவ் செய்து,அவனுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதாக கதை சொல்லி வருகிற போலீசார், பிடிபட்ட பக்ருதீனிடம் விசாரித்ததில் அவன் விசாரணையில் சொன்னதாக கூறும் கதைகள் எதற்கும் ஆதாரம் இல்லை! அதைபற்றிய அக்கறை பொலிசாரின் கதைகளை அப்படியே ,தங்களது பத்திரிகைகளில் பிரசுரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தேவையில்லை என்பது தெரிகிறது.!
ஊடகங்களுக்கு அவர்களின் செய்தி பரபரப்பாக இருக்கவேண்டும். வியாபாரம் நடக்கவேண்டும் என்பது ஒன்றே நோக்கமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. !
ஊடகங்கள் உதவியுடன் காவல்துறை அரங்கேற்றும் நாடகங்கள், அரங்கேற்றி வரும் கதைகள் எல்லாம் போலிசின் வீர பிரதாபங்களை பொதுமக்களிடம் நிலைநிறுத்துவதை கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.!
போலீசாரின் மோசமான செயல்பாடுகள் மறைக்கப்பட்டு, அவகளின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிசாரின் கையாலாகாத செயல்களை மூடிமறைக்கவும் உதவுவதை புரிந்து கொள்ள முடியும்.
. ஜே ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் கேட்ட பெயரை மறைக்கவும் நல்லாட்சி நடைபெறுவதாக பெருமை அடித்து பீற்றி கொள்ளவும் கூட இந்த கதைகள் வெகுவாக பயன்படுவதை நாம் காண முடிகிறது. !
. ஜே ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் கேட்ட பெயரை மறைக்கவும் நல்லாட்சி நடைபெறுவதாக பெருமை அடித்து பீற்றி கொள்ளவும் கூட இந்த கதைகள் வெகுவாக பயன்படுவதை நாம் காண முடிகிறது. !
முஸ்லிம்களில் மூன்று பேரை பிடித்து, அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் உயிரை துச்சமாக மதித்து அவர்களை பிடித்து இருக்கிறோம் என்று போலீஸு சொல்ல ஆகா..! என்று சிலாகித்து, பாராட்டி ஆளுக்கு ஐந்து லட்சமும், பதவி உயர்வும் ஜெ-வால் போலீசாருக்கு தரப்பட்டு உள்ளது.!
காவல்துறையின் எல்லைமீறிய கடமை உணர்வுகளை ஜே பாராட்டுவது குறித்து நமக்கு வருத்தம் இல்லை. என்றாலும் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட செயல்களைகூட செய்யாமல் இருக்கும் அவர்களின் போக்கை பற்றி கவலை படாமல் இருக்க முடியவில்லை.!
ஆயிற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ! திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கொலையுண்டு....இன்றுவரை ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியவில்லை இந்த காவல்துறையால்!
இந்த போலிசுக்கு தண்டனை கொடுப்பது? ஜே.சொல்வாரா? சொல்ல மாட்டார்.!
மதுரையில் போட்டு சுரேஷ் கொலையாகி மாதங்கள் பல உருண்டோடி விட்டன. கொலையில் தொடர்பு இருப்பதாக சொல்லும் அட்டாக் பாண்டியை இன்றுவரை இந்த போலீசாரால் நெருங்க முடியவில்லை .!
தண்டனை கொடுப்பது? பதவி நீக்கம் உண்டா? தெரியாது. ஜே.சொல்ல மாட்டார்.!
மாட்டிக் கொண்டவன் முஸ்லிமா? போலீசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்! அவர்களுடன் .ஊடகங்களும் சேர்ந்து பக்கம் பக்கமாக விதவிதமாக காவல்துறையினர் சொல்லும் கதைகளோடு தங்கள் கற்பனைகளையும் சேர்த்து தங்கள் பத்திரிக்கைகளை அலங்கரித்து விடுகின்றன!
என்ன நடுவு நிலை என்று தெரியவில்லை! என்ன தொழில் தர்மம் என்றும் புரியவில்லை!
நாளைக்கு ஆயிரகணக்கான கொலைகள்,கொள்ளைகள் கற்பழிப்புகள், வரதட்சணை கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இவற்றை செய்பவர்கள் சாதாரண குடிமக்களாம் . சாதாரண குற்றவாளிகளாம்.!
அதில் எவனாவது ஒரு இளச்சவாயன் அதுவும் அவன் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் போதும், அவன்தான் தீவிரவாதி, பயங்கரவாத செயல்களை செய்பவன் என்று சொல்லி, மாட்டிகொண்டவனுடைய செல்போனில் உள்ள எல்லா நம்பர்களும், தொடர்புகளும் சோதனை இடப்பட்டு விடும்.! மேலும் எங்கே, எப்போது யாரால் என்ன குற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் , அந்த குற்றம் காவல்துறையின் கையாளாக தனத்தால் கண்டுபிடிக்க முடியாத குற்றங்கள் ஆகா இருந்தாலும் அவைகள் எல்லாம் மாட்டிகொண்ட முஸ்லிம் மீது காவல்துறையால் சுமத்தப்பட்டு விடுகிறது. !
மாட்டி கொண்டவன் குற்றவாளி,! தப்பித்து கொண்டவன் நிரபராதி என்ற பொது நியதியை காவல்துறை கடைப்பிடித்து வருகிறது!
இப்போது போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர்கள் செய்ததாக போலிசு சொல்கிறது.! முன்பு குற்றவாளிகளாக போலிசாரால் சொல்லப்பட்ட வசூர் ராஜா இப்போது குற்றவாளியா? நிரபராதியா?
இப்போது குற்றவாளியாக போலீஸ் சொல்லும் பிலால் மாலிக் போன்றவர்களை சிறையில் அடைத்த பிறக்கு, கொஞ்சம்னாட்கள் கழித்து நான்தான் அரவிந்த ரெட்டியை கொன்றேன் என்று எவனாவது போலீசிடம் மாட்டிகொண்டவன் சொன்னால் என்ன அப்போது பொலிசார் என்ன செய்வார்கள்?
ஆக, போலிசார் சொல்லும் கதைகள,போலிசார் சொல்லும் குற்றவாளிகள் என்பவர்கள் உண்மையில் குற்றவாளிகளே அல்ல! பயங்கரவாதிகளே அல்ல. ! தீவிரவாதிகளும் அல்ல1 . என்பது நமக்கு தெரிகிறது!
.
போலிசுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஊடகங்கள் மூலம் காட்டவேண்டும்! .தங்களது கையாலாகாத தனத்தை மறைத்து, ஆட்சிக்கு நல்லபெயரை பெற்றுத்தரவேண்டும்! அத்துடன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சொல்லி, இந்துத்துவ வாதிகளை சந்தோசப் படுத்த வேண்டும் !
போலிசுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ஊடகங்கள் மூலம் காட்டவேண்டும்! .தங்களது கையாலாகாத தனத்தை மறைத்து, ஆட்சிக்கு நல்லபெயரை பெற்றுத்தரவேண்டும்! அத்துடன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சொல்லி, இந்துத்துவ வாதிகளை சந்தோசப் படுத்த வேண்டும் !
அவ்வாறு செய்தால்தான் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையான மக்களின் ஓட்டுகளை -ஜே அரசு பெறமுடியும் என்று நினைக்கிறது. அதற்கு ஏற்ப,போலீசார் ஆலிவுட் ரேஞ்சுக்கு கதைகள் சொல்லி முஸ்லிம்களை குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக ஆக்கி வருகிறார்கள் என்ற உண்மை தெரிகிறது!