Thursday, June 30, 2011

பளு தூக்கும் முஸ்லிம் பெண்!!!!

புரட்சி செய்யும் முஸ்லிம் பெண்மணி!!!!

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிஃபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம்; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்? அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினினைச் சார்ந்த 35 வயதான குல்சூன் அப்துல்லாஹ் (Kulsoom Abdullaah) பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் பளு தூக்கும் போட்டி நேராக தூக்கும் (டெட்லிப்ட்) 111 கிலோ பிரிவிலும், மற்றும் தாங்கிப் பிடித்து தூக்கும்(ஸ்நேச்) 47.5 கிலோ பிரிவிலும் சாதனை செய்துள்ளார். ஆனால் அந்த சாதனையாளருக்கு வந்ததே சோதனை! அது என்ன என்று கேட்கிறீர்களா?
குமாரி குல்சூன் அப்துல்லாஹ் மற்ற பழுதூக்கும் பெண்மணிகள் போன்று அரைக்கால் கால் கட்டை, மேல் ஆடை அணிந்து வராது முக்காடுடன் கூடிய ஹிஜாப் அணிந்து பந்தயத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். பொறுப்பாளர்களோ மேலை நாட்டு பொய்யான நாகரீக வாதிகள்.
அமெரிக்காவின் பளு தூக்கும் சங்கத்தினர் உலக பழுதூக்கும் சட்டத்தினை மேற்கோள் காட்டி பழுதூக்குபவர்கள் கைகளையும், கால் முட்டிகளையும் முடக்குவதினை வெளிப்படையாக காட்ட வேண்டுமென்றும், ஆனால் ஹிஜாப் அணிந்திருந்தால் அவ்வாறு பார்க்க முடியாது. ஆகவே அவர் இனிமேல் ஹிஜாப் அணிந்திருந்தால் பழு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் உலக டென்னிஸ் பந்தயங்களில் விளையாடும் வீனஸ் வில்லியம் சகோதரிகள் போல அனைத்து அங்கங்களும் ஆண்கள் தெரிய உடை அணிய வேண்டுமென்று விரும்புகின்றனர். என்னே கேவலம்.
ஒரு ஓட்ட வீரர் ஓடும் வேகத்தினையும், காற்றின் வேகத்தினையும் தூரத்திலிருந்தே கணிக்கக் கூடிய ஸகேனுடன் இணைந்த நவீன கருவிகள் இருக்கும் போது ஒரு பழு தூக்கும் வீரர் கால், கை முட்டிகள் தெரிந்தால் தான் அவர் கலந்து கொள்ள முடியுமென்பது நவீன உலக விஞ்;ஞானத்திற்கு சவாலாகவும், விளையாட்டு வீரர்களுக்கு கேலிக் கூத்தாகவும் தெரியவில்லையா? அதற்கு அந்த விளையாட்டு வீராங்கணை என்ன சொல்கிறார் தெரியுமா? ‘நான் அப்படிப்பட்ட சட்டத்தினை அறவே வெறுக்கின்றேன். இது போன்ற முனை மழுங்கிய சட்டங்களால் மற்ற விளையாட்டு வீரர்களும் உட்சாகமிழந்து போட்டிகளில் விளையாடுவதிற்கான ஆர்வம் குறைந்து விடுமே எனக் கவலையடைந்துள்ளார்.
செல்வி. குல்சூனுக்கு ஆதரவாக அமெரிக்க முஸ்லிம் நல்லுறவு கவுன்ஸிலின் செயல் இயக்குனர் நிகாட் அவாட் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்க ஒலிம்பிக் கவுன்ஸிலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பங்கு பெற்றுள்ளனர். அவர்களின் மத உணர்வுகளை செயற்கையான உடையினைக் கொண்டு வேறு படுத்த வேண்டாம்’ என கேட்டுள்ளார். அவருடைய கோரிக்கைக்கு பல் வேறு அமெரிக்கரிடையே ஆதரவு பெருகிக் கொண்டுள்ளது.

அதனையறிந்து மகிழ்வு அடைந்த செல்வி, ‘என்னுடைய மத உணர்வுகளை மதித்து எனக்கு ஆதரவு பெருகுவதினை அறிந்து சந்தோசத்தில் மிதக்கிறேன். அதுவும் தான் ஹிஜாப் அணிந்து பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வவதற்கு அனுமதியளிக்க உலக குத்துச் சண்டை கழகம் மலேசியாவில் விவாதிக்க உள்ளது என்பதே என் மதக் குறிக்கோளில் பாதிக் கிணறு தாண்டியது போல உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஈரான் நாட்டின் பெண்கள் கால் பந்தாட்டக் குழு முழுக் கால் சட்டையணிந்து கொண்டு விளையாடுவதினை அனுமதிக்க முடியாது என உலக பெண்கள் கால் பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் உலக பளு தூக்கும் போட்டியில் செல்வி குல்சூனுக்கு அனுமதி கிடைத்து விட்டால் ஈரான் பெண்கள் கால் பந்தாட்ட குழுவினுக்கும் இன்னும் மற்ற விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கலந்து கொள்ள எந்த தங்கு தடையும் இருக்காது.
செல்வி. குல்சூனின் இறை நம்பிக்கைக்கு எந்தளவு உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்று ஒரு ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கலாம் என எண்ணுகிறேன். அமெரிக்காவின் பென்சில்வேனியா பலகலைக் கழக சமூக ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஸ்கெய்டில் ஓர் ஆய்வினை 1972ஆம் ஆண்டு முதல் 2006 வரை மேற்கொண்டார்.
அந்த ஆய்வினுக்கு 423 நபர்களை ஆராய்ந்தார். அதில் 96 பேர் மதமாற்றம் செய்து கொண்டனர். 54பேர் இறை வழிபாட்டிலிருந்து விலகி விட்டனர். ஆனால் மீதியுள்ளோர் தங்களை முழுமையான இறை வழிப்பட்டிலும், இறைறை சொன்னபடி நடந்ததால் சமூக நலம், உடல் நலம், மற்றும் நன்னடத்தையுடன் சிறந்து விளங்கினர். விளையாட்டுப் போட்டிகளில் போதை ஊக்க மருந்து சாப்பிட்டு அவமானப்பட்டு ஒலிம்பிக் மெடல்களைக் கூட பறி கொடுக்கும் இந்தக் காலத்தில் மத கோட்பாடுடன் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பெண்கள் பங்கு பெறுவதின் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஒழுக்கங்களை கடைப் பிடித்து நல்ல உடல் நலத்தோடு வாழ வழி வகுக்க செல்வி குல்சூன் முயற்சி வெற்றி பெற அல்லாஹு ஸுப்ஹானவுத்தஆலா அருள் புரிய வேண்டிக்கொள்வோமா சகோதர சகோதரிகளே.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::