Saturday, May 21, 2011

இளைஞர்களின் ஆண்மை பறிபோகும் அபாயம்!

ளைஞர்களின் ஆண்மை பறிபோகும் அபாயம்!


[ தமிழ்நாட்டு இளைஞர்களில் பலர் சிறிது சிறிதாக ஆண் தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலை மருத்துவ நண்பர் ஒருவர் சொன்ன போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
மனைவி அல்லது கணவனை தவிர மற்றவர்களுடன் உடலுறவு ஏற்படுத்தி கொள்வதை எந்த நாட்டு மக்களும் கவுரமாக நினைப்பதில்லை. அப்படி மாறுபட்ட உறவுகளை மனிதர்கள் உருவாக்கும் போது எவ்வளவு தைரியவான்களாக இருந்தாலும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தாலும் இயற்கையாக ஏற்படும் பயம், பதட்டம் இவைகளில் இருந்து தப்பித்து விட முடியாது. உடலுறவு சமயத்தில் பாதுகாப்பு உணர்வு இல்லாது போனால் நிச்சயம் நரம்புகளும், இதயமும் பலகீனமடைந்து ஆண்மை குறைவை ஏற்படுத்தியே தீரும்.
இக்கால இளைஞர்களிடத்தில் அதிவேகமாக குடிப்பழக்கம் பரவி வருகிறது. இன்று ஆண்கள் மட்டும் தான் மதுவிற்கு அடிமையானார்கள் என்ற நிலை மாறி பெண்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மதுக் கடலில் குதித்து முத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குடி பழக்கத்திற்கு அடிமையாகும் ஆண்களில் நாற்பது சதவிகித பேருக்கு குறி விறைப்பு தன்மையில் பாதிப்பு வருகிறது. ஐந்து முதல் பத்து சதவிகித பேருக்கு விந்து வெளியேறுவதில் சிக்கல் வருகிறது. மதுவிற்கு அடிமையான பெண்களில் ஐம்பது சதவிகித பேருக்கு பாலுணர்வு சிக்கலும், பதினைந்து சதவிகித பேருக்கு உறவில் உச்சகட்டம் ஏற்படுவதில் பிரச்சனையும் உருவாகி பெண் தன்மையை மட்டுப்படுத்துகிறது.]
தமிழ்நாட்டு இளைஞர்களில் பலர் சிறிது சிறிதாக ஆண் தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலை மருத்துவ நண்பர் ஒருவர் சொன்ன போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல் வேறொறு குண்டையும் அவர் தூக்கிப் போட்டார் நிலமை இப்படியே போனால் இன்னும் பத்து வருஷத்தில் தமிழ் நாட்டில் நூற்றுக்கு எட்டுப் பேருக்குத்தான் ஆண்மை இருக்கும் என்று இதுவரையும் இல்லாது சமீபகாலமாக இத்தகைய நிலை நமது இளைஞர்களுக்கு ஏற்பட என்ன காரணம்? உண்மையாகவே அப்படி நடந்து வருகிறதா? அல்லது திட்டமிட்டு யாரேனும் அத்தனைய தகவல்களை பரப்பி வருகிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது. ஏன் என்றால் இன்றைய பன்னாட்டு தொழிலமைப்புகள் எத்தகைய படுபாதக செயலையும் துணிந்து செய்ய கூடியவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையோ. பொய்யோ பொதுவுடமை கட்சியை சார்ந்த ஒரு நண்பர் சர்வதேச மருந்து கம்பெனிகள் நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமில்லை புதிய நோய்களை உருவாக்கும் மருந்துகளையும் தயாரித்து மக்கள் மத்தியில் நடமாட விடுகிறார்கள். பிறகு அதற்கு தடுப்பு மருந்துகளை தயாரித்து பல லட்ச கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள் என்ற அச்சம்மூட்டும் செய்தியை சொல்லியிருந்தார். அவர் கூறிய வார்த்தைகளில் பொய்மையோ. அபரீத கற்பனையோ இருப்பதாக படவில்லை. காரணம் எந்த நாட்டில் அழகு சாதன பொருட்களின் சந்தையை பிடிக்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றனவோ அந்த நாட்டின் மாடல் அழகி உலக அழகியாகவோ பிரபஞ்ச அழகியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ரகசியம் பல காலங்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்.
அதே போலவே தென்னக இளைஞர்களிடம் ஆண்மை குறைவு அதிகமாகயிருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞான ரீதியில் பிரச்சாரம் செய்து ஊக்க மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க சதி திட்டம் நடக்கிறதோ என்ற ஐயம் வந்தால் நிச்சயம் அதில் தவறில்லை. ஆனால் பல நடைமுறை சம்பவங்களை நேருக்கு நேராக பார்த்து போது மருத்துவ நண்பர் சொன்ன ஆண்மை குறைவு விஷயம் பொய்யானது அல்ல பச்சை உண்மை.
இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
மருத்துவ ரீதியில் சக்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் எனது முன்னோர்களுக்கோ. என் குடும்பத்தில் மற்றவருக்கோ சக்கரை நோயே கிடையாது. ஆனால் எனக்கு அது வந்து பெரும் தொல்லை தருகிறது. இதற்கு காரணத்தை தேடிய மருத்துவர்கள் அதிகபடியான மன அழுத்தமே எனக்கு வந்த நோய்க்கு காரணம் என்று சொன்னார்கள் அவர்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை. எனக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் என்ற எந்த விலங்கும் இல்லை. நான் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகளும் இல்லை. உண்பதற்கு சோறும், உடுப்பதற்கு ஒரு முழு துணியும் இருந்தாலே என் தேவைகள் பூர்த்தியாகி விடும்.
இன்றைய இளைஞர்கள் கஷ்டங்களையும் மன உளைச்சலையும் ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள் என்பது யதார்த்தமாகும். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வயதாலும் அனுபவமின்மையாலும் நமது இளம் தலைமுறையினர் சுமைகளை சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் மனமும், உடலும் பாதிப்படைகிறது. இது மட்டுமலல நாகரீகம் என்ற போர்வையில் நமது தேச பருவகாலத்திற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஏற்படுத்தி கொண்டும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பல நோய்களில் மிக முக்கியமானது சக்கரை நோய்.
சக்கரை நோயானது நாளமில்லா சுரப்பிகளை பாதித்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைந்து உடலுறவில் நாட்டமில்லாமல் அல்லது திருப்தியில்லாமல் மழுங்கடித்து விடுகிறது. இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என 1970 வரை நம்பப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட பல ஆய்வுகள் சக்கரை நோயினால் பாதிப்படைந்த பெண்களுக்கும், பால் உறுப்புகளில் மென்மை தன்மை அல்லது பசைதன்மை அதிகம் ஏற்பட்டு பாலுறவில் சிக்கல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மன அழுத்தத்தால் உருவாகும் உடல் நோய்கள் ஆண்மை குறைவை மட்டுமல்ல, பெண்மை குறைவையும் ஏற்படுத்துகிறது.
சக்கரை நோய் என்றில்லாமல் இளம் வயதினரை அதிகமாக தாக்கும் ரத்தகுழாய் தடிப்பு என்ற நோய் ஆண்குறி விறைப்பு தன்மையையும், பெண்கள் உச்சகட்டம் அடைவதில் இயலாமையையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தாக்குதல் காலம் என்பது உடல் வலுவை பொறுத்து சில மாதங்களோ, சில வருடங்களோ கூட நீடிக்கும் என அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதீதமான மன அழுத்தத்தால் ஏற்படும் நம்பு மண்டல பாதிப்புகள் பாலியியல் குறைபாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது.
உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் இருப்பதாலும் உடல் அசைவுகளை இயற்கைக்கு மாறாக அடக்கி வைப்பதனாலும் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இல்லாததினாலும் இதய பலகீனத்தாலும் இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் விலகிய பின்னரும் கூட அச்ச உணர்வு தொடர்வதினால் ஆண் தன்மை குறைகிறது.
இக்கால இளைஞர்களிடத்தில் அதிவேகமாக குடிப்பழக்கம் பரவி வருகிறது. இன்று ஆண்கள் மட்டும் தான் மதுவிற்கு அடிமையானார்கள் என்ற நிலை மாறி பெண்களும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மதுக் கடலில் குதித்து முத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குடி பழக்கத்திற்கு அடிமையாகும் ஆண்களில் நாற்பது சதவிகித பேருக்கு குறி விறைப்பு தன்மையில் பாதிப்பு வருகிறது. ஐந்து முதல் பத்து சதவிகித பேருக்கு விந்து வெளியேறுவதில் சிக்கல் வருகிறது. மதுவிற்கு அடிமையான பெண்களில் ஐம்பது சதவிகித பேருக்கு பாலுணர்வு சிக்கலும், பதினைந்து சதவிகித பேருக்கு உறவில் உச்சகட்டம் ஏற்படுவதில் பிரச்சனையும் உருவாகி பெண் தன்மையை மட்டுப்படுத்துகிறது.
இது தவிர பலவிதமான போதை பொருட்கள் புகையிலை வகைகள் சில மாத்திரைகள், பாலியியல் குறைபாடுகளுக்கு காரணமாகவியருக்கிறது. இப்போது நான் சொன்னதெல்லாம், வெளியில் இருந்து தாக்கி இளைஞர்களின் ஆண் தன்மையை கெட்டு போவசெய்வதாகும். மனிதனின் மனத்திற்கு உள்ளேயே உள்ள வேறு சில விஷயங்களும் ஆண்மை குறைவுக்கு அஸ்தி வாரங்களாக இருக்கின்றன.
இறைவனால் படைக்கபட்ட எல்லா உயிர்களுக்கும் பாலுணர்வு என்பது பொதுவானதாகும் விலங்குகளிடமிருந்து அறிவால் வளர்ச்சிய்டைந்த மனிதன் மட்டும் தான் பாலுணர்வின் சாதக பாதகங்களை உணர்ந்து அதை நெறிபடுத்தி வாழ கற்று கொண்டான் எனலாம். மனிதனுக்குரிய தர்ம சட்டம் இல்லறத்தார்கள் அனைவருக்கும் பாலுறவை புனிதமான கடமையாகவே கருதுகிறது. அந்த உணர்வு தனது நேர்தன்மையிலிருந்து விலகி எதிர் தன்மையை நோக்கி பயணப்படும் போது ஒழுங்கீனமாக கருதப்டுகிறது.
மனைவி அல்லது கணவனை தவிர மற்றவர்களுடன் உடலுறவு ஏற்படுத்தி கொள்வதை எந்த நாட்டு மக்களும் கவுரமாக நினைப்பதில்லை. அப்படி மாறுபட்ட உறவுகளை மனிதர்கள் உருவாக்கும் போது எவ்வளவு தைரியவான்களாக இருந்தாலும் ஒழுக்கத்தை பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தாலும் இயற்கையாக ஏற்படும் பயம், பதட்டம் இவைகளில் இருந்து தப்பித்து விட முடியாது. உடலுறவு சமயத்தில் பாதுகாப்பு உணர்வு இல்லாது போனால் நிச்சயம் நரம்புகளும், இதயமும் பலகீனமடைந்து ஆண்மை குறைவை ஏற்படுத்தியே தீரும்.
விருப்பமில்லாத வாழ்க்கை துணையோடு உறவில் தொடர்ந்து ஈடுபட்டாலும், உறவின்போது பாலியியல் துணையால் அவமானப்படுத்தபட்டாலும் தனது பாலுறுப்புகளின் மீது தாழ்வு மனப்பான்மை கொண்டாலும் ஆண்மை குறைவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் திடிர் மரணம், எதிர்பாராத அதிர்ச்சி, தொழில் நஷ்டம், பகைமை, விரக்தி போன்ற உணர்வுகளும், ஆண்மை குறைவுக்கு காரணமாகலாம் என மனநிலை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாமபத்ய உறவில் மனதால் ஏற்படும் பாதிப்புகளால் அதிகம் தாக்கப்படுவது பெண்களே ஆகும். முதல் முறையாக தனிமையில் ஏற்படும் ஆண்மையின் அருகாமையும், முரட்டுதனமும் பல பெண்களை பாலியியல் ஊனமாக்கி விடுகிறது, முதல் உறவில் ஏற்படும் வலி, பயம், பதட்டம் ஆண்மையின் ஆளுமை போன்றவைகள் பெண்களின் மனதை வார்த்தையில் வடித்துவிட முடியாத அளவுக்கு நோகடித்து விடுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனைகளே பல விவாகரத்துகளுக்கு காரணமாக இருக்கிறது, அளவுகடந்த கூச்சம் குற்ற உணர்வு, கருத்தரிக்கும் அச்சம் போன்றவைகளும் பெண்மை குறைவுக்கு வழிகோலுகின்றது.
ஆண்மை குறைபாட்டிற்கு சுய இன்பம் என்பத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது, ஆங்கில மருத்துவர்களில் பலர் சுய இன்பம் காண்பதனால் ஆண்மை குறைவு ஏற்படாதுயென அடித்து பேசுகிறார்கள், மலம், மூத்திரம், வியர்வை போலவே விந்து என்பதும் ஒரு கழிவு பொருள். அது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியே தீரும். அப்படியே அது வெளியேறாமல் உடம்புக்குள்ளேயே தங்கிவிட்டால் அதுவே பல நோய்கள் உருவாக மூலகாரணமாக அமைந்து விடும் என்கிறார்கள்.
ஆங்கில மருத்துவர்களின் இந்த கூற்றை சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மரபு சார்ந்த மருத்துவதுறை வல்லுநர்கள் மிக கடுமையாக மறுக்கிறார்கள் தாம்பத்திய உறவின் போது இந்திரியம் வெளிபடுவதற்கும், சுய இன்பம் காணும் போது வெளியேறுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சுயஇன்ப பழக்கமானது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும் ஆண்களே மிக அதிமாக நரம்பியல் ரீதியாக பாதிப்படைகிறார்கள்.
இல்லாத தாம்பத்ய துணை இருப்பதாக கற்பனை செய்து சுய இன்பத்தில் ஈடுபடும்போது மனதும் பாதிப்படைகிறது. உடலும் சோர்வடைகிறது. இந்த பழக்கம் இளைஞர்களை பொறுத்த மட்டில் பெருவாரியானவர்களுக்கு பதினான்கு வயதிலிருந்தே ஏற்பட்டு விடுவதினால் மிக நீண்ட காலம் அந்த பழக்கம் தொற்றி கொள்கிறது. இதனால் விந்து நீர்த்து போகுதல், நரம்பு தளர்ச்சி போன்றவைகள் ஏற்பட்டு ஆண்மை குறைவை சுமக்க வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள்.
ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல விந்து என்பது ஒரு கழிவு பொருள்தான் சிறுநீரும், மலமும் சரிவர வெளியேறா விட்டால் எப்படி உடல் நலம் கெடுமோ அதே போலதான் யோகபயிற்சி செய்யாதவர்களின் உடம்பில் விந்து தங்கினால் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால் தான் இயற்கையானது. மனிதன் உடலுறவில் ஈடுபட்டாலும், படாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நாட்களுக்கு ஒருமுறை தானாக வெளியேற்றி விடுகிறது. தானாக வெளியேறுவதற்கும், நாமாக வெளியேற்றுவதற்கும் பல வேறுபாடு உள்ளது.
தினசரி காலை மாலை இருவேளையிலும் வயிறு சுத்தமானால் அது இயற்கை, தினசரி ஆறு, ஏழு முறை சுத்தமானால் அது இயற்கையல்ல, வயிற்று போக்காகும் தக்கமருந்து கொண்டு தடுக்காவிட்டால் நோயாளியின் கதை பரிதாபகமாகி விடும். சிறுநீர் கழிப்பதும், சகஜ நிலையை விட்டு அதிகரிக்குமானால் அதன் பெயர் நீரழிவு ஆகும். இதே விதிதான் சுய இன்பத்திற்கும் பொருந்தும். அதிகப்படியான விந்து வெளியேற்றம் கண்டிப்பாக நரம்பு தளர்ச்சியில் கொண்டு போய்தான்விடும்.
நடைமுறை அனுபவத்தில் பார்க்கும்போது சுய இன்ப பழக்கத்தில் ஈடுபட்ட பலர் இந்திரியத்தில் உயிர் அனுக்களில் சக்தியில்லாமல் அவதிப்படுவதையும் குழந்தை பெற முடியாமல் தத்தளிப்பதையும் பார்க்கின்றோம். அதனால் ஆங்கில மருத்துவர்கள் சொல்வது போல சுய இன்ப பழக்கம் பிரச்சனை தராதுயென்பதை நம்ப முடியவில்லை.
மன பிரச்சனைகளால் ஆண்மைகுறைவு ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் விரும்பதகாத பல பின்விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதனால் மன பிரச்சனைகளுக்கு மருந்துகளை நாடாமல் தியானம், யோகாசனம் போன்ற மார்க்கங்களை நாடினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கிறது.
உடல் பிரச்சனைகளால் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அவசர தேவைக்கு வேண்டுமானால் ஆங்கில மருத்துவத்தை நாடிக் கொள்ளலாம், தொடர்ச்சியாக ஆண்மை குறைவுக்கு ஆங்கில மருத்துவம் மேற்கொண்டால் பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது, தமிழக சித்தர் மரபில் எத்தகைய உடல் காரணங்களாலும் ஆண்மை குறைவு ஏற்பட்டால் அதில் இருந்து முற்றிலும் விடுபட நல்ல பல மூலிகை மருந்துகள் இருக்கின்றன. அவற்றை நிதானமாக ஆறு மாத காலத்திற்கு எடுத்து கொண்டாலே போதுமானது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் குறைபாட்டிலிருந்து வெளி வந்துவிடலாம்
• அமுக்கரான் கிழங்கு – 700 கிராம்
• நிலபனை கிழங்கு – 700 கிராம்
• சுக்கு – 70 கிராம்
• மிளகு – 70 கிராம்
• திப்பிலி – 70 கிராம்
• ஏலம் – 35 கிராம்
• கிராபு – 35 கிராம்
• சீறுநாக பூ – 35 கிராம்
• சித்திர மூலம் – 70 கிராம்
• ஜாதிக்காய் – 35 கிராம்
• லவங்க பத்திரி – 35 கிராம்
• சவ்வியம் – 72 கிராம்
• பேரிச்சகாய் – 525 கிராம் (விதை நீக்கியது)
ஆகியவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி நன்றாக இடித்து சல்லடையில் சலித்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஒன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து பாகுபதமாக வரும்வரை மெல்லிய நெருப்பில் சூடாக்கி கொள்ளுங்கள்.
பாகுபதத்தை இது எட்டும் போது இடித்து வைத்து இருக்கும் மூலிகை பொடிகளை கொட்டி நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள்.
நன்றாக சூடு ஆறிய பின் முந்நூற்றி ஐம்பது மில்லி தேனையும் ஏழு நூறு மில்லி நெய்யையும் அதில் ஊற்றி கண்ணாடி சீசாவில் காற்று புகா வண்ணம் அடைத்து வைத்து கொள்ளலாம், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த மருந்து செய்ய விறகு அடுப்பையும், மண் பாத்திரத்தையும் தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
கண்ணாடி சீசாவில் அடைக்கப்பட்ட மருந்தை ஐந்து நாட்கள் கழித்து தினசரி மூன்று வேளை ஆகராத்திற்கு முன் கோலி குண்டளவு சாப்பிட்டு வர தொன்ணூறு நாட்களில் ஆண்மை குறைவுக்கு நல்ல முடிவு வரும்.
- குருஜி

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::