யார் யாருக்கோ கொடிபிடித்த நாம், நம் சகோதரனை மீட்க மேலப்பாளையத்தை திணற அடிப்போம் அன்பு சகோதரர்களே!!
உங்கள் பார்வை மேலப்பாளையம் நோக்கி திரும்பட்டும் எங்களோடு உங்கள் கரங்கள் இனையட்டுமே..நாதியற்றவர்கள? சிறைவாசிகள்….நாம் இருக்கிறோம் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.சிறைவாசிகளின் விடுதலைக்கான ஒன்று கூடலில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இணைவோம் இறைவன்னாடினால் நேரடி ஒளிபரப்பு நம்இணையதளத்தில் http://www.marhum-muslim.com/
தமிழக சிறைகளில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் அரசின் பாரபட்சப்போக்கால் சிறைப்பட்டிருக்கும் ஆயுள்சிறையாளிகள், இசுலாமிய சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக கடந்த மார்ச்முதல் எதிர்வரும்ஆகஸ்ட் வரையிலான தொடர்பிரச்சார பொதுக்கூட்டங்களை எமது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முன்னேடுத்து வருகிறது.பல மாநிலங்களில் ஆயுள்சிறைவாசிகளின் முன் விடுதலையில் எவ்வித பாரபட்சமும் இன்றி சிறைமீண்டு வருகிறார்கள், மதச்சார்பற்ற அனைத்து மக்களுக்கான அரசு என்றும் பெரியார் பிறந்த மண் என்று பீற்றிக்கொள்ளும் தமிழகத்தில் ஒரு பிரிவு மக்களை தொடர்ந்து பொதுச்சமுகத்திடம் இருந்து தனிமை படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அரசுகளும் ஊடகங்களும் தீவிரவாத மாய வலையில் வைத்திருக்கும் நிலையில் இவர்களுக்கான நியங்களை பொதுச்சமுகத்திடம் முறையிடுவதற்க்காக எங்கள் பயணம் தொடங்கியுள்ளது.
தண்டனை என்பது ஒரு மனிதனின் குற்ற நிகழ்விற்க்கு பகரமாக அளிக்கப்படுகிறது என்றால் அதற்க்கான கால வரையரைதான் என்ன?நீண்ட… முடிவில்ல சிறைவாசம் ஒருவரின் வாழ்வுமுறை அச்சிறைவாசத்தால் மாறி இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி தீர்மாணிக்கப்படுகிறது.சிறைப்பட்டதாலையே ஒரு மனிதன் இப்பரந்த சமுகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில்வைக்கப்படும் ஒரு அவல நிலை இச்சமுகத்தில் நிழவிவருகிறது.சிறையில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கான சமுகப்பொருப்புகளில் இருந்து,தன் குடும்ப பொருப்புகள் வரை அனைத்தும் நிறைந்தவனே. சிறையில் வாடி வரும் சிறைவாசிகளைப் பற்றி இச்சமுக சூழலில் யாரும் கவலைப்படுவதாக இல்லை.அதிலும் குறிப்பாக இசுலாமியர்கள்,தலீத்கள்,பழங்குடிகள்,நக்சல்பாரிகள் மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் சிறைப்பட்டால் அவர்களுக்கான நியாங்கள் கேட்க நாதியற்ற சூழலே நிழவிவருகிறது.
கோவையைப்போலவே இசுலாமிய மக்களுக்கு எதிரான அரசவன்முறையும், சங்பரிவார் கும்பல்களின் வெறியாட்டங்களுக்குஅட்பட்ட இன்னொரு ஊர் இருக்கிறது என்றால் அது திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஆகும் கோவையும் மேலப்பாளையமும் இரட்டை நகரங்கள் என்று கூறலாம் இசுலாமியர்களின் மீதான வண்மங்களினால் பாதிக்கப்பட்ட மேலப்பாளையம் இசுலாமிய சகோதரர்கள் பலபேர் பல்வேறு வழக்குகளில் ஆட்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அவதிப்பட்டனர் இன்றும் பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளார்கள்.சனநாயக வழியில் தங்களின் உரிமைகளையும், சங்பரிவார் கும்பல்களின் இசுலாமிய விரோதப்போக்கையும் எதிர்த்த மேலப்பாளையம் இசுலாமிய சகோதரர்களின் உரிமைகளுக்கான குரல் அடக்கி ஒடுக்கப்பட்டது.வீரம் விளைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பல களப்போராளிகள் விதைக்கப்பட்ட மண்.சங்கபரிவார் கும்பலின் சதிகளுக்கு எதிராக ஓயாமல் களமாடிய மாவீரன் இமாம் அலி களமாடிய மண்.ஆம் சகோதரர்களே…
போலீஸ் புலிகளால் போலி மோதலில் சதி செய்து துடி துடிக்க சுட்டும் தலையில் கல்லைப்போட்டும் கொல்லப்பட்ட மாவீரன் இமாம் அலிவிதைக்கப்பட்ட மண்….திருப்பூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக பற்றவைக்கப்பட்ட சிறு பொறி கோவையில் கணலாகி, குமாரபாளையத்தில்….இன்று வீரம் விதைக்கப்பட்ட மேலப்பாளையத்தில்….
இந் நிகழ்வு ஆட்சியாளர்களின் மனதை அசைத்து பார்க்கும் வகையில் மேலப்பாளையத்தில் பெரும் சீற்றமாக மாறட்டும்நியங்களை கேட்போம் வாருங்கள்
அரசியல் சிறைவாசிகளுக்காக,அவர்களின் விடுதலைக்காக அவர்களின் குடும்பத்திற்காக..மேலப்பாளையத்தில் கூடுவோம் வாருங்கள்…..வரும் ஜீன் 10
10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் வாடி வரும் .இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் செப்டம்பர்.15 அண்ணா பிறந்த நாளில் பாரபட்சம் இன்றி விடுதலை செய்யக்கோரி அரசின் கவண ஈர்ப்பு தொடர் பொதுக்கூட்டத்தின் மூன்றாம் நிகழ்வு….இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கதிற்கும் அன்பு சகோதரன் வக்கில் உமர்கயான் அழைக்கிறார் செல்வோமா?
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment