பரமக்குடியில் நடந்த கலவரம் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஏற்கனவே போதுமான அளவு செய்திகளில் கிழிக்கப்பட்டு விட்டதால் என்னால் முடிந்தளவு சில விஷயங்களை மட்டும்..........
பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது ( அசம்பாவிதத்தால் நடந்த உயிரிழப்பும் பொருட்சேதமும் கணக்கிடும் பருவமில்லாததால் அந்த கொண்டாட்டம்). 1,2,3ன்னு ஒவ்வொரு வகுப்பா முன்னேற முன்னேற வருடா வருடம் வரும் பண்டிகை போல் எதிர்பார்க்கப்பட்ட கலவரமும் மெல்ல மெல்ல குறைஞ்சு ஒரு கட்டத்துல கலவரம்னா என்னன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு தான் போன வருடம் வரை நெலமை இருந்துச்சு. ஆனா இந்த வருஷம்????????..........
(சுருக்கங்க கூறின்- கிட்ட தட்ட 15 வருஷத்துக்கு முன்பு நடந்த ஜாதி கலவரத்துக்கு பின் நடந்த கலவரம் இது)
கலவரத்துக்கு ஒருவாரம் முன்பு
புதிதாய் பார்த்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க போன போது சாவி கொத்தை கொடுத்து வீட்டுக்கு வரும் நாளை குறிக்க காலண்டரை எடுத்தார் ஹவுஸ் ஓனர். ஒடனே நா "இல்லல்ல.... அதெல்லாம் பாக்காதீங்க........ எனக்கு அதுலலாம் நம்பிக்க இல்ல. நாயித்து கெழம குடி வந்துடுவேன்"ன்னு சொன்னதும் அந்த தாத்தா "இல்ல தாயி..... திங்க கெழம வாங்க. நாயித்து கெழம அன்னிக்கு ஊர்வலம், பேரணின்னு பரபரப்பா இருக்கும். அதுக்காக தான் எப்ப வரலாம்னு பாக்க காலண்டர எடுத்தேன்"ன்னு சொன்னார் (முதல் நாளே பல்ப்)
**********
மகனுக்கு சாப்பாடு கொண்டு போக ஸ்கூல்க்கு போகும் போது சாலையெங்கும் இமானுவேல் சேகரன் அவர்களின் அன்னாந்து பார்க்கும் அளவு பேனர்கள். என்றும் இல்லாத அளவுக்கு ட்ராபிக். வழக்கத்தை விட அதிகமாக சென்ற சுமோ (சினிமா ரொம்ப பாப்பாங்க போல), ஒரு ட்ராபிக் போலீஸ் மட்டுமே நிற்கும் இடத்தில்(சில நேரம் அவரையும் தேடணும்) அதிகமாக போலீஸ்கள், தோரணங்கள், ஆர்ச்கள், அதில் எழுதப்பட்ட வசனங்கள் என ஒவ்வொன்றையும் தாண்டும் போது கண்டிப்பாக அனைவர் மனதிலும் படபடப்பு ஏற்படாமல் இருக்க முடியாது.
*********
தெரு கோடியின் பெட்டிகடைக்கு சென்ற போது அங்கே 7 பேர் பணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். பெட்டிக்கடை அக்கா 350 ரூபாய் கொடுத்து அதற்கான ரசீதும் வாங்கிக்கொண்டே "நம்ம சாதிக்கார பயல்களுக்காக இத கூட செய்யலன்னா உயிரோட இருந்து என்ன பண்ண?" என சொல்லும் போதே அவர்களின் கண்களில் உள்ளத்தின் ஆவேசம் தெரிந்தது
*********
சனிகிழமையன்று.......
கடைவீதிக்கு வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க புறப்பட்டோம். மாலை மணி 6. காவல் நிலையத்தை தாண்டி தான் கடைவீதி.(சும்மாவே ஒரு போலீஸ்காரர தாண்டி போகும் போது கொல பண்ணவ மாதிரி பயந்துட்டு போவேன்) அன்னைக்கு சித்திர திருவிழாக்கு கூட வராத போலீஸ் கூட்டம் அங்கே இருந்துச்சு. பொதுமக்கள் போக முடியாத அளவுக்கு ஆக்ரமித்திருந்தார்கள். "புதிசா பெரிய போலீஸ் ஸ்டேஷன் தொறக்குந்தாங்கல நேத்து?. அதுக்காக தான் இவ்வளவு கூட்டம் போலன்னு நேத்து முடிஞ்சு போன திறப்பு விழா பத்தி மூளைக்கு பல்ப் எறிஞ்ச அளவுக்கு "நாளைக்கு நடக்க போகும் குருபூஜை விழாக்கு கலவரம் நடந்தாலும் நடக்கும். அதுக்காக தான் இந்த அதிரடி படைலாம் வந்துருக்கு போலன்னு மூளைக்கு எட்டல. ( முன்ன வச்ச கால பின்ன வைச்சு கடை வீதிக்கு போகாம இருக்க தலை விதிக்கு கூட பிடிக்கல :-)
மளிகை சாமான் லிஸ்ட்ட வாங்கிய கடை ஓனர் 8 மணிக்குள்ள வந்து வாங்கிட்டு போய்டுங்க. இன்னைக்கு சீக்கிரமே கடை அடச்சுடுவோம்னு சொல்லிவிட்டு வேகவேகமான தன் வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஜவுளி பர்சேஸ் முடிச்சு பில் போட போகும் போது வேலை செய்யும் பையன் முதலாளியை கெஞ்சிக்கொண்டிருந்தான். 8 மணிக்கு மேல பஸ் ஓடாதுன்னு சொல்லிட்டாங்கண்ணே.... ஊருக்கு போகணும்"னு சொல்லும் போது இன்னும் பயம் அதிகரித்தது. அம்மாவிடம் சொன்ன போது "என்ன பயம்? போன தடவ குருபூஜைக்கு அதிகரை வரைக்கும் வாக்கிங் போனேன். ஒன்னும் ஆகல? இவங்க சும்மா பீதிய கெளப்புறாங்க"ன்னு சொல்ல கொஞ்சம் தைரியம் எட்டி பார்த்தது. ஆனால் வெளியே வந்த போது சடசடவென சத்தம். ஒரு தாதா மாமூல் வசூலிக்க வந்தாலோ அல்லது கட்சி தலைவன் இறந்தால் ஒடனே தொண்டர்கள் கடையடைக்க சொல்லுவாங்களே.... அதே எபெக்ட். ரோந்து வந்த போலீஸ் ஒவ்வொரு கடையாக தட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. ஆஹா.... வசமால வந்து மாட்டிக்கிட்டோமேன்னு அப்ப தான் அழுகாத கொற :-( கொஞ்சம் நேரத்திலேயே ரங்கநாதன் தெரு மயான அமைதியானது. ஒரு வண்டியும் கண்ணுக்கு மாட்டல. ஆட்டோ டிரைவர்களும் வர மறுத்தனர்(உயிர் பயம். வேகமாக வீடு செல்ல வேண்டும் என்ற அச்சம்). எப்படியோ தெரிந்தவர் ஆட்டோவில் ஏறி ஊர்புல்லா சந்து பொந்துகளிலெல்லாம் சுத்தி வீடு சேர்ந்தாச்சு.
************
திண்ணையில் காற்றுக்காக உக்கார்ந்திருக்கும் போது எங்க தெருவிலுள்ள பசங்க 15 பேர் போஸ்ட்டரும் பசை வாளியுமாக என்முன் வந்து "அக்கா செவத்துல ஒட்டிக்கவா?ன்னு சொன்னதும் என் அடுத்த சொல்லை கூட கேட்க பொறுமை இல்லாம ஒட்டிட்டிருந்தாங்க. போகும் போது "டேய் ஒரு எடம் பாக்கி வைக்காதீங்கடா... காலைல பாக்கும் போது கண்ணுல பட்டுட்டே இருக்கணும். எவனாவது வம்பு பண்ணா ஒடனே பசங்கல வர சொல்லு" என சொல்லிட்டே போன அந்த பசங்களோட வயசு 13 முதல் 17 வரைக்கும் தான் :-(
கலவரம் அன்று
காலை முதலே மேள தாள சத்தம் விடாமல் காதுளில் ஒலி(ழி)த்து கொண்டிருந்தது. ஆங்காங்கே பந்தல் போட்டு பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி சமைச்சுட்டு இருந்தாங்க. பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக (அதுக்காக தான் பண வசூல் நடந்தது). எந்த அசம்பாவிதமும் நடக்காத நிம்மதியில் டீவி பார்த்துக்கொண்டிருந்தேன். காலை 10 மணி இருக்கும். பட்டாசு சத்தமும், புகையும் வீடு வரை புகுந்தது. நல்லா கொண்டாடுதுக பயபுள்ளைகன்னு நெனச்சுட்டிருக்கும் போதே வெளியே சென்ற என்னவரிடம் இருந்து போன். "ஊர் புல்லா ஒரே கலவரமா இருக்கு. வெளியே யாரும் போகதீங்க. சூட்டிங் ஆர்டர் கொடுத்துட்டாங்க. ஆளுகள வெரட்ட கண்ணீர் புகை குண்டு வீசிட்டு இருக்காங்க. நிறைய கார்களுக்கு தீ வச்சுட்டாங்க"ன்னு சொன்னதும் தான் //பட்டாசு சத்தமும், புகையும் // துப்பாக்கி சத்தமும், கார் எரிஞ்சதால் வந்த புகையும் என தெரிந்தது.
கலவரத்தன்று கண்ணில் பட்ட சில நிகழ்வுகள்

- பெட்ரோல் பங்கில் உள்ள மெஷின்கள் மற்றும் அங்கியிருக்கும் காலேஜ் பஸ்கள் அடிச்சு நொறுக்கிட்டு இருந்தாங்க. தீ வைக்க வரும் போது நல்லவேளையாக போலீஸால் விரட்டியடிக்கப்பட்டார்கள். தீ வைக்கப்பட்டால் கண்டிப்பாக பல உயிர் சேதம் ஏற்ப்பட்டிருக்கும் நாங்கள் உட்பட :-(
- சினிமாவில் மட்டுமே பார்த்த துப்பாக்கிகள் ஒவ்வொருவரின் கால்களையும் குறி பார்த்து பதம் பார்த்த போது சில வினாடி இதயம் நின்று இயங்கியது போன்ற உணர்வு.
- லத்தியால் ரத்தம் வரும் அளவுக்கு அடி வாங்கியும் நகராமல் மேலும் தாக்க வந்த போராட்டக்காரர்களை பாக்கும் போது என்னத்த சொல்ல என்பது போன்ற உணர்வு தான் :-(
- நெறைய பேருக்கு முட்டிக்காலில் குண்டடி. ஒருத்தனுக்கு தொடைல, மூனுபேருக்கு நெஞ்சுல, ஒருத்தனுக்கு கழுத்திலும் என கலவரத்தில் கலந்துக்கொண்டவர்கள் அவ்வப்போது கத்திக்கொண்டே தெருக்களில் ஓடிக்கொண்டிருந்தாங்க போலீஸின் தாக்குதலுக்கு அஞ்சி.
- 2 பேருக்கும் நடக்கும் தகராறில் ஓரமா நிக்கிற பஸ்ஸும் போஸ்ட் மரத்துல இருக்குற லைட்டும் என்ன பாவம் செஞ்சுச்சுன்னு தெரியல. கல்லில் சுக்குநூறாக்கப்பட்டது. எங்கேயெல்லாம் குடிசை இருந்ததோ அங்கேயெல்லாம் தீ வைக்கப்பட்டது.
- கலவரம் நடந்ததால் பாதி சமையல் முடிக்காமலேயே நிறுத்தப்பட்டது. சமைச்சு முடிச்ச உணவுகளை சாப்பிட ஆட்கள் வராததால் சாலைகளில் கொட்டப்பட்டது.
- எங்கு பார்த்தாலும் கற்கள் மற்றும் இரத்த கரை படிந்த வேஷ்ட்டிகள்.
- கலவரம் கட்டுக்குள் வந்த பின் நிமிடத்திற்கொரு முறை சாலையில் போலீஸ் ரோந்து வாகனம் தவிர ஈ, கொசு கூட இல்ல.
நடந்தது இது தான்
இந்த முறை வழக்கத்தை விடவும் அதிக விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. அதில் சில (போஸ்ட்டர்களிலும் கலவரத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்னதன் அடிப்படையில் ).இந்த குருபூஜையையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தை விரிவுபடுத்த/மேம்படுத்த வேண்டும். வெங்கல சிலை திறக்கப்பட வேண்டும். தியாகி இமானுவேல் கொலை செய்யப்பட்ட இடத்தில் நினைவுதூண் அமைக்க வேண்டும் மற்றும் முதல் நாள் அன்று மர்ம முறையில் இறந்த சிறுவனின் உடலை தங்கள் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் வந்த பின் தான் எடுக்கப்பட வேண்டும் முதலியவை. இந்த பூஜையில் கலந்துக்கொள்வதற்காக (அல்லது இறந்த சிறுவனின் உடலை மீட்பதற்காகன்னு 2 விதமாக காரணங்கள் சொல்லப்படுகிறது) வரவிருந்த ஜான் பாண்டியன் என்பவர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டதால் அவரை விடுவிக்க கோரி அவரின் ஆதரவாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீரென போலீஸாரும் போராட்டத்தை அடக்க தன் வேலையை துவங்கிட்டாங்க.
புயலுக்கு பின்னும் புயலே.....
கலவரம் நடந்த அன்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி பரிதவிக்கும் கொடுமை இல்லை. மட்டுமல்லாது ஒன்றுமறியா அப்பாவிகள் மாட்டியிருக்க வாய்ப்பில்லாமல் போனது நிம்மதியே. மதியம் 3 மணிக்கு மேல் கலவரம் கட்டுக்குள் அடக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் சிறிது சிறிதாய் கலைய தொடங்கினர். அத்துடன் நின்றுவிட்டதாய் எண்ணி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் போதே 144 தடை போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2 பேருக்கு மேல் ஒன்றாக சென்றால் பார்த்த இடத்திலேயே சுட உத்திரவிடப்பட்டதால் தெருக்கள் வெறுச்சோடியிருந்தது. இருட்டான பின்பும் தெரு லைட்கள் போடப்படவில்லை. பஸ்கள் ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தவிர எந்த வாகனத்திற்கும் பெட்ரோல் போட அனுமதிக்கப்படவில்லை. முழுவதும் கலவரம் அடங்கும் வரை நாட்கள் குறிப்பிடாமல் பள்ளிகள்,கல்லூரிகள், அலுவகங்களுக்கு விடுமுறை. உணவகங்கள் இயங்க வில்லை. இதனால் முழுவதுமாக மக்கள் வாழ்க்கை முடங்கி போனது. கலவரம் ஓய்ந்தும் வெளியே வர இன்னும் பலர் தயங்குகிறார்கள். சாலைகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் ரோந்து வாகனங்களை கண்டு நம்மையும் சுட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் ஓடி ஒளியும் காட்சி வேதனை. காய்கறி வரத்து இல்லாததால் 2 மடங்கு விலை வைத்து விற்கப்படும் வெங்காயமும் தக்காளியும் வாங்க முடியாமல் நடுத்தர வர்க்கம் படும் திண்ட்டாட்டம் கொடுமையானது. (மார்க்கெட்ல அது மட்டும் தான் இருக்கு. கறிவேப்பிலை கூட கிடைக்கல. 50 கடைகள் இருக்கும் மார்க்கெடில் 2 கடைகள் மட்டும் இருந்தது :-( எந்த ஒரு பொருளையும் அதிகமாக பணம் கொடுத்தால் கொடுப்போம் என்ற கள்ளச்சந்தை பரிமாற்றம் நிலவிவருகிறது (குறிப்பாக பெட்ரோல், அரிசி, காய்கறிகள்) வெளியூர்க்காரங்க ஊர்க்குள்ள வரவும், ஊரில் உள்ளவங்க வெளியூர் போகவும் தடை செய்யப்பட்டுள்ளதால் போக இடமும் இல்லாமல் மாற்று ஏற்பாடும் இல்லாமல் பல பேர் திண்டாடி வருகின்றனர். இறந்தவர்களின் உடலை வாங்க உறவினர் மறுக்க முடிவெடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் :-(

சில்லி கொஸ்டீன்
- வழக்கத்தை விட ஏன் இம்முறை அதிகப்படியான விழா ஏற்பாடுகள்?
- ஏன் இத்தனை.இத்தகைய கோரிக்கைகள்
- என்றும் இல்லாத அளவுக்கு ஏன் இத்தனை காவல் படையினர்?
- சம்மந்தமில்லாமல் ஏன் திடீர் போராட்டம்?
- பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஏன் உடனடியாக சுடுவதற்கான உத்தரவு?
- பூஜைக்கு கலந்துக்கொள்ள வந்தவர்களின் கைகளுக்கு மண்ணெண்ணெயும் கற்களும் எப்படி வந்தது?
- நினைவிடத்துக்கு போகும் போது எதற்காக அநாகரிக பேச்சுக்கள், நடவடிக்கைகள்?
- கலவரம் நடக்க போவது முன்பே கணிக்கப்பட்டவிட்டதன் மர்மன் என்ன என்ற சமானியனின் கேள்வி நியாயமானது தானே
- தவறு உண்மையில் யார் மீது? இரு தரப்பினரின் நோக்கம் என்ன?
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment