Thursday, June 30, 2011

தூய்மை- இஸ்லாத்தை ஏற்றப்பெண்மணி!!!!!!!

ஸ்லாமிய தாக்கம்!!!!




உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்
லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார். ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’ என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.
‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.
‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.
‘இதென்ன வேடிக்கை! எனது ஆடையை நானே சுத்தம் செய்கிறேன் என்றால் எதற்காக உங்களிடம் அதை நான் தரவேண்டும்? உண்மையில் நான் உடுத்திய ஆடையை துவைக்காமல் அப்படியே தான் உங்களிடம் தருகிறேன்’ என்று எதார்த்த நிலையை அப்பெண்ணிடம் சொன்னார் மாணவர்.

இந்த பதில் அந்த ஆங்கிலப் பணிப்பெண்ணை வியப்பின் உச்சிக்கே இழுத்துச்சென்றது. ‘உண்மை நிலை நீங்கள் சொல்வது எனில் மற்ற மாணவர்களுடைய உள்ளாடையில் நான் காணும்; ஒருவித கறையும், துர்வாடையும் உங்களது ஆடையில் மட்டும் காண முடிவதில்லையே! ஏன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
அந்த மாணவர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக சொன்னார், ‘சகோதரியே! நான் ஒரு முஸ்லிம். எனது மார்க்கம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று என்னை பணிக்கின்றது. எனது ஆடையில் ஒரு துளி சிறுநீர் பட்டுவிட்டாலும் கூட அதை உடனே கழுகி சுத்தம் செய்யாத நிலையில் என் இறைவனை நான் வணங்க முடியாது. எனது ஆடையில் துர்வாடையோ, அசுத்தமோ காணப்படாமல், உடுத்தி களைந்த ஆடைகூட துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடைபோல் சுத்தமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!’ என்று விளக்கமளித்தார்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் அப்பெண், ‘இஸ்லாம் இவ்வளவு சிறிய விஷயத்தில் கூட கற்றுத்தருகிறதா?’ என்று ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினார்.
அப்பணிப்பெண்ணுக்கு அவ்வாலிபரின் பேச்சு பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உள்ளுணர்வையும் தட்டி எழுப்பியது. இதன்பின் அந்த ஆங்கிலப்பெண், அந்த முஸ்லிம் மாணவரின் எல்லா நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவ்வாலிபரின் எளிமை, தூய்மை, பத்தினித்தனம், கலாச்சாரம், வீணான பேச்சுக்களைவிட்டும் ஒதுங்கியிருக்கும் பண்பு இவையணைத்தும் அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் ஒளி குடியேறக் காரணமாயிற்று.
படிப்படியாக அவ்வாலிபரிடம் இஸ்லாத்தைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். இதனால் அப்பெண்ணின் உள்ளத்தில் உண்மையான ஈமானிய ஒளிக்கதிர் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.
இறுதியில் தனது குடும்ப அங்கத்தினர் பலருடன் இஸ்லாத்தின் அரவணைப்பில் வந்துவிட்டடார். (ஆதாரம்: ‘அத்தளாமுனில் இஸ்லாமி’ எனும் அரபி நாளேடு)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::