Monday, July 30, 2012

நிழல் உலகிற்கு ஓர் எச்சரிக்கை...!



http://www.marhum-muslim.com/நாம் அறிந்து ஒரு பெண் இன்று பக்கத்துவீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள். நாளை அடுத்த வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள், மறுநாள் எதிர் வீட்டுக்காரனுடன் கொஞ்சுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். இவளை சமூகம் என்னவென்று அழைக்கும்? விபச்சாரி என்றுதானே. ஆனால்இதே காரியத்தை ஒரு பெண் திரையில் செய்தால் அப்பெண்ணிற்குப் பெயர் நடிகை. அது ஆணாக இருந்தால் அவன் நடிகன். அவர்கள் செய்வது கலைசேவை!
ஒரே காரியத்தை நிஜத்தில் செய்யும்போது பழிக்கும் சமுதாயம்; அந்த நிஜத்தையே காமெராவில் சுருட்டி நிழலாகக் காட்டினால் அதற்கு கைதட்டுகிறது. இவர்கள் போடும் எச்சங்களை உண்டு பிழைக்கும் அந்தக் கூத்தாடிகள் நாளடைவில் இந்த மக்களின் அன்புக்குரியவர்களாக... இஷ்ட தெய்வங்களாக.... மாறி விடுகிறார்கள்.
எந்த விபச்சாரத்தை தனது சகோதரியோ, மகளோ, மனைவியோ செய்யும்போது இவர்களுக்கு தலைவெடித்து விடுமோ அதே சமூகம் இந்த விபச்சாரிகளை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு போற்றிப் புகழ்கிறது. எந்த அளவுக்கென்றால் இவர்களுக்கென சிலைகள் வடிக்கப் படுகின்றன, கோவில்கள் கட்டப் படுகின்றன, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இறுதி இறைத்த்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு இங்கு நினைவுகூரத் தக்கது:
நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன, இறைத்தூதர் அவர்களே? என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் – புகாரி 6496)
சற்றும் பொறுப்புணர்வே இல்லாத சுரணையற்ற இந்த சமூகப் போக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் ஓரளவுக்குக் காணப்பட்டாலும் மிகமிகத் தீவிரமாக காணப்படுவது நம் தமிழகத்தில்தான் என்பதற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதை அறியாமையின் சிகரம் என்பதா? சமூக சீரழிவின் உச்சகட்டம் என்பதா?
திரை மூலம் ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் இந்த திரைக் கூத்தாடிகளுக்கு பெரிய செயற்கரிய சாதனை செய்தது போன்று, மத்திய மாநில அரசுகளின் பாராட்டுக்கள்- விழாக்கள் -கேடயங்கள்- விருதுகள் .பல தரப்படுகின்றன. இவை அனைத்தும் நாட்டுக்காக உழைக்கும் மக்களின் வரிப்பணங்களில் இருந்து வழங்கப் படுபவை.
இது போக, வீர தீரர்களாக சாகச சூரர்களாக தியாகிகளாக பத்தினிப் பெண்களாக கற்புக்கரசிகளாக 'நடிக்கும்' இந்தக் கூத்தாடிகள் குவிக்கும் செல்வங்களுக்கு கணக்கும் இல்லை வழக்கும் இல்லை இவர்களால் ஏமாற்றப்படும் சமூகம் இவர்களுக்குக் கொடுக்கும் அந்தஸ்த்தோ அளவிடமுடியாதது. இந்த அநியாயத்திற்குத் தாரைவார்க்கும் சுயநலச் செய்தி ஊடகங்கள் ஒருபுறம். இவர்களின் அந்தரங்க அசிங்கங்களை கிசுகிசுக்களாகப் பிரசுரித்து கொள்ளையடிக்கும் பிணந்தின்னி வல்லூறுகள் போன்றவர்கள் அவர்கள்!.
இந்தத் திரைக்கூத்தாடிகள்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்குத் தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள்! விளம்பரங்களில் இவர்கள் தலைகாட்டி சான்றிதழ் கொடுத்தால்தான் அவை விற்பனை ஆகுமாம்! இந்த இழிபிறவிகளின் நடை உடை பாவனைகள்தான் வளரும் சமூகத்தின் முன்மாதிரிகளாம்! .இவர்கள் ஆதரவு கொடுத்தால்தான் நாட்டை ஆளும் மக்களின் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப் படுவார்களாம்! இவர்கள்தான் மாறிமாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருபுறம் இலவசங்களைக் காட்டி மறுபுறம் நாட்டுவளங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்களாம்! என்ன ஒரு அவமானம்!
தமிழனின் தலைவிதி ஏன் இவ்வாறு விபரீதமாகப் போகிறது?

நம் முன்னோர்கள் அவ்வப்போது ஆன்மீக வளமூட்டி வளர்த்த பண்பாடு எங்கே தொலைந்தது?

யார் இதைப் பற்றி கவலைப் பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, நமது கண்களின் முன்னால் இந்தத் தீமை கட்டுத்தீ போல பரவுகிறது என்ற காரணத்தால் இறைவிசுவாசிகளாகிய நாம் இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறைவனின் இறுதித் தூதர் நமக்கு இடும் கட்டளை இதுவே:
உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)
இந்த வளரும் தீமையைக் கையால் தடுக்க இயலாதபோது குறைந்தது நாவினாலாவது தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீமைகளை விதைப்போரும் அதற்குத் துணைபோவோரும் தங்களைத் திருத்திக் கொள்ளாமலே மரணிப்பார்களானால் இவர்கள் மறுமையில் சந்திக்க இருக்கும் தண்டனைகள் பற்றி எச்சரிப்பது நமது கடமை. எந்த தண்டனைகளை பயந்து இன்று நாம் இந்தத் தீமைகளில் இருந்து விலகி நிற்கிறோமோ அவற்றைப் பற்றிய செய்திகளை மனிதாபிமான உணர்வோடு இன்றே இவர்களோடு பகிர்ந்து கொள்வோம்:

ஆம், சம்பந்தப்பட்டவர்களே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இன்று நாம் வாழும் உலகின் அதிபதி நம்மைப் படைத்த இறைவன் ஆவான். அவனது அருட்கொடைகளை அனுபவித்துவரும் நாம் அவனுக்குக் கீழ்படிந்தே வாழவேண்டும். அதாவது அவன் எவற்றைச் செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்தாக வேண்டும் அவையே புண்ணியங்கள் என்று அறியப்படுகின்றன. எவற்றை செய்யாதே என்று தடுத்துள்ளானோ அவற்றைக் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவையே பாவங்கள் எனப்படுகின்றன.
இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் முழுமையாக அழிப்பான். அதன்பிறகு மீண்டும் ஒருவர் விடாமல் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்து அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான். அதுதான் நம்முடைய நிரந்தர இருப்பிடம். (மேலதிக விளக்கங்களுக்கு அவனது இறுதிவேதமான திருக்குர்ஆனைப் படிக்கவும்).
சரி, இப்போது நீங்கள் செய்தும் பரப்பியும் வருகின்ற பலதும் குற்றங்களாக இருந்தாலும் விபச்சாரம் என்ற குற்றத்தைப் பற்றி மட்டும் இங்கு உதாரணமாக எடுத்துகொண்டு எச்ச்சரிப்போம்.
இவ்வுலகுக்கு அதிபதியாகிய இறைவன் விதித்த சட்டப்படி, ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். தாம்பத்தியம் அல்லது உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் அதுவும் எவர் கண்ணிலும் படாமல் ரகசியமாக செய்வதற்கு மட்டுமே அவன் அனுமதித்துள்ளான். அதை....
o ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் செய்வது தண்டனைக்குரிய பாவம்.
o அதைப் பிறர் பார்க்கச் செய்வது அதைவிடப் பாவம்.
o அதைப் பதிவு செய்வது அதைவிடப் பாவம்.
o அந்தப் பதிவை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதும்
o அதைக்கொண்டு சம்பாதிப்பதும் வயிறு வளர்ப்பதும்
o அவற்றை வருணிப்பதும் விமர்சிப்பதும்
o அவற்றைக் காண்பதும் ரசிப்பதும் என அனைத்துமே பாவமாகும்.
இவற்றை இங்கு செய்துவிட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம்! இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.
அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.
78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
18:29 .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘
எந்த முகத்தைக் கொண்டு சுவரொட்டிகளில் சிரித்துக்கொண்டு நின்றீர்களோ அதன் கதி நாளை இதுதான்! இது நூறு சதவீத உண்மை! இது வேண்டுமா? சிந்தியுங்கள்! இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்! பரிகாரம் தேடுங்கள்!
நம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்துள்ளான். திருந்தி மீள்வோரை நேசிக்கிறான்!
39:53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::