Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Saturday, September 14, 2013

அல்லாடும் பெண்கள்...!

அல்லாடும் பெண்கள்...!

சராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. "பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது" என்று. இந்த அயோக்கியத்தனத்தை படித்த, படிக்காத என்று அனைவரும்பாகுபாடின்றி செய்கின்றனர்.
"கையில் கைபேசி இருந்தால் போதும்". ஊடகங்களே இந்த காரியங்களை செய்யும்போது - சாமானியன் செய்ய மாட்டானா? இதில் சிக்கும் பெண்களுக்கும் - படித்த, படிக்காத என்கிற வேறுபாடில்லை."படிக்காததால் ஏமாற்றப்படுகின்றனர்" என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கு பொறுந்தாதோ.
அல்லாடும் பெண்கள்...!ஏமாறுவது என்று முடிவு செய்தப்பின் - படிப்பெல்லாம் பெரிதில்லை. படித்தவர்களும் ஏமாறும் கதை, அதை தான் சொல்கிறது - முக்கியமாய் ஆபாச படமெடுத்து மிரட்டலில் சிக்கும் பெண்கள் விஷயத்தில். எல்லோரும் நிறைய படித்தவர்கள் தாம். இதில் சில - சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரியாமல் படமெடுத்தவையாக இருக்கலாம். பெரும்பாலானவை காதலிக்கின்றவனால் உல்லாசமாக இருக்கும்போது எடுக்கப்பட்டு - பின்னாளில் அவை பணப்பறிப்புக்கான ஆயுதமாக ஆகிறது. இணையத்தில் வெளியிட்டுவேன் என்கிற மிரட்டலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்த விஷயமே - மீள முடியாத சோகத்திற்கு தள்ளிவிடுகிறது.
இந்த காதல் வலையில் சிக்கும் பெண்கள் யார் என்று பார்த்தால் - அவர்களில் பெரும்பாலோர் முதல் திருமணம் முறிவடைந்தவர்களாக, நல்ல மனிதர் கிடைத்தால் தங்களை ஒப்படைத்துவிட தயாராக இருக்கும் பலவீனமான மனம் படைத்த பெண்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு சோகம்.
புலியிடம் (முதல் கணவனிடம்) தப்பி - சிங்கத்திடம் (இரண்டாவது உறவிடம்) பலியாகும் மானின் கதை தான்.
தெரியாமல் படமெடுத்து - உடை மாற்றும் போது, குளிக்கும் போது - படமெடுக்கப்படுகிறோம் என்று தெரியாமல், பின்னாளில் மிரட்டலில் சிக்கும் பெண்களை அப்பாவிகள் என்று சொல்லலாம். ஆனால் காதலனால் படமெடுக்கப்படும் சூழலில் பெண்கள் அதை எந்த அளவு அறிவுடன் ஏற்று கொள்கிறார்கள். தினசரிகளில் தினசரி வருகிற செய்தி. "ஆபாச படமெடுத்து பெண் மிரட்டல்" எத்தனை படித்தும், எத்தனை வாசித்தும் இருந்தால் என்ன. "நான் ஏமாறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்கிற ரீதியில் அவர்கள் ஏமாற தயாராக இருந்தால் நாமென்ன செய்ய முடியும்.
இதில் வீடியோ சாட் டின் போது - காதலன் விரும்புகிறான் என்று தன்னை ஆபாசமாக காட்டுதல். இன்றைய தினசரியில் மட்டும் இரண்டு செய்திகள் இப்படி வந்துள்ளன. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர், இலங்கையை சேர்ந்த - இப்போது இத்தாலியில் வசிக்கின்ற, திருமணமாகி மணமுறிவு பெற்ற பெண்ணை சாட்டின் போது ஆபாசமாய் நிற்க வைத்து - அதை புகைப்படம் எடுத்து தற்போது மிரட்டியும், பணத்தையும் பறித்து கொண்டு ஓடியதன் விளைவாக இப்போது சிறையில்.
மற்றொன்று - டியூசன் படிக்க வந்த பெண்ணை காதல் வயப்படுத்தி - சிற் சில சமயங்களில் உறவு கொண்டு, அதை புகைப்படமெடுத்து - அந்த பெண்ணை தம் நண்பர்களுக்கெல்லாம்... என்று ஒரு கல்லூரி மாணவியின் படிக்க வேண்டிய காலக்கட்டம் - மிகப் பெரிய அசிங்கத்தை சுமந்து கொண்டிருக்கிறது. அவர் எதிர்காலம்... ​
சில வருஷங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நண்பர் சொன்னது. அவர் மனைவி பணிபுரியும் இணைய தள மையத்தில் - ஒரு பெண் மூடிய கேபினுக்குள், சாட் செய்தவாறு தன் ஆடைகளை களைந்திருக்கிறார். யதோற்சையாக அதை கவனித்த பணியாளர்கள் - அந்த பெண்ணை வெளியே அனுப்பிவிட்டார்கள். அது முதல் கேபினை மூட அனுமதிப்பதில்லை.
எந்த நம்பிக்கையில் இந்த பெண்கள் - தொலைதூரத்தில் இருக்கும் காதலனுக்காக இந்த அநாகரீகமான காரியம் செய்ய துணிகிறார்கள். இந்த விஷயத்தில் யாரை தவறு சொல்வது. ஆண்களையா? பெண்களையா? ஆண்களை மட்டும் தவறு சொல்வது என்பது ஒரு வித தப்பிக்கும் மனப்பான்மை. "உலகம் - முக்கியமாய் ஆண்களின் வக்ர உலகம் பெண்களை எப்படி ஏமாற்றுவது" என்கிற ரீதியில் தான் சிந்தித்து கொண்டிருக்கிறது.
பெண்களின் மூளை "அதிலிருந்து எப்படி தப்பிப்பது" என்று இருக்க வேண்டுமே ஒழிய, "சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது".
"ஆபாசப்படம் பார்ப்போரே - ஒரு நாள் ஆபாசப் படங்களாய்" மாறும் அபாயம் உள்ளது.
"எதுவும் தப்பில்லை" என்கிற சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகு - பெண்கள் ஒரு சம்பவத்தால் தொடர்ந்து நிகழ போகும் அனர்த்தங்களை தொலை நோக்கோடு சிந்திப்பதில்லை.
ஆபாசம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். வழிபாட்டுத்தலம் (சாமியார்களும், பாதிரியார்களும்), சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகை (உபயம் : திவாரி), கல்விக்கூடங்கள் என்று காமூகர்கள் எங்கும் நிரம்பி வழிகிறார்கள்.
பெண்கள் தங்களை தாங்கள் தான் காத்து கொள்ளவேண்டும். எல்லாம் முடிந்தப்பின் அழுதவாறு - தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்று பேசினால் மட்டும் போதுமா? காட்சி ஊடகங்கள் என்ன யோக்கியமா? உங்கள் கண்ணீரை துடைக்கிறேன் பேர்வழி என்று- பரபரப்பான தொடராக்கி பணம் பார்க்கின்றன. காவல்துறை வசம் சைபர் கிரைம் குற்றங்கள் நிரம்பி வழிகின்றன.
"தெரியாமல் நடக்கின்ற குற்றங்களை ஆர்வமுடன் கவனிக்கும் காவல்துறை - தெரிந்தே சீரழியும் குற்றங்களை வெறுப்பாக தான் பார்ப்பர்" ஒவ்வொரு தனி மனிதனின் தவறும் -காவல்துறைக்கு அதீத பணிச்சுமையை கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சில தவறுகள், சில அசம்பாவிதங்கள் - நம் மொத்த வாழ்க்கையையும் அசிங்கமாய், கேலிக்குரியதாய் ஆக்கி விடும். உங்களின் அறிவு உங்களை காப்பாற்றவில்லை என்றால் - உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது. உஷாராய் இருங்கள் பெண்களே.
thanks:http://oosssai.blogspot.com/

Wednesday, March 6, 2013

நாசமாகும் சமுதாயம்!

நாசமாகும் சமுதாயம்!

http://www.marhum-muslim.com/கணவனும் மனைவியும் சந்தோஷம் அனுபவிக்கத்தான் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான்.
இதில் அந்தரங்கம் என்பது இருவருக்கும் மத்தியில் அன்பை ஏற்படுத்தும்....இந்த அன்பு அதிகமாகி நம் மக்கள் இப்போதய நவீன கண்டுபிடிப்புக்களான செல் போன் வசதியை பயன் படுத்தி வெளி நாடுகளில் பணிபுரியும் கனவன்மார்கள் தங்களின் மனைவிடம் நான் உன்னைபிந்து தனியாக இருக்கும் போது நான் மட்டும் பார்க்க என்று சொல்லி மனைவியை நம்பவைத்து அந்தரங்கத்தை செல்லில் படம் பிடித்து வைத்துக்கொள்கின்றனர்.
இது வரம்பு மீறி தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் என காட்டி இந்த அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சில நபர்களும் உள்ளனர்.
இந்த கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு தோனும் போது இதை வைத்து பிளாக் மெயில் செய்யும் கணவர்மார்களும் உள்ளனர்.
இந்த செய்தியை படித்த பிறகாவது நம் பெண்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தங்களின் அந்தரங்கம் கணவனுக்கு மட்டுமே அந்த கணவனே கொஞ்சினாலும் கூத்தாடினாலும் செல் போனில் படம் பிடிக்க அனுமதிக்க மாட்டேன் என கண்டிப்புடன் கூறி விட்டால் இது போன்ற பயமுறுத்தல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

Saturday, January 19, 2013

விலை பொகும் முஸ்லிம்கள்...!

விலை பொகும் முஸ்லிம்கள்...!


re

  M. ரிஸ்னி முஹம்மத்   
பிரிட்டன் அரசும் அமெரிக்க அரசும் இணைந்து பல முஸ்லிம் தேசங்களில் தமது பயங்கரவாத படைகளை ஏவிவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிவருகின்றது.
முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்கிறது சிறுவர் சிறுமியர் என்ற எந்த வேருபாடுகளும் பார்க்காமல் கொன்று குவிக்கின்றது.
பெண்களை சிறைகளில் அடைத்து நிர்வாணபடுத்தி வதை செய்கின்றது.
இத்தனையும் செய்யும் இந்த மேற்கு பயங்கரவாத இராணுவம் தமது மாமிச வேட்டை, காம வேட்டை போன்றவற்றை முடித்துவிட்டு நாடு திரும்பும்போது பிரிட்டனிலும், அமெரிக்கா மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு மேலாதிக்க நாடுகளிலும் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் வெறியாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் சிப்பாய்கள் கூட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
இது தவிர்க்க முடியாத இயல்பான உணர்வின் வெளிப்பாடு ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலும், ஈராகிலும் கொல்லப்பட்ட பிரிட்டன் ஆக்கிரமிப்பு படை சிப்பாய்களை அவர்களில் சாமாதிக்கு சென்று வணக்கம் செலுத்தும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரைகுறை ஆலிம் ஒன்றையும்
BBC தனது செய்தி சேவையில் ஒளிபரப்பியது இத்தகைய பாவங்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் தேசம், தேசியம் ,நாடு என்ற குறுந் தேசிய எல்லைகளை காரணம் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படமுடியாது எந்த காரணங்களையும் முன்வைத்து தனது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அரசையோ, அரசின் இயந்திரமான இராணுவத்தையோ ஆதரிக்க முடியாது என்ற வலுவான குரல் இதற்கு எதிராக ஓங்கி ஒலித்து கொண்டிருகின்றது
இஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது-
'நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்' -அல்ஹுஜுராத் 49:10.
இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவே முனைந்தது. முனைகிறது இந்த உலகளாவிய சகோதரத்துவதுக்கு தடையாக அமையும், தேசம், தேசியம், மொழி, இனம், பிராந்தியம், இயக்கம் என்ற வேறுபாடுகளை அனைத்தையும் இஸ்லாம் புறம் தள்ளி முஸ்லிம் என்ற பிரதான அடையாளத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. அந்த பிரதான அடையாளத்துக்கு எதிரான எந்த கோட்பாடுகளையும் முஸ்லிம் என்ற அடையாளம் புறம் தள்ளி விடுகின்றது இன்று நாட்டின் எல்லைகளுக்குள் அடையாளத்தை தொலைக்கும் தொலைக்க தூண்டும் நிகழ்வுகளை காண கூடியதாகவுள்ளது. இதில் முஸ்லிம் சமுகத்தில் சிறிய ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் மேற்க்கு ஊடகங்கள் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் செயலாக இவற்றை காட்ட முனைந்து வருகின்றது.
இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியை பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடும் போது "என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்." -முஸ்லிம்.
'(நபியே!) எந்த மனிதர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள், தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சகோதரர்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோருடைய இதயங்களில் தான் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைப் உறுதிப் படுத்தி வைத்திருக்கின்றான்' -அல்முஜாதலா- 22
source: ourummah.org

Sunday, December 30, 2012

 மச்சான் மைத்துனி...!

மச்சான் மைத்துனி...!

\மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.
ஆனால் நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள். மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)
தனது மச்சான் என்ற உரிமையுடன் ஆரம்பத்தில் இருந்தே அளவு கடந்து பேசுவதினால் அல்லது பழகுவதினால் தன்னை அறியாமல் தன் சகோதரியின் கணவனுடன் தவறிழைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவனின் சகோதர உறவுகளை இந்தளவுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மதினி, என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை.
கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும்.
எனவே கணவன் மதினி விஷயத்திலும், மதினி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும்.
இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கையையும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
''தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.
தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.'' (அல்குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் ஆடை சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மதினி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தொடர்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே வீட்டுக்குள் தானே இருக்கிறோம், இது ஒரு பெரிய பிரச்சினையா? என்றெல்லாம் சமாதானம் பேசாமல் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பேணி வாழக் கூடிய பெண்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
ஆக்கம் : சகோதரி ஷப்னா கலீல்
சிதையும் உறவுகள்...!

சிதையும் உறவுகள்...!

இந்த கட்டுரை நமக்கு உணர்த்துவது ஒன்றே ஓன்று தான்! படியுங்கள் பகிருங்கள்.
ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் கள்ளக் காதல் பற்றிய செய்திகள் வரும். இன்று அப்படியல்ல. கள்ளக் காதல் அதனால் ஏற்படும் கொலைகள், ஆள்கடத்தல், பணம் – நகை கொள்ளை போன்ற செய்திகள் முன்பைவிட பன்மடங்கு அதிகமாக வெளிவருகின்றன.சிதையும் உறவுகள்...!
கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக் குடும்பமும் ஆண் தரப்புக் குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன.
பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக் காதலில் சிக்கும் போது அவனைச் சார்ந்த குடும்பம் சிதைவதும், இந்தச் சமூகத்தில் நடந்தபடிதான் உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய குற்றவியல் புள்ளி விவரங்களில் முதலிடம் பிடித்துள்ள விவரமாக விளங்குவது. கள்ளக் காதலால் நிகழ்ந்த கொலைக் குற்றங்கள்தான். இருவேறு ஆயுதக் குழுக்களாக மோதிக் கொள்ளும் ரௌடிகள் கொலை 316 தான். ஆனால், காதல் + கள்ளக் காதலால் நடந்த கொலை மட்டும் 237.
சில இடங்களில் கள்ளக் காதல் மற்றும் காதலில் ஈடுபட்டதுபோல் நடித்துப் பெண்களைக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் சேர்க்க முனையும் போது எதிர்க்கும் பெண்கள் மட்டும் 464 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கள்ளக் காதலன் தலைமறைவு, காதல் தோல்வி, காதலி வேறொருவரை மணமுடித்ததால் போன்றவற்றால் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் கள்ளக் காதல், காதல் கொலைகளை அங்குள்ள சட்டங்கள் "பார்ட்னர் வயலன்ஸ்" என்று குறிப்பிடுகின்றன.ஒரு கணவனுக்கோ, மனைவிக்கோ போலித்தனமான வாழ்க்கை அல்லது தன் கணவன், தன் மனைவியைத் தாண்டி வேறு ஆணுடனோ, வேறு பெண்ணுடனோ ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறது? இந்த இருவரின் ஈர்ப்பால் விளையப் போகும் விளைவுகளை அவர்கள் அறியாததா?
அவர்கள் கள்ளக் காதலில் மட்டும் கைதேர்ந்தவர்களாக இல்லாமல், தங்கள் தவறு பிறருக்குத் தெரியா வண்ணம் மறைப்பதிலும் புத்திசாலிகள். ஆம், படிப்பில்லாத ஊர்களில் நிகழ்ந்த இதுபோன்ற குற்றங்கள்தான் கணக்கில் இதுவரை வந்துள்ளன. தர்மபுரி – 38, கிருஷ்ணகிரி – 27, நாகை – 24, வேலூர் – 20, தேனி – 14 என இந்த கல்வியறிவோ, படிப்பறிவோ இல்லாத மாவட்டக் கள்ளக் காதல் கொலைகள்தான் வெளித் தெரிந்துள்ளன. ஆனால், படித்த வசதியுள்ள, நடுத்தர பிரிவினரின் கள்ளக் காதல் கொலையானால்தான் இந்தப் பட்டியலில் சேரும்.
30 ஆண்டுகள் நெறியோடு வாழ்ந்த பெண்மணி ஒருவரை இந்தக் கட்டுரைக்காக தேடிப் பிடித்தோம். அவர் பத்தாண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அத்துடனில்லாமல், பல பெண்களுக்கும் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தியவரும்கூட.அவரிடம் கள்ளக் காதல் என்பது ஏன் ஏற்படுகிறது. இது முழுக்க ஒழுக்கக் கேடான ஒன்றாயிற்றே. இது தவறு என்பது தெரிந்தும் ஏன் நிகழ்கிறது என்று மட்டும்தான் கேட்டோம்.
கள்ளக் காதல் என்பது தவறு. ஒழுக்கக் கேடான ஒன்று என்பது தெரிந்ததுதான். ஆனால், அவ்வாறு அது நிகழ யாரெல்லாம் காரணம், எது காரணம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். வேண்டுமென்றே எந்தப் பெண்ணும் திமிர் பிடித்து கள்ளக் காதலில் ஈடுபடமாட்டாள். எனினும் சில விதிவிலக்கு உள்ளது. எல்லா வசதிகளும் வாழ்க்கைத் தேவையும் நிறைவாக இருந்தும் சிலர் இதுபோன்ற இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஒன்று அந்தப் பெண்ணின் கணவன் தகுதியற்றவனாக சதா சர்வ காலமும் பணம் பணம் என்று அலைபவனாக இருக்கலாம். அல்லது எல்லா வசதி தந்த பின்னரும் அவனின் முணுமுணுப்புகள் பெண்ணின் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகள், சந்தேகப் பார்வை, பலவும் அவளை அன்றாடம் மனதளவில் கொல்லும் போது அவள் அவனை எதிர்ப்பதாக நினைத்து அவனிடம் பெற முடியாத நிம்மதியைத் தரும் இன்னொரு துணையை நாடுகிறாள். இந்தப் புதிய உறவு ரகசியமாக நீடிக்கிறது. காலப் போக்கில் வெளிப்படும் போது எரிமலையாய் வெடித்து எரிமலைக் குழம்பு போகும் பாதையெல்லாம் பொசுக்குவது போல் அவர்கள் தொடர்பான அனைவரின் கௌரவமும் பொசுங்குகிறது. சில நேரங்களில் சிலர் இதனை உணர்ந்து விலகுகிறார்கள். விலக இயலாதவர்கள் இடையூறாக இருக்கும் ஆணையோ பெண்ணையோ கொன்று விடுகின்றனர்.
கண் நிறைந்த கணவன்தான். ஆனால், குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்கு போதாத நிலை, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாத கணவனின் சம்பாத்யத்திற்கு ஈடுகொடுக்கத் தெரியாத நிலையில் பொருளாதாரம் சரிக்கட்ட சோரம் போகிறாள்.
நாலு பேரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற மட்டரகமான சிந்தனை அப்பெண்ணுக்குள் சாத்தானாக புகுந்து விடுகிறது. நுகர்வுக் கலாச்சாரம் படோடபமான வாழ்க்கை வாழ அவள் நினைக்கும் போது அதற்காக வசதியான ஆணை அவன் அழகனோ, நோயாளியோ, கருப்போ, சிவப்போ அவளுக்குக் கவலை இல்லை. அவனிடம் உள்ள செல்வம்தான் அவளின் குறிக்கோள். அதனால் உறவில் நாட்டமில்லாமல்தான் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவாள். பல இடங்களில் கள்ளத் தொடர்புக்கு இதுதான் பெருங் காரணமாக உள்ளது.
இவர் யார்? அடிக்கடி வருகிறாரே? கேட்டால், தூரத்து உறவு என்பாள் சொந்தக் குடும்பத்திடமே! சில இடங்களில் கணவன் தன் வருமானத்திற்கும் மேலாக வீட்டில் சேரும் பொருட்களைப் பற்றி சந்தேகம் கொண்டு கேட்டாள். சீட்டு கட்டுகிறேன், சுயஉதவிக் குழு எனச் சொல்லிப் பார்ப்பாள். அவை கணவனின் விசாரணைக்கு உட்படும் போது சந்தேகம் அகலமாகும். அறிவுரை சொல்லிப் பார்ப்பான், அடித்தும் பார்ப்பான், அவளால் கணவனையும் இழக்க முடியாது, கள்ளக் காதலையும் மறுக்க இயலாமல் புழுங்குவாள். எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலவே தன் பிள்ளைகளும் வளர வேண்டும் என்ற நினைப்பால் வந்தது.
சகிப்புத் தன்மையுள்ளவன் பேரளவுக்கு கணவனாக அவனுக்குள்ளேயே மனம் புழுங்கி பைத்தியமாவான். அல்லது முரட்டுத்தனம் உள்ளவன் குடும்ப வன்முறையில் ஈடுபடுவான். இன்னொரு நிலையுள்ள எதனையும் கண்டு மிரளும் மனநிலையுள்ள ஆண் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல முற்படுவான். இது போன்ற ஆண்களால் அவளுக்கு கள்ளத்தனமானவன்தான் கதி என்று ஆகும்.
இன்னொரு ரகம் புடவை நகைகளுக்காக கணவன், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றவுடன், தன் ஆசைக்கான பொருளை வாங்கித் தரும் பசையுள்ளவனை பிடித்துக் கொள்வது. அவனுடன் ஊர் சுற்றுவது. வீட்டிற்கு எல்லோரும் வரும் முன்பு வந்து விடுவது.இன்னொரு ரகம் ஒதுக்குப்புறமான வீடு, தனிமை, கணவன், பிள்ளைகள் அவரவர் வேலை பார்க்க வெளியே சென்றவுடன், பிற ஆண்களை வீட்டிற்கே வரவழைத்து கள்ள உறவு கொள்வது இவர்கள் வழக்கம். இந்தத் தவறுக்கு தனிமைதான் பெரிய காரணம். பெரும்பாலான கள்ளக் காதல் கொலைகள் இந்த ரகத்தினால்தான் நடக்கிறது.
விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது. உடல் ரீதியான தொடர்புகளை விட ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள். சிலர் சில சமூகங்களில் விதவைத் திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள். கூடவே அவளுக்கு பிள்ளைகள் இருந்து விட்டால் கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள். சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன. சில இடங்களில் எதிர்க்கின்றன. ஒரு பெண் அன்னிய ஆடவருடன் எச்சரிக்கையுடன் பேசுவது முக்கியம். பேச்சிலேயே சந்தேகம் வந்தால் தவிர்க்க வேண்டும். இது ஆண்களுக்கும் அவ்வாறே பொருந்தும். பிறன் மனை நோக்கான் என்பது ஒரு பொதுவான இருபாலர்க்கும் உரிய ஒழுக்க நெறியாகும்.
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். ஒரு பெண்ணின் மனம் ஒழுக்க நெறியோடு இருந்தால், எந்த ஆணும் அவளை நெருங்க இயலாது. தவறான பேச்சு, சமிக்ஞைகள், தேவையற்ற அரட்டை, மூன்றாம் நபரிடம் தன் குடும்ப நிலைகளைப் பகிர்ந்து கொள்வது முதலானவை நல்ல பெண்மணி தவிர்ப்பாள். நல்ல ஆணும் இது போன்ற இயல்புடன் உள்ள பெண்களை விட்டு விலகி இருப்பார்கள். தவிர்ப்பார்கள். ஆனால், மனம் ஒரு குரங்கு என்பதால், தாவ நினைக்கும். அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாடு மட்டுமே.
எவர் எந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்களோ அதன் வழியில் மனதை செலுத்துவது சிறந்தது. அதிலும் ஓர் சிக்கல் என்னவென்றால், தங்கள் சந்தேகங்களை நூல்கள் வழியாகவே கூடுமானவரை பெற முயல வேண்டும். நேரில் சென்று எவரிடம் விளக்கம் கேட்கும் போதும் அங்கும் கோளாறுள்ளவர்கள் இருந்தால் சிக்கல்தான். வழிபாட்டு இடங்களிலும் வில்லன்கள் உண்டு. சில குடும்பம் இதுபோன்ற வழிகளிலும் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளன.
கணவன் என்பவன் வெறுமனே ஒரு ஏ.டி.எம். எந்திரம் போல் வேண்டிய பணம் தந்து விட்டால் போதும் மற்றவை சரியாகும் எனக் கருதக் கூடாது. குடும்பத்தில் அனைவர் மீதும் அக்கறை உள்ளவனாக, அன்புள்ளவனாக விளங்க வேண்டும். தினசரி குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து பேச வேண்டும். உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூடுமானவரை நேரம் ஒதுக்கி குடும்பத்துடன் சென்று வரவேண்டும்.
மனைவி என்பவள் தனக்கு உடமை மட்டுமல்ல, தன் நேசத்துக்கும் அன்புக்கும் உரியவள் என்று மதிப்புடன் வைத்திருக்க வேண்டும். அன்பு செலுத்துவது என்பது அது ஓர் ஆயுதம்! எந்தக் கேட்டையும் அந்தக் குடும்பத்தைத் தாக்குவதிலிருந்து தடுக்க வல்லது. மனைவியிடம் பொய் சொல்லக் கூடாது. மறைவு என்பது கூடவே கூடாது.
பெரும்பாலான அமைதி தவழும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி நல்ல முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பிள்ளைகள் மேல் கவனக் குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் வழியாக தேவையற்ற வம்பு வரும். இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பலவும் குழந்தைகள் மனதை சிதைக்கும் காரணியாக உள்ளன. பல காதல் திருமணங்கள் குடும்பத்தில் பட்ட துன்பத்தைக்கூறும் போது மதிப்புமிக்க உறவினரா? அப்படிச் செய்தார் இருக்காது,'' என நீங்களே தீர்மானித்து குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூற விடாமல் வாயடைக்கின்றனர்.
சிறு வயதில் மறைவாக உறவுகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் அது சரியா? தவறா? சொந்தமான இவர் செய்ததையும் தாயிடம் தந்தையிடம் கூற முற்படும் போது காது கொடுத்து கேட்க வேண்டும். தன் பிள்ளை தானே ""அப்படிச் சொல்லாதே, வாயை மூடு! இத வேற யார்கிட்டயும் சொல்லாதே'', என அதட்டக் கூடாது. குழந்தை சொன்னதைக் கேட்ட பின்பு பக்குவமாக எடுத்துச் சொல்லி சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காதல் கத்தரிக்காய் எல்லாம்.
ஒரு பெண் அல்லது ஆண் தங்களுக்கு தங்கள் குடும்பத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களாக தங்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்களாக பெற்றோர் உள்ளனர் என நினைக்கும் போது அதற்கு வடிகாலாகத்தான் மன ஆறுதல் தரும் மாற்றம் தேடும் நிலைக்குச் செல்கிறார்கள். இந்த வழி காதலாகிறது.
மனம், மனத்திருப்தி, ஆறுதல், அன்பான உபசரிப்பு, தேவைகள், ஆடம்பரம், சொகுசு, அதிகமான உறவில் நாட்டம் அதற்கு வழி இல்லாமை, சந்தேகம், அடி-உதைகள், பாதுகாப்பு, வசவுகள், நோயாளி, கணவன் மனைவி குடும்பச் சண்டை, உறவினர் கொடுமை, மகப்பேறின்மை என்பன பல காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக அது கிடைக்கும் இடத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இதுபோன்ற சமயத்தில் சுற்றி இருக்கும் குடும்பத்தினர் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ, பழிகள் சூழும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தேவை தற்காலிக நிவாரணம். பின்னர் இதுவே சூழலைப் பொறுத்து நிரந்தரமாகின்றன. சிக்கல் உருவாகிறது.
இவ்வாறான இவர்களின் தேடலுக்கு வழி காட்டும் வடிகாலாக இருப்பது. நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், இதுபோன்ற சமூக சீரழிவுக்கு ஊடகங்கள் கடந்த இருபதாண்டுகளாக பெருங் காரணமாக உள்ளன. காதல், ஆடம்பரம், முறைகேடான உறவுக்கு நியாயம் கூறும் கதைகள் இல்லாமல் ஒரு தொடரோ, சினிமாவோ எடுக்கப்படுவதில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளத்தின் சாட்டிங் முதலானவை. தவறு செய்யத் தூண்டும் காரணிகளாக உள்ளன. செல்போன்கள் வந்த பின்னால் கள்ளக் காதல்கள் அதிகம் நடப்பதை வலுப்படுத்தியுள்ளன!
கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பு சிதைந்து தனிக்குடும்பம் என்ற நிலையில் தேவைகள் அதிகரித்தன. அதை எதிர்கொள்ள முயலும் போது, குறிப்பாக பெண்கள் தேவைகளை எந்த வழியிலும் பெறலாம் என்ற நிலைக்கு பொருளாதார காரணிகளால் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிலைக்கு ஆண்களும் தேவை அறிந்து அதை சரி செய்வதற்குப் பதில் அமைதியாகும் போது பெண் மாற்று சிந்தனைக்கு தள்ளப்படுகிறாள்.
இன்றைக்கு மனித மனங்களை வர்த்தக ரீதியாக சுரண்டும் போக்கு அதிகரித்துவிட்டது. குடும்ப வாழ்க்கையை பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அவர்கள் இதனை சாதிக்க ஊடகங்களை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இந்த விளம்பரங்கள் நல்ல குடும்பத்தையும் கூட நுகர்வு வெறியுள்ள குடும்பமாக மாற்றி விடுகின்றன.
சமூக பேரழிவுகளுக்கு தொலைக்காட்சி சனியன்கள்தான் 90% காரணம். இதை கண்டுபிடித்த மேற்குலகம் 'இடியட் பாக்ஸ்' என்றே டிவியை குறிப்பிடுகிறது. ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பாடல்கள், இரட்டை மொழி சிரிப்புகள் என மலிந்துள்ளன. இவைகள் பொழுது போக்கு என்ற பெயரால் ஒளிபரப்பப்படுகின்றன.
அதேவேளை பல சேனல்கள் தாங்கள் தொலைபேசி வழியாக பணமீட்ட ஆபாசமான குறுஞ்செய்தியை ஒளிபரப்புவது போன்ற கேவலத்திலும் ஈடுபட்டுள்ளன.
இவைகளுக்கு சென்சார் எதுவுமில்லாததால் கட்டுப்பாடற்ற ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றன. இவை குடும்பச் சீரழிவுக்கும் வழிகாட்டிகளாக விளங்குகிறது.
இன்று கள்ள உறவுகள் அதிகரிக்க சினிமா தியேட்டர்களும் டிவிக்களும் பெரும் பங்குவகிக்கின்றன.
இப்படித்தான் பல இடங்களிலும் கள்ள உறவுகள் உருவாகின்றன, தொடங்கப்படுகின்றன, தொடங்கி வைக்கிறார்கள், தூண்டப்படுகிறார்கள் ஊடகங்களால்.
கள்ள உறவுக்கான காரணங்கள் எவை எவை, கொலைகள் ஏன் நிகழ்கின்றன என்பதெல்லாம் தெரிந்த விவரங்களைக் கொண்டுதான் நாம் பரிமாறிக் கொள்ள இயலுமே தவிர, தீர்வு என்ன என்ற வினாவிற்கு ஒரே பதில். ஒழுக்கமான வாழ்வின் உன்னதத்தை வளரும் தலைமுறைக்கு பக்குவமாகக் கூறுவதும், அவர்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்து பெற்றோர் கேட்பதும்தான் ஒரே தீர்வு.
அர்த்தமுள்ள, புரிதலான, ஈடுபாடுள்ள குடும்ப வாழ்க்கைதான் நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும். சமூக நோக்குள்ள ஊடகங்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாட்டை வளர்த்து, இதுபோன்ற செய்திகளைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பங்களில் இதுபோன்ற தொடர்கள் வரும் போது தவிர்ப்பதும் நல்லதுதான். அதைப் போலவே பொருட்கள் விளம்பரம் வரும் போதும் சேனலை மாற்றுவதும் நல்லதுதான். நம் மனம் கெடாமல் இருக்க கூடுமானவரை என்னென்ன வழிமுறை உண்டோ, புனித பயணம், சுற்றுலா, நல்ல நூல்களைப் படிப்பது என நம் நேரத்தை நாமே மேலாண்மை செய்தால் எந்த சாத்தானும் நம்மை அணுகாது.
நன்றி: முகநூல்