Tuesday, June 26, 2018

தேவதை !

தேவதை !

Image result for தேவதை !பெண்கள் எல்லாம் பெரிது பெரிதாக எதை எதையோ சாதித்தாக காட்டும் போது அதை பார்க்கும் இளம் தளிர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஏன் வயது முதிர்ந்த பெண்கள் கூட அடையும் உற்சாகம் அலாதியானது தான்.
ஆண்டுதோறும். சாய்னா நேவால் சாதித்து விட்டார் என்று தொலைக்காட்சி அலறி அறிவிக்கும் போது அதே கணத்தில் எத்தனையோ பெண்கள் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள்.
தன் அறை சுவற்றிடமும் தன் தலையணையிடமும் மட்டும் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விட்டு தன் கண்ணீரின் உப்பை எல்லாம் அவற்றில் திணித்து விட்டு உதடுகளில் பூசிக்கொள்ளும் ஒரு லிப்ஸ்டிக் போல ஒரு போலி சிரிப்பை அப்பிக்கொண்டு அந்த தேவதை, சிறகு உடைந்த தேவதையாக அந்த வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திலோ, பொது இடத்திலோ வலம் வந்து கொண்டிருக்கிறாள்.
தன் அப்பாவின் தங்க மீனாக வாழ்ந்து வந்த இந்த தேவதை புகுந்த வீடு என்ற ஒரு இல்லத்துக்குள் நுழைந்த பின் தான் எத்தனை எத்தனை வேடங்கள் . மனைவியாக, தாயாக மட்டுமா மாறுகிறாள், சிறந்த நடிப்பு சாஸ்திரியாகவும் மாற வேண்டி இருக்கிறது. மாமியார் மாமனாருக்கு பிடித்த மாதிரி அந்த ஊருக்கு ஏற்ற மாதிரி அடக்கமா மாறுகிறார்களோ இல்லையோ நடிக்க தொடங்கி பின் அந்த வேஷத்தை வாழ்க்கை ஆக்கிவிடுகிறார்கள்.
அம்மா வீட்டில் வீடு அதிருமளவுக்கு சிரித்த சிரிப்பெல்லாம் அடங்கி இங்கு உதடு மட்டும் விரியும் புன்னகையாக பலருக்கு மாறி விடுகிறது நிம்மதி தொலைக்கும் பெண்கள் காலையில் இருந்து மாலை வரை நடக்கும் எல்லாவற்றுக்கும் சிரித்தபடியே சமாளித்து கொஞ்சம் நடித்து சில நேரம் அதையும் தாண்டி எதாவது வாய் திறந்து கூறி பின் அதற்கும் வருந்தி என்று பொழுதை கழிக்கும் அந்த தேவதை இரவில் தனியறையில் மட்டும் அவள் அப்பாவின் தங்க மீனாக மறுபடியும் மாறுகிறாள்.
தன் கணவனிடம் சிணுங்குகிறாள் ஒரு குழந்தையென. சில நேரம் ஒரு படி மேல்சென்று சண்டை போடுகிறாள். எது எப்படியோ அங்கு மட்டும் அவள் நடிப்பதில்லை, அவள் அவளாக இருக்கிறாள். அரவணைக்கும் கணவனாக இருந்தால் அந்த தேவதை இரவிலாவது இளைப்பாறிக்கொள்வாள் இல்லாதவர்கள் இரவிலும் நிம்மதி தொலைக்கின்றனர்.
புரிந்து கொள்ளுங்கள் மனங்களை எப்ப வருவீங்க, என்னங்க வேலையா என்ற அலைபேசி அழைப்பில் அவள் உங்களிடம் எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்பதற்கு மட்டும் அழைத்ததாய் நினைத்து வரேன் வருவேன் என்று கனமான குரலில் தொலைபேசியை வைக்கும் அருமையான கணவன்மார்களிடம் அந்த பெண் சொல்ல விரும்புவது என்ன?
நான் உன்னை தேடுகிறேன், அவர் பத்திரமாக வர வேண்டும் என்ற அக்கறை, இன்றைக்கும் தாமதம். உங்களுக்காக அவள் காத்திருக்கும் காத்திருப்பைச் சொல்ல, உங்களுடான உரையாடுலுக்காக உங்கள் அன்புக்காக இப்படி எத்தனையோ உணர்வுகளோடு உங்க மனைவி உங்களை அழைப்பது எத்தனை பேருக்கு புரிகிறது.
இனி வைரஸ் பயம் இல்லை.. உறுப்பு மாற்றுக்காக ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பன்றிகள்.. விஞ்ஞானிகள் சாதனை எச்.ராஜா புதுக்கோட்டைக்குள் நுழைய கூடாது... சிபிஐ கூட்டத்தில் அதிரடி தீர்மானம் உதைக்க வேண்டாம்.. வைரலாகும் பைக் போட்டோ Featured Posts வாரி வழங்கும் அருவி இப்படியான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு எப்போதும் சந்தோசத்தை நில்லாத அருவியென வாரி வழங்கி கொண்டிருப்பது குழந்தைகளின் முத்தங்களும் நில்லாமல் தொடரும் அவர்களின் குறும்புகளும் தான்.
தாயாகி அவள் பூரித்துப் போகிறாள் தன்னை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறாள். அதில் அவள் ஆனந்தமும் கொள்கிறாள். தாய்மையைப் போல எதிலும் இன்பம் இல்லை என்பது மறுக்கவியலா நிஜம். ஆனால் அவளும் ஒரு தாயின் குழந்தை. அந்த தேவதைக்கும் அடிக்கடி தாய் மடியும் தந்தையின் தோளும் தேடுவதால் தான் ஊருக்கு கிளம்புகிறாள்.
தன் அம்மா வீட்டுக்கு போகும் போது மட்டும் அவள் மீண்டும் குழந்தை ஆகிறாள் எத்தனை வயதானாலும் கூட . அம்மாவின் முத்தங்களும் அம்மா கைகாலை காபிக்கும் அவள் எத்தனை வயதானாலும் குழந்தையென ஏங்குகிறாள்.
அப்பாவின் அன்பை கொடுக்கும் கணவன் கிடைத்த பெண்கள் பாக்கியசாலிகள். அம்மாவின் அன்பை ஒரு கணமேனும் அவரால் உணர்த்த முடிந்தால் அவள் பேரதிர்ஷ்டசாலி . மனைவி எனும் வண்டி யதார்த்தத்தில் என்னவோ வேலைக்கு போகும் மனைவிக்கு கூட கணவன் காபி போட்டு தருவதில்லை. ஏன் கணவன் சீக்கிரம் வந்திருந்தால் கூட வந்திட்டியா மனைவியின் காபிக்கு காத்திருக்கிறேன் என்பார் இது தான் எதார்த்தம்.
அட என்ன இது இப்போல்லாம் பெண்கள் கணவனை பெயர் சொல்லி தான் கூப்பிட்றாங்க. காலம் மாறிப்போச்சு. ஆண்கள் எல்லாம் இப்போது சமைக்கிறார்கள் என்று ஆயிரம் சொன்னாலும் எல்லாம் கல்யாணமான முதல் வருடம் மட்டும் தான் இது பல வீடுகளில் நடக்கிறது. அப்புறம் எப்பாவது ஞாயிறு அன்று மட்டும் சமைப்பார், அப்புறம் அன்றைக்கும் டயர்டு என்பார்கள். இப்படி தான் ஆகிவிடுகிறது.
அது என்னவோ மனைவி வேலைக்கு போனாலும் சரி வேலைக்கு போகாவிட்டாலும் சரி மனைவிக்கு முடியாத அந்த முன்று நாட்களில் கூட காலை காபி போட்டு மனைவியை எழுப்பாத அன்பான கணவன்கள் தான் அதிகம் உள்ளார்கள் என்பது தான் எதார்த்தம். அவளுக்கு முடிகிறதோ இல்லையோ எப்படியோ பெட்ரோல் இல்லாட்டியும் மனைவிங்கிற வண்டி ஓடி தான் ஆகணும்.
பெண்கள் மாறிட்டாங்க பாஸ் காலம் மாறிப்போச்சு. பெண்களும் மாறிக்கொண்டிருக்கிறார்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் பல உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் பற்றி ஆண்கள் ஆதி மனது எண்ணம் என்னவோ இன்னமும் அப்படி தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
காலையில் தன் அலுவலக பெண்ணை மதிக்க தெரிந்த மனிதனுக்கு மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் தன் மனைவியை மதிக்க தெரிவதில்லை. இதெயெல்லாம் இந்த அடிப்படை அதிமேதாவி எண்ணத்தை இந்த தலைமுறையில் மாற்ற முடியுமா என்றால் சத்தியமாக இல்லை தான். ஆனால் அடுத்த தலைமுறையில் கட்டாயம் மாற்ற முடியும்.
இதை எல்லாம் இனி நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதையெல்லாம் யார் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தனது மகன்களிடம் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே பெண்கள் உனக்கு கீழ் இல்லை. நீயும் தங்கையும் சமம் னு சொல்லி வளர்த்தால் போதும்.
பையனுக்கு வாங்கி கொடுக்கும் பாண்ட் சட்டயை பெண்களுக்கு வாங்கி கொடுப்பதில் மட்டுமல்ல எல்லா விஷயத்திலும் மகனையும் மகளையும் ஒரே கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் . சொல்லித் தர வேண்டும் குடுப்பதைப்போல தான் குழந்தைகள் வளர்க்கும் குணங்களும் அவர்களின் மன நலன்களும். தங்கையை சீண்டும் அண்ணனிடம் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துச் சொல்வது கூட அம்மாவின் கடமை தான்.
ஒரு பெண்ணின் உணர்வுகளை அண்ணனாய் தம்பியாய் புரிந்து கொண்ட ஒருவனால் நாளை ஒரு நாள் வரும் மனைவியின் சிணுங்கலையும் சிரமங்களையும் புரிந்து கொள்ள முடியும். அட உனக்கு ஒன்னும் தெரியாது. அவ கிட்ட என்ன கேட்டுட்டு என்று முரடாக நடக்கும் அப்பாவை நீ பேசாம போ என்று சத்தம் போடும் அப்பாவை பார்த்து அந்த மகன் என்ன கற்றுக்கொள்வான்?
பெண்கள் என்றால் ஆண்கள் சொல்வதை கேட்டு நடப்பவர் என்று தானே. அந்த சமயத்தில் தாய் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நீயாவது நாளை உன் மனைவியிடம் மரியாதையை கலந்த நேசத்தை செலுத்து என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கூட ஒரு அன்னை தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பது கூட அவசியம்.
முத்தமிடுங்கள் ஆணும் பெண்ணும் இரு வேறு துருவங்கள் ஆனால் இறைவனால் இணைக்கப்பட்டவை. அப்படி இருக்க அந்த ஆண் பெண்ணின் உடல்மொழியை புரிந்து கொண்ட அளவுக்கு அவள் உணர்வுகளின் மொழியை புரிந்து கொள்ளவில்லை. புரிந்துகொள்ள முற்படவுமில்லை.
உங்கள் மனைவிக்குள் உங்கள் அம்மாவுக்குள் உன் சகோதரிக்குள் கோபம் தெறிக்கும் அவள் கண்களுக்குள் ஒரு குழந்தை இருக்கிறாள். அந்த குழந்தையை அடிக்கடி ஒரு நாய்குட்டியைப்போல தடவிகொடுங்கள். அனைத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராமல் சமைத்துக்கொண்டிரும் உங்கள் மனைவியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து விட்டுப் போங்கள் அல்லது வாசனை தூக்குது என்று இரு வார்த்தைகளை வீசிச் செல்லுங்கள். இது தான் அவள் எதிர்பார்க்கும் பெரிய பரிசு.
அவள் இதயம் விரும்பும் பரிசு. உங்கள் அம்மாவின் அருகில் போய் அமர்ந்து சாப்பிடீர்களா என்று கேளுங்கள். அவளிடம் ஏதாவது பேசி அவளை சிரிக்க செய்யுங்கள் எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என்று கைகளை பிடித்து உணர்த்தி செல்லுங்கள். இது தான் அந்த அன்னைக்கான பரிசு.
பெண்கள் தேவதையானால் ஒவ்வொரு வீட்டு பெண்களும் அந்த வீட்டுக்குள் தேவதைகளாக எந்த மனப் புழுக்கமும் இல்லாமல் சுதந்திரமாக வலம் வருவதை விட பெரிய சிறகுகள், அவர்கள் எட்டிவிடும் எந்த சாதனையாலும் அவர்களுக்கு கிட்டப்போவதில்லை. எந்தப்பெண்ணுக்கும் எவ்வளவு சாதித்த பெண்களுக்கும் வீடே உலகம்.
எனவே உங்கள் வகுப்பு தோழி, அலுவலக தோழி, முகநூல் நண்பர்கள், வாட்ஸாப்ப் குறுஞ்செய்தி என்று யாரையோ சிறப்பாக உணரச் செய்யும் நீங்கள் உங்கள் வீட்டு தேவதைகளை இனம் கண்டுகொள்ளுங்கள். முத்தங்களையும் நேசத்தையும் அன்பையும் நம்பிக்கையையும் அனுசரணையும் பரிமாறிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் பெண்கள் தேவதையானால் அவர்கள் போகும் தூரம் எல்லை இல்லா தூரமே.
- Inkpena சஹாயா

Saturday, June 23, 2018

P-.Jயார்???????

P-.Jயார்???????

யார் இந்த பி.ஜெ ?
Image result for பீஜெ
[ பி.ஜெ, எனும் தனி மனிதரைப் பொருத்தவரை   நல்லதும் கெட்டதுமான சாதனைகள் பல புரிந்தாலும்  ஒரு உண்மையான முஃமினுக்கு இருக்க வேண்டிய   மிக முக்கிய பண்பான     ஒழுக்கமும், இறையச்சமும் 'மிஸ்'ஸானதால்    அதாள பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டார் என்றே வரலாறு இவரை பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.]
யார் இந்த பி.ஜெ ?
பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன் தென்னிந்தியாவின் தொண்டி நகரில் பிறந்தவர்.
தமிழகத்தின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.
அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர். அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.
அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜெய்னுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.
கடந்த 2005ம் வருடம் இலங்கை அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்துக்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காக திரண்டார்கள்.
கொழும்பு, புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
     பி.ஜெ ஏன் எதிர்க்கப்படுகின்றார்?       
பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதே நேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்கும் நிலை பி.ஜெயின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.
அப்படி இவர் என்ன தான் செய்தார்?
அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?
ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.
கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.
கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.
கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது. அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரைமட்டமாக்கும் நிலை உருவாகியது.
• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
• இறைவனுக்கு உருவம் உண்டா?
• இணை கற்பிப்பவர் யார்?
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – தூத்துக்குடி
போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.
குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன.
• சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம்
• ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு
போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.
இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள், ஷீயாக்கள், அஹ்லுல் குர்ஆன் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.
அரபியின் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.
1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது.
• மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா?
போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.
இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது.
• பைபிள் இறைவேதமா?
• குர்ஆன் இறைவேதமே!
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்.
போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.
கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ.
• இறைவன்இருக்கின்றானா?
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா?
போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக்களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.
இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ.
அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயணத்தினால், பாதிப்பு அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இவருடைய அனைத்து விவாதங்களையும் ஆன்லைன் பி.ஜெ டாட் காம் என்ற தளத்தில் அனைவரும் பார்க்க முடியும்.
    எழுத்துப் பணியில் ஜெய்னுலாப்தீன்      
தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
• புரட்சி மின்னல்,
• அல்-ஜன்னத்,
• அல்-முபீன்,
• அந்-நஜாத்,
• ஏகத்துவம்,
• தீன்குலப் பெண்மணி
ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.
“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜெய்னுலாப்தீன் அவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.
• நபிகள் நாயகம்   பல திருமணங்கள் செய்தது ஏன்?
• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.
• அர்த்தமுள்ள இஸ்லாம்
• மாமனிதர் நபிகள் நாயகம்
• அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்
• வருமுன் உரைத்த இஸ்லாம்
• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா
• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்
• வேதம் ஓதும் சாத்தான்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும்.
நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.
• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.
• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.
• இது தான் பைபிள்.
• இதுதான் பைபிள் ஆங்கிலம்.
• இயேசு இறை மகனா?
• பைபிளில் நபிகள் நாயகம்.
• கப்ஸா நிலைக்குமா?
போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார்.
ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.
இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார்.
இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
• பேய் பிசாசு உண்டா?
• இஸ்லாமியக் கொள்கை.
• இறைவனிடம் கையேந்துங்கள்.
• யாகுத்பா ஓர் ஆய்வு
• ஜின்களும் ஷைத்தான்களும்
• சுப்ஹான மவ்லித்
• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு
• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்
• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்
• தர்கா வழிபாடு
• திருமறையின் தோற்றுவாய்
• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
• கொள்கை விளக்கம்
• இறைவனைக் காண முடியுமா
• கியாமத் நாளின் அடையாளங்கள்
• தராவீஹ் ஓர் ஆய்வு
• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• பிறை ஓர் விளக்கம்
• நபித்தோழர்களும் நமது நிலையும்
• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு
• தொப்பி ஓர் ஆய்வு
• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு
• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்
• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்
• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்
• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது)
போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள் எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்
• தொழுகை சட்டங்கள்.
• நோன்பு
• ஜகாத் ஓர் ஆய்வு
• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)
• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)
• நபிவழியில் நம் ஹஜ்
• குர்பானியின் சட்டங்கள்
• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்
• ஜனாஸாவின் சட்டங்கள்
• நேர்ச்சையும் சத்தியமும்
• ஜனாஸா தொழுகை
• விலக்கப்பட்ட உணவுகள்
• சந்திக்கும் வேளையில்
• துஆக்களின் தொகுப்பு
• இஸ்லாமியத் திருமணம்
மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.
-   கிளியனூர் சொந்தக்காரர்
M A Mohamed Ali -    பி.ஜெ, எனும் தனி மனிதரைப் பொருத்தவரை   நல்லதும் கெட்டதுமான சாதனைகள் பல புரிந்தாலும் ஒரு உண்மையான முஃமினுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பான ஒழுக்கமும், இறையச்சமும் 'மிஸ்'ஸானதால்  அதாள பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டார் என்றே வரலாறு இவரை பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

Friday, June 8, 2018

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல்


நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்கவேண்டியதிருக்கிறது. அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகிவிடும்போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.


https://marhum-muslim.blogspot.com/

  வெள்ளைப்படுதல் என்பது என்ன?  
வயதுக்கு வரப்போகும் பெண்களுக்கும், சமீபத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும்தான் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல! பெண்களின் எல்லாப் பருவத்திலும் இது வரக்கூடும். குறிப்பாக 15 வயது முதல் மாதவிலக்கு இறுதியாக நின்று போகும் காலம் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கம். கருப்பையில் நோய் ஏதாவது இருந்தால் மாதவிலக்கு நின்றுபோகும் காலத்திற்குப் பிறகும் வெள்ளைப்படுதல் நீடிக்கும்.
  எப்போது வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்?  
சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியாகி கருப்பைக்கு வரும் காலத்தில், மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும்- பின்பும், கர்ப்பகாலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்ய உறவின் போது பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
நோய்த்தன்மையாகும் வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் என்னென்ன?
நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது அறிகுறியாகும். பிறப்பு உறுப்பில் அரிப்பும் ஏற்படும். உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கும் இருந்தால் அது உடனடியாக கவனிக்கத்தகுந்த அறிகுறியாகும்.
  வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?  
யோனிக்குழாயில் கிருமித் தொற்று இதற்கு முக்கிய காரணம்.
ஆண் உறுப்பின் நுனித்தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில் 'டிரைக்கோமோனஸ் வெஜைனாலிஸ்' என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்ய தொடர்பின்போது எரிச்சல், வலி ஏற்படும். மாதவிலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப்படும். யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்டகாலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.
கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் கருப்பையில் தொற்றிக்கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால் பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொருமுறையும் தண்ணீஇரால் கழுவுவதும் அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையைப் பொறுத்து வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.
 கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?  
கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிடவும்கூடும். அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மாத்திரைகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்புகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.
சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால் தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெறவேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன. வெட்கமும், அலட்சியமும் கொண்ட பெண்களை வெள்ளைப்படுதல் அதிகம் பாதிக்கிறது.
வைத்துக்கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்துகொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.
கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.
அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.
தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.
பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.
நாமும்ஒற்றைப் படை இரவுகளும்

நாமும்ஒற்றைப் படை இரவுகளும்

ஒற்றைப் படை இரவுகளும் நாமும்
      முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி     
“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2017)
கடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி நல்லறங்கள் செய்ய மக்களைத் தூண்டாமல் நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் என்று அடிப்படையில் ஆங்காங்கே பயான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பயான் தேவைதான். எந்த நேரத்தில் அது தேவையோ அப்போது மட்டுமே அதை வழங்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பயான்தானா?
சில பள்ளிகளில் ஒற்றைப்படை இரவுகளில் பயான், சில பள்ளிகளில் கடைசிப் பத்து இரவுகளும் பயான் என்று வைப்பது எவ்வகையில் நபிகளாரின் கூற்றை நடைமுறைப்படுத்தியதாக அமையும்?
ஒற்றைப்படை இரவுகளில் தனிமனிதச் செயல்பாடுகளே அவரவரின் வினைச்சுவடியை நிரப்பும். நன்மைகளை அறுவடை செய்ய வேண்டிய இரவுகள் அவை.
நன்மைகளை ஈட்டத் தூண்ட வேண்டியவர்கள், நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது நியாயமா?
உபரித் தொழுகை (நஃபில்) தொழுதல், தஸ்பீஹ் தொழுகை தொழுதல், குர்ஆன் ஓதுதல், குர்ஆனைக் கற்பித்தல், திக்ர் செய்தல், துஆச் செய்தல் உள்ளிட்ட தனிமனித நல்லறங்களே கடைசிப் பத்து இரவுகளில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும். இதை விட்டு விட்டு பயான் கேட்டுக் கொண்டிருப்பது நபிவழி ஆகாது. அந்தந்தப் பள்ளியில் அந்தந்த இமாம் செய்கின்ற பயானே போதுமானது. 
சஹர் நேர பயான் எவ்வாறு தனிமனித நல்லறங்களைத் தடுக்கிறதோ அதுபோலவே ஒற்றைப்படை இரவு பயான்களும் கடைசிப் பத்து இரவுகளின் பயான்களும் தனிமனித நல்லறங்களைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை தனிமனித நல்லறங்கள் செய்து நம்முடைய நன்மைத் தட்டைக் கனக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக ஒரு மோசமான கலாச்சாரம் இஸ்லாமிய ஊர்களில் தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிவாசலில் தொழ வைப்பதை, பயான் செய்வதை, குர்ஆன் ஓதுவதையும் கூட வெளி மைக்குகளில் ஒலிபறப்புவதில் தொடங்கி தற்போது தெருவுக்குத் தெரு குழல் ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கச்செய்து ரமளான் மாத இரவின் புனிதத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் செயலும் ஏதோ நன்மையான காரியம் போல் அறங்கேறி வருகிறது.
தமிழக் ஜமா அத்துல் உலமா சபை இதை கண்டித்தபோதும் எவரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

Friday, June 1, 2018

அனைவருக்கும் அல்குர்ஆன்

அனைவருக்கும் அல்குர்ஆன்

[ குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும்.   சந்தேகம் தேவையில்லை.   இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன்.   முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது; தக்வா.
உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு  அன்ஹு விளக்கினார்கள். வஸ்வஸா குழப்பம், தீய சிந்தனையில் விழாமல் நடைபோட வேண்டும்.
உங்களுக்கு எதிராக இண்டர்நெட் ஆபாசம், சேட்டிங், நிர்வாணம் பாவங்களிலிருந்து தப்பிப்பது தக்வா ஆகும்.  ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளிவருகிறது. நடனம் ஆடினால் உடல் வலிமை பெறும். உலகமக்களின் துனியா விரும்பிகளின் நோக்கம். நாங்கள் கெட்டுப் போய்விட்டோம். நீங்களும் பாழாய் போங்கள். மேற்கத்திய கலாச்சாரம் பரவினால் ஒழுக்கம் குறையும். காணாமல் போகும்.
உலக மதங்களின் அடிப்படை இறைவன், இறைநினைப்பு, ரஷ்யாவில் நாத்திகம் பேசினர். ஆனால் இப்போது இறைவனை ஒப்புக் கொள்கின்றனர். சமுதாயம் சீரழிந்த பின்னர் ‘‘அல்லாஹ்’’ நினைவு வருகிறது.]
      அல்குர்ஆன் அனைவருக்கும்!     
பகரா சூரா ஐந்து வசனங்கள். மூஃமீன் மாடல், இறை விசுவாசியின் முன் மாதிரி கூறப்பட்டுள்ளது. முதல் வசனத்தில் முழு அடிப்படை தரப்படுகிறது. இது எப்படிப்பட்ட வேதம். சந்தேகத்துக்குரியதல்ல. பிற வேதங்கள் குறித்த சந்தேகம் எழக்கூடும். திருப்தி, நிம்மதி மூஃமின்களுக்கு கிடைக்கிறது. வேறு மதத்தவருக்கு கிடைப்பதில்லை. வானத்தின் கீழ் ஒரு வேதம் உள்ளது. அதில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை. அதுதான் குர்ஆன். பரிசுத்தமான வேதம்.
இறைவனின் இரு பெரும் நிஃமத் அருட்கொடை 1) நபிகளார் பூமிக்கு அருளப்பட்டது. அவருடைய பரக்கத், ரஹ்மத் கிடைத்தது. 2. இறைவேதம். இன்னுமொரு நிஃமத் இரண்டு நிஃமத்துகளுடன் ஒப்பிடும்போது பிற அருட்கொடைகள் பொருளற்றவை. மதிப்பற்றவை. நிச்சயமாக இன்ஜீல் இறைவன் அருளியதாகும். தவ்ராத், சபூர் இறைவன் வழங்கிய வேதங்கள். முஸ்லிம் இறைவனை நம்புகிறார். இறைத்தூதர்களை நம்புகிறார். மறுமை நாளை நம்புகிறார். கிதாபுகளை நம்புகிறார். லாபம், நட்டம் தரும்விதி, தலையெழுத்து.
இறைவனே விதியை தீர்மானிக்கிறான். இஸ்லாத்தின் மைய அச்சு, ஐந்து அம்சங்களில் இழையோடுகிறது. குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும். அதனால் முதல் வசனம் வரையறுத்துவிடுகிறது. சந்தேகம் தேவையில்லை. இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன். இன்னுமொரு இடத்தில், ‘‘மனிதர்களின் வழிகாட்டி’’ கருத்து வருகிறது. அனைவருக்குமான வழி இருந்தாலும், முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது. தக்வா விளக்கம் கவனத்துக்குரியது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு அன்ஹு விளக்கினார். வஸ்வஸா குழப்பம், தீய சிந்தனையில் விழாமல் நடைபோட வேண்டும்.
உங்களுக்கு எதிராக இண்டர்நெட் ஆபாசம், சேட்டிங், நிர்வாணம் பாவங்களிலிருந்து தப்பிப்பது தக்வா ஆகும். ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளிவருகிறது. நடனம் ஆடினால் உடல் வலிமை பெறும். உலகமக்களின் துனியா விரும்பிகளின் நோக்கம். நாங்கள் கெட்டுப் போய்விட்டோம். நீங்களும் பாழாய் போங்கள். புஷ் ஒருமுறை கூறினார் முஸ்லிம்கள் நடனமாடுவதில்லை. மது அருந்துவதில்லை. ஆகையால் தீவிரவாதத்தின் பக்கம் விரைகின்றனர்.
ஒபாமா ஜனாதிபதியானதும் செய்த முதல் காரியம், உலக மக்கள் முன் மனைவியுடன் பகிரங்கமாக நடனமாடினார். அமெரிக்க கலாச்சாரம் இதுதான். நண்பர் ஒருவர் எனக்கு விருந்தளித்தார். மனைவியுடன் சகஜமாக உபசரித்தார். கோஷா, பர்தா, தடுப்பு இல்லை. மிகவும் தவறான நடவடிக்கை. பாவகாரியம். கணவன் மனைவி அன்னியோனியம் அளவுக்குள் நடக்கலாம். வெளி உலகில் சமுதாய ஒழுக்க வரம்புகளை கடைப்பிடித்த ஆகணும்.
மேற்கத்திய கலாச்சாரம் பரவினால் ஒழுக்கம் குறையும். காணாமல் போகும். நபித்தோழர் கையில் குங்குமப்பூ சாயம் நிறம் கண்ட நபிகளார் திருமணம் நடைபெற்ற விபரத்தை கேட்டறிந்தார். நபிகளாரின் நாட்களில் திருமணம் மிக இயல்பாக நடைபெற்றது. நபியை அழைக்காமல் திருமணம் என்றாலும் நபிகளார் வருந்தவில்லை. வலிமா எப்போது? வலிய கேட்டறிந்தார் நபிகளார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமண அழைப்பு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
டெலிபோன் அழைப்பு ஏற்கலாம். நேரில் வர நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் கண்முன் நபிகளாரின் முன்னுதாரண வாழக்கை மட்டுமே நிற்க வேண்டும். உலகில் நிகழும் கீழ்த்தர மாற்றங்கள் தேவையில்லை. ‘‘துஆவுக்காக, குத்பா ஓத என்னை அழைத்திருக்கலாம்.’‘ நபிகளாரின் விழைவல்ல. வற்புறுத்தவில்லை. இன்றைய நாட்களில் இல்ம் கல்வி அதிகம். ஆனால் சகிப்புத்தன்மை ஹில்ம் குறைந்துள்ளது. சின்னஞ்சிறிய அசௌகரியங்களை பொறுத்துக் கொண்டால், உங்களின் மதிப்பு உயரும். தரஜா அதிகமாகும். பகல் வேலை செய்வதற்கு. இரவில் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். இறைநியதி. ஆனால் கம்பெனிகள் மூன்று ஷிப்டுகளில் பணிபுரிகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், ‘‘இஷாவுக்கு பிறகு பேசாதீர்கள். ஆனால், இரவு முழுவதும் இப்போது பகல் போல் மாற்றிவிட்டனர். குர்ஆன், ஹதீஸ் கூறுவதற்கு மாற்றமான வாழ்க்கைச் சூழல். குர்ஆன் மனப்பாடம் செய்வதற்கு மட்டுமல்ல. பின்பற்றுவதற்குரியது. வெற்றி பெறும் வழக்கறிஞர் அடிக்கடி சட்ட புத்தகத்தை புரட்டுவார். சட்ட விதிகள் நுணி நாக்கில், நினைவில் இருந்தால் வெற்றி வரும். குர்ஆன் படிக்காத முஸ்லிம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சில வசனங்களை தினமும் படிக்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் கட்டளைகள் நெஞ்சில் தங்கும். அமல் வரும். திக்ரு செய்யும் முஸ்லிம் லஞ்சம் வாங்க மாட்டார்.
தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கட்டுப்பாடு உள்ளது. தரீக்கத் ஜமாத்திடம் கண்டிப்பு, கட்டுப்பாடு இல்லை. பயான் கேட்போர் பேனா, குறிப்பு ஏடு கொண்டு வந்து முக்கிய தகவலை எழுதவேண்டும். மாற்றம் கொண்டு வர பணம் தேவையில்லை. அக்லாக் முக்கியம். நபிகளார் வசம் பணமில்லை. தனி மனிதர். நபிகளார் உஹது மலையை தங்கமாக மாற்றும் வல்லமையை பெற்றிருந்தார். தங்கப் பாளம் அவரிடம் இல்லை. சகிப்புத்தன்மை, ஒழுக்கம், முயற்சியின் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். பணம் முன் வைத்து பிரச்சாரம் நடைபெறவில்லை. மிஸ்கீன்கள் மத்தியில் வாழ ஆசைப்படுகிறேன். மஹ்ஷரில் ஏழை மத்தியில் எழுப்பப்பட ஆசைப்படுகிறேன். எப்போதும் ‘‘தவ்லத்’’ செல்வத்தை விரும்பியதேயில்லை.
இறைவன் கேட்டான். நுபுவ்வத் மற்றும் செல்வம் வேண்டுமா. நுபுவ்வத் மற்றும் ஏழ்மை வேண்டுமா? நபிகளார் இறை தூதுத்துவத்துடன் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார். பணம், வலிமை இரண்டைக் கொண்டும் இஸ்லாம் பரவவில்லை. நபிகளார் மக்காவில் ஆயுத வலிமையில் இருந்ததேயில்லை. மதத்தை, நபிகளார் ஒழுக்கம் ‘‘அக்லாக்’’ பரப்பியது. பணம் உதவவில்லை.
ஹமீதுல்லாஹ் தன்னந்தனியே ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்று பிரான்ஸ் நாட்டில் இஸ்லாத்தை பரப்பினார். 15 மொழிகளில் புலமை பெற்றார். கைர உம்மத் பணியை முஸ்லிம்கள் ஆற்றவில்லை.
சங்கராச்சாரியார் ஒருமுறை கூறினார் ''வேதத்தில் உள்ள கருத்துக்கள் குர்ஆனில் ஒத்து உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் குர்ஆனை பரப்பவில்லை. கடைப்பிடிக்கவில்லை.'' மனிதன் அறிவு, அனுபவம் மூலம் அனைத்தையும் உணர முடியாது. நபிகளார் வருகையின் நோக்கம் ‘‘இபாதத்’’ உணர்த்துவதாகும்.
உலக மதங்களின் அடிப்படை இறைவன், இறைநினைப்பு, ரஷ்யாவில் நாத்திகம் பேசினர். ஆனால் இப்போது இறைவனை ஒப்புக் கொள்கின்றனர். சமுதாயம் சீரழிந்த பின்னர் ‘‘அல்லாஹ்’’ நினைவு வருகிறது. அடிபட்ட பிறகு மக்களுக்கு புத்தி வரும். முஸ்லிம் மதத்தில் பிறக்காதவர், இஸ்லாத்தை தழுவினால் ஏராளமான சிரமம், சவால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏழு மாதங்களில் குழந்தை பிறந்தால் ‘‘இன்கு பேஷன்’’ அறையில் பாதுகாக்க வேண்டும். இறை சட்டத்தை மாற்ற இயலாது. அனைவரும் பரீட்சை மண்டபத்தில் உள்ளோம். சிலருக்கு பணம் தராமல் வறுமையில் சோதிக்கிறான். அனைவரும் இறைவனால் சோதிக்கப்படுகின்றனர்.
எழுதிவையுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அபூஷா (ரலி) நினைவு ஆற்றல் குறைந்தவர். நான் கூறுவதை எழுதி வையுங்கள். அவருக்கு பயன்படும். இன்னொரு முறை நபிகளார், ‘‘வலது கையை உபயோகிப்பீர். (எழுதி வைக்கவும் இதன் பொருள்) ஞானி ஒருவர் கூறுகிறார் - தோல்விகள் எனக்கு இறைவனை அதிகம் நினைவுபடுத்தின. யாரிடம் வாக்குறுதியளித்தாலும் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்.
குகைத் தோழர் குறித்து நபிகளாரிடம் கேட்டதற்கு ‘‘நாளை கூறுகிறேன்’’ நபிகளார் சட்டென்று பதிலளித்தார். நீண்ட நாட்கள் வஹீ வரவில்லை. இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் உத்தரவிட்டான். மாஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் மொழிவது இபாதத்.
நபிகளார் யாரை அழைத்தாலும் பெயர் கூறி அழைப்பார். அவர்களே இவர்களே மொட்டையாக விளிக்கமாட்டார். யாரிடமாவது கை கொடுத்தால் முழுமையாக கொடுங்கள். பற்றிப் பிடியுங்கள். கை குலுக்கணும். இருவருடைய பாவங்களும் மன்னிக்கப்படும். இலையுதிர் கால நிலையில் உதிர்ந்துவிடும். இலை கொட்டுவது போல பாவங்கள் கொட்டிவிடும். வெள்ளையர் கை குலுக்கி மகிழ்கின்றனர்.
பிராக்டிகல் விஷயங்களை நபிகளார் கற்றுத் தந்தார். ஆணவம் வேண்டாம். சில விஷயங்கள் எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியாது. சில ஞானம் அனுபவம் உமக்கு தெரியும். எனக்கு பழக்கமில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வளத்தை தந்துள்ளான். ஒரு நாட்டில் மனித வளம், இன்னொரு நாட்டில் பெட்ரோல், பிறிதொரு நாட்டில் தொழில் நுட்பம் உள்ளது. பகிர்ந்துக் கொள்ளுமாறு குர்ஆன் வலியுறுத்துகிறது.
சவூதியில் கஃபத்துல்லா இருக்கிறது. பெட்ரோல் உண்டு. பெப்சி ஒரு ரியால். குடிநீர் இல்லை. தக்கன் பூமி நீரை குடித்தால் முகம் பளபளக்கும். அல்லாஹ் இந்த நிஃமத்தை ஹைதராபாத் வாசிகளுக்கு வழங்கியுள்ளான். குர்ஆனை பின்பற்றுவோர் உயர் மனிதர்கள். அவுலியாக்கள். இந்து, கிருத்தவ, யூத மக்களை இறைவனின் படைப்பாக கருதவேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். மற்றவரை நம்மைவிட உயர்வாக கருதுவது ஞானிகளின் பழக்கம். பிறர் உங்களின் நடத்தையை மதித்தால் போதும். சுயபெருமை வேண்டாம். குர்ஆன் படிப்பது ஷைத்தானுக்கு பிடிக்காது.
(ஹைதராபாத் டோலி சவுக்கி, குர்ஆன் ஃபவுன்டேஷன் நிகழ்ச்சியில் முஹம்மது முஸ்தபா ஷரீப் நக்ஷபந்தி உரை.)
-தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம்