Tuesday, January 24, 2012

அரசின் விஷம பிரச்சாரம்...!

ஜவாஹிருல்லாஹ்மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளாரும்,  இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய அரசு அணு உலையை எதிர்க்கும் மக்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் விஷம பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது சிறுபான்மையினருக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தி வரும் ஒரு போராகவே கருதுகிறேன். சிறுபான்மையினருக்கு எதிரான இந்த கொடும் போக்கின் விளைவுகளை காங்கிரஸ் சந்தித்தே தீர வேண்டும்.

கூடங்குளத்தில் நடைபெற்று வரும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இந்த நாட்டின் நலனில் உண்மையில் அக்கறைக் கொண்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டமாகும். இந்த போராட்டத்திற்கு கிறிஸ்த்தவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை அளித்து வருகின்றன என கூறுவது அபாண்டமாகும்.

தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் அம்புரோஸ் அவர்களின் மேற்பார்வையில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற வந்த நிதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த நவம்பரில் 32 வினாக்களை எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் உரிய காலகெடுவிற்குள் பதில்களை அனுப்பி வைத்தன. இதன் பிறகு கடந்த ஜனவரி 10 முதல் 19 வரை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்த தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதிகள் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக மத்திய அமைச்சர் நாரயணசாமி உட்பட காங்கிரஸ்காரர்களும் வேறு சில ஊடகவிகயலாளர்களும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது."
என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த 161 வெளிநாட்டு முஸ்லிம்களை, விசா விதிமுறைகளை மீறியதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை குடியகல்வு கட்டுப்பாடகம்  உத்தரவு பிரப்பித்துள்ளது.
இவர்களுக்கு வழங்கப் பட்ட விசா, சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்காக வழங்கப் படும் விசிட் விசா, ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி சுற்றுலா அல்லாத செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா கூறுகையில், "இவர்கள் வெவ்வேறு குழுக்களாக,  பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும், அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஏற்கெனவே அவர்களுக்கு அறிவித்துள்ளோம் " என அவர் தெரிவித்தார்.
ஆனால் மேல் மாகாண ஆளுநர் அலவி மவுலானா கருத்து தெரிவிக்கையில்,"இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும், இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள்" என கூறினார்.
இதற்க்கிடையே,தப்லீக் ஜமாஅத் அதிகாரிகள் கூறுகயில்,"இக் குழுவினர் தமது சொந்தப் பணத்தையே அவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவும்,  விசா ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியவில்லை எனவும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, சிரேஷ்ட அமைச்சரான ஏ.எச்.எம். பௌஸி விரைவில் சந்திப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்
நீதியின் குரல் மனித உரிமைகள் மற்றும் தகவலறியும் சட்டத்துக்கான பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தஞ்சாவூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில்,  இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பாஸ்கரன், தென்னிந்திய பஞ்சாயத்துராஜ் அமைப்பின் பொறுப்பாளர் விஜயதரணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) மாநிலத்  தலைவர் தாவூத் மியாகான், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பாக்கர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஹாஜாகனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இக்கருத்தரங்கில்,  மத்திய அரசு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை 4.5 சதமாக அறிவித்துள்ளது போதுமானது அல்ல. இதை நடைமுறைப்படுத்தாமல் மறு ஆய்வு செய்து 10 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கருத்தரங்குக்கு அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் புதுவை எஸ். சேகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜ மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர்  தங்கமாமணி, நகரத் தலைவர் கே.ஆர்.ஜி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட அமைப்பாளர் மு. ரங்கசாமி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
முஸ்லிம்களுக்கு 10 சதம் இட ஒதுக்கீடுநீதியின் குரல் மனித உரிமைகள் மற்றும் தகவலறியும் சட்டத்துக்கான பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தஞ்சாவூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::