Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, May 3, 2018

கோடை காலமும் சிறுநீர் பிரச்சினைகளும்

கோடை காலமும் சிறுநீர் பிரச்சினைகளும்


https://marhum-muslim.blogspot.in/

வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள்  

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது. நோய்க்கான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறு நீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும். குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும். மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது. உணவுகள்இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும். 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.மருந்துகள்ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம்,காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ்,ஹய்ட்றஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை. - டாக்டர். ஆர்.பாரத் குமார், BHMS.,MD., மதுரை. Thanks to - Engr.Sulthan

Saturday, October 19, 2013

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்...!

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்...!

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்

 

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Drugs“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

  • 1. எய்ட்ஸ்
  •  
  • 2. நெஞ்சுவலி
  • 3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்
  • 4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
  • 5. தலை வழுக்கை
  • 6. கண்பார்வை அற்ற நிலை
  • 7. ஆஸ்துமா
  • 8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
  • 9. கண்புரை
  • 10. தலைமுடி வளர, நரையை அகற்ற
  • 11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.
  • 12. பிறவிக் கோளாறுகள்
  • 13. காது கேளாமை
  • 14. நீரிழிவு நோய்
  • 15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
  • 16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
  • 17. மூளைக்காய்ச்சல்.
  • 18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.
  • 19. மார்பக வளர்ச்சிக்கு
  • 20. புரையோடிய புண்
  • 21. மரபணு நோய்கள்
  • 22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
  • 23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
  • 24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
  • 25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
  • 26. விரை வீக்கம்
  • 27. பைத்தியம்
  • 28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.
  • 29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
  • 30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
  • 31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
  • 32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
  • 33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
  • 34. இரத்தப் புற்றுநேரய்.
  • 35. வெண் குஷ்டம்
  • 36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
  • 37. மூளை வளர்ச்சிக்குறைவு.
  • 38. மாரடைப்பு நோய்
  • 39. குண்டான உடம்பு மெலிய
  • 40. பக்க வாதம்
  • 41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
  • 42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
  • 43. வாலிப சக்தியை மீட்க
  • 44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
  • 45. குறைந்த வயதில் தலை நரை
  • 46. ரூமாட்டிக் இருதய நோய்
  • 47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
  • 48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
  • 49. திக்குவாய்
  • 50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்
  • 51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.


ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.

மக்களே! இந்திய மருத்துவச் சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பார்க்கும் டாக்டர்கள் மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப் பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம் நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட விடவில்லை.

ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், கார்டியாக் (இருதய) ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள், தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள் அனை வரும், இன்னும் அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள் என்ற அடைமொழியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். மக்களே இது பற்றிய விளக்கத்தை உங்களிடமும், மறைத்து, அரசாங்கத்திடம் மறைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.

TMC இதைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா? தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப் பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய ஹெல்த் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவங்களும் அடங்கப் பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின் மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி, அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் உடல் நலன், சுகாதாரம் போன்றவைகளுக்காக அரசாங்கம் ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும் அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக முடிவதற்கும், இந்த தார்மீகப் பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில் இழந்துவிடுவார்கள்.

அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.

போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் யார் எனில், ‘எந்த டாக்டர் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ, அந்த மருத்துவரே ஆவார்’ என்பதாகும். சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள் இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை என்று நோயாளிகளிடம் கூறுவாரேயானால் அவர் ஏமாற்றி தொழில்புரியும் போலி டாக்டராவார்.

ஆனால் ஆங்கில மருத்துவம், சட்டத்தை துச்சமென மதித்து அகம்பாவத்துடன் போலிகளுக்கு ‘இருதய ஸ்பெஷலிஸ்ட்’ என்று அடைமொழியைக் கொடுத்திருக்கிறது. இவர்கள் தொழில் நடத்தும் முறை எப்படி என்பதை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவர் ஊரிலும் மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக் காத்திருந்து வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம் ஒவ்வொருவர் உயிரும் இவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களின் வித்தியாசமான, போக்கால்தான் இன்று ஆங்கில மருத்துவம் போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும் அளவுக்கு உங்களிடையே உலாவ விட்டிருக்கிறது.

மருந்து ஆய்வாளர்கள் கடமை என்னவென்றால் “இருதய நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை; குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி, மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச் சீட்டுகளை எழுதிக் கொடுக்கும் ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின் சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும் மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி, பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல் மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள் விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த போலி அடைமொழிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

“உங்கள் உடல் நலன், சமுதாய நலன் காக்கப்பட Drug Inspectors உடனடியாக மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?” என்று கவனியுங்கள். இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச் சொல்லுங்கள்.

Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதான காரியம். உங்கள் வீட்டு அருகாமையிலுள்ள எந்த ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள் விலாசத்தை முழுமையாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் நன்மைக்காக உங்கள் நலன் காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள் தினமும் விழிப்புணர்வுடன் சந்தித்து விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வாசகர்களே, இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் என்று கூறும் ஒவ்வொருவரும் போலிகள். காரணம் சிறப்பு மருத்துவர்கள் என்ற அடைமொழி மறைமுகமாக பாமர மக்களை பெரிய அளவில் ஏமாற்றக் கூடிய தாக உள்ளது. மருத்துவமனைகளில் போர்டுகளில் காணப்படும் இந்த அடைமொழிகளை நீக்க சொல்வதில் சமுதாயமே கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நன்றி : ‘மருந்துகளால் வரும் நோய்கள்’
ஹெல்த் டைம் வெளியீடு

Tuesday, September 17, 2013

உருளைகிழங்கு...நன்மைகள்...!

உருளைகிழங்கு...நன்மைகள்...!

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரஉருளைகிழங்கு...நன்மைகள்...!த்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.
100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.
ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான்.
மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது
அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்.
‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.
உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.
சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் ‘திடீர் திடீர்’ என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும்.
அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.
உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.
உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது.
வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.
ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பச்சையான உருளைக்கிழங்கு
ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.
வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.
உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது?
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு! எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக)
வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

Tuesday, June 18, 2013

Thursday, May 2, 2013

மூலம்...

மூலம்...

பைல்ஸ் (Piles) எனப்படும் மூல நோய்: விரட்ட வழிகள்!
மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.
வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.மூலம்...
மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.
அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.
மூல நோய் இரு வகைப்படும் 1. உள் மூலம், 2.வெளி மூலம். உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் "வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட" என்ற சூத்திரம் இருக்கிறது.
2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.
3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.
4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.
5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.
6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.
7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.
மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.
  மூல நோய்! விரட்ட வழிகள்!  
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
பாதுகாப்பு முறை: நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.
  ரெசிபி  
கருணைக்கிழங்கு குழம்பு:  கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.
வெந்தயக் கீரை கட்லட்:  கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
பூண்டு சாதம்:  பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
  டயட்  
உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
  பாட்டி வைத்தியம்  
அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
   மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை  
எல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.
எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
இநத்ப் பாட்டிலின் மேல் 'மாங்கொட்டை சூரணம்' என்று எழுதி ஒட்டிவிடவேண்டும். இது முற்கால பெரியவர்கள் கையாண்ட ஒரு முறை. நல்ல பலன் தரக்கூடியது.
இது உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய கைகண்ட மருந்து. வீட்டில் ஏதாவது உஷ்ண சம்பந்தமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டு விட்டால், அன்றைய சாப்பாட்டுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு இந்த மாங்கொட்டைச் சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டால், உஷ்ண பதார்த்தம் ஒன்றும் செய்யாது. அதாவது கோழி, பப்பாளிப்பழம், பலாப்பழம், மாம்பழம் இன்னும் பலவிதமான உஷ்ண பதார்த்தங்களைச் சாப்பிட்ட அன்று மட்டும் இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதாவது மூன்று வயதிற்கு மேல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரைத் தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது.
மூல வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை மாலை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும்.
ஐந்து நாள் விட்டு மறுபடி ஐந்து நாள் தொடர்ந்து மூலம் குணமாகும் வரை சாப்பிடலாம்.
இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அதிக காரம், அதிகப் புளி இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடவும். அத்துடன் அரைக் கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை இவைகளில் ஒன்றைத் தாராளமாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் பூரணமாகக் குணமாகும்.
மூலச்சூடு, வயிற்றுப் போக்கு, கிராணி, வயிற்றுக் கிருமிகள் ஆகியவை குணமாக மாங்கொட்டை சூரணத்தில் ஒரு அளவு எடுத்துக்கொண்டு அந்த அளவு ஓமத் தூளும் ஓமத்தூள் அளவு சுக்குத்தூளும், சுக்குத்தூள் அளவு கசகசாத் தூளும் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் போட்டு நன்றாக மூடிவிட்டு அதன் மேல் 'மாங்கொட்டை கூட்டுச் சூரணம்' என்று எழுதி ஒட்டிவிட வேண்டும்.
மேலே சொன்ன நோய்கள் குணமாக 'மாங்கொட்டை கூட்டு சூரண'த்தில் ஒரு பாக்களவு எடுத்து அத்துடன் பசு நெய் சேர்த்துக் கலக்கிச் சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு அரைப் பங்கு போதுமானது.
நன்றி : உணவே மருந்து