Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Thursday, May 3, 2018

கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’

கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’


https://marhum-muslim.blogspot.in/
ஒரு பெண் தனது வாழ்க்கையில் கடந்து செல்லும் எதார்த்தமான நிலைகளை படம் பிடுத்துக்காட்டும் கட்டுரை இது!
[ ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.
அம்மா, அப்பா, தங்கை, தம்பி, தோழிகள், உறவினர், ஆசையாக வளர்த்த மரங்கள், பூச்செடிகள், வாழ்ந்த வீடு, பழகிய ஊர்... அனைத்தையும் விட்டுச் செல்லப் போவதை நினைத்து, பல இரவுகள் கண்ணீரில் கரையும்.
திருமணத்தன்று இரவே, நிறைந்திருக்கும் உறவினர் மத்தியில், பெண்ணை அலங்காரம் செய்து தனி அறைக்கு அழைத்துச் செல்லும்போது, சொல்ல முடியாத தர்மசங்கடம் நிறைந்திருக்கும். அவ்வளவாக அறிந்திராத ஓர் ஆணுடன், தனிமையில் விடப்பட்டவுடன் பயம் முழுவதும் நெஞ்சை அடைக்கும்.
புதுச்சூழல். புது வாழ்க்கை. பெண்ணை விட முதிர்ச்சி பெற்றிருக்கும் ஆண் இந்த விஷயத்தில் பக்குவமோ, பொறுமையோ காட்டுவதில்லை. ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என நினைப்பதில்லை.
திருமணம் என்றால் இன்னொரு வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று நினைத்திருக்கும் பெண்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில பெண்கள் பயத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்துவிடுவார்கள். மாப்பிள்ளை எரிச்சலின் உச்சத்தில் இருப்பார். அவமானமாக நினைப்பார். பெரியவர்கள் பெண்ணுக்குப் புத்தி சொல்லி, மீண்டும் உள்ளே அனுப்பி வைப்பார்கள்...]
இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’
ஆண்கள், காதல், தாம்பத்யம் .... இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் தீண்டத்தகாத, அருவருப்பு ஊட்டக் கூடியவையாகவே சொல்லப்பட்டு பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால் வளர்ந்த பிறகும்கூட பெண்களுக்குத் தெரிய வேண்டிய விஞ்ஞான விஷயங்களும் தெரியாமலே போய்விடுகின்றன.
பெரும்பாலான அம்மாக்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள், குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களைச் சொல்லித் தருவதில்லை. ஆனால், திருமண காலம் வந்ததும் அதுவரை பெரியவர்கள் சொல்லி வந்த விஷயங்களுக்கு எதிராக நடக்க வேண்டியிருக்கிறது.
குடும்பம், படிப்பு, பொருளாதாரம் என்று ஏகப்பட்டவற்றைப் பார்த்து, மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குப் பிறகு புகைப்படங்களின் பரிமாற்றம். இறுதியாகப் பெண் பார்க்கும் படலம். மாப்பிள்ளை, பெண்ணை எல்லோருக்கும் பிடித்த பிறகு, அந்த விஷயம் ஆரம்பமாகும். முப்பது பவுன் நகை, லட்ச ரூபாய் ரொக்கம், மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், பிரேஸ்லெட். அதோடு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும்ஸ மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சணையில் பெண் வீட்டார் வாய் அடைத்துப் போய்விடுவார்கள். இந்தச் சம்பந்தம் சரிவராது என்று முடிவெடுப்பார்கள்.
மாப்பிள்ளையின் புகைப்படம் பார்த்ததில் இருந்தே கனவுகளில் மிதந்துகொண்டிருந்த பெண்ணுக்கு ஏமாற்றமாகி விடும். அடுத்த மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகும். மீண்டும் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படம் காண்பிக்கப்படும். சீர்வரிசை கேட்பார்கள். பெண் வீட்டார் யோசிப்பார்கள். நல்ல சம்பந்தம் எல்லாம் சீர் பிரச்னையில் கைநழுவிப் போவதை விரும்பாமல், கடன் வாங்கி, வீட்டை விற்று கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று தீர்மானிப்பார்கள்.
பெற்றோர் படும் கஷ்டத்தைப் பார்க்கும் பெண்ணுக்கு, தனக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா என்ற கேள்வி வரும்.
‘வேண்டாம்மா..... இன்னும் தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க. எனக்கு இவ்வளவு செஞ்சீங்கன்னா அவங்களுக்கு எல்லாம் என்ன செய்வீங்க?’
‘இப்ப யாருதான் கேட்காம இருக்காங்க சொல்லு? கொஞ்சம் கஷ்டப்பட்டு செஞ்சுக் கொடுத்துட்டா, வாழ்க்கை முழுவதும் நீ கஷ்டப்படாமல் இருக்கலாமே... இதைப் பத்தி எல்லாம் நீ யோசிக்காத. நல்ல இடம்.’
ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.
நாள்கள் நெருங்க நெருங்க மரியாதை, சீர், உடை, உணவு என்று சிறுசிறு பிரச்னைகள் வந்து போகும். எப்போது என்ன நடக்கும், யார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தில் பெண் திருமண நாளை எதிர் நோக்கி இருப்பாள். ஒருபக்கம் புதிய வாழ்க்கையைப் பற்றி ஆர்வம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் துயரம் கொல்லும்.
அம்மா, அப்பா, தங்கை, தம்பி, தோழிகள், உறவினர், ஆசையாக வளர்த்த மரங்கள், பூச்செடிகள், வாழ்ந்த வீடு, பழகிய ஊர்... அனைத்தையும் விட்டுச் செல்லப் போவதை நினைத்து, பல இரவுகள் கண்ணீரில் கரையும்.
‘இது என்ன அதிசயமா இருக்கு! முளைச்ச பயிரும் பொம்பளைப் புள்ளையும் ஒரே இடத்துல இருக்க முடியுமா? வேறொரு இடத்துல நட்டாத்தான் நல்லா வளரும். ராத்திரி பஸ் ஏறினா காலையில வந்துடலாம். இதுக்குப் போயி அழுதுட்டு இருக்க?’
அம்மாவும் ஒரு காலத்தில் இப்படி அழுது, பாட்டி இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார்!
சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்து களைத்துப் போன பிறகு, வீட்டுக்கு அழைத்து வருவார்கள்.
அன்று இரவே, நிறைந்திருக்கும் உறவினர் மத்தியில், பெண்ணை அலங்காரம் செய்து தனி அறைக்கு அழைத்துச் செல்லும்போது, சொல்ல முடியாத தர்மசங்கடம் நிறைந்திருக்கும். அவ்வளவாக அறிந்திராத ஓர் ஆணுடன், தனிமையில் விடப்பட்டவுடன் பயம் முழுவதும் நெஞ்சை அடைக்கும்.
திருமணம் என்றால் இன்னொரு வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று நினைத்திருக்கும் பெண்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில பெண்கள் பயத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்துவிடுவார்கள். மாப்பிள்ளை எரிச்சலின் உச்சத்தில் இருப்பார். அவமானமாக நினைப்பார். பெரியவர்கள் பெண்ணுக்குப் புத்தி சொல்லி, மீண்டும் உள்ளே அனுப்பி வைப்பார்கள்...
திருமணத்துக்கு முன்பே பார்த்துப் பேசி, பழகும் சூழல் பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. புதுச்சூழல். புது வாழ்க்கை. பெண்ணை விட முதிர்ச்சி பெற்றிருக்கும் ஆண் இந்த விஷயத்தில் பக்குவமோ, பொறுமையோ காட்டுவதில்லை. ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என நினைப்பதில்லை. திருமணம் ஆன அன்றே மனைவியுடன் சேர்வதுதான் ஆண்மை என்று நினைக்கிறார்களோ என்னவோ!
எல்லாவற்றிலும் மனைவி தன்னை விட புத்திசாலித்தனம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் விவரம் தெரிந்த பெண்கள் என்றால் அதிர்ச்சியடைகிறார்கள், சந்தேகப்படுகிறார்கள்!
குடும்ப வாழ்க்கை குறித்த அறிவும் இல்லாமல், பயம், வெட்கம், அவமானம் போன்ற கலவை மனநிலையில் இருக்கும் பெண்களின் உணர்வை ஆண்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கடுமையாக நடந்துகொள்ளும் ஆண்களால் பெண்களுக்கு வாழ்க்கை மீது மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டு விடுகிறது.
‘இப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே செஞ்சிருக்க மாட்டேன்’ என்று சொல்லும் பெண்களிடம், யாரும் ஆறுதல் சொல்வதோ, புரிய வைக்க முயற்சிப்பதோ இல்லை. இது எல்லோரும் சொல்லும் விஷயம்தான். நான்கு நாள்களில் சரியாகி விடும் என்று விட்டுவிடுவார்கள்.
பெற்றோர், உடன்பிறப்புகள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்க, கொந்தளிப்பான மனநிலையில் கணவன் வீட்டுக்கு வருகிறாள் பெண்.
புது ஊர். புது வீடு. புதிய மனிதர்கள். புதிய சூழல். யார் எப்படி இருப்பார்கள் என்று ஒன்றும் புரியாது. புதுப்பெண் என்று இரண்டு நாள்கள் வேலை செய்ய விடாமல் வைத்திருப்பார்கள். பிறகு ஒவ்வொரு வேலையாகச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
‘நாங்க குக்கரில் சாதம் வைக்க மாட்டோம், காயை இவ்வளவு பெரிசா நறுக்காதே! முதலில் அரிசியை அரைச்சிட்டு உளுந்தை கிரைண்டரில் போடு, உப்பு அதிகமா சேர்த்துக்க மாட்டோம்! நீ என்ன மிளகாய்த்தூளைக் கொட்டி வச்சிட்டே., சாப்பிட முடியலை, பெரியவங்க வர்றப்ப சேர்ல உட்கார்ந்திருக்கக்கூடாது! உங்க மாமாவுக்கு எட்டு மணிக்கெல்லாம் டிபன் வச்சிடணும், பாபு ஏழு மணிக்குக் கிளம்பிடுவான், அஞ்சு மணிக்கே எழுந்திடணும்!’
இப்படி நிமிடத்துக்கு நிமிடம் பாடம் எடுக்கப்படும். யார் என்ன சொன்னாலும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், முடிந்தால் சிரித்தபடி, திருத்தித் திரும்பச் செய்ய வேண்டும். புகுந்த வீட்டில் யாராவது குரலிலோ, வார்த்தைகளிலோ சற்று அழுத்தம் கொடுத்துவிட்டால், கண்ணீர் வந்துவிடும். அதை வெளிக்காட்டினால் பிரச்னை ஆகிவிடும். மிகவும் பிரயத்தனப்பட்டுச் சமாளிக்க வேண்டும். சில நேரங்களில் அவர்கள் பேச்சில் காயம்படும்போது, அம்மாவுடன் எதிர்த்துப் பேசி விவாதம் செய்தது நினைவுக்கு வரும். அம்மாவிடம் நல்லபடியாக நடந்துகொண்டிருக்கலாம். அம்மாவை உட்கார வைத்து சமைத்துப் போட்டிருக்கலாம் என்று அடிக்கடி தோன்றும்.
வீட்டில் உள்ளவர்கள் மருமகளுக்குத் தெரியாமல் அவளைப் பற்றிப் பேசிக்கொள்ளும்போது, யதேச்சையாகக் கவனிக்க நேரும். முக்கியமான விஷயங்களை அவள் இல்லாதபோது பேசிக்கொள்வதையும் அறிய நேரும். அப்போது அந்த வீடு அநியாயத்துக்கு அந்நியமாகத் தோன்றும்.
ஓரிரு மாதங்களுக்குள் அடுத்த (இன்ப!) அதிர்ச்சி காத்திருக்கும்.
‘என்னம்மா, ஏன் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்க?’
‘என்னன்னே தெரியலை அத்தை. தலை சுத்துது. என்னவோ பண்ணுது ... ’
மருத்துவர் குழந்தை உருவாகியிருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்வார். குடும்பமே சந்தோஷத்தில் திளைக்கும். ‘அண்ணன் ரொம்ப ஃபாஸ்ட்’ என்று கிண்டலடிக்கும்.
இதுவே திருமணம் ஆகி நான்கு, ஐந்து மாதங்களில் குழந்தை உண்டாகவில்லை என்றால், ‘ஏதாவது விசேஷமா? மருமக முழுகாம இருக்காளா?‘ என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ‘எங்க பரம்பரையில எல்லாருக்கும் உடனே உண்டாகிடும். இவளுக்குத்தான் இன்னும் ஒண்ணும் நடக்கலை‘ என்று சொல்வார்கள். இதுவே ஓராண்டைத் தாண்டி விட்டால், ஜோசியம், விரதம், வேண்டுதல், மருத்துவம் என்று கிளம்பி விடுவார்கள்.
கணவன் – மனைவியிடையே அன்பும் காதலும் புரிதலும் நிறைந்து, திட்டமிட்டுப் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட புத்திசாலியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
திருமணம் ஆன உடனே குழந்தை உண்டாகும் பெண்களுக்கு முதலில் அச்சம்தான் தோன்றுகிறது. குழந்தை என்றால் சந்தோஷம்தான். ஆனால், தன் வயிற்றுக்குள் ஓர் உயிர் வளர்வது என்றால் எப்படி? அது என்ன செய்யும்? எப்படிப் பிறக்கும்? கேள்விகள் துளைக்கும்.
காலை வழக்கம்போல குக்கரில் பருப்பு வைத்தால், அந்த மணம் குமட்டலைக் கொடுக்கும். வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருக்கும். அதைத் துப்பிக்கொண்டே இருக்க வேண்டும். பசி எடுக்கும். ஒரு வாய் உள்ளே வைத்தாலோ, அடி வயிற்றில் இருந்து உருண்டு ஏதோ ஒன்று வாந்தியாக வெளிவரும். மயக்கமாக இருக்கும். சுருண்டு படுத்தால் தேவலாம் என்று தோன்றும். அப்படிப் படுத்தால், ‘எப்பப் பாரு தூங்கிக்கிட்டே இருக்காஸ எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு...’ என்று வாரிசுக்காகச் சந்தோஷப்பட்ட அதே மாமியார், வாரிசைச் சுமக்கும் மருமகளைக் குறை சொல்வார்.
திருமணம் ஆகி ஓரிரு மாதமே ஆனதால் ஆசையாக இருக்கும் கணவனும் மனைவி தன்னிடம் சரியாக நடந்துகொள்ள மறுக்கிறாள் என்று விரக்தியும் எரிச்சலும் அடைவான். அதை வார்த்தைகளில் சொல்லிக் காட்டுவான். பகல் முழுவதும் வேலை சரியாகச் செய்ய முடியவில்லை என்றும் இரவில் கணவனுடன் சரியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பெண், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மறுப்பவர்களை நினைத்து வெறுத்துப் போவாள். தம்பதியிடையே நாளாக ஆக நெருக்கம் வர வேண்டிய நேரத்தில், புரிதல் இல்லாமல் இடைவெளி விழும்.
பிறந்த வீட்டுக்குச் சென்றால் உடலுக்கு ஓய்வும் மனத்துக்குத் தெம்பும் கிடைக்கும் என்று தோன்றும். கணவனிடம் சொன்னால், ‘அதுக்குள்ளே என்ன?’ என்று விட்டுவிடுவான். அம்மாவிடம் சொன்னால், தன் மகளை அழைத்துச் செல்ல, மாமியார் – மாமனாரிடம் குழைந்து கேட்க வேண்டும்.
பிடித்ததைச் செய்து, சாப்பிட்டு, தூங்கி பொழுது இனிமையாகப் பிறந்த வீட்டில் கழிந்தாலும், கணவன் வீட்டில் என்ன நடக்கும், என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருக்கும்.
‘அம்மா, கல்யாணம், பண்டிகைகள் செலவுன்னு உங்களுக்கு நிறையச் செலவு. இதுல குழந்தை வேற உண்டாயிருச்சு. பிரசவம் பார்த்து, குழந்தைக்கு நகை போட்டு அனுப்பணும். உங்களுக்கு நிறைய கஷ்டம்... அப்பா பாவம்!’
‘கல்யாணம் பண்ணினா இதெல்லாம் வரிசையா வரும்னு எங்களுக்குத் தெரியாதா?’
இன்னும் கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் இருக்கலாம் என்று தோன்றினாலும், கணவன் அழைத்த அடுத்த நொடியே கிளம்பிவிட வேண்டும்.
வயிறு நாளுக்கு நாள் பெரிதாவதாகத் தோன்றும். சட்டென திரும்பிப் படுக்க முடியாது. குழந்தையின் அசைவு தெரியும். தரையில் உட்கார்ந்து எழுவது கஷ்டமாக இருக்கும். கால் நகங்களை வெட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சில நேரங்களில் கால்கள் வீங்கிக்கொள்ளும். முகம் கொஞ்சம் உப்பியது போலக் காட்சியளிக்கும்ஸ பலவித உணர்ச்சிகள்... புதுவித அனுபவங்கள்!
ஏழாவது மாதம் பிரசவத்துக்காக தாய் வீடு வந்து சேர்வாள். ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பட்டிமன்றம் தொடங்கும். நாள்கள் நெருங்க நெருங்க பிரசவ பயம் உண்டாகும்.
‘அம்மா, நார்மல் டெலிவரி ரொம்ப வலிக்குமா? சிசேரியன் ரொம்ப வலிக்குமா?’
‘வலிக்காம குழந்தை பிறக்குமா? உங்க மாமியாரும் மாமனாரும் எங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க. எங்க வாரிசு வயிற்றில் இருக்குதுன்னு அடிக்கடி போன் பண்ணறாங்க!’
‘நம்ம வீட்டுக்கு என் குழந்தை வாரிசு இல்லையாம்மா?’
‘நம்ம ராஜா குழந்தைதான் எங்க வாரிசு. பொண்ணுங்க எல்லாம் அடுத்தவங்க வீட்டு வாரிசைத்தான் சுமக்கறாங்க....’
‘அவங்க வாரிசுன்னா அவங்களே பிரசவம் பார்க்க வேண்டியதுதானேஸ ஏன் நம்ம வீட்டுக்கு அனுப்பறாங்க?’
வலி வந்தவுடன், ‘அம்மா, எனக்கு ஏதாவது ஆனால் என் குழந்தையை நீதான் நல்லபடியா வளர்க்கணும்ஸ எனக்குப் பயமா இருக்கும்மா... வலி தாங்க முடியலை....’
‘உனக்கு ஒண்ணும் ஆகாது. தைரியமா இரு. நாங்க எல்லாம் இருக்கோம்....’
மூன்று மணி நேரப் போராட்டம். உயிர் போகிற வலி. குழந்தை பிறந்த பிறகு, ‘அம்மா, இப்பத்தான் உன்னோட அருமை முழுசா புரியுது. செத்துப் பிழைச்சது போல இருக்கு....’
முதல் வருட கல்யாண நாள்!
கணவனும் மனைவியும் இரண்டு மாதக் குழந்தையுடன் கொண்டாடுவார்கள். ஒரே ஆண்டில் மனைவி, தாய் என்ற இரட்டை பிரமோஷன்களைப் பெற்று, சூறாவளிக் காற்றில் சுழற்றியடிக்கப்பட்டு கரை ஒதுங்கும் பாய்மரம் போல ஆகிவிடுகிறாள் பெண். இதற்குள்ளாகவே பலருக்கு வாழ்க்கை கசந்து போய்விடுகிறது.

Tuesday, May 7, 2013

பெண்கள்-நாகரீகம்!

பெண்கள்-நாகரீகம்!

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன? என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள். இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள். பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது. அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுத்தமாக்கு நாடு தானாகவே சுத்தமாகும்.
அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம், நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம். முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது. வீட்டில் தந்தை அண்ணன், தம்பி, மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்; அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை
முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை. அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும், படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது.
இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை? உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் பெண்களின் அறியாமையும் காரணம் எனக்கூறலாம். சுதந்திரம் எது, நாகரீகம் எது என்று பகுத்துப்பார்த்து அறியாமல் தங்களைத் தாங்களே போகப்பொருளாக சித்தரித்துக்கொள்ளும் முறை
நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது. இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை.
பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும்
corporate விபச்சாரம் ! ஆபாசமாக நடிப்பது அங்கே ஒரு பெண்..அவர் தன் இனம் பற்றி யோசிக்கவில்லை..அங்கே அவருக்கு அவர் தொழில் சார்ந்த பணமே முக்கியம்..படம் எடுப்பவர்...அவருக்கும் அங்கு தாய், மனைவி, சகோதரி, மகள் என்ற உணர்வு இல்லை.. ஊடகம்..அவர்களுக்கும் அவர்கள் தொழில் தர்மம்(டி.ஆர்.பி. ரேட் அதிகரிப்பது)... இப்படியிருக்க பெண்கள் அமைப்பு கோஷம் போடுவதால் மட்டும் சரியாகிவிடுமா..?
இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது
acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .
இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது.
கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம்? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது.
நிரூபிக்கப்பட்ட அந்த நேரமே பொதுமக்கள் பார்வையில் தண்டனைகள் நிறைவேட்டப்பட்டால் தான், மற்றவர்களுக்கு பயமாகவும், பாடமாகவும் அமையும்.
நன்றி: இன்று ஒரு தகவல்

Friday, May 3, 2013

குழந்தை பிறப்பு இயற்கையே...!

குழந்தை பிறப்பு இயற்கையே...!


பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி.
ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இத்தகைய மரணம் பல மடங்கு குறைவு. இருப்பினும்கூட, தொடர்ந்த முயற்சிகள் காரணமாக 2009-ம் ஆண்டு 79 கர்ப்பிணிகள் மரணம் எனக் குறைந்துள்ளது.
பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில்தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. ஆனால் அண்மையில், ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்த கருத்து ஒரு மாற்றுச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
""மகப்பேறு தொடர்பான பாரம்பரிய அறிவை நாம் தக்க வைத்துக்கொள்ளவில்லை.
அதை வளர்க்கத் தவறிவிட்டோம்.
இன்று மருத்துவமனையை நம்பி இருக்கிறோம்.
பாதுகாப்பான பிள்ளைப்பேறு என்ற கருத்தில், சிசேரியன் மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன.
மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால்தான் தாய் சேய் நலம் என்ற எண்ணம் உள்ளது.''
இது எந்த அளவுக்கு உண்மை?
குழந்தை பிறப்பு இயற்கையே...!தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் குழந்தை பிறப்புகளில் 40 விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் குழந்தை பிறப்பு 80 விழுக்காடு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. ஆனால் இரு மாவட்டங்களிலும் பேறுகாலத்தில் மரணமடையும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை ஒரே அளவாகத்தான் இருக்கிறது. அப்படியானால் இதன் பொருள் என்ன? என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அவர்.
சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்களில் பெண்களே சக பெண்கள் பிள்ளைபெற உதவி செய்வது மிகமிகச் சாதாரண சம்பவமாக இருந்தது. கிராமங்களில் வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டு, மரத்தடியில் பிள்ளை பெற்ற சம்பவங்கள் ஏராளம். கிராமங்களில் மருத்துவச்சி எனும் வயதான பெண்மணிகள் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தே தலை எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுவார்கள்.
அண்மையில், மதுரை அருகே உள்ள மலைவாழ் பழங்குடியினர் குடும்பம் பற்றிய செய்திக் கட்டுரையில் அந்த இனக்குழுவில் இருக்கும் யாருமே மருத்துவமனைக்கு வந்து பிள்ளை பெற்றதே இல்லை என்றும், அவர்களில் ஆண்-பெண் இருவருமே பேதமற்று இதில் திறமை பெற்றிருக்கிறார்கள் என்றும் படிக்கின்ற போது ஆச்சரியமாக இருந்தது. அவர்களைப் பொருத்தவரை தாம்பத்யம் எத்தனை இயல்பானதோ அத்தனை இயல்பானது பிள்ளை பெறுவதும்!
மருத்துவமனைகளை மட்டுமே நம்பிக்கொண்டு, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை நாம் மறந்துபோகிறோம். கர்ப்பத்தை உறுதி செய்வதில் தொடங்கி, மூன்றாவது மாதத்திலேயே ஸ்கேன் செய்யத் தொடங்கி, டானிக்குகள் சாப்பிடச் சொல்லி அலோபதி மருத்துவத்தால் மட்டுமே குழந்தை நலமாகப் பிறக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள். கிராமத்துக் குடும்பங்கள்கூட நகரங்களுக்கு வந்து தனியார் மருத்துவமனைகளில் ரூ. 5,000-க்கு குறைவுபடாமல் செலவு செய்து பிள்ளை பெற்றுச் செல்லும், அல்லது ரூ. 25,000 வரை செலவு செய்து சிசேரியன் செய்துகொள்ளும் அவல நிலை உள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் குழந்தைகள் வீடுகளில்தான் பிறந்தார்கள். பனிக்குடம் உடைந்தும் பிள்ளைப்பேறு நிகழாத நிலையில்தான் மருத்துவமனையை நாடும் வழக்கம் இருந்தது. அத்தகைய சம்பவங்களில் மட்டுமே சில கர்ப்பிணிப் பெண்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர் என்பதும் உண்மை.
இன்று பெண்கல்வியும், போக்குவரத்து வசதியும், கைப்பேசி வசதியும், 108 அவசர ஊர்தி போன்ற வசதிகளும் பெருகியுள்ள இந்த நாளில் பாரம்பரிய மருத்துவத்தைக் கடைப்பிடிக்கவும், பிரசவம் கடினமானதாக இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்வதும் மிக எளிது. மகப்பேற்றில் பாரம்பரிய முறைகளைக் கையாளுதல், தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவத்தின் துணை நாடுதல் என்ற இரண்டும் இணையும் ஒரு நிலைமை உருவானால், அனைத்து கர்ப்பிணிகளுக்குமே பயனுள்ளதாக அமையும். இன்றைய சூழ்நிலையில் இதற்கான மருத்துவச்சியை அடையாளம் காண்பது அரிது. ஆனால், அங்கன்வாடி பணியாளர்கள், கிராமச் சுகாதார அலுவலர்களுக்கு இத்தகைய பாரம்பரிய மருத்துவ அறிவைப் புகட்டி, பயிற்சியும் அளிக்க முடியும்.
கர்ப்பிணிப் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் உலக வங்கியும் தமிழகத்துக்கு நிதியுதவி வழங்குகிறது. 2010 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் மருத்துவச் சேவையை மேம்படுத்துவதற்காக 117 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இது ஏற்கெனவே தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜக்ட்டுக்காக வழங்கிய 110 மில்லியன் டாலர் நீங்கலாக வழங்கப்படும் கூடுதல் தொகை என்கிறது உலக வங்கி. 1999-லிருந்து சிசுமரணம், பேறுகால மரணம் இரண்டும் தமிழ்நாட்டில் கணிசமாகக் குறைந்து வருகிறது என்பதைப் பாராட்டி வழங்கப்பட்ட தொகை இது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதிஉதவி ரூ. 6 ஆயிரத்தை ரூ 10 ஆயிரமாக உயர்த்துவதாக தி.மு.க.வும், ரூ.12,000 ஆக உயர்த்துவதாக அ.தி.மு.க.வும் வாக்குறுதி அளிக்கிறது என்றால் அது உலக வங்கிப் பணத்தை நம்பித்தான்.
தேவையில்லாமல் அறுவைச்சிகிச்சை, மருத்துவமனைச் செலவு என்று பணவிரயம் செய்ய வேண்டியது அவசியம்தானா? நாம் ஏன் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ள மறுக்க வேண்டும்? ஷீலாராணி சுங்கத் எழுப்பி இருக்கும் விவாதம் சிந்தனைக்கு உகந்தது. இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பானேன்...
நன்றி: தினமணி

Thursday, March 7, 2013

நம் குடும்ப பெண்களை பாதுகாக்க...!

நம் குடும்ப பெண்களை பாதுகாக்க...!


http://www.marhum-muslim.com/தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.
''மறுமைக்கு முன்பாக இவ்வுலக சுகங்கள் அத்தனையும் அர்ப்பமானவை'' என்பதை விளங்காத காரணத்தால் - விளக்கப்படாத காரணத்தால் அவர்கள் விட்டில் பூச்சிகளாக நெருப்பில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் பெற்றோர்களே! சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும், நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், நரக நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் நமது கடமையாக இருக்கிறது. நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
 இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்: வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
 நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள் :
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான் :
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37).
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32).
1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப் பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.
7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி. பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள். அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும் அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
12. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி.
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம் பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்ணின் நிலை?!
அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் சுருக்கமாக இதோ....
வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு இளம் பெண்னை திருமணம் செய்கின்றார். சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடி வைத்து விட்டு சென்று விடுகின்றார்.
தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப் படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக் கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.
தனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடீரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெரிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்
தொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும், அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உறவு கொள்கின்றான்.
கணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெரிந்தவுடன் இருவரும் ஓடிப் போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.
காலையில் எழுந்த கணவன் விஷயம் அறிந்து அதிர்கின்றான். வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான். அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.
அவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பணம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.
கதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக் கொள்ளும்படி கதறுகிறாள். கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திரிகிறாள்.
இது ஒரு உண்மைச் சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆக பெண்களே! மாணவிகளே! உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவார்கள். ஏமாந்து விட வேண்டாம்!!
இம்மை மறுமை பற்றி போதிப்பதோடு நின்றுவிடாதீர்கள். எவ்வளவு உயர்வான மார்க்கத்தில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்பதையும், உத்தம ஸஹாபிப் பெண்மணிகளின் தியாக வரலாற்றையும் வீர வரலாற்றையும் அவர்கள் மனதில் பதியும்படி செய்யுங்கள். இன்ஷ அல்லாஹ் இது அவர்களை நேர்வழிப்படுத்த உதவும்.
பெற்றோர்களே! கணவன்மார்களே! நீங்களும் சற்று சிந்திப்பீர்! வெள்ளம் கரை கடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர்! உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணிப்பீர்!
சிந்திப்பீர் செயல்படுவீர்!!
சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!
 சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!

Saturday, January 19, 2013

 "தலையணை மந்திரம்"!

"தலையணை மந்திரம்"!


    பெண்களே! போடுங்க "தலையணை மந்திரம்"!      
நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு கிண்டலான வார்த்தை ''தலையணை மந்திரம்''!!
இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளபடுகிறது.
எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது.
'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாளோ, இப்படி மயங்கி கிடக்கிறான்' இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!!
ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....
ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனம் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?!
அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது!?
மருமகளை திட்டுவதற்காக கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ள போட்டுகிட்டா', 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசபட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!
ஆண்களே ?!
என்னவோ ஆண்கள் என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......
ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே..... அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!!
அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறி போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிது படுத்தமாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.
மனைவிகளே !
பிறர் கூறும் கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதிர்கள்... அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள்- குறிப்பா தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.
இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய் கொண்டிருக்கும் போது... இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!
ஒரு சர்வே :
"நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"
சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!
சரி இருக்கட்டும்... தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பாப்போம்.....
"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்"
இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை... சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம்!!
''தலையணை மந்திரம்'' இனி இப்படி போடுங்க...!!
o மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!
o அவரது குறைகளை மட்டுமே பெரிசு படுத்தி வாதாடாமல் நிறைகளை சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!
o கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!
o குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!
o எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துகொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!
கணவன் தன்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டு பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்து செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!!
பிறரின் தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை ஏற்படுத்தி கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின் பற்றுங்கள்... கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல்!!
-டாக்டர் கவ்சல்யா

Monday, April 9, 2012

<span style="color: lime;">‘புலி பசிச்சாலும்..’</span>

‘புலி பசிச்சாலும்..’

 அம்மாவும், மனைவியும்!

ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.

இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல!!

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே, காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.

ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, "அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா"ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.

மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, "mass food"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?

அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும். இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!

இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.

இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?

இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!

அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, "எனக்கு?"ன்னு அப்பாவியாக் கேட்டார். "அதான் மூணு தோசை வச்சேனே?"ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார்.

"ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ?

புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!"ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். "வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?" என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!

thanks http://hussainamma.blogspot.in/2010/12/blog-post_13.html