நான் இஸ்லாமிய அமைப்பில் இணைந்து குர் ஆன் மற்றும் ஹதிஸ்களை எஸ்.எம்.எஸ். மூலம் அழைப்புபனியை செய்து வந்த நேரம் பாபர் மஸ்ஜித் வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் இராமநாதபுரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொள்ள ஊரில் இருந்த நான் கொள்கை சகோக்களுடன் எனது கண்டத்தையும் பதிவு செய்ய சென்றேன்.
இராமநாதபுரத்தில் எந்த அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் பனிமனை முன்பு மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்ய அரசு அனுமதி வழங்குமாம் அங்கு நாங்கள் சென்ற அமைப்புக்கு பத்து மனிமுதல் ஒருமனிவரை அனுமதி வழங்கப்பட்டு இருந்த்தது அதற்க்குள்ளாகவே மிக மிக அமைதியுடன் கண்ட உரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
பின்புதான் தெரிந்தது அதே இடத்தில் வேறெரு இஸ்லாமிய அமைப்பும் இதே பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6 கண்டனத்தை பதிவு செய்ய நகரத்தின் வெழியே காத்திருப்பது தெரிந்தது அவர்களுக்கு கண்ட ஆர்பாட்டம் நேரம் ஒருமனியில் இருந்து மூன்றுமனிவரை என்பதை அறிந்து எனக்கு வேறொரு வேலையிருப்பதாக கூறி எனது கொள்கை சகோக்களிடம் விடை பெற்றேன்.
அதன் பின் வெழியே நின்றிருந்த அமைப்பினரை பார்க்கவும் அவர்களோடும் மீண்டும் எனது மறக்க முடியாத டிசம்பர் 6 பதிவு செய்ய சென்றேன் அதில் எனது முன்னால் சகோக்கள் பலரை சந்தித்தி விட்டு பழய நினைவுகளை பகிர்ந்து விட்டு அவர்களோடும் எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டு விடை பெற்று மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றேன்.
அங்கு எனக்கு தெரிந்த பத்திரிக்கை நன்பர்களும் உளவுத்துறை சகோ ஒருவரையும் சந்தித்து அவர்களோ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் பத்திரிக்கை சகோக்களிடம் கூட்டத்தை முழுவதுமாக ஒளிபரப்பு செய்யப்பாருங்கள் எங்கள் மக்களின் ஏக்கம் கொஞ்சமாவது அரசுக்கு தெரியட்டும் என்று கூறினேன் அவர்களும் சரி என கூறினார்கள்.
எங்கள் உரையாடலை உற்றுநோக்கி கொண்டிருந்த உளவுத்துறை சகோவிடமும் இதே கருத்தையே முன்வைத்தேன், அவரிடம் கேட்டேன் இங்கு இரண்டு அமைப்பினர் நடத்திய இந்த கண்டன ஆர்ப்பட்டங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார் அவர்கூறினார் நாங்கள் இவர்களுடைய வலைத்தளங்கள் பலவற்றை பார்க்கிறோம் அதில் இவர்கள் ஒரு அமைப்பை வசைபாடுவதும் அதற்க்கு இவர்கள் பதில் அளிப்பதும் இவர்கள் பெரிய சண்டைகாரர்கள் போல் தெரிகிறது என்றார் அதற்க்கு நான் இப்படி இருக்கும் இருவரையும் ஒரே இடத்தில் அனுமதி வழங்கி இருக்கிறீர்களே என்றேன் அதர்க்கு அவர் அது உண்மைதான் இவர்கள் இருவருமே ஒரே அமைப்பாக இருந்தவர்கள்தான் இவர்கள் இருவருமே ஒரே பிரச்சனைக்கவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் என்றார்.
நான் கேட்டேன் எதவது அசம்பாவிதம் வந்தால் என்ன செய்வது இதே வேறு கட்சிகளுக்கோ ஜாதிய அமைப்புகோ இவ்வாறு அனுமதி வழங்கினால் ரத்த ஆறே ஓடி இருக்குமே என்றேன் அது என்னமோ உண்மைதான் இவர்கள் சட்டையிட்டுக் கொள்ளக் கூடது எனும் கட்டளையைதான் குர் ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி உள்ளார்களே என்றார் நான் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டேன், (இங்கு குறிப்பிட வேண்டிய விசயம் எங்கள் உரையாடல் அவரவர் துறை சார்ந்து அல்ல).
இரண்டு அமைப்பினரும் மொத்தமாக ஆர்பாட்டதில் பங்கேற்று இருந்தால் அது மிக முக்கிய செய்தியாக அன்றை நாளிதழிலில் இடம் பிடித்திருக்கும் எனெனில் இரண்டு அமைப்பிலும் தல ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் இச்சம்பவம் சமுதாயத்திற்கும் படிப்பினையாக இருந்தாள் நலம்.
அடுதநாள் செய்திதாள்களில் இந்த அமைப்பு நடத்திய ஆர்பாட்டத்தை அந்த நடத்தியதாகவும் அந்த அமைப்பு நடத்தியதை இந்த அமைப்பு நடத்தியதாகவும் செய்தி வெளிட்டு இருந்தனர் தொலைகாட்சியும் அப்படித்தான் வேறு என்ன சொல்ல நாம எல்லோரும் ஒன்னுன்னு உலகம் சொல்லுது நீங்களும் நானும் ஒன்னுன்னு நாம சொல்ல முயற்ச்சிக்கலாம் எனது இந்த கட்டுரை ஜனவரி 2012 தவ்ஹீத் மாத இதழில் வெளியாகி உள்ளது
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment