பா ல் குடியுங்கள்!!!!!
பால் உடலுக்கு ஆரோக்கியமானது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் சமீபகாலமாக பால் அதிக கொழுப்பு உடைய பொருள் அதை விலக்க வேண்டும் எனும் கருத்தும் நிலவி வந்தது. வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள் பால், சர்க்கரை, உப்பு என்றெல்லாம் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது பாலின் பயன்களைக் குறித்து வெளியாகியுள்ள சில ஆராய்ச்சிகள் மீண்டும் பாலின் தேவையை நிலைநிறுத்தியுள்ளன. சுமார் மூவாயிரம் பேரை வைத்து இருபது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட நீளமான ஆய்வின் பயனாக இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பால் மட்டுமன்று பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் கூட பெருமளவில் இந்த நோய்களைத் தடுக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. பாலும் பால் சார்ந்த பொருட்களும் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவை என்னும் ஆராய்ச்சி மீண்டும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தாலும், அதிக கொழுப்பற்ற பாலை உபயோகிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் மன அழுத்தத்தை போக்க உதவும் பால்! பால்... குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், பெரியவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் உறுதுணைபுரிகிறது, இந்த திரவ உணவு. ஆம், அமெரிக்காவில் பாலின் திறன் தொடர்பாக மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், மனிதனுக்கு வயது ஏற ஏற இயல்பாக உண்டாகும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன், பாலுக்கு உண்டு என்பது தெரிய வருகிறது. இதற்கு, நாள்தோறும் ஒரு டம்ளரேனும் பாலை அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். அதேநேரத்தில், முழுவதும் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலாகவோ அல்லது குறைந்த அளவில் கொழுப்புச் சத்து கொண்ட பாலாகவோ இருக்க வேண்டியது அவசியம். |
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment