Wednesday, April 13, 2011

அரவானிகள்

மூமூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3
மருத்துவ அறிவியல் இந்த பிறவிக்கோளாறுகளை intersex - ஆகத்தான் பார்த்தது. ஒருபோதும் thirdsex ஆக வகைப்படுத்தவில்லை. விஷயத்தை அறிந்து விட்டால், முயற்சி செய்து ஆண்/பெண் இரண்டில் எந்த பாலினத்துக்கு மாற்றுவது சரியானதோ அதையே அக்குழந்தைக்கு பிறந்ததுமோ சிறிது காலம் கழித்தோ மருத்துவம் செய்தும் விடுகிறது. பெற்றோரும் அதையே விரும்புகின்றனர். எந்த ஒரு பெற்றோர்தான் தங்களுக்கு 'இடைப்பாலின' குழந்தை பிறந்திருப்பதை விரும்புவர்? ஆனால் இப்போது, //The Intersex Society of North America and intersex activists have moved to eliminate the term "intersex" in medical usage, replacing it with "disorders of sex development" (DSD) in order to avoid conflating anatomy with identity.//--என்று மருத்துவ அறிவியல் உலகமே intersex என்ற பதத்தையும் ஒழித்து "disorders of sex development" (DSD) என்று மாறிவிட்டது. ஒருவித transition stage தான் இடைப்பாலினம். இதனால்தான் transgender என்ற பதம் கூட உருவாகியது. ஆனால், gender வேறு sex வேறு. இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். சரி, அதெப்படி 'இடைப்பாலினம்' பிறக்கிறது..? முந்தைய பதிவுகளில் மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல், உளவியல் பால் (Psychological Sex) அமைந்ததை கண்டோம். இங்கே மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல், இன உறுப்புகள் பால் (Gonadal Sex)-ல் ஏற்படும் இன உறுப்புக்கள் குளறுபடியால் புறத்தோற்ற பால் (Phenotype Sex) -ல் மாற்றம் உண்டாகிறவர்களை பற்றி பார்க்கலாம். இங்கே ஏற்படும் குளறுபடிகளுக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். இந்த குளறுபடிகள் பாலின உறுப்புக்களிலும் இனப்பெருக்க உறுப்புகளிலும் தோன்றுவதால் இடைப்பாலினம் போன்று காட்சி தருகிறது. இதுவும் குறைபாடுள்ள இருவகை பாலினம்தான் என மேலும் அறியும்போது விளங்கலாம். XX ஆண்கள்..! இவர்கள்தான் இந்த பதிவின் இரண்டில் ஒரு நாயகர்கள். XX கரு என்றாலே, அதில் Y குரோமோசோம் இல்லாததால் பெண்ணாகத்தான் கரு உருவாகும் என்று பார்த்தோம் இல்லையா? அதெப்படி "XX-ஆண்கள்" உண்டாக முடியும்? இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் (sperm) X மற்றும் Y ஆகவும், பெண்களில் (egg) இரண்டு தனித்தனி X களாகவும், அளவிலும் பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும் என்று பார்த்தோம் அல்லவா? இங்கே, ‘முதல் பதிவு குளறுபடி’ ஏதும் நடக்காமல் மிகச்சரியாகவே பிரிந்து-சேர்தல் நடக்கிறது. அதாவது XX என்று இணைந்து கருவாகி விடுகிறது. ஆனால், இந்த Y சும்மா போகாமல், தன் 'SRY ஜீன்' எனும் ஆண் குணத்தை X இடம் கொடுத்துவிட்டு போய்விடும். விளைவு? அந்த பெண் சிசு ஆணாக வளரும். ஆணுக்கான பாலுறுப்பு, இனப்பெருக்க உறுப்பு தோன்றும். புறத்தோற்றத்திலும் ஆணாகவே பிறக்கும். புறத்தோற்றத்தில் வாலிபத்தில் ஆணாகவே வளரும். ஆனால், திருமணத்துக்குப்பின்னர் 'குழந்தையின்மை ஏன்' என பரிசோதிக்கும்போதுதான் விஷயம் அவருக்கு தெரிய வரும். காரணம், இந்த "XX ஆண்க"ளில், Y குரோமொசோமே இல்லாததால் விந்தணு இருக்காது. ஆதலால், தன் குழந்தைக்கு தந்தையாக முடியாது. பயங்கர அதிர்ச்சியாக இருக்கும் இவ்வகை ஆண்களுக்கு. இதை ஜீரணிக்கவே முடியாது. 25,000-ல் ஒரு பெண் சிசு இப்படி ஆணாக பிறக்குமாம். இவர்களும் 'மூன்றாம் பாலினம்' அல்ல. அதை அவர்களிடம் சொன்னால் அவர்களே கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மரபணு பால் அடிப்படையில் மற்ற பால்கள் அமையாத குறைபாடுள்ளவர்கள். இவர்களை மரபனுபால் அடிப்படையில் 'பெண்கள்' என்று வகைப்படுத்தாமல் 'ஆண்கள்' என்று மருத்துவ அறிவியல் கூறுவதை முக்கியமாக இங்கே நாம் கவனிக்க வேண்டும். இவர்களின் குரோமோசோம் அடிப்படையை மாற்ற முடியாது. ஆனால், சமூகத்தில் இவர்கள் ஆண்கள்தான். XY பெண்கள்..! இவர்கள்தான் இந்த பதிவின் இரண்டாவது நாயகர்கள். XY கருவில் Y குரோமோசோம் இருப்பதால் ஆணாகத்தான் கரு உருவாகும் என்று பார்த்தோம் இல்லையா? அதெப்படி "XY-பெண்கள்" உண்டாக முடியும்? இங்கே XY கருதான் உண்டாகிறது. Y வந்துவிட்டதால் ஆண். எனவே, ஆண் பாலின உறுப்பான testicles உண்டாகும். அது சுரக்கும் ஆண்ட்ரோஜனை இந்த சிசுவின் திசுக்கள் கிரகித்து ஆணுக்குறிய பாலினப்பெருக்க உறுப்பு சில வாரங்களில் வளர்ச்சி அடைய ஆரம்பிக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால், சிசுவின் திசுக்கள் ஆண்ட்ரோஜனை உணர்ந்துகொள்ளவில்லை என்றால் இதுதான் Androgen Insensitivity Syndrome (AIS)..! 40,000 ஆண் குழந்தைக்கு ஒன்றில் இதுபோல நடக்குமாம். இப்படி ஆண் ஹார்மோன்களை சிசு சென்ஸ் பண்ணாவிட்டால் என்னாகும்? System Default Mode -க்கு automatic -ஆக தாவி விடும். அதுதான் Y mode-லிருந்து X mode..! அதாவது, "கரு ஒரு பெண் குழந்தை" என்று அதுவாகவே தீர்மானித்துக்கொண்டு, பெண் குழந்தைக்கான புற பாலினப்பெருக்க உறுப்புக்களையும் பெண்ணுக்கான புறத்தோற்ற பண்புகளையும் சிசு உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடும். ஆக, இப்படி ஒரு ஆண்(XY)குழந்தை முழுக்க முழுக்க பெண் குழந்தைக்கான வெளிப்புற தோற்றத்துடன் பிறக்கும். உருவான ஆணுக்கான testes வெளியே தெரியாதவாறு உடலுக்குள்ளே இருக்கும். உடலில் ஆன்ட்ரோஜென் மிகைத்து இருந்தாலும் உடல் அதை கிரகிக்காததால், ஆண் பாலினப்பெருக்க உறுப்போ, ஆணுக்கான புற மாற்றங்களான மீசை,தாடி,ஆண்குரல் என்று ஏதும் பின்னாளில் தோன்றாது. அதனால் இப்படி ஒரு குறை இருப்பது பெண் வளரும்போதும் அப்பெண் உட்பட யாருக்குமே தெரியாது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல் வைத்த பெயர் 'மூன்றாம் பாலினம்' அல்ல... "XY பெண்கள்"..! சரி, எப்போது தான் இவர்களுக்கு தங்களிப்பற்றிய உண்மை தெரிய வரும்? சராசரி பருவ வயதை தாண்டியும் பெண் பிள்ளை 'வயசுக்கு வராததால்' மருத்துவரிடம் அழைத்துச்செல்லும் போதுதான்..! அந்த பெண், ஓவரி இல்லாமல் எப்படி 'வயசுக்கு வர' முடியும்? ஸ்கேன் பண்ணிய டாக்டர் தயங்கி தயங்கி சொல்வார்... "அடிப்படையில் உங்கள் பெண் ஒரு ஆண்..!?" என்று. அதுவும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஒரு பெண் பிள்ளையை பற்றி இப்படி திடுமென கூறினால்..!? பாவம் பெற்றோர்கள்..! அதைவிட அவ்விஷயம் அப்பெண்ணுக்கு தெரியவரும்போது பைத்தியமே பிடித்து விடும்..! சில கிராமப்புற மருத்துவ வசதியற்ற மற்றும் இதுபற்றிய கல்வி அறிவற்ற குடும்பமாக இருந்தால், 'இன்னும் கொஞ்ச நாள்' என காத்திருப்பார்கள். இடைப்பட்ட காலத்தில் அப்பெண்கள் தங்கள் கடின பயிற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவற்றுடன் தங்கள் உடலில் உள்ள ஆண்ட்ரோஜென் (முக்கியமாய் டெஸ்ட்டோஸ்டிரோன்) உதவியால் பள்ளியில் நடக்கும் தடகளப்போட்டிகளில் முன்னணியில் வருவதுமுண்டு. அப்படியே முன்னேறி மாநில-இந்திய அளவில் முதலாவது வந்து, பின்னர், கத்தார்-தோஹாவில் 2006 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் ஓடிவந்து வெள்ளிப்பதக்கமும் வென்று விடக்கூடும். இப்போது, பதக்கம் வென்ற பின்னர் வந்து திடுமென GENDER TEST எடுத்து 'இவர் பெண் அல்ல; ஆண்' என்று கருதி, கஷ்டப்பட்டு அவர் வென்ற பதக்கத்தை அதை தந்தவர்களே அசிங்கமாய் பறித்துக்கொண்டால்? பதக்கம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால், தான் ஆணா பெண்ணா என்ற குழப்பத்தில் பித்து பிடித்து, தற்கொலை முயற்சி வரை கூட அந்த பெண்ணை போக வைக்குமே இச்செயல்..? அவர் எவ்வளோவோ சொல்லிப்பார்த்தார். சரியான புரிதல் மற்றும் தெளிவு இல்லாததால் அரசும் ஊடகங்களும் இதில் மூக்கை நுழைக்க வில்லை. இதேபோன்ற பிரச்சினை மூன்று ஆண்டுகள் கழித்து 2009-ல் உலக அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஒரு கருப்பின தென்ஆப்பிரிக்க விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த போது, அந்நாடு மட்டுமல்ல பல நாடுகள் அந்த வீராங்கனை பக்கம் நின்று குரல் கொடுத்தன. கடைசி ஆயுதமாய் 'இனவெறி' அஸ்திரத்தை தூக்கி போட்டவுடன்தான்... பதக்கத்தையும் பறிக்காமல் வீராங்கனையை தொடர்ந்து போட்டிகளில் ஓடவும் அனுமதிப்பதை தவிர IAAF-ஆல் வேறு ஒன்றும் பண்ண முடியவில்லை என்பது வரலாறு. பிரச்சினை எங்கு நிற்கிறது என்றால்... போட்டியை நடத்துபவர்கள் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்பே இந்த குரோமோசோம் சோதனையை செய்யாமல் இருப்பதும், எல்லாருக்கும் செய்யாமல் பதக்கம் வென்றவருக்கு மட்டும் செய்வதுதான். அதே நேரம், இதை பதக்க வாய்ப்பை இழந்தவர்கள் பார்வையிலிருந்து பார்த்தால் இந்த சோதனை நியாயமாகத்தான் தோன்றும். காரணம்... சாதாரண பெண்களாகிய அவர்கள் உடலில் இருப்பதை விட இவ்வகை 'XY பெண்களுக்கு' 3 மடங்கு டெஸ்ட்டோஸ்டிரோன் இருக்கும். இதுவே மற்ற பெண்களைவிட வேகமாய் ஓட இவர்களுக்கு அட்வான்டேஜ். இதை அவர்கள் உடம்பு சென்ஸ் பண்ணாவிட்டாலும் மருத்துவ சோதனை சென்ஸ் பண்ணும். ('ஸ்டீராய்ட் ஹார்மோன் ஊசி' போட்டுக்கொண்டு மற்ற ஆண்களைவிட வேகமாய் ஓடியதால், பின்னர் ஹார்மோன் சோதனையில் பிடிபட்டு தங்கப்பதக்கம் பறிக்கப்பட்ட பென்ஜான்சன் என்ற ஆண் தடகள ஓட்ட வீரர் நியாபகம் வருகிறதா..?) சரி... நம் தலைப்புக்குள் வருவோம்..! இன்றைய மருத்துவ அறிவியல் சிகிச்சையால் சரிப்படுத்த இயலா பாலின குறைபாடு உடைய... 'தான் ஆணா, பெண்ணா' என்ற குழப்பத்தில் நொந்து போன... அந்த XY பெண்கள் இருவருமே 'தாங்கள் பெண்கள்தான்' என்று தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தனர்..! (பாதிக்கப்பட்ட மனித மனதோடு இங்கே அறிவியல் ஒத்துப்போகிறது.. பாருங்கள்..!) இப்போது அந்த பெண்களிடம் போய்... "நீ பெண் அல்ல; 'மூன்றாம் பாலினம்'..!" என யாராவது சொன்னால்..? அவர்கள் "விட்ற அறையிலே, சொன்னவர்களின் செவிள், தவிள் வாசிக்கும்"...! இவர்களை பெண்களில், ‘பிறவிக்குறைபாடு உடைய பெண்களாக’ –‘மாற்றுத்திறனாளி’ போன்று எண்ணி கூடுதல் பரிவும் அன்பும் நிதி உதவியும் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் காட்டாமல், நம் இந்திய ரயில்வே இலாகா கூட ஓட்டப்பந்தய வீராங்கனையை பணியில் சேர்க்கவில்லை..! என்ன கொடுமை..! இதுதான் அநியாயம்..! இதற்கு எதிராக மனித உரிமை/ஊடகம்/அரசு/உச்ச நீதி மன்றம் என ஏதும் கடுமையாக குரல் கொடுக்க காணோம்..! மேலே சொல்லப்பட்டவை Complete AIS (CAIS) எனப்படும். பிறந்தவுடன் பார்த்து பெண் குழந்தை என்று அறிவிப்பதில் எந்த குழப்பமும் இருக்காது. ஆனால், இந்த sensitivity-யில் ஏழு நிலைகள் உள்ளன. இதில் ஆறும், ஏழும் (CAIS) - பெண் என்று அறிவிப்பதில் குழப்பம் இருக்காதாம். ஆனால் மீதி ஐந்தும் Partial AIS (PAIS) எனப்படும். ஆண்ட்ரோஜெனின் செறிவை கொண்டு, உணரும் வகையில் CAIS-ல் பெண்ணாக வெளிப்புற உருவம் கொண்ட குழந்தை... மீதமுள்ள ஐந்து நிலையிலும் ஆணா-பெண்ணா என பார்வைக்கே குழப்பம் ஏற்படுத்திவிடும். அதாவது, PAIS குழந்தைக்கு உடலுக்கு உள்ளே ஆண் பாலின உறுப்பான testicles மட்டுமே இருந்தாலும் வெளியே இரண்டு பாலினப்பெருக்க உறுப்புக்களும் அமைந்து விடுவதும் உண்டு..!!! PAIS-ன் முதல் நிலை குழந்தை ஆணாகவே புறத்தோற்றத்தில் தெரிவதால், ஆணாகவே வளர்க்கப்படுவதும் உண்டாம். ஆனால், ஆண் பாலின உறுப்பான testicles உடலுக்குள்ளே இருப்பதால், உடல் சூட்டில் விந்தணு உற்பத்தி இராது. சரி… இப்படி ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது...? மருத்துவர்களும் பெற்றோரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எப்படி..? "Surgery is good at removing structures . . . it is much less useful and successful for creating structures." --என்ற மருத்துவ தத்துவப்படியும், இரு இனப்பெருக்க உறுப்புகளில் 'எது அக்குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கு சரியாக இருக்கும்' என சிந்தித்தும் ஒன்றை வைத்துவிட்டு மற்றதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடக்கூடும். சராசரியாக 40,000-ல் ஒன்று CAIS என்றால்... அதில் இதுபோன்ற PAIS ஏற்படுவதற்கு பத்தில் ஒன்றுதான் சாத்தியமாம்..! அதாவது 4,00,000 (நான்கு லட்சம்) குழந்தைகளில் ஒன்றுதான் இரு பாலினப்பெருக்க உறுப்புக்களுடன் பிறக்க சாத்தியமாம்..! எனக்கு வந்த பல (மட்டுறுத்தப்பட்ட - படாத) பின்னூட்டங்களில், பலர் இவர்கள்தான் 'அரவாணிகள்' என்றும், முதல் இரண்டு பதிவில் கூறப்பட்டவர்கள் எல்லாம் 'அரவாணிகள்' இல்லை என்றும் அடித்துக்கூறினர். இந்திய மக்கள்தொகை இன்றைக்கு 120 கோடி என்று கொண்டாலுமே, மேற்படி புள்ளிவிவரப்படி இவர்கள் மற்றும் இதைவிட அரிதான வேறு வெகுசில ( மருத்துவ சிகிச்சை கிடைக்காத CAIS female மற்றும் Hypospadias or Epispadias in male etc., ) "இடைப்பாலினத்தோர்" எல்லாரையும் ஓரணியில் சேர்த்தாலும், வெறும் சுமார் 8,000 பேர் மட்டுமே மொத்த இந்திய நாட்டில் இருக்க சாத்தியம். மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்கால சூழலில் இவர்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் அவரவர் வீட்டில் வளர்க்கப்படுவார்கள். ஆங்காங்கே குடும்பத்தாருடன் ஆணாகவோ பெண்ணாகவோ கவலையுடன் வாழ்கிறார்கள். 'மூன்றாம் பாலினமாக' ஓடிப்போக சாத்தியமே இல்லை. ஒருவேளை மருத்துவம் செய்துகொள்ளாமல் தப்பித்தோர் அல்லது மருத்துவம் செய்யாமல் பெற்றோர்களால் கைவிடப்பட்டோர் அல்லது எப்படியோ செய்தி கேள்விப்பட்டு, பிறந்த சில நாட்களிலேயே வீட்டுக்குள் புகுந்து பெற்றோரிடம் இருந்து 'இது எங்கள் இன குழந்தையாக்கும்' என்று கும்மியடித்து, வடஇந்திய ஹிஜ்ரா(அரவாணி)க்களால் பிடுங்கிச்செல்லப்பட்டோர் மூலமே சாத்தியம். (இங்கே அந்த பெற்றோரின் மனித உரிமைக்கு யாராவது குரல் கொடுங்களேன்...!) ஆதலால், இப்படிப்பட்டவர்கள் (intersex) தற்சமயம் ஒட்டு மொத்த இந்தியாவில் சுமார் 2000 பேர் கூட இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், நலவாரியம் அமைத்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இவர்கள் எண்ணிக்கை 80,000--மாம்..! சொல்வது யார்? 'Tamil Nadu Aravanis Association' என்ற அமைப்புதான்..! 'இவர்கள் எல்லாம் அரவாணிகள் இல்லை' என்று முதல் பதிவில் கோபமாய் திரும்பத்திரும்ப பின்னூட்டம் போட்டவர்களும், இரண்டாம் பதிவில் ''விபச்சாரத்துக்கும் ஓரினச்சேர்க்கைக்கும் அரவாணிகளுக்கும் சம்பந்தமே இல்லை--இரண்டு பாலினப்பெருக்க உறுப்புகளும் கொண்டோர் மட்டுமே மூன்றாம் பாலினத்தோர்-அரவாணிகள்.'' என ஆபாச வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டதால் மட்டுறுத்தப்பட்ட அனானிகளும் இனியாவது உண்மைகளை உணர்ந்துகொள்ளட்டும்... அவர்கள் அனைவருமே "disorders of sex development" (DSD) - பிறவிக்குறைபாடுடைய ஆணோ அல்லது பிறவிக்குறைபாடுடைய பெண்ணோ என்று..!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::