Saturday, August 20, 2011

பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட முன் வருவாரா அன்னா ஹசாரே..

ஏக இறைவனின் திருப்பெயரால்....


லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், ஆட்சியில் அமர்ந்திருக்கும்ம காங்கிரஸ் அரசும் தற்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கும் தலையாய பிரச்சனை அன்னா ஹசாரே அவர்களின் போராட்டமும் அதை தொடர்ந்து அவரது கைதும். இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழலை ஒழிப்பதற்காக போராட்டகளத்திற்கு புறப்பட்ட அன்னா ஹசாரே முதலில் நீண்ட உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இது மீடியாக்கள் மத்தியலும், நாட்டு மக்கள் மத்தியிலும் மாபெரும் விஷ்வரூபம் எடுத்தன. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலத்து மக்களும் ஜாதி,மதம் பாராது ஒன்றினைந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. பிரதமரும், சோனியாவும், ராகுலும் கூட ஊழலுக்கு எதிரான கோஷத்தை முன்வைத்து அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். அன்னா ஹசாரேவின் போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நியாயமான முறையில் அதை நிறைவேற்றாத காரணத்தால் மீண்டும் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை துவக்கினார். இது மன்மோகன் அரசுக்கு மாபெரும் இக்கட்டை உருவாக்கின உடனே அரசும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கேயும் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாட்டில் உள்ள பல்வேறு குழுக்களும், பொதுமக்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றார்கள். இதில் என்ன ஒரு காமெடி என்றால் சவப்பெட்டி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களின் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வும் நரேந்திர மோடியும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் அரசை கண்டிக்கிறது.

ஊழல் என்றால் அது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் சொந்தமா அல்லது அவர்களது கூட்டணியில் உள்ளவர்களை மட்டுமே சாருமா என்றால் இல்லை. ஏற்கனவே ஆட்சியில் இருந்திருக்கின்ற பா.ஜ.க உள்பட ஊழல்வாதிகள் அணைவரையும் சாரும். இதில் விதிவிலக்கு யாரும் இல்லை.

இத்தருணத்தில் நம்முடைய நியாயமான கருத்து என்னவென்றால் ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க போராடும் அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் ஆளும் காங்கிரஸ் அரசை மட்டும் எதிர்ப்பதுபோல் அல்லாமல் ஒட்டுமொத்த ஊழல் பெருச்சாளிகளையும் கடுமையாக எதிர்கவேண்டும். தனக்கு ஆதரவாக வருபவர்களில் யார் ஊழல் புரிந்திருந்தாலும் அல்லது ஊழல் சர்ச்சையில் சிக்கிருந்தாலும் அவர்களின் ஆதரவை அன்னா ஹசாரே புறக்கணிக்க வேண்டும். நாட்டு மக்களான எல்லா தரப்பு பொதுமக்களின் ஆதரவை வலுவாக பெற்று போராட்டத்தை விரிவு படுத்தவேண்டும். பா.ஜ.க போன்ற ஊழலுக்கு பெயர்போன கட்சிகளையும், மதவாத சக்திகளையும் அன்னா ஹசாரே புறக்கணிக்க முன் வரவேண்டும்.

ஊழல் இல்லா இந்தியா மட்டும் வலுவான ஜனநாயகத்தை வெளிப்படுத்திவிடுமா என்றால் இல்லை. சுதந்திரப்போராட்ட தியாகியாய், ஊழல் எதிர்ப்பு போராட்ட ஹீரோவாய் திகழும் அன்னா ஹசாரே அப்பாவி சிறுபான்மை மக்களை கொன்று குவிக்கும் மதவெறிபிடித்த சங்கபரிவார கூட்டங்களையும் வண்மையாக கண்டிக்க முன் வரவேண்டும்.

450 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளமான பாபரி மஸ்ஜித்தை இடித்த அதற்கு துணைபோன அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற நானாவதி கமிஷன் சுட்டிக்காட்டிய 68 குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு கொடிய சிறையில் தள்ளப்பட வேண்டும்.

ஒரிசாவில் கிறிஸ்தவ கண்ணியாஸ்திரயை கற்பழித்து அவரோடு இன்னும் சிலரையும் உயிரோடு எரித்து கொன்ற பயங்காரவாதிகளையும் சட்டம் தண்டிக்க முன் வரவேண்டும்.

குஜராத்தில் 3000க்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு நாட்டு மக்கள் முன் தூக்கிலிடப்பட வேண்டும். அது மற்ற மதவாத சக்திகளுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

மஹராஷ்ட்ராவில் மும்பையில் 2000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்ததோடு பல சட்டவிரோத பிரச்சனைகளில் ஈடுபடும் பால்தாக்கரே மற்றும் அவரது மருமகன் ராஜ்தாக்கரே போன்ற பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

அமைதியான இந்தியாவில் ஆங்காங்கே குண்டு வைப்புகள் மூலம் இந்தியாவின் அமைதிக்கு பங்கம் விலைவிக்க முயலும் காவி பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தையும், அதன் கிளைகளையும் உடனடியாக தடைசெய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள அணைத்து தரப்பு மக்களும் அமைதியான முறையில் வாழ ஆளும் அரசு கடுமையான சட்டங்களை விரிவுபடுத்தி அதனை உடனடியாக அமுல்படுத்த முன் வரவேண்டும்.

போன்ற நியாயமான கோரிக்கைகளையும் அன்னா ஹசாரே அவர்கள் தங்கள் போராட்டத்தில் இணைத்து கொள்ளவேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆதரவுகளையும் திரட்டி இன்னொரு சுதந்திரப்போராட்டத்தை உருவாக்கி ஊழல் வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க முன்வந்தால் அன்னா ஹசாரே தலைமையில் எங்களை போன்ற இளைஞர்கள் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராட தயாராகுவோம்.... இறைவன் நாடினால்....

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே மதவாத சக்திகளான நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க விற்கு எதிராகவும் போராட முன் வருவாரா அல்லது ஊழல் கோஷத்தை மட்டும் தொடருவாரா....


முத்துப்பேட்டை முகைதீன்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::