மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்5
இவர்களில்... பெரும்பான்மையினருக்கு பேச்சு, நடை, நடவடிக்கை, செயல், குரல், முகமாற்றம், மார்பக வளர்ச்சி போன்றவை அந்த ஆண் போன்றல்லாமல் பெண் போன்று தோற்றமளிக்க... அதனால், இவர்கள் பள்ளியில், வீதியில், உறவினர் மத்தியில், வீட்டில் என்று கேளிக்குள்ளாகுகிறார்கள். இது இவர்களை பொது வெளிச்சமூகத்திருந்து தூரமாய் தள்ளி வைக்கின்றது.
இவர்களில்
இன்னொரு சிறுபான்மை பிரிவினரான ஆண்போன்று தோற்றமளிக்கும் பெண்களின் நிலை
சற்று வித்தியாசமானது. இவர்கள் ஆண்போல நடை உடை பாவனைகளை
மாற்றிக்கொள்வதில்லை. அதேநேரம் பெற்றோர்களால் உடனடியாக கவனம்
செலுத்தப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும் பெண்களாகவே மீட்டெடுக்கப்படுகிறார்கள். இதையும் தாண்டி
இவர்களில் சிலருக்கு ஆண்களின் பேச்சு, நடை, நடவடிக்கை, செயல், கடின குரல்,
முகமுடி வளர்தல், மார்பக வளர்ச்சி இல்லாமை போன்றவை பெண் போன்றல்லாமல் ஆண்
போன்று தோற்றமளிக்கச்செய்ய... அதனால், இவர்கள் பள்ளியில், வீதியில்,
உறவினர் மத்தியில், வீட்டில் என்று கேளிக்குள்ளாகுகிறார்கள். இது இவர்களை
பொது வெளிச்சமூகத்திருந்து தூரமாய் தள்ளி வைக்கின்றது.
=>'இவர்களுக்கு' என்னதான் சரியான முடிவு?
பெற்றோர், ஆசிரியர் உட்பட எவரேனும் இது போன்றவர்களை கேலி பேசினால் தக்க தண்டனைகள் மூலம் இவர்கள் காக்கப்படல் வேண்டும். இவர்களின் சிகிச்சைக்கு அரசே செலவு செய்ய வேண்டும். அவர்கள் சிகிச்சை பெற்று வரும்போது, தங்களை எதிர் பாலினத்தோர் போல உடை, ஒப்பனை இட்டுக்கொண்டு வேறு ஏதும் பாலியல் இழிசெயல் புரியாமல் இருக்கும்போது, எவரேனும் இவர்களை வீட்டைவிட்டு துரத்துவார்களேயானால் இவர்களுக்கு அரசால் தக்க தண்டனைகள் அளிக்கப்படல் வேண்டும்.
//
According to the study, men’s sexual peak is at 22 at least in terms
of testosterone. After that, levels of the male hormone fall by around
one per cent a year, with the amount of bio-available testosterone
halving between the ages of 25 and 75, according to the study published
in The Independent. //
இன்னொரு முக்கியமான விஷயம். ஆயிரம் பொருத்தம் பார்த்திருந்தாலும்... மணமக்கள் இருவருக்கும் திருமணத்துக்கு முன் கட்டாயமாக 'முழு மருத்துவ பரிசோதனை' செய்யப்பட்டாக வேண்டும். 'இவர்கள் மருத்துவ ரீதியாக திருமணத்துக்கு தகுதியானவர்கள்' என்றால் மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்கப்படல் வேண்டும். இந்த 'மருத்துவப்பொருத்தத்தில்' பல குழப்பங்களுக்கு தீர்வு உள்ளது. சவூதி அரேபியாவில் பல வருடங்களாய் நடைமுறையில் உள்ள மிகக்கெடுபிடியான சட்டங்களுள் இதுவும் ஒன்று..! இதுபற்றி நம்மில் பலருக்கு தெரியாது. காரணம்: நல்ல விஷயங்கள் செய்தி விற்பனைக்கு ஏற்றது அல்ல....நன்றி - ஊடகவியல்.
இவை என் சிந்தனைகள் மட்டுமே. மேலும், சிறப்பான யோசனைகளையும் சரியான மாற்றங்களையும் எதிர்கால சமூக நலன் கருதி, சகோதரர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவியுங்கள்.
கடந்த நான்கு பதிவுகள் மற்றும் அவற்றின் பின்னூட்டங்கள் வாயிலாக நாம் அறிந்து கொண்டவை :-
'மூன்றாம் பாலினம்' என்று
அரசாலும் சமூகத்தாலும் தவறாக அடையாளப்படுத்தப்படும் இந்த
'அரவாணிகள்'/'திருநங்கைகள்' என இப்படி தம்மைத்தாமே தவறாக அழைத்துக்கொள்ளும்
இந்த DSD- மாற்றுத்திறனாளிகளில், பெரும்பான்மையோர் xxy ஆண்கள்தான். மீதி
x0 பெண்கள் மற்றும் பாலினப்பெருக்க உறுப்புகளில் குழப்ப நிலையில் பிறந்து
அதற்கான சிகிச்சை பெறாமல் விடுபட்டவர்கள் மிகச்சிறுபான்மையோர்.
பருவ வயதிலே பொதுவாய் ஆண்
குழந்தைக்கு ஆண் ஹார்மோனும் பெண் குழந்தைக்கு பெண் ஹார்மோனும் மிகுதியாக
சுரந்து அது குழந்தைகளுக்கு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ புறத்தோற்றங்களை
தரும். ஆனால், பெரும்பாண்மையோரில்... பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்து முழு பாலின அடையாளம் பெறுவதில் பிந்தங்கியவர்களான ( "disorders of sex development" - DSD ) இவர்களுக்கு பெண்ணுக்கான ஹார்மோன் ஆணிடமும், ஆணுக்கான ஹார்மோன் பெண்ணிடமும் மிகைக்கும் குளறுபடி நடக்கிறது.
இவர்களில்... பெரும்பான்மையினருக்கு பேச்சு, நடை, நடவடிக்கை, செயல், குரல், முகமாற்றம், மார்பக வளர்ச்சி போன்றவை அந்த ஆண் போன்றல்லாமல் பெண் போன்று தோற்றமளிக்க... அதனால், இவர்கள் பள்ளியில், வீதியில், உறவினர் மத்தியில், வீட்டில் என்று கேளிக்குள்ளாகுகிறார்கள். இது இவர்களை பொது வெளிச்சமூகத்திருந்து தூரமாய் தள்ளி வைக்கின்றது.
தொடரும் தனிமைகள், கிண்டல்கள்
போன்றவை மனோதத்துவ ரீதியின்படி தன்னை போன்ற உணர்வுடையோர் பக்கம் இவர்களை
திருப்புகிறது. வீதியில் வலம்வரும் அதுபோன்ற சிலரை சந்தித்து அவர்கள் மூலம்
கருத்துப்பரிமாற்றம் பெற்று அவர்களை பார்த்து அவர்களைப்போலவே ஆடை,
அணிகலன், ஒப்பனை போன்றவற்றுக்கு மாறி கும்மி அடிக்கும்போதுதான் அவர்கள்
குடும்பத்தில் குழப்பம் வருகிறது. இதை எல்லா பெற்றோரும் எதிர்க்கிறார்கள்.
பள்ளி, நண்பர், உறவினர், வீதி, வீடு என மொத்த சமூகமும் எதிர்க்கிறது.
அதன் பிறகே, இவ்விரு பிரிவினரும், தன் உணர்சசிக்கு மட்டுமே மதிப்பளித்து தன்
குடும்பம், உறவு, கல்வி, வீடு, சொத்து இவைகளை உதறித்தள்ளி விட்டு
ஊரைவிட்டே ஓடி 'காணாமல் போய்', அரவாணிகள் குழுவில் கரைகிறார்கள். இங்கே
இவர்கள் படிப்பு தொலைகிறது. விடலைப்பருவத்தில் உடலில் வலிமை இல்லாமல்
இருப்பதால் இவர்களுக்கான வேலைவாய்ப்பு வீச்சு மிகவும் குறைவு. அப்படியே
அதற்குத்தக்க வேலைக்கு சென்றாலும் இவர்களின் நடை உடை பாவனைகளுக்காகவே --
அதற்குப்பின்னால் ஒளிந்திருக்கும் ஒழுக்கக் கேட்டிற்காகவுமே எவரும் வேலை
தருவதில்லை. (தருபவர் மிகவும் அபூர்வம்)
ஆனால்... பசிக்கிறது. பிச்சை
எடுக்க ஆரம்பிக்கிறார்கள். வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று
பார்த்தால்... இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்னர் இந்த சமூக அவலத்தின்
வெளிப்பாடாய் அவர்களுக்கு கிடைப்பதோ ஓரினச்சேர்க்கை அல்லது விபச்சாரம்
எனும் பாலியல் தொழில் மட்டுமே.
இவர்களில் முதல் பிரிவினரில் சில
ஆண்கள், இன்னும் ஒருபடி மேலே போய் தன் ஆண்பாலின அடையாளத்தை
அறுத்துக்கொள்கிறார்கள். பின்னர், தாங்கள் "முழுதாய் பெண்ணாக
மாறிவிட்டதாக" நினைத்துக்கொள்கிறார்கள்.
இப்படித்தான் இவர்கள் வாழ்க்கை சீரழிகிறது.
இப்படிப்பட்டவர்கள் தங்களின்
பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தங்கள் பால் உணர்ச்சிக்கு அதிக
முக்கியத்துவம் கொடுப்பதே அனைத்து குழப்பத்துக்கும் ஆரம்பம். தெளிவாக சொல்ல
வேண்டுமானால்... காலுக்குத்தக்கதாய் செருப்பு இல்லா விட்டால் செருப்பை பழுது பார்க்க வேண்டுமே அன்றி செருப்புக்கு ஏற்றவாறு காலை அறுக்கக்கூடாது. இதை இவர்கள் உணரவேண்டும். அல்லது... இதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கான கல்வி இவர்களுக்கு பள்ளியில் புகட்டப்படல் வேண்டும்.
பெற்றோர், ஆசிரியர் உட்பட எவரேனும் இது போன்றவர்களை கேலி பேசினால் தக்க தண்டனைகள் மூலம் இவர்கள் காக்கப்படல் வேண்டும். இவர்களின் சிகிச்சைக்கு அரசே செலவு செய்ய வேண்டும். அவர்கள் சிகிச்சை பெற்று வரும்போது, தங்களை எதிர் பாலினத்தோர் போல உடை, ஒப்பனை இட்டுக்கொண்டு வேறு ஏதும் பாலியல் இழிசெயல் புரியாமல் இருக்கும்போது, எவரேனும் இவர்களை வீட்டைவிட்டு துரத்துவார்களேயானால் இவர்களுக்கு அரசால் தக்க தண்டனைகள் அளிக்கப்படல் வேண்டும்.
இப்படி குடும்பம், சமூகம்
எல்லாம் மனம்மாறி இவர்களை அரவணைக்கும் போதும் இவர்கள் எதிர்பாலினம் போல ஆடை
அலங்கார ஒப்பனைகளை இட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் 'அவர்கள்
குழு'க்களுடன் இணைந்து இழிசெயல்கள் புரிவாரேயானால்... இவர்களால்
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படப்போகும் பின்னாளைய தீமையை எண்ணி
அரசே இவர்களை குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தி தக்க மனோதத்துவ மற்றும்
ஹார்மோன் சிகிச்சைகளையும் செய்து மீட்டெடுக்க வேண்டும். கைகழுவி நழுவும்
வேலை பார்க்கக்கூடாது.
இப்போது ஏற்கனவே வெளியில்
நிற்கும் 'அரவாணிகள்/திருநங்கை'களுக்கு சமூகத்தில் எவரும் வேலைவாய்ப்பு
அளிக்காத பட்சத்தில் அரசே அவர்களுக்கான தக்க வேலைவாய்ப்பை ('ஆண் அல்லது
பெண் மாற்றுத்திறனாளி' என கருதி) அளிக்க வேண்டும்.
இவர்கள்
போன்றோர் சமூகத்தில் செய்யும் தீமைகளுக்கு அரசு எந்நாளும் உடன்படக்கூடாது.
விபச்சாரத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் மிகக்கடுமையான தண்டனைகள்
அளிக்கப்பட்டு கொடுமையான பால்வினை நோய்களில் இருந்து நம் எதிர்கால சமூகம்
காக்கப்படல் வேண்டும்.
இவர்களும், ஆணாய் அல்லது பெண்ணாய்
இருந்து மாற்றுத்திறனாளியாய் உள்ஒதுக்கீடு பெறுதல் நலன் பயக்குமா அல்லது
'மூன்றாம் பாலினமாய்' இருந்து பல்வேறு புதுப்புது தொல்லைகளுக்கு ஆட்படுதல்
தேவையா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
பிறகு, நாம் இத்தொடரில் பார்த்த
xx ஆண்கள், xy பெண்கள் மற்றும் தெளிவான பாலின உறுப்புகள் இன்றி குழப்பமாய்
மிக அரிதாய் பிறந்தோருக்கும் மருத்துவ உதவி, வேலைவாய்ப்பு உதவி என்று அரசு
முழு ஆதரவாய் நின்று அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசச்செய்ய வேண்டும்.
இவர்கள் பொதுவாய் சமூகத்தில்
தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதால், அரசே தானாக முன்சென்று,
மகப்பேறு நிபுணர், ஆண்மைக்குறைவு நிபுணர் மற்றும் யுரோலோஜிஸ்ட் &
என்டோகிரைனாலஜிஸ்ட் போன்றோரை அணுகி இவர்கள் மூலம் தகவல் சேகரித்து
அவர்களுக்கு உதவலாம்.
பொதுவாய் கர்ப்பிணிகள், குழந்தையை
எதிர்நோக்கி இருக்கும் நிலையில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.
மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கும், கருக்கலைப்பிற்காகவும், கண்ட
மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. அடிக்கடி எக்ஸ்-ரே எடுக்கக்கூடாது.
கர்ப்பக்காலத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்துகளை சுயமாக
சாப்பிடக்கூடாது. சிலவகை மாத்திரைகளில் ஆண் ஹார்மோன் சக்தி உள்ளதால்,
கருவில் பெண் குழந்தைகள் உருவாகும் சமயம் அக்குழந்தைக்கு பாலியலில் தீய
விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
"பெண்கள் திருமண வயது 21" என்று
அரசு வலியுறுத்தும்போதும், நீதிமன்றமோ "21 வயது ஆண்களும் & 18 வயது
பெண்களும் மேஜர்-கலவிக்கு தயார்" என்று அனுமதி கொடுக்கும் போதும் ஆண்களும்
பெண்களும் திருமணத்தை 30 வயதிற்கு மேலே தள்ளிப்போடும்போது, பின்னர்
ஹார்மோன் சக்தி குறைந்து விடுவதால் xx/xy குரோமோசோம்கள் பிரியாமல்
பிறவிக்குறைபாடுகள் உடைய குழந்தைகள் பிறக்கின்றன என்கிறது மருத்துவ
அறிவியல்.
//
If women want families and room for manoeuvre they are unwise to wait
till their 30s. Delaying affects both partners, as semen counts
deteriorate gradually every year, and children of older have an
increased risk of several genetic disorders. //
நான் படிக்கும் போது எட்டு வயதில்
மூன்றாம் வகுப்பில்தான் A...B...C...D... பாடத்திட்டம். ஆனால், அது இன்று
மூன்று வயதுக்கான PKG பாடத்திட்டம். என்றாலும்... அப்போதும் இப்போதும் 20
வயதில்தான் பட்டப்படிப்பை முடிக்க வேண்டியுள்ளது. இது சரியா? அதாவது...
பள்ளியில் அரைத்தமாவையே மீண்டும் கல்லூரியில் அரைப்பதற்கு ஒரு முடிவு கட்ட
வேண்டும். இந்த பழைய புராதன மெக்காலே பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 18
வயதில் பட்டப்படிப்பு முடிந்துவிட வேண்டும். அதன்பிறகு தக்க வேலை
தேடிக்கொண்டு திருமணத்திற்கு தயார் ஆகிவிட வேண்டும்.
நீ.....................ண்ட கல்வி முறை மூலம் திருமணத்தில் ஏற்படும்
காலதாமதம்தான் இன்றைய பாலியல் குற்றங்கள் அனைத்துக்கும் மூலகாரணம் என்பதை
இனியாவது நாம் உணர்ந்தாக வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஆயிரம் பொருத்தம் பார்த்திருந்தாலும்... மணமக்கள் இருவருக்கும் திருமணத்துக்கு முன் கட்டாயமாக 'முழு மருத்துவ பரிசோதனை' செய்யப்பட்டாக வேண்டும். 'இவர்கள் மருத்துவ ரீதியாக திருமணத்துக்கு தகுதியானவர்கள்' என்றால் மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்கப்படல் வேண்டும். இந்த 'மருத்துவப்பொருத்தத்தில்' பல குழப்பங்களுக்கு தீர்வு உள்ளது. சவூதி அரேபியாவில் பல வருடங்களாய் நடைமுறையில் உள்ள மிகக்கெடுபிடியான சட்டங்களுள் இதுவும் ஒன்று..! இதுபற்றி நம்மில் பலருக்கு தெரியாது. காரணம்: நல்ல விஷயங்கள் செய்தி விற்பனைக்கு ஏற்றது அல்ல....நன்றி - ஊடகவியல்.
இவை என் சிந்தனைகள் மட்டுமே. மேலும், சிறப்பான யோசனைகளையும் சரியான மாற்றங்களையும் எதிர்கால சமூக நலன் கருதி, சகோதரர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவியுங்கள்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment