Friday, June 1, 2018

அனைவருக்கும் அல்குர்ஆன்

[ குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும்.   சந்தேகம் தேவையில்லை.   இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன்.   முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது; தக்வா.
உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு  அன்ஹு விளக்கினார்கள். வஸ்வஸா குழப்பம், தீய சிந்தனையில் விழாமல் நடைபோட வேண்டும்.
உங்களுக்கு எதிராக இண்டர்நெட் ஆபாசம், சேட்டிங், நிர்வாணம் பாவங்களிலிருந்து தப்பிப்பது தக்வா ஆகும்.  ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளிவருகிறது. நடனம் ஆடினால் உடல் வலிமை பெறும். உலகமக்களின் துனியா விரும்பிகளின் நோக்கம். நாங்கள் கெட்டுப் போய்விட்டோம். நீங்களும் பாழாய் போங்கள். மேற்கத்திய கலாச்சாரம் பரவினால் ஒழுக்கம் குறையும். காணாமல் போகும்.
உலக மதங்களின் அடிப்படை இறைவன், இறைநினைப்பு, ரஷ்யாவில் நாத்திகம் பேசினர். ஆனால் இப்போது இறைவனை ஒப்புக் கொள்கின்றனர். சமுதாயம் சீரழிந்த பின்னர் ‘‘அல்லாஹ்’’ நினைவு வருகிறது.]
      அல்குர்ஆன் அனைவருக்கும்!     
பகரா சூரா ஐந்து வசனங்கள். மூஃமீன் மாடல், இறை விசுவாசியின் முன் மாதிரி கூறப்பட்டுள்ளது. முதல் வசனத்தில் முழு அடிப்படை தரப்படுகிறது. இது எப்படிப்பட்ட வேதம். சந்தேகத்துக்குரியதல்ல. பிற வேதங்கள் குறித்த சந்தேகம் எழக்கூடும். திருப்தி, நிம்மதி மூஃமின்களுக்கு கிடைக்கிறது. வேறு மதத்தவருக்கு கிடைப்பதில்லை. வானத்தின் கீழ் ஒரு வேதம் உள்ளது. அதில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை. அதுதான் குர்ஆன். பரிசுத்தமான வேதம்.
இறைவனின் இரு பெரும் நிஃமத் அருட்கொடை 1) நபிகளார் பூமிக்கு அருளப்பட்டது. அவருடைய பரக்கத், ரஹ்மத் கிடைத்தது. 2. இறைவேதம். இன்னுமொரு நிஃமத் இரண்டு நிஃமத்துகளுடன் ஒப்பிடும்போது பிற அருட்கொடைகள் பொருளற்றவை. மதிப்பற்றவை. நிச்சயமாக இன்ஜீல் இறைவன் அருளியதாகும். தவ்ராத், சபூர் இறைவன் வழங்கிய வேதங்கள். முஸ்லிம் இறைவனை நம்புகிறார். இறைத்தூதர்களை நம்புகிறார். மறுமை நாளை நம்புகிறார். கிதாபுகளை நம்புகிறார். லாபம், நட்டம் தரும்விதி, தலையெழுத்து.
இறைவனே விதியை தீர்மானிக்கிறான். இஸ்லாத்தின் மைய அச்சு, ஐந்து அம்சங்களில் இழையோடுகிறது. குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும். அதனால் முதல் வசனம் வரையறுத்துவிடுகிறது. சந்தேகம் தேவையில்லை. இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன். இன்னுமொரு இடத்தில், ‘‘மனிதர்களின் வழிகாட்டி’’ கருத்து வருகிறது. அனைவருக்குமான வழி இருந்தாலும், முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது. தக்வா விளக்கம் கவனத்துக்குரியது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு அன்ஹு விளக்கினார். வஸ்வஸா குழப்பம், தீய சிந்தனையில் விழாமல் நடைபோட வேண்டும்.
உங்களுக்கு எதிராக இண்டர்நெட் ஆபாசம், சேட்டிங், நிர்வாணம் பாவங்களிலிருந்து தப்பிப்பது தக்வா ஆகும். ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளிவருகிறது. நடனம் ஆடினால் உடல் வலிமை பெறும். உலகமக்களின் துனியா விரும்பிகளின் நோக்கம். நாங்கள் கெட்டுப் போய்விட்டோம். நீங்களும் பாழாய் போங்கள். புஷ் ஒருமுறை கூறினார் முஸ்லிம்கள் நடனமாடுவதில்லை. மது அருந்துவதில்லை. ஆகையால் தீவிரவாதத்தின் பக்கம் விரைகின்றனர்.
ஒபாமா ஜனாதிபதியானதும் செய்த முதல் காரியம், உலக மக்கள் முன் மனைவியுடன் பகிரங்கமாக நடனமாடினார். அமெரிக்க கலாச்சாரம் இதுதான். நண்பர் ஒருவர் எனக்கு விருந்தளித்தார். மனைவியுடன் சகஜமாக உபசரித்தார். கோஷா, பர்தா, தடுப்பு இல்லை. மிகவும் தவறான நடவடிக்கை. பாவகாரியம். கணவன் மனைவி அன்னியோனியம் அளவுக்குள் நடக்கலாம். வெளி உலகில் சமுதாய ஒழுக்க வரம்புகளை கடைப்பிடித்த ஆகணும்.
மேற்கத்திய கலாச்சாரம் பரவினால் ஒழுக்கம் குறையும். காணாமல் போகும். நபித்தோழர் கையில் குங்குமப்பூ சாயம் நிறம் கண்ட நபிகளார் திருமணம் நடைபெற்ற விபரத்தை கேட்டறிந்தார். நபிகளாரின் நாட்களில் திருமணம் மிக இயல்பாக நடைபெற்றது. நபியை அழைக்காமல் திருமணம் என்றாலும் நபிகளார் வருந்தவில்லை. வலிமா எப்போது? வலிய கேட்டறிந்தார் நபிகளார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமண அழைப்பு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
டெலிபோன் அழைப்பு ஏற்கலாம். நேரில் வர நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் கண்முன் நபிகளாரின் முன்னுதாரண வாழக்கை மட்டுமே நிற்க வேண்டும். உலகில் நிகழும் கீழ்த்தர மாற்றங்கள் தேவையில்லை. ‘‘துஆவுக்காக, குத்பா ஓத என்னை அழைத்திருக்கலாம்.’‘ நபிகளாரின் விழைவல்ல. வற்புறுத்தவில்லை. இன்றைய நாட்களில் இல்ம் கல்வி அதிகம். ஆனால் சகிப்புத்தன்மை ஹில்ம் குறைந்துள்ளது. சின்னஞ்சிறிய அசௌகரியங்களை பொறுத்துக் கொண்டால், உங்களின் மதிப்பு உயரும். தரஜா அதிகமாகும். பகல் வேலை செய்வதற்கு. இரவில் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். இறைநியதி. ஆனால் கம்பெனிகள் மூன்று ஷிப்டுகளில் பணிபுரிகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், ‘‘இஷாவுக்கு பிறகு பேசாதீர்கள். ஆனால், இரவு முழுவதும் இப்போது பகல் போல் மாற்றிவிட்டனர். குர்ஆன், ஹதீஸ் கூறுவதற்கு மாற்றமான வாழ்க்கைச் சூழல். குர்ஆன் மனப்பாடம் செய்வதற்கு மட்டுமல்ல. பின்பற்றுவதற்குரியது. வெற்றி பெறும் வழக்கறிஞர் அடிக்கடி சட்ட புத்தகத்தை புரட்டுவார். சட்ட விதிகள் நுணி நாக்கில், நினைவில் இருந்தால் வெற்றி வரும். குர்ஆன் படிக்காத முஸ்லிம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சில வசனங்களை தினமும் படிக்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் கட்டளைகள் நெஞ்சில் தங்கும். அமல் வரும். திக்ரு செய்யும் முஸ்லிம் லஞ்சம் வாங்க மாட்டார்.
தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கட்டுப்பாடு உள்ளது. தரீக்கத் ஜமாத்திடம் கண்டிப்பு, கட்டுப்பாடு இல்லை. பயான் கேட்போர் பேனா, குறிப்பு ஏடு கொண்டு வந்து முக்கிய தகவலை எழுதவேண்டும். மாற்றம் கொண்டு வர பணம் தேவையில்லை. அக்லாக் முக்கியம். நபிகளார் வசம் பணமில்லை. தனி மனிதர். நபிகளார் உஹது மலையை தங்கமாக மாற்றும் வல்லமையை பெற்றிருந்தார். தங்கப் பாளம் அவரிடம் இல்லை. சகிப்புத்தன்மை, ஒழுக்கம், முயற்சியின் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். பணம் முன் வைத்து பிரச்சாரம் நடைபெறவில்லை. மிஸ்கீன்கள் மத்தியில் வாழ ஆசைப்படுகிறேன். மஹ்ஷரில் ஏழை மத்தியில் எழுப்பப்பட ஆசைப்படுகிறேன். எப்போதும் ‘‘தவ்லத்’’ செல்வத்தை விரும்பியதேயில்லை.
இறைவன் கேட்டான். நுபுவ்வத் மற்றும் செல்வம் வேண்டுமா. நுபுவ்வத் மற்றும் ஏழ்மை வேண்டுமா? நபிகளார் இறை தூதுத்துவத்துடன் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார். பணம், வலிமை இரண்டைக் கொண்டும் இஸ்லாம் பரவவில்லை. நபிகளார் மக்காவில் ஆயுத வலிமையில் இருந்ததேயில்லை. மதத்தை, நபிகளார் ஒழுக்கம் ‘‘அக்லாக்’’ பரப்பியது. பணம் உதவவில்லை.
ஹமீதுல்லாஹ் தன்னந்தனியே ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்று பிரான்ஸ் நாட்டில் இஸ்லாத்தை பரப்பினார். 15 மொழிகளில் புலமை பெற்றார். கைர உம்மத் பணியை முஸ்லிம்கள் ஆற்றவில்லை.
சங்கராச்சாரியார் ஒருமுறை கூறினார் ''வேதத்தில் உள்ள கருத்துக்கள் குர்ஆனில் ஒத்து உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் குர்ஆனை பரப்பவில்லை. கடைப்பிடிக்கவில்லை.'' மனிதன் அறிவு, அனுபவம் மூலம் அனைத்தையும் உணர முடியாது. நபிகளார் வருகையின் நோக்கம் ‘‘இபாதத்’’ உணர்த்துவதாகும்.
உலக மதங்களின் அடிப்படை இறைவன், இறைநினைப்பு, ரஷ்யாவில் நாத்திகம் பேசினர். ஆனால் இப்போது இறைவனை ஒப்புக் கொள்கின்றனர். சமுதாயம் சீரழிந்த பின்னர் ‘‘அல்லாஹ்’’ நினைவு வருகிறது. அடிபட்ட பிறகு மக்களுக்கு புத்தி வரும். முஸ்லிம் மதத்தில் பிறக்காதவர், இஸ்லாத்தை தழுவினால் ஏராளமான சிரமம், சவால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏழு மாதங்களில் குழந்தை பிறந்தால் ‘‘இன்கு பேஷன்’’ அறையில் பாதுகாக்க வேண்டும். இறை சட்டத்தை மாற்ற இயலாது. அனைவரும் பரீட்சை மண்டபத்தில் உள்ளோம். சிலருக்கு பணம் தராமல் வறுமையில் சோதிக்கிறான். அனைவரும் இறைவனால் சோதிக்கப்படுகின்றனர்.
எழுதிவையுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் அபூஷா (ரலி) நினைவு ஆற்றல் குறைந்தவர். நான் கூறுவதை எழுதி வையுங்கள். அவருக்கு பயன்படும். இன்னொரு முறை நபிகளார், ‘‘வலது கையை உபயோகிப்பீர். (எழுதி வைக்கவும் இதன் பொருள்) ஞானி ஒருவர் கூறுகிறார் - தோல்விகள் எனக்கு இறைவனை அதிகம் நினைவுபடுத்தின. யாரிடம் வாக்குறுதியளித்தாலும் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்.
குகைத் தோழர் குறித்து நபிகளாரிடம் கேட்டதற்கு ‘‘நாளை கூறுகிறேன்’’ நபிகளார் சட்டென்று பதிலளித்தார். நீண்ட நாட்கள் வஹீ வரவில்லை. இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் உத்தரவிட்டான். மாஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் மொழிவது இபாதத்.
நபிகளார் யாரை அழைத்தாலும் பெயர் கூறி அழைப்பார். அவர்களே இவர்களே மொட்டையாக விளிக்கமாட்டார். யாரிடமாவது கை கொடுத்தால் முழுமையாக கொடுங்கள். பற்றிப் பிடியுங்கள். கை குலுக்கணும். இருவருடைய பாவங்களும் மன்னிக்கப்படும். இலையுதிர் கால நிலையில் உதிர்ந்துவிடும். இலை கொட்டுவது போல பாவங்கள் கொட்டிவிடும். வெள்ளையர் கை குலுக்கி மகிழ்கின்றனர்.
பிராக்டிகல் விஷயங்களை நபிகளார் கற்றுத் தந்தார். ஆணவம் வேண்டாம். சில விஷயங்கள் எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியாது. சில ஞானம் அனுபவம் உமக்கு தெரியும். எனக்கு பழக்கமில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வளத்தை தந்துள்ளான். ஒரு நாட்டில் மனித வளம், இன்னொரு நாட்டில் பெட்ரோல், பிறிதொரு நாட்டில் தொழில் நுட்பம் உள்ளது. பகிர்ந்துக் கொள்ளுமாறு குர்ஆன் வலியுறுத்துகிறது.
சவூதியில் கஃபத்துல்லா இருக்கிறது. பெட்ரோல் உண்டு. பெப்சி ஒரு ரியால். குடிநீர் இல்லை. தக்கன் பூமி நீரை குடித்தால் முகம் பளபளக்கும். அல்லாஹ் இந்த நிஃமத்தை ஹைதராபாத் வாசிகளுக்கு வழங்கியுள்ளான். குர்ஆனை பின்பற்றுவோர் உயர் மனிதர்கள். அவுலியாக்கள். இந்து, கிருத்தவ, யூத மக்களை இறைவனின் படைப்பாக கருதவேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். மற்றவரை நம்மைவிட உயர்வாக கருதுவது ஞானிகளின் பழக்கம். பிறர் உங்களின் நடத்தையை மதித்தால் போதும். சுயபெருமை வேண்டாம். குர்ஆன் படிப்பது ஷைத்தானுக்கு பிடிக்காது.
(ஹைதராபாத் டோலி சவுக்கி, குர்ஆன் ஃபவுன்டேஷன் நிகழ்ச்சியில் முஹம்மது முஸ்தபா ஷரீப் நக்ஷபந்தி உரை.)
-தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::