Friday, August 12, 2011

இணை வைப்பு

Ahamed Jamani's Photos
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

3 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Unknown said...

"என்னுடைய உம்மத்தில் சில கூட்டங்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து சிலைகளைக் கூட வணங்குவார்கள். மேலும் என் உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அனைவரும் தன்னை நபி என்றே வாதிடுவார்கள். இந்நிலை ஏற்படும் வரை மறுமைநாள் ஏற்படாது. நான்தான் இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

Unknown said...

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்" என நான் கூறுகிறேன்.
Volume :2 Book :23

மஸ்தூக்கா said...

நவூது பில்லாஹ் என்ன கொடுமை இது! இவர்களுக்கு புர்கா ஒரு கேடா?எந்த ஊரில் நடந்தது? முழு விபரத்தையும் எழுதுங்கள்