Saturday, January 21, 2012

தர்ஹா வழிபாடு வழி கேடிலிருந்து? ஏகத்துவம் நோக்கி!



எங்கள் ஊர் அருகாமையில் ஒரு தர்ஹா நிறைய தர்ஹாக்கள் இருக்கிறது சொல்லும் விசயம் அனைத்திற்க்கும் பொருந்தும் என்பதால் பெயரை விட்டுவிடுவோம் கல்யாணத்திற்க்கு முன்பு மாப்பிள்ளை அங்கு வியாழன் இரவு சென்று தூங்குவார் கல்யாணம் நல்லபடியாக நடக்கனுமாம் கல்யாணத்திற்க்கு பின்பு அவரே மனைவியுடன் சென்று ஒரு இரவு தங்குவார் அங்கு ஒரு நல்ல குழந்தை தரவேண்டி தர்ஹாவில் அடக்கமாயிருக்கும் அவ்லியாவிடம் பிரார்த்திப்பார் அங்கிருக்கும் ஒரு விளக்கில் எரிந்து தீய்ந்து போன எண்ணை மிச்சமிருக்கும் அதை வாங்கி உள்ளங்கையில் அவரும் அவர்மனைவியும் சாப்பிடுவார்கள் பின்பு வீடு வந்து விடுவார்கள் இது ஒரு குழந்தைக்கான வேண்டுதல். 

வரும்போது அவ்லியாவிடம் எனக்கு ஒரு குழந்தையை தந்தாள் உங்கள் தர்ஹாவிற்க்கு என் குழந்தையுடன் வந்து கந்துரி ஆக்குகிறேன் என வேண்டுதல் வைப்பார் ஏன் இப்படி ஒரு வேண்டுதல் வைக்கிறீர்கள் எனகேட்டால் இவ்வாறு வேண்டுதல் வைத்துதான் நான் பொறந்தேன் என்பார்! அதுசரி கந்துரின்ன என்னன்னு கேட்கரிங்களா அது ஒன்னும்மில்லை ஒரு ஆட்டோடு அவரும் குழந்தையும் அவர்குடும்பத்தாரும் அந்த தர்ஹாவிற்க்கு கொண்டு சென்று ஆட்டை அறுத்து வேண்டுதல் நிறைவு செய்யும் நிகழ்ச்சிக்கு பெயர்தான் கந்துரி ஆக்குவது கந்துரி விழாவிற்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை இதுவேறு அது வேறு!.
 

ஒரு நாள் கந்துரி ஆக்குவதற்க்காக சென்ற எனது சிரிய தகப்பனார் அவசரமாக எனக்கு போன் செய்து வருமாறு கூறினார் எனது கொள்கையைப்பற்றி நன்கு அறிந்த அவர் நிச்சயம் சாப்பிட அழைக்க மாட்டார் என்பதால் அவசரம் கருதி அவர் சென்ற தர்ஹாவிற்க்கு சென்றேன் அங்கு சென்ற பார்க்கிறேன் நேர்ச்சை செய்யப்பட்ட ஆடு அறுபட்டு கிடக்கிறது கந்துரி ஆக்கி சாப்பிட சென்றவர்கள் முகத்தில் எல்லாம் மகிழ்ச்சியை காணவில்லை என்ன பிரச்சனை எனக்கேட்டேன்
 

இந்த தர்ஹாவில் யார் வந்து ஆடு அறுத்து கந்துரி ஆக்கினாலும் ஆட்டை அறுத்து சரிபாதியை தர்ஹா நிர்வாகிக்கு கொடுத்து விடவேண்டுமாம் இல்லை என்றால் நீங்கள் இங்கு கந்துரி ஆக்கவேண்டாமாம் என்கிறார்கள் என்ன செய்வது எனக்கேட்டார் அது சரி சரிபாதியை அவர்களுக்கு கொடுத்து விட்டால் கந்துரி ஆக்குவார்கள் தர்ஹாவின் அற்புதங்களை பேசிக்கொண்டே நன்றாக சாப்பிடாலம் எனவந்தவர்களுக்கு என்னத்தை கொடுப்பது உடனடியாக முடிவு எடுமனி இரண்டு ஆகிவிட்டது பசிவேறு வாட்டுகிறது என்றார் அறுத்த ஆட்டை வேனில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் சமைப்போம் அங்கு வந்து அனைவரும் சாப்பிலாம் என வந்து விட்டேன்

சிலர் பொருமையுடன் இருந்து சமைத்து சாப்பிட்டார்கள் சிலர் நாங்கள் உங்கள் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட வரவில்லை நார்ஸா சாப்பிடவே வந்தோம் என்றனர் (நார்ஸா என்றால் நேர்ச்சை செய்யப்பட உணவு) தர்ஹா வழிபாட்டை இன்றோடு தனது வாழ்வில் ஒளிப்பதாக அவர் சபதம் ஏற்றது மாபொரும் மகிள்ச்சியாக இருந்தது எனக்கு சாப்பிடமல் சென்ற சிலர் இவனே தர்ஹா நிர்வாகிகளிடம் பாதி ஆட்டை கேளுங்கள் என்று கூறியிருப்பான் என்றனர் (ஏன்ன நம்ம ஆக்டிவிட்டிஸ் அப்படி அதுக்கு நான் என்ன செய்ய).

குழந்தையை தருவது அவ்லியாவின் வேலையில்லை?
இறைவனிடம் (இறைவா) நீ எங்களுக்கு நல்ல (குழந்தையை) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர், அவர்களுக்கு நல்ல குழந்தையை நாம் கொடுத்ததும் அவர்களுக்கு நாம் கொடுத்ததில் அவர்களிருவரும் இணைகளை கற்ப்பிக்கின்றனர் இவர்கள் இணை வைப்பத்தை விட்டும் அல்லாஹ் தூயவன், அல் குர் ஆன் -7189,190,
 

மேலே திருக்குர் ஆன் வசனத்தை நாம் நன்கு ஆராய்வோமானல் தர்ஹாவில் சென்று குழந்தையை வேண்டுவதாக சொல்பவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று விளங்கும் ஏனெனில் அங்கத்தில் குறைகளற்ற குழந்தைகளை அல்லாஹ் வழங்கினால் மட்டுமே தர்ஹாவிற்க்கும் இன்னபிற வழிபாட்டுத்தளங்களுக்கும் குழந்தைகளை தூக்கிச்சென்று முடி இறக்குவது பெயர் சூட்டுவது கந்துரி ஆக்குவது நேர்ச்சைகளை நிறைவேற்றுவது என விழாக்கோலம் காணுகிறார்கள்.
 

நான் பார்த்தவரையில் அங்கத்தில் குறைவுடன் பிறக்கும் எந்த குழந்தையையும் எந்த வழிபாட்டுத்தளத்திற்க்கோ தர்ஹாக்களுக்கோ தூக்கிச்சென்று இந்த குழந்தை எங்களுக்குத் தந்தது இந்த அவ்லியாதான் இந்த சாமிதான் என்று கூறமாட்டார்கள் மாறாக இதை தந்த்தது அல்லாஹ் என்று கூறுவார்கள் ஏன் இவர்களுக்கு அல்லாஹ் அங்கத்தில் குறைகளற்ற நல்ல குழந்தைகளுக்காக நேர்ச்சையை நிறைவேற்றுபவர்கள் மாற்றுத்திறனாளியாக பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் நேர்ச்சையை நிறைவேற்ற மறுப்பது ஏன் இதில் இருந்து அறியலாம் அவர்கள் பொய் சொல்லுகிறார்கள்.
 

ஒருவனுக்கு கல்யாணம் ஆகிமூன்று வருடம் ஆகிவிட்டால் போதும் அவன் மீது அவனுக்கே தாம் ஒரு பிள்ளைக்கு தகப்பனாக முடியுமா என அவனை சந்தேகம் வாட்டுகிறது,
 

எனது சகோ ஒருவர் தனது பிள்ளையுடன் சென்னை மவுண்ரோடு தர்ஹாவிற்க்கும் கோவளத்திற்க்கும் வருகை தந்து வேண்டுதல் நிறைவேற்றினார் ஏன் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தீர்கள் பக்கத்தில்தான் பிரசித்தம் பெற்ற தர்ஹாவெல்லம் இருக்கிறதே என்றேன் அவர் கூறினார் அந்த தர்ஹாவில் எல்லாம் என் வேண்டுதல் செவியேற்க்கப்பட வில்லை அதனால்தான் இங்கு வருவதாக நேர்ச்சை செய்தேன் உடனே மகன் பிறந்து விட்டான் அதனால் இங்கு வந்தேன் என்றார் உண்மையை சொல்லுங்கள் தர்ஹாவிடம் மட்டும்தான் வேண்டுதல் வைத்தீர்களா எனக்கூறி பின் வரும் குர் ஆன் வசனம் கூறும் அடிப்படையில் வைத்தீர்களா எனக்கேட்டேன்.

மனிதனை ஒரு துன்பம் தீண்டுமேயானால் அவன் படுத்துக்கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்ற நிலையிலோ (அதனை நீக்கும்படி) நம்மிடம் பிரார்த்தனை செய்கிறான், ஆனால் அவனது துன்பத்தை நாம் நீக்கி விட்டல், தனக்கு ஏற்ப்பட்ட துன்பத்தை நீக்குவதற்க்காக நம்மை அவன் அழைக்காததுபோல் (அலச்சியமாக) சென்று விடுகிறான், குர் ஆன் -10:12, 39:8.
 

மனிதனை ஏதேனும் துன்பம் தீண்டுமேயானல் அவன் நம்மையே (உதவிக்கு) அழைக்கிறான், பிறகு நம்மிடம் இருந்து ஒரு பாக்கியத்தை வழங்கினால் இது எனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தியதால் தான் எனக்கு வழங்கப்பட்டது என்று கூறுகிறான், குர் ஆன் -39:40.
 

அவர் கூறினார் குர் ஆனில் இவ்வாறு இருப்பது எனக்கு தெரியாது ஆனல் தர்ஹாவில் வேண்டுதல் வைத்தாலும் நீங்கள் காட்டிய வசனத்தை போலவே என் உள்ளுனவு சொல்லிக்கொண்டேதான் இருந்தது என்றார் ஏன் நீங்கள் உங்கள் உள்ளுனர்வுக்கு மதிப்பளித்து படைத்தவனுக்கு நன்றி செலுத்தக்கூடாது என்றேன் அவர்கூறினார் வீட்டில் உள்ள பெரியவர்கள் பேச்சுக்கு மதிப்பளித்து வந்தேன் என்றார் பெரியவர்களின் பேச்சை விட கோடிமடங்கு மதிப்பளிக்க வேண்டியது அல்லாஹ்வின் கட்டளை எனகூறினேன்.
 

மேலும் அவர் கேட்டார் சரி குழந்தக்காக அல்லாஹ்விடம் எப்படிப் பிரார்த்திப்பது, உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உறவுக்காக) வந்து பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயறால் இறைவா! ஷைத்தானை எங்களிடம் இருந்து விலகி இருக்கச்செய் எங்களுக்கு நீ அளிக்கும் சந்த்ததிகளிடன் இருந்தும் ஷைத்தானை விலகி இருக்கச்செய் என்று பிரார்த்தனை செய்து பிறகு அவர்களுக்கு சந்ததி அளிக்கப்பட்டால் அந்த சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதரம் புகாரி-3271, 3283,
 

மேலும் அவர் கேட்டார் வீட்டில் உள்ள பெரியவர்கள் தர்ஹாவில் வேண்டுதல் வைக்கச்சொன்னால் என்ன பதில் அளிப்பது என்றார் பின் வரும் குர் ஆன் வசனத்தை பிரிண் செய்து கொடுத்தேன்.
 

எங்கள் முன்னோர்கள் வணங்கிவந்ததை விட்டு விட்டு அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்க்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா நீர் உண்மையாளாராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சசரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்’ என்று அவர்கள் கூறினர், குர் ஆன் -7:70
 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப்போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
அவர்களுக்கு நடக்கிற கால்கள்  உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள் என்று கூறுவீராக!, குர் ஆன் -7:194, 195 எதையும் தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள் அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர் (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள், 7:198,

அல்லாஹ்வே எனது பொருப்பாளன் அவனே நல்லோருக்கு பொருப்பேற்றுக் கொள்கிறான் என்று கூறுவீராக, குர் ஆன் -7:196.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::