இஸ்லாம் உண்மையே!!!
[ குடும்பத்தார்கள் என்னுடைய
மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம்
கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ''இந்த உலகம் நமது
முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின்
மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும்.
(இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

''ட்ரூ கால்'' (http://islam.thetruecall.com) இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''
முஹம்மது யூஃஸுப்: அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.
AN EXCELLENT INTERVIEW
யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி
நான் முஸ்லிமானதை முதலில் என்
மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான்
செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி
போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால்
இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது.
இஸ்லாம் வன்முறையால் பரவாமல், இஸ்லாம் அன்பு மற்றும் பாசம் மூலமே
பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின்
எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.
ஒரு முஸ்லிமை
முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக
மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில்
கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு
எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால்
உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.
ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது.]
''ட்ரூ கால்'' (http://islam.thetruecall.com) இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''
உலகில் இஸ்லாம் தவறாக
விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும்
அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே
ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும்
வந்த வண்ணமாகவே இருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.
அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.
ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.
ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.
முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.
ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?
முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே
காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட
ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.
ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?
முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று
இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும்
பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும்
பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து
கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல
ஆரம்பித்தேன்.
ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?
முஹம்மது யூஃஸுப்: சிறு வயது முதலே எனது எல்லா
நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும்
முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த
உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது
முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின்
கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வழிகாட்டுதலான ''சுன்னா''வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின்
தள்ளப்பட்டுள்ளோம்.
ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை
முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த
அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல
வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும்
செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட 'தர்ஹா' வாசிகளே அதிகம்
என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை
தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான்
குறிப்பிடுகிறாரோ!)
ட்ரூ கால்: சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி...?
முஹம்மது யூஃஸுப்: அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில
ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின்
தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை.
அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான்
பார்த்தேன். அந்த நேரத்தில் ''ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக
சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு
யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 - 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால்
கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.
ட்ரூ கால்: இஸ்லாத்திற்கு
எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில்
தயக்கம் காட்டுகிறார்கள்... இல்லையா?
முஹம்மது யூஃஸுப்: ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல.
நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது அவர்களுடைய தவறு அல்ல இது நம்முடைய
தவறு தான என்று உறுதியாக சொல்லலாம்.. இது ஒரு இஸ்லாமிய நாடு.
(பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை
இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு
முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு
வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.
ட்ரூ கால்: இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?
முஹம்மது யூஃஸுப்: நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல்
விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை;
''இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி'' என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள்
முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை
ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் இறுதி நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது.
எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த 'அழைப்புப்பணி'யை செய்ய வேண்டியது நமது
கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை
அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம்.
அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே
செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம்.
நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை
எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.
ட்ரூ கால்: குழப்பங்கள், வேலை
நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள்
எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?
முஹம்மது யூஃஸுப்: நாம் அமைதியை பராமரிக்க வேண்டும்.
எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை
திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம்
அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய
வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி
செய்யத்தான் செய்வார்கள்.
ட்ரூ கால்: (இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?
என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை
தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன்
சிந்தித்தால் ''இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று
விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி
உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே
இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை
மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை
சொல்கிறாரோ!)
ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?
முஹம்மது யூஃஸுப்: நான் முஸ்லிமானதை முதலில் என்
மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான்
செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி
போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால்
இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும்
கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும்
பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது
அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.
ட்ரூ கால்: நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?முஹம்மது யூஃஸுப்: அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.
ட்ரூ கால்: நீங்கள் என்ன
ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம்
என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?
முஹம்மது யூஃஸுப்: ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக
மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல.
காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை
காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது.
குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால்
இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.
ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால்
ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான
காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி
என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் ''சுன்னா''வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது
கடிணமான காரியமல்ல.
ட்ரூ கால்: நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?
முஹம்மது யூஃஸுப்: ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது
இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின்
உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வழிமுறையான ''சுன்னா'' வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ
அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.
ட்ரூ கால்: உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?
முஹம்மது யூஃஸுப்: இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்;
எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில்
ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால்
வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின்
பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.
ட்ரூ கால்: உங்களின் பரபரப்பாக நேரத்தில் ''பேட்டி'' அளித்தமைக்கு மிக்க நன்றி.
முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا - Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment