Saturday, July 2, 2011

விபச்சாரத்தை தட்டிக்கேட்ட அப்துல்ரவூப் பொய் வழக்கில் கைது! அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மயிலாடுதுறையில் சாலைமறியல்!

மயிலாடுதுறை: முஸ்லிம் பெண்களை கடத்தி, அறையில் அடைத்து சித்ரவதை செய்த 16 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர்.


மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில், மன்சூர் கைலி கடை உள்ளது. இக்கடையின் மாடியில் சில பெண்களை அடைத்து வைத்து, ஒரு கும்பல் சித்ரவதை செய்வதாக, நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அக்கடையில் சோதனையிட்டனர். நான்கு பெண்கள், காயங்களுடன் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், குத்தாலம் தெற்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஹமீது, 30 என்பவர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், நேற்று முன்தினம் தன் வீட்டில் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற திருப்புவனம் பர்வின்பானு, 30, பட்டுக்கோட்டை அசரப்நிஷா, 35, திருவையாறு தில்சாத், 42, அம்பகரத்தூர் பரிதாபேகம் ஆகியோரை ஒரு கும்பல் கடத்திச் சென்று, மயிலாடுதுறை மன்சூர் கைலி கடை மாடியில் அடைத்து வைத்து, கம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.


ஹமீது கொடுத்த புகாரின்படி, போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிந்து, கைலி கடை உரிமையாளர் அப்துல் ரஹூப், திருமங்கலம் முகமது தாகா, மயிலாடுதுறை முகமது மன்சூர், நீடூர் முகமது ஆகிய ஐந்து பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி., (பொறுப்பு) அமல்ராஜ், நாகை எஸ்.பி., சந்தோஷ்குமார் மயிலாடுதுறையில் விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது இன்றைய தின மல(ர்) செய்தி...2/07/2011- திருச்சி பதிப்பு

 உண்மை செய்தி கீழே
       
 நீடூர்-நெய்வாசலைச் சார்ந்த அப்துல் ரவூப் மயிலாடுதுறையில் மன்சூர் கைலி சென்டர் என்கிற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது இளம் வயது முதல் சமுதாய பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் அப்துல் ரவூப் சமீபகாலமாக நமது சமுதாயத்தில் பெருகிவரும் விபச்சாரத்தை தடுத்து நிறுத்தும் முகமாக சமூக இளவல்களின் துணையோடு மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இத்தொழிலில் ஈடுபடும் பல பெண்களை கண்டித்து  திருத்தி அனுப்புவது வழக்கம். மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் ஓர் ஊரில் 4 முஸ்லிம் பெண்கள் ஒரு வீட்டில் விபச்சாரம் செய்வதாக கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு சென்று பலமுறை கண்டித்திருக்கிறார். இவரது கண்டிப்புகளை சற்றும் ஏற்றுக் கொள்ளாத விபச்சாரக் கும்பல் அப்துல் ரவூப் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் ரவூப் கடையின் பூட்டுகளை உடைத்து உள்ளே நழைய எத்தனித்த காவல் துறை சமுதாய இயக்கத்தினரால் கண்டிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.    
 இந்நிகழ்வைப் பயன்படுத்தி சற்றும் சம்மந்தமில்லாத மயிலாடுதுறை பழவியாபாரிகளில் BJP-RSS ஐச் சார்ந்தவர்கள் 100 பேர் கூடி முஸ்லிம்களுக்கு எதிராக (துலுக்கர்கள் ஒழிக! என்று)கோஷமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டார்கள். அத்தாக்குதலில் ஒரு முஸ்லிம் பெரியவர் தாக்கப்பட்டு அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
அப்துல் ரவூப் மீது 4 பிரிவுகளில் பொய் வழக்கு தொடர்ந்த காவல் துறை அவரை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறது. அப்துல் ரவூபுடன் 6 முஸ்லிம் சகோதரர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட அப்துல்ரவூபை காண முயன்ற 7 வக்கீல்களுக்கும் எளிதில் அனுமதி கிடைக்கவில்லை. மனித உரிமை கமிஷ்ன் தலையிட்டதும்தான் சந்திக்க முடிந்தது.
அப்துல் ரவூபை காவல்துறை கயவாளிகள் அடித்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரமான காயம் நீதிபதியிடம் உடனடியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையில் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள த.மு.மு.க, T.N.T.J, வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்கள், தலைவர்கள் சுமார் 500 பேர் இன்று(01-07-2011) ஜும்ஆவிற்குப்பின் மயிலாடுதுறையில் கூடி சாலைமறியலில் ஈடுபட்ட போது காவல் துறை சமாதானத்திற்கு வந்தது.

  1. முஸ்லிம் பெரியவரைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் காலிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
  2. காலிகளுக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும்  செயல்பட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  3. கைது செய்யப்பட்ட அப்துல்ரவூப் மற்றும் ஏனைய முஸ்லிம் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மயிலாடுதுறை சுற்றுவட்டார ஜமாஅத்கள் அனைத்தையும் ஒன்று கூட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் எச்சரிக்கப்பட்டது.
இயக்கங்களின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள்.
அப்துல் ரவூப் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்பும் வேலையில் காவல்துறையில் சிலரும், அப்துல் ரவூப் கடையை சுற்றிலும் உள்ள தள்ளுவண்டி பழ வியாபாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பின்னணியில் மயிலாடுதுறையில் முஸ்லிம்களின் பேராதரவுடன் நடத்தப்படும் ஜுவல்லரி உரிமையாளரும் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் ஊர்ஜிதமானால் சம்மந்தப்பட்ட ஜுவல்லரியை பகிஷ்கரிக்கும் முடிவை ஜமாஅத்கள் உடனடியாக எடுக்க வேண்டும்.





SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::