Tuesday, September 13, 2011

முஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்7


''இத்தா''வின் வகைகள்
இத்தா நான்கு வகைகளாக உள்ளது :
1. கற்பிணியின் 'இத்தா' இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கை யில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
2. மாதவிடாய்வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய 'இத்தா' மூன்று மாதவிடாய்களாகும்.
''தலாக்' கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:228)
3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண். இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண். இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
''மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடு வது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன் 65:4)
4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தாவைப் பற்றி குர்ஆன் கூறும்போது.
''உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.'' (அல்குர்ஆன் 2:234)
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும். கற்பினி பெண்ணிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில், அவள் பின்வரும் இறை வசனத்தின் மூலம் விதிவிலக்கைப் பெறுகிறாள்.
''கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தா வின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.'' (அல்குர்ஆன் 65:4) (அல்ஹதியுந் நபவீ 5ழூ ழூ594, 595)
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை :
1. ஒரு முறையோ இரண்டு முறையோ 'தலாக்' சொல்லப் பட்ட பெண் இத்தாவில் இருக்கும்போது வெளிப் படையாகவோ, சைக்கினையாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் மற்றவர் பெண் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் இத்தா காலத்தில் இருக்கும் வரை கணவன், மனைவி என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறார்கள். எனவே அவளிடம் வேறு நபர் திருமணப்பேச்சுக்கள் பேசக்கூடாது. இத்தாகாலம் முடியும் வரை அவள் தன் னுடைய கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கிறாள் என்பதையும் கவனிக்க!
2. மூன்று தடவை 'தலாக்' சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது சைக்கினையாகவோ, பம்ரங்க மாகவோ, பெண் பேசுவது கூடாது.
''இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.'' (அல்குர்ஆன்: 2:235)
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப் பது நான் உன்னைத் திருமணம் செய்யவிரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரண மாக 'இத்தா' காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சி னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள் ளேன்.என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப் பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
'இத்தா' காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது :
அல்லாஹ் கூறுகிறான்: ''மேலும் 'இத்தா'வின் கெடுமுடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:235)
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ509 ல் கூறுகிறார்கள்.
இத்தாகாலம் முடியும் வரை திருமண ஒப்பந்தம் செய்யாதீர்கள். இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்தால் அது செல்லாதும் என அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
இரண்டு விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன :
1. திருமணமான பின்னர் உடலுறவு கொள்வதற்கு முன்பாக ஒருவர் விவாகரத்து செய்து விடுவாரானால் இந்த நிலையில் உள்ள பெண்ணுக்கு 'இத்தா' கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையு டைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை.ம் (அல்குர்ஆன் 33:49)
இமாம் இப்னு கªர் தம் தப்ªர் 5ழூ ழூ479 ல் குறிப்பிடுகிறார். இது மார்க்க அறிஞர்களிடையே ஏகோபித்த முடிவாகும். அதாவது ஒரு பெண் திருமண மாம் அவளுடன் உடலுறவு கொளவ்தற்கு முன்பாக கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அவள் 'இத்தா' அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. உடனேயே அவள் விரும்பிய வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
2. ஒரு பெண் திருமணமாம் உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவை யானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும்.
திருமணமாகி உடலுறவு கொண்ட பின்னர் விவாகரத்துச் சொல்வானானால் பெண்ணிற்குரிய முழு மஹரையும் கொடுத்துவிடவேண்டும்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுக்கான மஹரை நிர்ணயம் செய்வதற்கு முன்பு 'தலாக்' சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. என்றாலும் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்கு தக்க அளவும், ஏழை அவனுக்கு தக்க அளவும் கொடுத்து நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.
''ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன்பு மஹர் நிச்சயித்த பின்னர் நீங்கள் 'தலாக்' சொல்வீர்களானால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு.'' (அல்குர்ஆன் 2:236, 237)
அதாவது கணவன்மார்களே! நீங்கள் திருமணம் செய்த பெண்ணை உடலுறவு கொள்வதற்கும், மஹ்ரை நிச்சயிப்பதற்கும் முன் விவாகரத்து சொல்வதில் குற்ற மில்லை. அதே நேரத்தில் இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்குப் பரிகாரமாக அவளுக்கு கணவனின் நிலமையை அனுசரித்து உதவி செய்யவேண்டும். வசதியுள்ளவன் அதிகமாகவும், வசதி யற்றவன் குறைவாகவும் கொடுக்கவேண்டும்.
மஹர் தொகையை நிச்சயித்தவன் பாதி மஹரை கொடுக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ512 ல் கூறுகிறார்.
இந்நிலையில் அதாவது மஹர் தொகையை நிச்சயிய்த்து உடல் உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
3. கணவன் இறந்துபோன பெண் மீது ஐந்து விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. :
1. நறுமணம் உபயோகித்தல்
கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடையிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
''கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
2. உடல் அலங்காரம்
உடலில் மைலாஞ்சி போன்ற சாயம் இடுதல், அலங்காரம் செய்யும் நோக்கத்தில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிம்ச்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
3. ஆடையில் அலங்காரம்
கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத் தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
4. ஆபரணங்கள் அணிதல்
மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது. :
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப் படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற் காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவின ரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங் களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் அல்ஹதந் நபவி என்ற நூலில் 5ழூ ழூ507 ல் குறிப்பிடுகிறார்கள்.
நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைதல், நீக்குதல் சுன்னத்தாக்கப்பட்ட முடிகளை நீக்குதல், இலந்தை இலை போட்டுக் குளித்தல், தலை முடி கோருதல் போன்ற செய்லகளைச் செய்வதை விட்டும் இத்தாவில் இருக்கும் பெண்களைத் தடுப்பது கூடாது.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 34ழூ ழூ27, 28 ல் குறிப்பிடுகிறார்.
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனு மதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்த லாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை. இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது 'இத்தா' காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப் படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந் துள்ளார்கள்.
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டுமாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
பிரிவு 10 - பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :
1. ஆணைப் போன்றே பெண்ணும் தன் பார்வையைத் தாழ்த்தி கற்ப்பைப் பாதுகாக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள்.
''இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப்பாதுகாத் துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்த மானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.''
''அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள் ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும் என்று இறைநம்பிக்கையுள்ள பெண்களுக் கும் நீர் கூறும்!'' (அல்குர்ஆன் 24:30, 31)
ஷேக் முஹம்மத் அல்அமின் »ன்கீதீ தம் அள்வாவுல் பயான் என்ற தப்ªரில் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய பார்வையைத் தாழ்த்தி, கற்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். கற்பபைப் பாதுகாப்பது என்பதில் விபச்சாரம், ஆண் ஓரினச் சேர்க்கை (ஹோமோ செக்ஸ்), பெண் ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்), மனிதர்களிடத்தில் அருவெறுப்பாக நடப்பது, மர்மஸ் தலத்தை அவர்களிடத்தில் காட்டுவது ஆகியவை அடங்கும். இந்த வசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஆணுக்கும், பெண்ணுக்கும் பாவமன்னிப் பையும், மகத்தான கூலியையும் கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித் துள்ளான். இதோடு அல் அஹ்ஸாப் என்ற அத்தியாயத்தில் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் பண்பு களையும் மனித இனம் செயல் படுத்துமாயின் மகத்தான நற்கூலி உண்டு.
''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தி யிருக்கிறான்.'' (அல்குர்ஆன் 33:35)
அள்வாவுல் பயான் 6ழூ ழூ186,187
முக்னி என்ற நூலில் 8ழூ ழூ198 ல் குறிப்பிடப்படுகிறது. ''இரண்டு பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவார் களானால் இருவரும் விபச்சாரிகளாவர். சபிக்கப்பட்ட வர்களாவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் விபச்சாரிகளாவர். இருவரும் எச்சரிக்கை செய்யப்படவேண்டியவர்கள் ஏனெனில், அச்செயல் தண்டனை வரையறுக்கப்படாத விபச்சார மாகும்.''
இஸ்லாமியப் பெண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குமரிப் பெண்கள் இதுபோன்ற தீய செயல்களை விட்டும் எச்சரிக்கையோடும், பாதுகாப் போடும் இருப்பது அவசியம்.
பார்வையைத் தாழ்த்திக் கொள்வது பற்றி இப்னுல் கையிம் அல்ஜவாபுல் காபி என்ற நூலில் 129,130-ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
பார்வைதான் இச்சையின் வழிகாட்டியாகவும், அதன் தூதாகவும் இருக்கிறது. பார்வையைப் பாதுகாப் பதுதான் கற்பைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாகும். யார் பார்வையைத் திறந்து விடுகிறாரோ அவர் தன்னை நாசத்தில் ஆழ்த்திவிடுகிறார்.
''அலீயே ஒரு பார்வையைத் தொடர்ந்து இன்னொரு முறை பார்க்காதே! உனக்கு முதல் பார்வை மட்டும் தான். (குற்றமற்றதாக இருக்கும்)'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மருமகன் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்கள்.
அதாவது திடீரென விழும் பார்வையினால் குற்றமில்லை, மேலும் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப் படுகிறது. பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் விஷ மூட்டப்பட்ட அம்பாகும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
மனிதனை வந்து சேருகின்ற எல்லாவிதமான பொதுவான சம்பவங்களும் பார்வையினால் தான்.
பார்வை உணர்வைத் தூண்டுகிறது. உணர்வு சிந்த னையைத் தூண்டுகிறது. சிந்தனை ஆசையைத் தூண்டு கிறது. ஆசை நாட்டத்தைத் தூண்டுகிறது. பின்னர் அது வலுவாகி உறுதியான எண்ணமாம் செயல் அளவில் நிகழக் கூடியதாக மாறி விடுகிறது. எனவே, பார்வையைத் தாழ்த்திக் கொள்வதின் மீது பெறுமை செய்வது, பார்ப்பதினால் ஏற்படும் தீய விளைவுகளின் மீது பொறுமை செய்வதை விட இலேசானதாகும் என்று சொல்லப்படுகிறது.
இஸ்லாமியப் பெண்ணே! அன்னிய ஆண்களைப் பார்ப்பதை விட்டும் உன் பார்வையைத் தாழ்த்திக் கொள்! தொலைக் காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டப் படும் மோசமான படங்களைப் பார்க்காதே! மோசமான முடிவை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்! பார்வைகள் பல மனிதர்களை கைசேதத்தில் தள்ளியுள்ளது. ஏனெனில் பெரிய தீ சிறிய தீப்பொறியிலிருந்து ஏற்படுகிறது.
2. கற்பைக் காத்துக் கொள்வதில் ஒன்று இசையுடனான பாடல்களை வெறுப்பதாகும்.
இகாததுல்லஹ்பான் என்ற நூலின் 1ழூ ழூ248 ல் இப்னுல் கையிம் குறிப்படுகிறார். அறிவும் புத்தியும் குறைந்தவர் களை தன்வசம் இழுப்பதில் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளதுதான் கைதட்டுதலும், சீட்டி அடித்தலு மாகும். குர்ஆனை விட்டும் திசை திருப்பும் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்படும் பாடல்கள் இவை பாவத்தின் மீதும் தவறின் மீதும் படிய வைத்து விடுகிறது. இவை ஷைத்தானின் வாக்குகளாகவும் அல்லாஹ்வை விட்டும் தடுக்கக் கூடியதாகவும் உள்ளன. அவை ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்திற்குரிய மந்திரமாகவும் உள்ளன. இதன் மூலம் கெட்ட காதலன் தன் காதலியிடம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலை ஏற்படுகிறது.
அதே நேரத்தில் இசை கருவிகளுடன் பாடல்களை பெண்களிடமிருந்தும், முடி முளைக்காத இளைஞர் களிடமிருந்தும் செவியுறுவது மிகப்பெரிய தவறானதா கவும் விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. மார்க்கத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. மார்க்கத்தின் மீது பற்றுள்ள வன் இசைக்கருவிகளைக் கேட்பதை விட்டும் தம் குடும்பத்தை தடுத்து நிறுத்தட்டும். அதற்குக் காரணமான வற்றை விட்டும் தடுக்கவேண்டும். சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டும் அவர்களைத் தடுப்பது மார்க் கத்தின் மீது ரோஷம் கொண்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்..
ஒரு பெண்ணைத் தன் வசப்படுத்துவது ஆண் மீது சிரமமாகும்போது அந்தப் பெண்ணுக்கு இசைப்பாடல் களை கேட்கச் செய்யமுயற்சிப்பான். அப்போது அவளு டைய மனம் இளகும். ஏனெனில் பெண்களைப் பொறுத் தவரை இராகங்களுக்கு விரைவாக வசப்பட்டு விடுவார்கள். ராகம் இசையோடு இருக்கும்போது அவளுடைய உணர்வுகள் இரண்டு விதத்தில் அதிகரிக்கிறது. ஒன்று இசை சப்தத்தின் மூலமும், மற்றொன்று அதில் நிறைந் திருக்கும் பொருள் மூலமும், இதோடு கூட ஆடலும் பாடலும் சேரும்போது இன்னும் அதிகமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. பாடல் மூலம் ஒரு பெண் கற்பம் தரிப்பதாக இருந்தால் இதுபோன்ற பாடல்களால் கற்பம் தரித்துவிடுவாள் அந்த அளவிற்கு மோசமாக இன்றைய பாடல்கள் உள்ளன. அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எத்தனையோ சுதந்திரமான பெண்கள் பாடல்களால் விபச்சாரிகளாக மாறியுள்ளார்கள்.
இஸ்லாமியப் பெண்ணே! நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மிகவும் விபரீதமான இந்த கெட்ட குண நோயி லிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்! இது பல விதத்தில் முஸ்லிகளுக்கிடையில் பரப்பி விடப்பட்டுள் ளது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு ஞானம் இல்லாத எத்தனையோ இளம் பெண்கள் அந்த பாடல்களை அது தயாரிக்கப்படும் இடங்களிலிருந்தே பெற்று அதை ஒருவருக்கொருவர் அன்பளிப்பும் செய்கின்றனர்.
3. கற்பைப் பாதுகாக்கும் காரணங்களில் ஒன்று பெண்கள் திருமணம் செய்வது தடை செய்யப்படாத ஆண்களுடன் பயணம் செய்வதைத் தடுப்பது அவளைக் கெட்டவர்களின் தவறான எண்ணங்களை விட்டும் பாதுகாக்கும்.
திருமணம் தடை செய்யப்பட்டவர்கள் அல்லாது மற்றவர்களுடன்பயணம் செய்வதைத் தடைசெய்து சரியான ஹதீஸ்கள் வந்துள்ளன.
''ஒரு பெண் திருமணம் செய்வது தடை செய்யப் பட்டவர்களுடனின்றி மூன்று நாட்கள் பயணம் செய்வது கூடாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
''தன்னுடன் கணவனோ, திருமண உறவு தடை செய்யப்பட்டவனோ இல்லாமல் இரண்டு நாள் பயணத்தை ஒருபெண் மேற்கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.'' (நூற்கள்:புகாரி, முஸ்லிம்)
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிற ஒருபெண் தனக்குத் திருமணம் தடை செய்யப்பட்டவரின் துணையின்றி ஓர் இரவு ஒரு பகல் பயணம் செய்வது கூடாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஹதீஸ்களில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என்று வந்திருப்பதன் பொருள் அந்த காலத்தில் உள்ள பயணத்திற்கான வாகனங்களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டதாகும். பயணம் என்று சொல்லப்படு கின்ற எதுவாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டது தான் என மார்க்க அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
இமாம் நவவீ ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் விளக்கவுரையில் 9ழூ ழூ103 ல் குறிப்பிடுகிறார்.
பயணம் என்று சொல்லக்கூடியது எதுவாக இருந் தாலும் அதில் ஒருபெண் தன் கணவனுடைய துணை அல்லது திருமண உறவு தடை செய்யப்பட்ட நபரின் துணையின்றி பயணம் செய்வது கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. காரணம் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பில் இது தொடர்பான ஒரு ஹதீஸ் பொதுவாகவே உள்ளது. திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபருடனேயே அன்றி ஒரு பெண் பிரயாணம் செய்ய மாட்டாள் என ஹதீஸில் வந்துள்ளது. அதையே இறுதியான அறிவிப்பாகக் கொள்ளவேண்டும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்.)
கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக பெண்கள் கூட்டத்துடன் பிரயாணம் செய்யலாம் என சிலர் கூறியுள்ளனர்.ஆனால் இது நபிவழிக்கு மாற்றமானதாகும்.
இமாம் கத்தாபி மஆலிமுஸ்ªனன் என்ற நூலில் 2ழூ ழூ276ல் இவ்வாறு குறிப்பிடுகிறார். திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஆணுடைய துணையின்றி பெண் பயணம் செல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள் ளார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனையாக்கியது தவிர ஒரு பெண்ணுக்கு ஹஜ்ஜுக்காக பயனம் செய்வதை அனுமதிப்பது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள ஆண் களுடன் பயணம் செய்வது பாவமானதாகும். அந்த நேரத்தில் அவள் மீது ஹஜ் கடமையாகாது. பாவத்தின் பால் கொண்டு சேர்க்கும் வழியாக அது ஆம்விடும்.
பெண்கள் மற்றவர்களுடன் பயணம் செய்வதை பொதுவாகவே சில அறிஞர்கள் அனுமதிக்கவில்லை கடமையான ஹஜ் பிரயாணத்திற்கு மட்டும்தான் இந்த அனுமதி என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ249 குறிப்பிடுகிறார்கள்.
கடமையல்லாத பயணம், வியாபாரம் தொடர்பான பயணம் சந்திப்பிற்காக மேற்கொள்ளும் பயணம் போன்றவற்றில் திருமண உறவு தடை செய்யப்பட்டுள்ள நபர்களுடன்தான் ஒருபெண் பயணம் செல்ல வேண்டும்.
பெண்கள் எந்த பயணத்திலும் யாருடனும் செல்லலாம் என இக்காலத்தில் சொல்லக் கூடியவர்களின் கூற்றை மார்க்க அறிஞர்களில் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பெண்களைப் பொறுத்தவரை விமானத்தில் தனிமை யில் பயணம் செய்யும்போது அவளைத் திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஒருவர் விமானத்தில் அவளை ஏற்றிவிடுகிறார்; மற்றொருவர் விமானத்தைவிட்டு இறங்கும்போது வரவேற்கிறார்; விமானத்திலோ அதிக மான ஆண்களும் பெண்களும் இருப்பதால் அது பாதுகாப்பானதாக அமையும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவர்களின் இந்தக் கருத்து சரியில்லை. ஏனெனில் விமானம்தான் மற்ற வாகனங்களை விட அதிக ஆபத்தானதாக உள்ளது. அதில் பயணிகள் ஆண் - பெண் என்ற எவ்வித வித்தியாசமும் இன்றி இரண்டறக் கலந்திருக்கிறார்கள். சிலவேளை அன்னிய ஆண்களின் அருகாமையில் உட்காரவேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சில சமயங்களில் விமானத்தை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுகின்றனர். அப்போது அவளை வரவேற்க அங்கு யாரும் இல்லாது போய் விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில் அவள் ஆபத்து களைச் சந்திக்கின்றாள். எதுவும் தெரியாத யாரும் இல்லாத அந்நாட்டில் அவளால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்கள் சற்று யோசிக்கத் தவறிவிட்டார்கள்.
4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும்.
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அவளிடம் திருமணம் தடைசெய்யப்பட்ட நபர் இல்லாத நிலையில் எந்தப் பெண்ணுடனும் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணுடன் தக்க துணையின்றி தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாவது நபராக ஷைத்தான் புகுந்துவிடுவான்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
''எந்த ஓர் ஆணும் எந்த ஒரு அன்னியப் பெண்ணு டனும் தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் மூன்றாவது நபராக வந்து விடுகின்றான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என ஆமிர் இப்னு ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத்)
இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 61ழூ ழூ20 என்ற நூலில் குறிப்பிடுகிறார். அன்னியப் பெண்ணுடன் தனி மையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தடுக்கப்படுவதற்குக் காரணம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் இருக்கும்போது ஷைத்தான் மூன்றாமவனாக இருக்கிறான் என்ற ஹதீஸாகும். ஷைத்தான் வந்துவிட்டால் அவன் பாவத் திலே அவ்விருவரையும் வீழ்த்தி விடுகிறாள். ஆனால் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆணுடன் இருக் கும்போது அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது அணு மதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு பாவம் நடப்பதற் குண்டான சாத்தியம் மிகமிகக்குறைவாக உள்ளது.
சில பெண்களும், அவர்களுடைய பொறுப்புதாரிகளும் அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் பலவகைகளில் தனிமையில் இருப்பதைப் பற்றி பொருட்படுத்தாது இருக்கின்றனர்.
ஒரு பெண் தன் கணவனின் ஆண் உறவினருடன் இருப்பது. அவர் முன் முகத்தைத் திறந்து நிற்பது இது எல்லா நிலையையும் விட மிக ஆபத்தானது.
''அன்னியப் பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குள் நுழையாதீர்கள்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அன்சாரித் தோழர்களில் ஒருவர், 'கணவனின் சகோதரனும் செல்லக்கூடாதா?' எனக் கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வெறுப்பாக அதை மரணத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்''
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) பத்ஹுல்பாரி என்ற நூலின் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார்.
இமாம் நவவீ கூறுகிறார். கணவனின் உறவினர்கள் என்பது அவனுடைய தந்தை, அவனுடைய தந்தையின் உடன் பிறந்தோர், சகோதரர்கள் சகோதரரின் மகன், தந்தையின் உடன் பிறந்தோரின் மகன் போன்ற வர்களாவார்கள்.
என்றாலும் மேலுள்ள ஹதீஸில் கணவனின் தந்தை கணவனின் மகன்கள் சேரமாட்டார்கள். ஏனெனில், இவர்களைத் திருமணம் செய்வது அவளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அவளுடன் தனிமையில் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தில் சகோதரன் தன் சகோதரன் மனைவியுடன் தனிமையில் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதை இலேசாகவும் நினைக்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். இதுதான் மரணத்திற்கு ஒப்பானது, இது தடுக்கப்பட வேண்டியதாகும்.
இமாம் ஷவ்கானி நைனுல் அவ்தார் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார். கணவனின் உறவினர் (சகோதரருடன்) ஒருபெண் தனிமையில் இருப்பதை மரணத்திற்கு ஒப்பிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதன் நோக்கம் அதனால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சத்தின் காரணத்தினால் தான். மரணத்தினால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சம் மற்றவைகளினால் ஏற்படுகின்ற அச்சத்தை விட எவ்வாறு அதிகமானதாக உள்ளதோ அதைப் போன்றே இதுவும் இருக்கிறது.
இஸ்லாமியப் பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்காதே! மக்கள் பொடுபோக்காக இருந்தாலும் சரியே நீ அப்படி இருக்காதே! ஏனெனில் ஷரீஅத்தின் சட்டம்தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர மக்களின் பழக்க வழக்கங்கள் அல்ல.
2. திருமண உறவு விலக்கப்படாத ஆண் டிரைவர்களுடன் பெண்கள் தனியாகப் பயணம் செய்கின்றனர். இதில் சில பெண்களும், அவர்களின் பொறுப்பாளர்களும் மெத்தனமாக இருக்கின்றனர். இவ்வாறு ஆணுடன் தனிமையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் ச¥தி அரோபியாவில் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்தவர். மார்க்க தீர்ப்பு தொகுப்பு 10ழூ ழூ52 ல் குறிப்பிடு கிறார். ''எவ்வித சந்தேகமுமின்றி, ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் பயணம் செய்வது பம்ரங்கமாக வெறுக்கப் பட்டுள்ளது. இதனால் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. இதை யாரும் இலேசாகக் கருதிவிடமுடியாது. இதில் எவ்வளவுதான் பத்தினிப் பெண்ணாக இருந்தாலும் கண்ணியமான பெண்ணாக இருந்தாலும் சரிதான்.''
இப்படி செல்வதை தனது பெண்ணுக்கு அனுமதிப்பவன் மார்க்கப்பற்றும் தன் பெண்கள் விஷயத்தில் ரோஷம் குறைந்தவனாகவும் இருப்பான்.
''ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஒரு பெண் ஓர் ஆணுடன் வாகனத்தில் தனிமையில் பயணம் செய்வது வீட்டில் தனிமையில் இருப்பதை விட மிக மோசமானதாகும். ஏனெனில் வாகனத்தின் மூலம் அவளை ஊருக்கு உள்ளேயோ, ஊருக்கு வெளியேயோ, அவள் விரும்பியோ, விரும்பாத நிலையிலோ எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பயங்கரமான குழப்பங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பெண்ணுடன் துணைக்குச் செல்லுகின்றவர்கள் பெரிய வயதுடையவர்களாக இருக்கவேண்டும். சிறிய குழந்தைகள் மட்டும் இருப்பது போதாது. குழந்தையை உடன் எடுத்துச் சென்றால், அதைத் தனிமையாகக் கருத முடியாது என சில பெண்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
இமாம் நவவி தம்முடைய மஜ்மூவு 9ழூ ழூ109 ல் குறிப்பிடுகிறார்.
ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் மூன்றாவது நபர் இல்லாது தனித்திருப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி தவறாகும். இவ்வாறே அவளு டன் வெட்கத்தலங்களைப் பற்றி நன்கு அறியாத சிறிய குழந்தைகள் இருப்பதால் அவள் தனிமையில் இருக்க வில்லை என்று வாதிட முடியாது.
3. சில பெண்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறோம் என்ற பெயரில் தனிமையில் மருத்துவரிடம் செல்லும் விஷயத்திலும் பொடுபோக்காக இருக்கிறார்கள். இது பெரும் தவறாகும். இது ஆபத்தையும் விளைவிக்கும். இறையச்சமுள்ள யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முஹம்மத் இப்னு இப்ராஹீம் அவர்கள் ஃபத்வா தொகுப்பு 10ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்கள்.
எப்படி இருந்தாலும், ஒருபெண் அன்னிய ஆண் களுடன் தனிமையில் இருப்பது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது. அது சிம்க்சை செய்யும் மருத்து வருடனாக இருந்தாலும் சரியே. ஏனெனில்,
''ஒருபெண் ஓர் ஆணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவளுடன் அவளுடைய கணவன் அல்லது வேறு யாராவது ஒருவர் இருக்கவேண்டும். இல்லையென்றால் சொந்தத்தில் உள்ள குடும்பப் பெண்கள் அவளுடன் இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால் ஆபத் தான நிலையில் குறைந்தது ஒரு நர்ஸாவது அவளுடன் இருந்தாகவேண்டும்.
அவ்வாறே நெருங்கிய நண்பர்களாயினும், பணியா ளாயினும் ஒரு மருத்துவர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. கண்பார்வையற்ற ஆசிரியர் மாணவியுடன் தனிமையில் இருப்பதும், விமானப் பணிப் பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருப்பதும் கூடாது. நவநாகரீகம் என்ற பெயரில் இறைமறுப்பாளர் களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலும், மார்க்க விஷயங்களைப் பொருட்படுத்தாமலும் இலேசாகக் கருதுகின்றனர்.
''லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்''
தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருப்பதோ, அவ்வாறே ஒருபெண் தன் வீட்டில் பணிபுரியும் ஆணுடனும் தனிமையாக இருப்பதோ கூடாது. வீட்டுப் பணியாளர் களால், பலர் பெரும் சோதனைக்குள்ளாகிறார்கள். இதுவும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதாகும். பெண்கள் கட்டுப்பாடின்றி தங்கள் வீட்டிற்கு வெளியில் வேலைக்குச் செல்வதால் இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன. இறைநம்பிக்கையுள்ள ஆண்களும், பெண்களும் இன்றைய காலச் சூழலில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். அவசியம் மற்றும் அவசரமான வேலைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். தீய பண்புகளைத் தூர்வாறவேண்டும்.
கைலாகுச் செய்தல் (முஸாஃபஹா) :
ஒருபெண் அன்னிய ஆண்களுடன் கைலாகு (முஸாஃபஹா) செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல் அªஸ் இப்னு பாஸ் அவர்கள் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ள மார்க்கத்தீர்ப்புகள் தொகுப்பு 1ழூ ழூ185 ல் குறிப்பிடுகிறார்கள்.
ஒருபெண் பிறஆண்களுடன் கைலாகு செய்வது பொதுவாகக் கூடாது. அவர்கள் குமரிப் பெண்களாகவோ, வயோதியர்களாகவோ இருப்பினும் சரியே. கைலாகு செய்பவர் இளைஞராகவோ, வயோதியராகவோ இருப்பினும் சரியே. ஏனெனில் இதனால் இருசாராரும் உணர்ச்சிகளால் உந்தப்படும் அபாயம் இருக்கிறது.
''நான் பெண்களிடத்தில் கை கொடுக்க மாட்டேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னியப் பெண்களின் கரத்தைத் தொட்டதில்லை. வாய் மூலமாகத்தான் அவர் களிடம் பைஅத் எனும் உறுதிமொழி வாங்குவார்கள்'' என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்.
கைலாகுச் செய்யும் போது கை உறை அணிந்திருந் தாலும், அணியாமலிருந்தாலும் இது கூடாது. குழப்பத் தின் வாயில்களை அடைப்பதற்காக சட்டங்கள் இவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன.
ஷேக் முஹம்மத் அமீன் »ன்கீதி தம் அள்வாவுல் பயான் என்ற தப்ªரில் 6ழூ ழூ602,603 ல் குறிப்பிடுகிறார். அறிந்து கொள்! ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் கைலாகுச் செய்வது கூடாது. ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் உடலுடன் உடல் உரசுவதும் கூடாது.
இதற்கான ஆதாரங்கள் பல :
1. ''நான் பெண்களுடன் கைலாகுச் செய்யமாட்டேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி பெண்களுடன் கைகுலுக்காதிருப்பது ஆண்கள் மீது கடமையாகும்.
இந்த ஹதீஸ்பற்றிய விளக்கத்தை 'ஹஜ்' அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணியும் நேரத்திலும் மற்ற நேரங்களிலும் சாயமிடப்பட்ட ஆடைகளை ஆண்கள் பொதுவாகவே அணிவது கூடாது எனச் சட்டம் கூறும் போது இதைக் கூறியுள்ளோம்.
'அஹ்ஸாப்' அத்தியாயத்தில் பர்தாவைப் பற்றி வந்துள்ள வசனமும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிற பெண்களி டம் உறுதி மொழி பெறும்போதும், கை குலுக்கமாட் டார்கள் என வந்திருப்பதும் ஆண்கள் பெண்களுக்கு கைகொடுக்கக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரங் களாகும். மேலும் பெண்ணின் உடம்பில் எந்தப் பாகத்தை யும் தொடக்கூடாது. ஏனெனில் தொடுதல் என்பதன் இறுதி நிலைதான் கைகொடுத்தல் எனப்படுகிறது.
கை கொடுப்பது முக்கிய நேரமான உடன்படிக்கை யின் போதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் bஅவர்கள் பெண்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் எந்த நேரத்திலும் அது கூடாது என்பதற்கு இது ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுக்கு மாறு செய்யும் துணிச்சல் யாருக்கும் இல்லை. ஏனெனில் அவர்கள் தம் உம்மத்தினருக்குச் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் மூலம் சட்டம் கொடுத்த வல்லுனர்.
2. நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.
3. கை கொடுப்பது அன்னியப் பெண்களுடன் இன்பம் அனுபவிப்பதற்குக் காரணமாகிறது. குறிப்பாக இறையச்சம் குறைந்து, நம்பிக்கை இழந்து, பேனுத லற்றுப்போன இக்காலத்தில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்மார்களில் சிலர் மனைவியின் சகோதரியின் வாயில் வாய் வைத்து முத்தமிட்டு ஸலாம் கொடுக்கும் பழக்க முடை யவர்களாக இருக்கின்றனர். இதை ஸலாம் சொல்லும் முத்தம் என்று கூறுகின்றனர். இது அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துப்படி தடுக்கப்பட்டதாகும். அவளுக்கு ஸலாம் சொல்லுதல் என்றால் அவளுக்கு முத்தமிடுதல் என்று பொருள் கொள்கின்றனர்.
சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை எதுவென்றால், இதுபோன்ற எல்லாத் தவறுகளை விட்டும் அதற்குக் காரணமாக இருப்பவைகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.
முடிவுரை :
இறைநம்பிக்கையுள்ள ஆண்களே! இறைநம்பிக்கை யுள்ள பெண்களே! பின்வரும் அல்லாஹ்வின் உபதே சத்தை உங்களுக்கு மீண்டும் நினை¥ட்டுகிறேன்.
''நபியே! இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள் ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
இன்னும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள் ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை, அதிலிருந்து சாதார ணமாக வெளியில் தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டா திருக்கட்டும். இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தங்கள் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் கீழ் உள்ள அடிமைகள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களை விரும்பமுடியாத அளவு வயதானவர்கள் அல்லது பெண்களின் மறைவான அங்கங் களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள், ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்குத் தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரங்களி லிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை ப+மியில் தட்டி நடக்கவேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் பாவமன்னிப்புக்கோரி நீங்கள் வெற்றிபெறுவதற்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.'' (அல்குர்ஆன் 24:30,31)
எல்லாப்புகழும், அகிலங்களைப் படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே! நம் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::