Sunday, January 22, 2012

நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!?

ஓப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உங்கள் யாவர் மீதும் உண்டாகட்டும்.
ஓரு நாள் எனது கடைக்கு தினமும் பால் கொண்டுவந்து தரும் பால்காரர் ஒரு நாள் பால் போடவில்லை அவரிடம் பால் வாங்கும் கடைக்காரர்களிலேயே நான் தான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பால் வாங்குவேன் அன்று மாலை கடைக்கு வந்து பால் பணம் கேட்டார் என்ன சகோ இன்று நீங்கள்தான் பால் தர வில்லையே எனக்கூறினேன் உடனே  ஞாபகம் வந்த அவர் மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் கடைக்கு பால் வைக்க சுத்தமாக மறந்து விட்டேன் என்று அவரையே அவர் நொந்து கொண்டார் ”மாதம் ஒன்றுக்கு அறுபது ஆயிரம்வரை நீங்கள் வியாபாரம் செய்யும் கடையை எப்படி மறந்தீர்கள் என்று கேட்டேன் அதுதான் எனக்குப் புரியவில்லை என்றார்”

இந்த வலைப்பூவில் ஏற்கனவே முகத்தில் அறையும் கேள்விக் கணைகள்!? எனும் தலைப்பில் ஒரு காட்டுரை எழுதினேன் இரண்டு ஆயிரம் என்னிடம் வாங்கிய சகோவும் இதையேதான் கூறினார் நான் கொடுத்தேன கொடுக்க வில்லையா என்று எனக்கு ஞாபகம் இல்லை என்றார்,

இந்த மறந்து போகும் விசயத்தைப்பற்றியே எனது இந்தக் கட்டுரை.
இஸ்லாத்தில் இருந்து நாத்திகத்தை தழுவிய சில சகோக்களை சந்தித்தேன் ஏன் இஸ்லாத்தை விட்டு கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றீர்கள் என்றேன் இஸ்லாத்தில் உள்ள தீண்டாமைதான் என்றானர் என்ன சகோ இப்படி சொல்கிறீர்கள் என்றேன் நீங்கள் அறிய வில்லையா அல்லது அறிந்து கொண்டு தெரியாதது மாதிரி பேசுகிறீர்களா என்றனர் சொல்லுங்கள் சகோ எங்களிடம் என்ன தீண்டாமையை கண்டீர்கள் என்றேன்!

கவிஞர் இன்குலப், சல்மான் ரசீத் சல்மான் ருஸ்டியானது எல்லாம் தீண்டாமையின் வெளிப்படுதான் என்றனர், கவிஞர் இன்குலாப் ஒரு முடிதிருத்தும் நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றனர் இன்னும் கூட சில ஊர்களில் முஸ்லிம் நாவிதர் குடும்பங்களையும் பக்கீர்ஷா குடும்பத்தினரையும் தள்ளியே வைத்திருக்கிறார்கள்,.கிழக்கு தெரு மேற்க்கு தெரு எனப்பிரித்து  கிழக்கு தெரு காரர்கள் மேற்க்கு தெரு காரர்களுக்கு பெண் கொடுப்பதோ எடுப்பதோ இல்லையே என்றனர்?!
அது சரி சகோ இந்த மாதிரி முஸ்லிகளின் செயல்பாடுகள் எப்படி உங்களை கடவுள் மறுப்பு கொள்கைக்கு இட்டுச்சென்றது என்றேன் அவர்களிடம் சரியான பதில் இல்லை சரியான பதில் அளிக்கத் தெரியாதவர்களை உள்வாங்கியிருக்கும் கடவுள் மறுப்பு வாதம் கோள்விக்குறியதே என்பதை அவர்கள் அறிவார்கள்.

சென்னை சைதாபேட்டை சின்னமலை சர்ச் ஒன்றில் இஸ்லாத்தில் இருந்து கிருஸ்துவத்திற்க்கு மாறுபவர்களுக்காவே முஸ்லிம் கவுண்டர் ஒன்றை தனியாக திறந்திருக்கிறார்கள் எனக்கு தெரிந்த எங்கள் ஊர் சகோதரி ஒருவர் சின்னமலை சர்ச்சுக்கு செல்வதாக தகவல் கிடைத்து அவரிடம் ஏன் சர்ச்சுக்கு செல்கிறீர்கள் எனக்கேட்டேன் போலியோவால் பாதிக்கப்பட்ட தனது மகனின் கால்களில் தடவுவதற்க்ககா புனித என்னை தருகிறார்கள் அதை வாங்கித்தேய்து வருகிறேன் குணமாகி வருவதாக நிணைக்கிறேன் என்றார், அவருடன் இஸ்லாமிய கொள்கை குறித்து பேசினேன் நீன் நஜாத்காரன் அதனால் உன் பேச்சை நாங்கள் செவியேற்க்க மாட்டோம் என்றார்கள் அப்படியான யார் சொன்னால் கேட்பீர்கள் என்றேன் எங்கள் பிள்ளையும் ஆலிம்தான் அவன் சொல்லட்டும் கேட்கிறேன் என்றார்.

சொல்லக்கூடியவர்கள் சரியாக சொன்னார்கள என்பது இங்கு கேள்வியாகி விட்டது இஸ்லாத்தில் இருந்து கடவுள் மறுப்புக்கும் பல கடவுள் வழிபாட்டுக்கும் செல்லும் என் சமுக சொந்தங்களே உங்களுக்கு ஒரு ஞாபமூட்டல்

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் உமது இறைவன் வெளியாக்கி அவர்களை அவர்களுக்கு எதிராக சாட்சிகளாக்கினான் நான் உங்கள் இறைவன் அல்லவா? (என்று கேட்டான்) ”ஆம்! (இதற்க்கு) சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர் இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்’ என்றோ “இதற்க்கு முன் எங்களின் முன்னோற்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணார்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா? என்றோ மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்க்கா (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம், குர் ஆன் -7:173

மேலே திருக்குர் ஆன் கூறும் வசனம் கூறுகிறது அகிலத்து மாந்தர்கள் அனைவரிடமும் உங்களைப் படைத்தது யார் என அல்லாஹ் கேட்கிறான் எங்களைப் படைத்தது இறைவனாகிய நீதான் என்று அனைவரும் சாட்சி கூறுகிறோம் ஆனால் நாம் அனைவரும் மறந்து விட்டோம் உலக மக்கள் அனைவரும் சாட்சி கொடுத்த விசயம் நமக்கு ஏன் மறந்தது.

சாட்சி கொடுத்தது நமக்கு ஏன் நினைவிற்கு வரவில்லை நாம் சாட்சி கொடுத்தது உண்மைதான என்பதை சிறு பரிசோதனை மூலம் அறியலாம்
கடவுள் மறுப்புவாதி ஒருவர் யாரிடமாவது ஏமாந்து விடுகிறார் அல்லது ஏமாற்றபடுகிறார் அல்லது அடக்குமுறைக்கு ஆளாகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்போது அவர்கள் கூறுகிறார்கள் மேலே ஒருத்தன் இருக்கிறான் அவன் பார்த்துப்பான் என்றோ அல்லது உன் கடவுளுக்கு பயந்துகொள் என்றோதான் கூறுவார்கள் ஏதுமே இல்லமல் இருக்கும் இயற்க்கைக்கு பயந்துகொள் என்று கூறமாட்டார்கள் இவர்களுடைய ஆழ்மனதில் ஆதமுடைய மக்களின் முதுகுகளில் இருந்து வெளிபட்டு ஏக இறைவனிடம் என்றோ இவர்கள் கொடுத்த வாக்குறுதியின் வெளிப்பாடுதான் அது என்று விளங்குகிறது.

பல கடவுள் கொள்கைவாதி
அதுபோலவே பிறந்தது முதல் பல கடவுள் கொள்கையிலேயே போதிக்கப்பட்டு வளர்க்கப்படும் ஒருவனுக்கு ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்று அறியவாய்பே இல்லாத ஒருவனும் மேலே ஒருவன் இருக்கிறான் அவனுக்குப் பயந்துகொள் என்று கூறுகிறார்களே அது எப்படி அவர்களின் உள்ளங்களுக்குள் வந்தது இதுவும்கூட அவர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடுதான். எனெனில் மனிதன் எதையுமே சிலகாலங்களில் சீக்கிறமாக வாக்குறுதிகளை மறந்து விடுகிறான்!.

சில நாட்களுக்கு முன்பு என்னை ஒரு சகோதரி சந்தித்து நீயும் நானும் ஒன்றாக ஐந்தாம் வகுப்பில் படித்தோமே ஞாபகம் இருக்கிறதா என்றார் அவர் என்ன ஞாபகம் மூட்டியும் எனக்கு ஞாபகம் வரவில்லை அவரின் அழைபேசி என்னை வாங்கிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன் சில மாதங்கள் களித்து திண்டுகல் சென்றேன் அங்கு நான் படித்த பள்ளிக்கூடத்திற்க்கு சென்றேன் அங்கு வைத்துதான் எனக்கு ஞாபகம் வந்தது அன்று என்னிடம் பேசிய சகோதரி சாந்தி என்றும் அவரின் தாயரின் பெயர் மார்த்தாய் அவரின் சகோதரர்கள் பெயர்வரை ஞாபகம் வந்தது.

இதுபோல் இந்த கட்டுரை வாசிப்பவர்களில் பலருக்கோ சிலருக்கோ ஏற்ப்பட்டு இருக்கலாம், இதுபோல் உண்மையை கண்டரியும் சோதனை மூலமும் நம் ஆழ்மனதில் பொதிந்துள்ள விசயங்களை வெளிகொண்டு வரலாம். அது போல் நாம் இறைவனிடம் வாக்குறுதி அளித்த அந்த இடத்திற்க்கு நாம் சென்றால்,

கண்டிப்பாக ஒருநாள் செல்வோம் அப்போது ஞாபகம் நமக்கு வரும், நமது உள்ளுனர்வுக்கு மதிப்பளித்து கடவுள் மறுப்பில் இருந்தும் இணைவைப்பில் இருந்தும் விடுபட வேண்டும் இல்லை எனெனில் நமது வாக்குறுதி நமக்கு எதிராக திரும்பும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது குர் ஆனில் இறைவனின் கட்டளை.

பி.கு. எனது ஊர் பக்கத்தில் உள்ள ஊரில் முஸ்லிம் நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் படித்து பட்டம் வாங்கி ஆலிமாகவும் ஆகிவிட்டார் அவர் கடந்த ரமலானில் தனது பிறந்த ஊரில் இரவுத்தொழுகை வைக்க தனக்கு அனுமதியுங்கள் என்றார் ஊரின் ஜமாத் அவருக்கு அனுமதி மறுத்து விட்டது ஏன் இவருக்கு அனுமதி மறுத்து வேறு ஊரில் இருந்து ஆலிமை இறக்குமதி செய்து தொழவைக்கிறீர்கள் என்று அவ்வூர்வாசிகள் சிலரிடம் கேட்டேன் அவர் ஆலிமாகவே இருந்தாலும் அவர் பின் நின்று தொழமனம் ஒப்பவில்லை என்றனர்.

இணவெறியயையும் குலவெறியையும் குழிதோண்டி புதைத்த மார்க்கத்தில் இந்த கொடுமையை எதிர்த்து ஊர் ஊராக அந்த ஜமாத்தின் நிலையை நார்நாரக கிளித்து எரிந்திருக்க வேண்டும் அதை மார்க்கம் கற்ற ஆலிம்கள் செய்யவேண்டும் ஏனெனின் நீங்கள் சொன்னால்தான் அவர்கள் கேட்பார்கலாம் செய்யுங்கள் செய்ய வில்லை என்றால் கடவுள் மறுப்புக்கும் இணைவைப்புக்கும் அவர்கள் செல்வதற்க்கு நீங்கள் துணைபோய் விடுவீர்கள் கண்ணியம் கருதியே ஊர் பெயர் தவிர்த்து இருக்கிறேன்.
   

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::