Wednesday, October 24, 2012

உற்சாகம் தரும் இயற்கை உணவு


மர்ஹூம்-முஸ்லிம்.காம்அடுப்பற்ற வீடுகளே ஆரோக்கியமானவை என்ற பிரசாரம் உலகம் முழுவதும் தொடங்கியிருக்கிறது. கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் கொண்ட மேலை நாடுகள் எல்லாம் அதிவேகத்தில் அடுப்பற்ற வீடுகளுக்கு மாறி வருகின்றன. அதென்ன அடுப்பற்ற வீடு..?  அதுதான் இயற்கை அன்னை சூரிய வெப்பத்தில் சமைத்து குவித்து வைத்திருக்கிற இயற்கை உணவுகள் இருக்கிறதே! சூடாக்காமல், மசாலா சேர்க்காமல், இயற்கைத் தன்மையைக் குலைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் இயற்கை உணவு. 

மதமதப்பை அகற்றி மனதையும் உடலையும் உற்சாகமாக இயங்கச் செய்யும் ஆற்றல் இயற்கை உணவுகளுக்குத்தான் இருக்கிறது. 
வேக வைக்காத இயற்கை உணவைச் சாப்பிடும்போது, உடல் உறுப்புகளால் இலகுவாக தங்கள் வேலைகளைச் செய்ய முடியும். தேவையற்ற கார்பன்கள், கொழுப்புகள் உடலில் தங்காது. கழிவுகள் வெகு எளிதாக வெளியேறும். துளி வீணாகாமல் சக்தி முழுதும் உடலில் தங்கும். அதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்நோயும் அண்டாது. ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். 

உலகத்தையே இப்போது நிலைகுலையச் செய்துவரும் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து ஒழிக்கும் சக்தி இயற்கை உணவுக்கு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.  தழை, இலை, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள்... இவைதான் இயற்கை உணவின் அங்கங்கள்.   ஒரு பழத்தைச் சாப்பிடும்போது ஒருநாள் ஆயுள் கூடும் என்பார்கள். சிலருக்கு திராட்சை சாப்பிட்டால் சளி பிடிக்கும். உடனடியாக இது நமக்கு ஒப்புக்கொள்ளாது என்று ஒதுக்கி விடுவார்கள். 

உண்மையில் ஜலதோஷம் என்பது கழிவுகளை அகற்றும் ஒரு காரணி. சிலர் ஜலதோஷம் பிடித்து இரண்டு தும்மல் போட்டவுடனே மருந்தகத்தை நாடி ஓடுவார்கள். ஒரு மாத்திரையைப் போட்டு அந்தப் பணியை குலைத்து விடுவார்கள். ஜலதோஷத்துக்கு மாத்திரை போட்டால் ஏழுநாள்... மாத்திரை போடலைன்னா ஒரு வாரம் என்று கிராமத்தில் ஒரு பழ மொழியே உண்டு. 

உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் எல்லாம் தானாக சரியாகிவிடும். மேலும், தன்னோடு ஐக்கியப்படும் ஒரு உயிரை இயற்கை எப்போதும் வதைக்காது.
பதப்படுத்தப்பட்ட பழங்கள், கொட்டைகளில் ஆரோக்கியத்தோடு வாழத் தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. உலர் திராட்சை, அத்தி, முந்திரி, பாதாம், அக்ரூட், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உயர்தரமான திராட்சைகளை பதப்படுத்தி நீர்ச்சத்து அகற்றி தயாரிக்கப்படுவதுதான் உலர் திராட்சை. இதை கிஸ்மிஸ் பழம் என்பார்கள். பச்சைத் திராட்சையை விட 10 மடங்கு சக்தி பொதிந்தது இது. ரத்தசோகை, காமாலை, மூலம் என பலநோய்களுக்கு மருந்தாக இயற்கை மருத்துவர்கள் உலர் திராட்சையை பரிந்துரைக்கிறார்கள். அத்திப்பழம் பித்தம் போக்கவல்லது. 

அத்தியும் உலர் திராட்சையும்தான் கேரளத்து பழ மிக்சரின் மூலச் சேர்மானங்கள். கேரள மக்களின் வாழ்க்கைச் செழுமையை உணர்த்தும் உபசரிப்பு பதார்த்தம் இந்த பழ மிக்சர். கேரளாவெங்கும் உள்ள இனிப்பகங்களில் இதை ருசிக்கலாம். கவனத்தை ஈர்க்கும் வகையில் கொட்டி வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே ஒரு கை அள்ளிச் சாப்பிடத் தோன்றும். 

உலர் திராட்சை, அத்தியோடு, பேரிச்சை, முந்திரி, பாதாம், அக்ரூட், வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, சாரப்பருப்பு, குங்குமப்பூவென ஏகப்பட்ட சேர்மானங்கள் இதில் உண்டு. செயற்கை இனிப்புக்கு இடமில்லை. பார்த்தாலே இதன் சுவையை உணர முடியும். மிக எளிதாக வீடுகளில் செய்ய முடியும். மேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கலந்தால் முடிந்தது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::