Thursday, April 12, 2012

பாஸ்ட்புட்-அது வேஸ்ட் புட்...!

பாஸ்ட்புட்-அது  வேஸ்ட் புட்...!

   அவசர உணவுகளும் ஆபத்தும்!  

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

  அவசர உணவுகள் 

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ரமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ப்ரைடு சிக்கன்
  ஃப்ரைடு சிக்கன் 
மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.
இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.
  குளிர்பானங்கள் 
பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::