Friday, September 14, 2012

ஏக இறையவனுக்கு நன்றி... என் உறவுகளுக்கு நன்றி....


அல்ஹம்துலில்லாஹ்...

கடந்த ஒருவார காலத்திற்குப்பிறகு என் இனமான உறவுகளை இம்முகநூல்தளதின்மூலமாக
மீண்டும் சந்திக்கக்கூடிய வாய்ப்பினை நல்கிய எல்லாம்வல்ல இறையவனுக்கு நன்றி... 

அன்பு உறவுகளே... 

அல்லாஹுவின் மாபெரும் கருணையினால் கடந்த ஆறு நாட்களாக இடைவிடாத காய்ச்சலினால் அவதிப்பட்ட 
நான் நேற்று இரவு முதற்கொண்டு சற்று குணமாகிவருகிறேன்... அல்லாஹு அக்பர் 

உங்களை போன்ற அன்பர்களின் தூய்மையான அன்பும் நட்பும் அல்லாஹ் எனக்கு அருளிய மிகப்பெரிய செல்வங்கள்... 
நான் இதுவரை எதற்கும் அஞ்சியவனல்ல... ஆனால் திடீரென ஏற்ப்பட்ட இந்த உடல்நல குறைவுறைவு என்னை சற்று 
http://www.marhum-muslim.com/
முடக்கிவிட்டது என்பதுதான் உண்மை... இறையவன் கொடுத்த உயிர் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையில் வேண்டுமானாலும் 
திரும்ப அவனிடமே செல்லும்... அதில் நம்பிக்கை வைத்தவன்தான் நேர்மையான முஸ்லிமாக இருக்கமுடியும்... 
நானும் நேர்மையான முஸ்லிமாகவே இறக்க ஆசைபடுகிறேன் இருப்பினும் இயல்பான மனித உணர்வுகள் என்னை 
கடந்த சில நாட்களாக நிலைதடுமாறவைதுள்ளது என்பதும் மறுக்க இயலாத உண்மை... 

நான் மரணத்தை எப்போதுமே மிகவும் நேசிப்பவன் அதிலும் ஷஹீத் அந்தஸ்த்தை அல்லாஹுவிடம் என் தலைவர் ஷஹீத் பழனிபாபா 
அவர்களின் வழியில் விரும்பி கேட்பவன்... ஆனால் என் மனைவி மக்களின் வாழ்வாதாரத்தை நினைக்கும்போது அவர்களுக்கான 
எந்த தேவைகளையும் நான் பூர்த்திசெய்யவில்லை என்கிற குற்ற உணர்வு எனக்கு மரணபயத்தைதருகிறது என்பதையும் போலியான 
தைரியத்தால் நான் மறுக்க விரும்பவில்லை... கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக நான் இருதயநோயினால் பாதிக்கப்பட்டு 
அடுத்த இருபத்திநாலுமணிநேரத்தில் என் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் சொல்லியபோதும் கலங்காதவன் நான்... இப்போது 
சர்க்கரை நோயின் வீரியம் நான் எதிர்பார்க்காதவகையில் என்னுள் வேரூன்றி உள்ளது அதன் தாக்கம் சிறியளவில் ஏற்ப்பட்ட வலதுகால் 
பெருவிரல் காயம் இன்றைக்கு பெரியளவில் வேதனைதருகிறது... 

அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்... 

உங்களை போன்ற நல்லவர்களின் தூய்மையான துஆக்கள் எனக்கு மீண்டும் மனதைரியத்தை தந்துள்ளது... என் மீது அன்பு கொண்டுள்ள 
ஒரு மிகப்பெரிய செல்வந்தர் நேற்று என்னை தொடர்புகொண்டு பேசும்போது சொன்னார் தம்பி வேங்கை நாங்கள் கோடிக்காணக்கான பொருளாதாரத்தை 
சேர்த்து பெறமுடியாத உண்மையான அன்பர்களை உங்களது செயலால் நீங்கள் பெற்றுள்ளீர்கள்... உங்களுக்காக இத்துனை பேர் துஆ செய்கிறார்கள் 
அதனை பார்க்கும்போது எனக்கே உங்கள்மீது பொறாமையாக இருக்கிறது... என்றார்... அல்லாஹு அக்பர் நான் பொதுவாழ்க்கையில் தூய்மையாக 
இருந்துள்ளேன் இன்ஷாஅல்லாஹ் எஞ்சியுள்ள காலங்களிலும் நான் அதே கண்ணியத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்... 

இப்போது நான் காய்ச்சலில் இருந்து விடுபட்டுள்ளேன் இறையவனின் கருணையினால் விரைவில் சர்க்கரை நோயின் பிடியில் இருந்தும் 
விடுபடுவேன் என்கிற தைரியத்தையும் நம்பிக்கையும் நீங்கள் அல்லாஹுவின் கிருபையினால் எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்... 

இந்த தருணத்தில் அல்லாஹுவிர்க்கு நன்றி செலுத்தி குறையுள்ள உடல் நலத்தை பூரனகுனமாக்கிட துஆ செய்யும் (பிரார்த்திக்கும்) 
நான் இந்த தைரியத்தையும் மனத்திடத்தையும் திரும்ப பெற அன்றாடம் என்னை தொடர்புகொண்டு பேசிய என் உறவுகள் சிலரையும் இவ்வேளையில் 
நன்றியுடன் நினைவுகூர்ந்தேயாக வேண்டும்... 

என் மரியாதைக்குறிய காகா இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அமீரக பொறுப்பாளர் கீழை ஜமீல் அவர்கள்...விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமா அவர்கள்...  இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என் இளவல் வழக்கறிஞர் உமர்கயான்... இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுசெயலாளர் "தடா"ஜெ.அப்துல்ரஹீம் அவர்கள்... இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுசெயலாளர் சகோ.செங்கிஸ்கான் அவர்கள்...மாநிலதுணை தலைவர் அண்ணன் முனீர் அவர்கள்... திராவிட விடுதலை கழக தலைவர் அய்யா கொளத்தூர் மணி அவர்கள்...மே பதினேழு  இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்... விசிக பொருலாளர் அண்ணன் முகமது யூசுப் அவர்கள்... எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்... தோழர் வன்னியரசு...

தோழர் மடிப்பாக்கம் வெற்றி செல்வன்... தேசியலீக் அமைப்புசெயலாளர் சகோ.மதுரை சீனி அவர்கள்... அண்ணன் அமீரக விசிக தலைவர் மணி அவர்கள்... சகோதரி கவிஞர் தாமரை அவர்கள்... சமூக ஆர்வலர் முகவைத்தமிழன்@ ரைசுதீன் அவர்கள்... தோழர் முத்தமிழ் வளவன் விசிக... என் அருமை சகோதரர் திருச்சி ஈசா...


என் அன்பிற்கினிய தம்பிமார் வல்லம் பசீர்,திருப்பூர் நாசர்,சதீஸ்குமார்... எமனை சர்புதீன்... விசிகவின் அகரன்... விசிகவின் தமிழன் வேலு...ஆகியோருடன் நான் பெயர்குறிப்பிட்டால் விரும்பாத இன்றைக்கு எனக்கு எல்லாவுமாக இருக்கக்கூடிய கருணையான நண்பர்கள்... அனைவருக்கும் என் மனம்மார்ந்த்திட்ட நன்றிகளை தெரிவிப்பதில் கர்வமகொள்கிறேன்....

இன்றையநிலையில் என் உறவுகளுக்கு முகநூல் சொந்தங்களுக்கு என்னுடன் ஒத்தகருத்துடைய சமூக நல விரும்பிகளுக்கு என் மீது மாற்றுகருத்துகொண்ட என் மரியாதைக்குறிய நண்பர்களுக்கு 
நான் மனதிடத்துடன் சொல்லிகொள்வது... 

ஒரு வேலை என் சர்க்கரைநோயினால்  என் இறையவன் நாடினால்... என் வலதுகால் பெருவிரலை இழக்கலாம்... விரலை என்ன காலையே இழந்தாலும் இனி நாள் கலங்கமாட்டேன்...
என் உடலில் இறுதி மூச்சு உள்ளவரை என் சமூக விடியலுக்காக முன்னைவிடவும் வீரியமாக செயல்படுவேன்... துஆ செய்யுங்கள்... 

இன்ஷாஅல்லாஹ் 
மறுமையின் வெற்றிக்காக போராடும் உங்கள் சகோதரன் 
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::