Thursday, August 4, 2011

சங்பரிவார்-கோமாளி

அரசியல் கோமாளி என்றும், சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றும், குழப்பவாதி என்றும், பிளாக் மெயில் பேர்வழி என்றும், இந்திய மக்களால் பரவலாக அறியப்பட்ட சுப்பிரமணியசாமி சமீபத்தில் ஒரு செய்தி ஏட்டில் எழுதிய கட்டுரை இந்திய அளவில் மட்டுன்றி சர்வதேச அளவில் பெரும் புயலை எழுப்பியுள்ளது.

ஒற்றுமையாக வாழும் இந்திய சமூகத்தில் இந்நாட்டின் விடுதலைக்கும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் இழிவாக, அவர்களது கண்ணியத்தைக் குலைக்கும் வண்ணம் எழுதிய கட்டுரை சுப்பிரமணியசாமி கோடைகால வகுப்பில் பொருளாதார பாடம் எடுக்கும் அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழக மாணவர் களையும் கொந்தளிக்க வைத்து ள்ளது. சுவாமியை ஹார்வர்டு சம்மர் ஸ்கூலில் பாடம் எடுக்க அனுமதிக்கக்கூடாது, அவரை ஹார்வர்டு கல்வி நிலையத்தி லிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் தங்கள் உள்ளக்குமுறலை கொட்டியுள்ளனர். சுவாமி உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியாவில் தனது அரசியல் காமெடிகளில் அடிக்கடி நாட்டு மக்களை விலாநோக சிரிக்க வைத்தும் தனது குழப்ப அரசிய லால் நாட்டையே பல ஆண்டுகள் பின் நோக்கி நகர வைக்கும் அசகாய(!) திறமைப் படைத்த சுப்பிரமணியசாமி இழைத்த தவறுதான் என்ன?
இஸ்லாமிய தீவிரவாதத்தை துடைத்தெறிவது எப்படி? என்ற தலைப்பில் மும்பையில் இருந்து வெளிவரும் டி.என்.ஏ என்ற செய்தி ஏட்டில் சுப்பிரமணியசாமி எழுதியுள்ள கட்டுரை முஸ்லிம்களை மிகவும் இழிவுபடுத்தி இருப்பதோடு சங்பரிவார் பயங்கரவாதிகளின் சர்வதேச தலைவரைப் போன்று மனம்போனபடி பிதற்றியிருப்பதே நாட்டு மக்களின் கோபத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த மூன்றாவது நாள் ஜூலை 16ம் தேதி வெளி வந்த டி.என்.ஏ செய்தி ஏட்டில் சு.சாமி எழுதிய கட்டுரையால் மெல்ல மெல்ல கோப அலைகள் பரவி வருகிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் தங்களது முன்னோர்களது பாரம் பரியத்தை அங்கீகரிக்க வேண்டு மாம், அவ்வாறு செய்யாதவர் களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டுமாம், அத்தோடு பாசிச மத வெறியர்கள், 300 பள்ளிவாசல்களையும் இடித்து தரைமட்டமாக்க வேண்டுமாம்.

ஹிந்து மதத்திலிருந்து யாரையும் மதமாற்றம் செய்யக்கூடாதாம். அதேவேளையில் பிற சமயத்தி லிருந்து ஹிந்து மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண் டும், தடுக்கக்கூடாது என்றும் வெறித்தனமாக உளறிக் கொட்டியுள்ளார். இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ராவாக மாற்ற வேண்டும், ஹிந்து அல்லாதவர்கள் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தேசத்துரோக, மற்றும் அறிவுக்கு சிறிதும் பொருத்தமில்லாத கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இந்த கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்கள் கொந்தளித்த தோடு சு.சாமி ஒரு மதத்தீவிரவாதி அவருடன் ஹார்வர்டு பல்கலைக் கழகம் கொண்டிருக்கும் அனை த்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்ததோடு சு.சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இணையதளம் வாயிலாக கையெழுத்துப் போரை தொடங்கி விட்டனர்.
இந்தக் கையெழுத்து இயக்க த்தில் ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டு சு.சுவாமி மீதான தங்களது ஆத்திரத்தினை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவர்களது கண்ணியத்தையும் இழிவுபடுத்தும் வண்ணம் சு.சுவாமி எழுதியிருப் பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சு.சுவாமி எழுதியுள்ள கட்டுரையை கல்வியறிவு சமூகம் சகித்துக் கொள்ளாது என்றும் சு.சுவாமி மத சுதந்திரத்தின் நெறிகளை மீறத்தூண்டுகிறார்; பல்வேறு சமயமக்கள் வாழும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் வாக்குரி மையை பறிக்க வேண்டும் என பிதற்றும் சு.சுவாமி சகிப்புத்தன்மை மற்றும் கண்ணியத்தின் வரம்பினை மீறிவிட்டார் என்றும் இடித்துரைக் கின்றனர் ஹார்வர்டு மாணவர்கள்.

சு.சுவாமியின் கட்டுரையின் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டக்கூடிய அபாயகரமான செயல். பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் திருநாட்டின் அடித்தளத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்த செயல் என்றும் ஹார்வர்டு மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சுப்பிரமணிய சுவாமியின் மதவெறி கருத்துக் களுக்காக அவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பதைக் குறித்து தீவிரமான ஆலோசனை செய்து வருவதாக தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லா தெரிவித்திருக்கிறார்.
தேசிய சிறுபான்மை ஆணையம் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க ஆலோசிக்க இருப்பதாகக் கூறிய வஜாஹத் ஹபீபுல்லா, டி.என்.ஏ என்ற அந்த மும்பை செய்தி ஏடு இது போன்ற துவேஷத்தை பரப்பும் கட்டுரை வெளியிட்டதற்கும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

சு.சுவாமியின் வெறுப்பைத் தூண்டும் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது புகார் பதிவு செய்யச் சென்றவர்களுக்கு கடும் ஏமாற்றம் காத்திருந்தது. பூனாவைச் சேர்ந்த இந்தியன் சட்ட கல்விக் கூடத்தின் மாணவரும் டெல்லியை வாழ்விடமாகக் கொண்டவருமான ஷெஹ்ஸாத் என்பவர் கொடுத்த புகாரை வாங்குவதற்கும் சுப்பிரமணியசாமி மீதான புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கும் டெல்லி டிபன்ஸ் காலனி காவல் நிலையம் மறுத்துவிட்டது.

வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதற்காக சுப்பிரமணி யசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ(1)பி மற்றும் 153பி(1) சி பிரிவுகளில் வழக்கு தொடரப்பட வேண்டும் என்பதே புகார் கொடுத்த ஷெஹ்ஸாதின் கோரிக்கையாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றும் யூதர்களைப் பார்த்து இந்துக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சமூக அமைதியை குலைக்கும்படி பேசிய சு.சாமி மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

அப்பாவிகளை மட்டும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் கொலையும் செய்யும் இந்நாட்டின் சட்டபராமரிப்புத்துறையும் நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?

இந்நாட்டில் வாழும் 30 கோடி முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்திய காவி பயங்கரவாதியாகவே மாறிவிட்ட சு.சாமிக்கு அனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் வாக்குரிமை யைப் பறிக்கவேண்டும் என பாசிசத்தனமாக உளறிய சு.சாமி மீது இந்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டும்.
-ஹபீபாபாலன்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::