Monday, May 23, 2011

இறுக்கமான பர்தா தேவையா?

ர்தா!!!!




[ குர்ஆனில் சொன்னபடி நடக்கிறோம் என புர்காவை ஆபாசமாக அணிந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கண்ணியமாக நடந்து கொள்ளாத பெண்களுக்கு புர்கா கண்ணியமளிக்காது. அழகு மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, உடல் அங்கத்தை வெளிக்காட்டும் இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
இன்ன நிறம்தான் உடுத்த வேண்டும் என இஸ்லாம் கூறாத நிலையில் கருப்பு புர்காக்கள் அணியப்படுவது முஸ்லிம் கலாச்சாரமாக பரவி வருகிறது. ஆபாச உடையாக இன்று புர்கா மாறிவருகிறது. யாரோ விரித்த சதி வலையில் சமூகம் சிக்கிச் சீரழிகிறது.
புர்கா அணிந்தபடி நடுரோட்டில் ஆணுடன் மணிக்கணக்கில் பேசுவது. பொதுத்தொலைபேசியில் முகத்தை மூடிய புர்கா அணிந்தபடி 100 ரூபாய்க்கு தொடர் உரையாடல் நிகழ்த்துவது. பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த நிலையில் யாருக்காகவோ காத்திருப்பது. ஷாப்பிங்மால், தியேட்டர், வணிக வளாகங்களில் சுற்றித்திரிவதை கைவிடாத வரை புர்கா பெருமையளிக்க போவதில்லை.]
கோஷா முறை கடைப்பிடிக்கும் சில ஊர் முஸ்லிம்கள் தவிர, மற்ற பகுதி, ஊர் முஸ்லிம்களுக்கு 1970களில் கருப்பு புர்கா தெரியாது. சென்னை, திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் இன்னும் சில இடங்களில் வெள்ளைத் துப்பட்டி அணிவர். உடல் மேல் போர்த்தி தலைமேல் இட்டு பல்லில் கவ்விக் கொள்வர். கைகளில் பிடித்துக் கொள்வர். ஏழைகளுக்கு புர்காவாக, கபனுக்குப் பயன்படுத்தும் காடா, மல்துணிகள் பயன்பட்டன. வசதியுள்ள பெண்களுக்கு சிறு துளையுடன் எம்ராய்டரி செய்யப்பட்ட விலை உயர்ந்த துணிகள் பயன்பட்டன.
அன்றைய முஸ்லிம் சமூக ஏற்றத்தாழ்வை, வாழ்வியலை பெண்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை வைத்துக் கணிக்கலாம். ஆனால் அவ்வுடையில் ஆபாச மிருக்காது. தமிழகத்தின் உட்கிராமங்களில் இந்த துப்பட்டாவையும் அறிந்தவர்களில்லை அன்று. அவர்களுக்குத் தெரிந்தது சேலை, கைலி, தாவணி, இடுப்பு வரை சட்டை. கணவன் தொழில் நிமித்தம் வேற்றூர் குடியேறும் போது தான் துப்பட்டா என்ற ஒன்றை அணிய வேண்டும் என்பதை அறிந்து அணியத்துவங்குவர். இதுதான் அன்றைய நிலை. சமூகத்துக்கிடையில் எந்த வித விதர்ப்பங்கள், வேறுபாடுகள், கலாச்சார சீரழிவுகளும் புர்கா அணியாத அந்தக் காலத்தில் இல்லை.
அந்நிய ஆண் பார்வை அந்நியப் பெண் மீது படக்கூடாது. அந்நியப் பெண் பார்வை அந்நிய ஆண் மீது படக் கூடாது. இருபுறமும் பார்வைகள் தாழ்த்திக் கொள்ள வேண்டும். பெண் உடை கை மணிக்கட்டு, கணுக்கால் வரை முழுவதும் மூடியிருக்க வேண்டும். முகத்தை மூடக்கூடாது. இதுவே இஸ்லாம் வலியுறுத்துவது. இஸ்லாம் கூறுவதன் அடிப்படையில் புர்கா அணிகிறோம் என்ற பெயரில் புர்கா அணிகின்றனர். ஆடை அணிவகுப்பு ஆபாச உடை போல் புர்காக்கள் காட்சியளிக்கின்றன.
மற்ற உடைகள் உள்ளுடம்புப் பகுதிகளை வெளிக்காட்டுவதை விட ஆபாசமாக பெண்ணுடைய சதைச் திரட்சிகளை இன்றைய நவீன புர்கா வெளிப்படுத்திக் காட்டுகின்றது. அத்தகைய விதத்தில் இறுக்கமாக அணியப்படுகிறது. உடலின் மேலளவு, இடையளவு, பின்னளவுக் கொப்ப புர்கா தைத்துக் கொடுக்கும் டைலர்கள் மலிந்திருக்கின்றனர். இளம்பெண்கள் கூட்டம் அவர்களைத் தேடி படையெடுக்கிறது.
கடைகளில் கேட்லாக்கில் உள்ள புர்கா மாடல்கள், ஸ்ட்ரெய்ட்கட், பிஷ்கட், அம்பர்லா கட், கிரிஸ்டல் ஸ்ட்டட், புர்கா வித் லெதர் பேட்ஜ் 550லிருந்து 15,000 வரை விற்கப்படுகின்றன. மும்பை பெண்டி பஜாருக்கு அடுத்துள்ள முஹமதலி வீதியில் 80 வருடமாக நியூ ஜனதா புர்கா சென்டர் நடத்தி வரும் முஹம்மது யூசுப் கூறுகிறார் "அந்தக் காலத்தில் என் கடையில் 3 வகை புர்கா மட்டுமே இருக்கும். இன்று 100 வகை புர்கா வைத்திருக்கிறேன். அத்தனையும் பிடிக்கவில்லை இன்னும் புதிய மாடல் வேண்டும் என்கின்றனர்."
மும்பை பாந்த்ராவில் புர்கா கண்காட்சி நடத்தும் பௌசியா, சபா என்ற இடு பெண்களும் துபாய், ஈரான் நாடுகளிலிருந்து துணிகள் வரவழைத்து மினரா, காஃபா படங்கள் வரைந்து 2,400/லிருந்து, 7,000ம் வரை விற்பதாகக் கூறுகின்றனர்.
இன்ன நிறம்தான் உடுத்த வேண்டும் என இஸ்லாம் கூறாத நிலையில் கருப்பு புர்காக்கள் அணியப்படுவது முஸ்லிம் கலாச்சாரமாக பரவி வருகிறது. ஆபாச உடையாக இன்று புர்கா மாறிவருகிறது. யாரோ விரித்த சதி வலையில் சமூகம் சிக்கிச் சீரழிகிறது.
குர்ஆனில் சொன்னபடி நடக்கிறோம் என புர்காவை ஆபாசமாக அணிந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கண்ணியமாக நடந்து கொள்ளாத பெண்களுக்கு புர்கா கண்ணியமளிக்காது. அழகு மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, உடல் அங்கத்தை வெளிக்காட்டும் இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
புர்கா அணிந்தபடி நடுரோட்டில் ஆணுடன் மணிக்கணக்கில் பேசுவது. பொதுத்தொலைபேசியில் முகத்தை மூடிய புர்கா அணிந்தபடி 100 ரூபாய்க்கு தொடர் உரையாடல் நிகழ்த்துவது. பேருந்து நிலையத்தில் புர்கா அணிந்த நிலையில் யாருக்காகவோ காத்திருப்பது. ஷாப்பிங்மால், தியேட்டர், வணிக வளாகங்களில் சுற்றித்திரிவதை கைவிடாத வரை புர்கா பெருமையளிக்க போவதில்லை.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::