Wednesday, April 4, 2012

புனித காஃபாவை இழிவு படுத்திய ஆர்.எஸ்.எஸ்...!


http://www.marhum-muslim.com/

ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தள பக்கத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர். வன்முறை நடைபெற்ற இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டபோது முஸ்லிம்களின் 58 கடைகள்,  34 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
http://www.marhum-muslim.com/
http://www.marhum-muslim.com/
பழைய பேருந்து நிலையம் அருகே வன்முறையில் ஈடுபட்டுபட்டவர்கள் அங்கிருந்த  கடைகள், ஹோட்டல்கள் என முஸ்லிம்களின் வியாபார‌ ஸ்தலங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது அரசு கல்லூரி அருகே இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றள்ளது.
அச்சமயத்தில் அங்கிருந்த காவல்துறையினர் முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்தியதோடு வன்முறையாளர்களை தப்பிக்கவிட்டனர்.
மறுநாள் காலையில் முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றினைந்து காவல்துறையினரை எதிர்த்து புகார் அளித்தனர். காவல்துறையினர் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது தப்பிக்க விட்டதன் விளைவாகத்தான் அதிகள் அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக கூறினர்.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், எஸ்.பி விக்டர் ஜான், டி.எஸ்.பி. சஞ்சேய் ஆகியோ வன்முறை நிகழ்ந்த இடத்திற்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். வன்முறையாளர்களை தப்பவைத்துவிட்டு கோடிக்கணக்கான பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்தவன்முறை ஏற்பட்டதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏவே முழு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் சேதப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பின் விவரங்களை அரசுக்கு சமர்பித்து அதுத் தொடர்பாக அரசாங்கத்தில் சிபாரிசு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடவேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
முன்னால் எம்.பி லால் ஜான் பாஷா தலைமையில் சிலர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது பா.ஜ.க தலைவரின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதற்காகவே இவ்வாறான புகைப்படங்களை பா.ஜ.க தலைவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். பா.ஜ.க தலைவரின் இச்செயலை கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதியாக ஊர்வலம் நடத்த முயன்ற முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.
மதச்சார்பற்ற கட்சிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறை சம்பவத்தில் பாகுபாட்டுடன் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளர். இவ்வன்முறையில் முஸ்லிம்கள் மீதே குறிவைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. நோமானியா மஸ்ஜித் மீது நடைபெற்ற கல்வீச்சும், முஸ்லிம்களின் கடைகள் சேதப்படுத்தப்பட்டதை பார்க்கும்போது இது நன்றாக புலப்படுகிறது. முஸ்லிம்கள் மீது மட்டும் காட்டும் பாகுபாட்டை நிறுத்திவிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::