Saturday, August 20, 2011

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?


ஏக இறைவனின் இக்கேள்விகள் மூலம் சிந்த்தித்து, சீர்தூக்கிப் பார்ப்போரே அறிவுடையோர்! 

இது ஒரு கலில் எஸ்.எம்.எஸ் வலைப்பூவின் பதிவு

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள். எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்க செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாக்கி விடுவோம்-அப்பால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

மேலும் (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதை கைப்புள்ளதாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் (அல்லாஹ்) திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் (புகழ்தல்) செய்வீராக.
இந்த போஸ்ட்டை புக் மார்க் செய்யுங்கள் லிங்க் போஸ்ட்டை படித்து விட்டு திரும்பி வந்து கிழே
இருக்கும் லிங்க்களையும் தொடரவும் அல்லாஹ் மனிதனுக்கு எவ்வறெல்லாம் அருள் செய்திருக்கிறான் என்று அறிந்து கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தினாலே இந்த கட்டுரை முழுமை பெரும்
அன்புடன்
ஒ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 

தொடர்பு பதிவு


அல் குர்ஆன்: 56 - 58 லிருந்து 74 வரை.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::