“படைப்புகளிலே சிறந்த படைப்பாக நாம் மனிதனை படைத்திருக்கிறோம். ஆயினும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.. இன்னும் தனக்குத் தானே தீங்கிழைத்தவனாகவே இருக்கிறான்.” இது இறைவனின் வாக்கு.
இன்று வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் அமைந்துள்ள நீதித்துறை மாசுபடிந்து வருகிறது. நீதி என்பது இனம், நிறம்,குலம், சாதியை கடந்து அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் வழங்கப்படவேண்டும்.
கடந்த 27 மார்ச் அன்று வந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கை வேண்டும் என்கின்ற சிலரது கோரிக்கையை முன்பு தில்லி உயர்நீதிமன்றம் குற்றம் அல்ல என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சமூக சேவகர்கள் அனைவர்களாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, முகோபாத்யாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் சுகாதாரத்துறை ஓரினச் சேர்க்கையால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நற்சான்றிதழ் கொடுத்து உள்ளது. பொருட்களில் கலப்படம் செய்தவர்களுக்கே கடும் தண்டனை கொடுக்கும் இந்தத் துறை இந்த மோசமான விஷயத்துக்கு சான்றிதழ் கொடுத்துள்ளது அதிர்த்சி அளிக்கிறது.
நாகரிகத்தின் ‘உச்சாணிக் கொம்பில்’ இருக்கும் அமெரிக்காவில் போப் ஆண்டவரே இந்த செயல் மனித இனத்திற்கு எதிரானது என்று கூறி ஓரினச் சேர்க்கையை தடை செய்ய வேண்டும் என்று கூறினார். அவர்களாலேயே இதை ஜீரணிக்க முடியவில்லையென்றால் என்ன காரணம்? இதன் விளைவுகள் மிகவும் மோசம் என்பதால்தான்.
மனிதனை இறைவன் ஆண்-பெண் இனமாக படைத்து இருப்பது ஒருவருக்கு ஒருவர் இன்பமாக புரிந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான். கணவன்-மனைவி இல்லறத்தில் ஈடுபடும்போது ஒருவருக்கு ஒருவர் ரசித்து இன்பம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான். வேறு எந்த ஜீவராசிகளுக்கும் இப்படிப்பட்ட ரசித்து இன்பம் அனுபவிக்கும் முறையை இறைவன் வழங்கவில்லை. ஆனால் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.
இறைவன் வழங்கியுள்ள இந்த மாபெரும் சந்தோஷத்தை விட்டு விட்டு தன்னைச் சார்ந்த இனமான ஆணோடு ஆண் சேரும் மோசமான கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறான். விளைவு – பாலியல் நோயில் ஆரம்பித்து எயிட்ஸ் வரை எல்லா நோய்களும் இதில் இருந்து உருவாகும் மோசமான சூழ்நிலை ஏற்படுகிறது.
இன்று உலகில் ஆண்களை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இப்படி ஆணும் ஆணும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் திருமணம் முடிப்பது? இவர்களின் வாழ்க்கை ஒரே இருட்டாக ஆகிவிடாதா? அதனால்தான் இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நபி லூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இந்த வேலையை இதை விட மோசமாக செய்து வந்தனர். அவர்களை நல்வழியில் செலுத்துவதற்காகவே இறைவன் அவர்களை நபியாக அனுப்பினான். அவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த மட மக்கள் திருந்துவதாக இல்லை. லூத் (அலை) அந்த மக்களிடம், “உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாகவே இருக்கிறீர்கள்” என்று கூறினார்.
ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால் இறைவன் வானவர்களை அவர்களிடம் அனுப்பி அந்த ஊராரை அழித்து விடும்படி கட்டளை இட்டான். வானவர்கள் லூத் (அலை) அவர்களிடம் வந்தபோது அவர் பயந்தார். வானவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை கூறினார்கள். நீரும் உம்மை விசுவாசித்தவர்களும் இந்த ஊரை விட்டு சென்று விடுங்கள் என்று கூறினார்கள்.
அந்த மக்கள் லூத் வீட்டுக்கு யாரோ வெளி ஆட்கள் வந்து உள்ளார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களையும் இந்த தவறான காரியத்துக்கு பயன்படுத்தலாம் என்று ஓடி வந்தனர். அந்த சமயம் லூத் (அலை ) அவர்கள் அந்த மக்களிடம் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள் என்று கூறி, உங்களுக்கு வேண்டுமென்றால் இதோ என்னுடைய புதல்விகள் இருக்கிறார்கள், அவர்களை உங்களுக்கு திருமணம் முடித்து தருகிறேன், அவர்களிடம் உங்களது இச்சைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதற்கு அந்த மக்கள், “லூத்தே, எங்களுக்கு உங்கள் புதல்விகள் வேண்டாம். நாங்கள் நாடி வந்தது எதுவென்று உங்களுக்கு தெரியும்” என்று கூறி முன்னேற முயன்றனர்.
உடனே வானவர்கள், “லூத்தே, நீங்கள் புறப்படுங்கள். அவர்களுக்கான நேரம் வந்து விட்டது” என்று கூறினார்கள். லூத்தும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் (லூத் அவர்களின் மனைவியைத் தவிர) சென்று விட இறைவனின் ஆணை பிரகாரம் வானில் இருந்து கல் மழை பொழியத் துவங்கியது. ஒட்டுமொத்த அந்த சமுதாயமும் அழிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 29:160-175, 29;28-35,15:57-77)
இது கதை அல்ல. 5000 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த வரலாறு. குர்ஆனை ஆராய்பவர்களுக்கு இதில் பலவிதமான படிப்பினைகள் உள்ளன. ஆக, இறைவன் வெறுத்த இந்தக் காரியத்தில் யாராவது நெருங்க நினைத்தால் அவர்கள் இந்த வரலாற்றை நினைவு கூர வேண்டும்.
சிந்திக்கக் கூடிய மக்களுக்கு குர்ஆனில் பல அத்தாட்சிகள் உள்ளன. இதையெல்லாம் நீதித்துறையில் இருப்பவர்கள் படித்து இந்த செயல் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க முன்வர வேண்டும். புதிய சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். அல்லது இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி அவர்களை இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து மாற்றி நல்ல மனிதர்களாக மாற்ற வேண்டும். நீதித்துறை செய்யுமா?
-:கீழக்கரையான்:-
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment