Tuesday, June 21, 2011

போலிகள் ஜாக்கிரதை!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரியவர்களே!

அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்திய சமுதாயப் பணிகளை மிகச்
 
சிறப்பாக செய்து அனைத்து மக்களின் மனதில் இடம் பெற்று வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியினை கண்டு  காழ்புணர்வு கொண்டு அதன் பெயரை கள்ளத்தனமாக திருடிய பிஜெ.அதன் மூலமாக சமுதாயத்தில் கொட்டுப்பட்டு அவமானப்பட்டு போய் கொண்டு இருப்பதை நாம் அறிவோம்.
அவருடைய பயிற்சி பாசறையில் பயின்ற சீடர்கள் (பொய்யன் டிஜே பிளாக்ஸ்பாட் என்ற பெயரில் நடத்தி வரும் இவர்கள்) பிஜெயுக்கும், அவரது பிடியில் சிக்கி தவிக்கும் ததஜவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் நம் மாநிலச் செயலாளர் சகோதரர் செங்கிஸ்கான் நடத்தி வரும் இணையதளத்தை முடுக்க பல வகையிலும் முயற்சி செய்தனர். செங்கிஸ்கானை எப்படியாவது இதஜவில் இருந்து பிரிக்கவும், இதஜ தலைவர் சகோதரர் பாக்கருடன் பிளவு ஏற்படுத்தவும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கிஸ்கான் தனது பெயரில் நடத்திவரும் இணையதளமான செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் காம் போல் அச்சு அசலாக செங்கிஸ் ஆன்லைன் பிளாக்ஸ்பாட் டாட் காம் என்ற ஒரு பிளாக்ஸ்பாட்டை திறந்து  பித்தலாட்டம் செய்துள்ளனர் இந்த அநியாயக்காரர்கள்.
செங்கிஸ்கான் பெயரில் உள்ள கானை மட்டும் நீக்கி விட்டு உருவாக்கி உள்ள இந்த பிளாக்ஸ்பாட்டுக்கு  செல்பவர் கண்டிப்பாக குழப்பம் அடைந்து விடுவார். ஆகவே, இந்த விஷமிகளின் ஆட்டம் பாட்டத்தை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ் அவனே இவர்களுக்கு தக்க கூலி கொடுக்க போதுமானவன்.
மருந்துக்கூட மறுமை அச்சம் இல்லாத இந்த போலிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.நன்றி INTJ online.in


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::