ஓ துவோம் வாருங்கள்
இப்னு மர்யம்.மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.
‘முன்னோர்கள் கால்நடையாகப் பல நூறு மைல்கள் பயணம் செய்தார்கள்’ என்பதற்காக எவரும் இன்று அவ்வாறு பயணம் செய்யத் தயாராக இல்லை. அன்று மண்ணென்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக, இன்று எவரும் மின் விளக்குகளைப் பயன் படுத்தாமலில்லை. முன்னோர் மண் குடிசையில் வாழ்ந்தார்கள் என்பதற்காக, இன்று எவரும் உறுதிவாய்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்ளாமலில்லை.
‘பெரியார்கள் சொன்னார்கள்’ என்பதற்காக மார்க்கப் பிரச்சனைகளில் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள், உலகப் பிரச்சனைகளில் பெரியார்களைக் மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை. மாறாக, பலமுறை பரிசீலனை செய்து தங்களுக்குப் பயன் தந்தால் மட்டுமே பெரியார்களைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். ‘நம்மிடம் இருக்கின்ற மதிப்பு மிக்க ஒரு பொருளைக் சாக்கடையில் எறியும்படி, ஒரு பெரியார் சொன்னால் நாம் அதனை நிறைவேற்ற முன் வருவதில்லை. ஆனால் மார்க்க பிரச்சனைகளில் மட்டும் அவ்வாறு பரிசீலனை செய்ய நம்மில் பெரும்பாலோர் தயாராக இல்லை. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? என்ன?
இந்த உலகப் பொருட்கள், அவைகளால் ஏற்படும் பயன்களைப் புரிந்து வைத்துள்ள அளவு, அவற்றின் மதிப்பை நாம் உணர்ந்து வைத்துள்ள அளவு மறு உலகப் பொருட்களின் மதிப்பையோ, நமது வணக்கத்தின் மதிப்பையோ நம்மவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பது தான் இதற்குக் காரணமாகும்.
********************************
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment