Friday, July 22, 2011

சுத்தம்!!!!!!

சுத்தம்!!!!!




S.E.ஜியாவுத்தீன்
[
இறால் கழுவின தண்ணீரை வீட்டில் வைத்தால் வீடு நாறிவிடுமாம்.. அதனால் முடுக்கிலும், நடு ரோட்டிலும் கொட்டுகிறார்கள். என்ன சுயநலம்.. இரண்டு பையில் நன்றாக இறுக்கி கட்டி வைத்தால் எந்த வாடையும் வராது. அந்த இறால் கழுவின தண்ணீரை வடித்து கானில் ஊற்றினால் கூட போதும்.. அதற்கும் பதில் இருக்கும், கான் நிறைந்து விடுமாம்...(சகோதரிகளுக்குள் கான் சண்டை வரும் பாருங்க..அப்பப்பா...என்னத்தை எழுத..!).
இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், பல வீடுகளில் ஜன்னல் கம்பிகளில், ஒரு மூன்று கம்பியின் ஒரு பகுதி மட்டும் அழுக்கு பிடித்து, துருல் ஏறி இருக்கும்.. என்னது என்று நினைக்கிறீர்கள்....அதான்..வீட்டில் இருந்து புளிச்..புளிச் என்று துப்பியத்தின் அடையாளம் தான்..
இன்னும் சிலர் இருக்கின்றார்கள்.. ஜன்னல் கம்பியில் படாமல் சூப்பராக..கரெக்ட் ஆ க துப்புவார்கள்..ஒலிம்பிக்கில் இந்த துப்பும் போட்டி இருந்தால், இதற்க்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும்.. துப்பாக்கி சுடுதல் எல்லாம் சுத்த வேஸ்ட்..
தெருவிலோ, முடுக்கிலோ இடைஞ்சலாக கல்லோ, முள்ளோ கிடந்தால் அதை அப்புறப்படுத்தினால் நமக்கு நன்மை. அதை விடுங்க, நம் நகத்தை, நம் முடியை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன முறையில் வெட்டினால் அதற்கு நன்மை. எச்சில் துப்பி அதை மணல் கொண்டு மூடினால் அதற்கும் நன்மை.. இப்படி நன்மைகள் கொள்ளை அடிக்க எந்த மார்க்கத்தில் முடியும், சொல்லுங்க. ஆனால் இதை நாம் பின்பற்றுகிறோமா? ]
சுத்தம் சோறு போடுமா?
சுத்தத்தை பற்றி பேசுவதாக இருந்தால், நம் இஸ்லாம் மார்க்கம் சொன்னது மாதிரி வேறு எந்த மதமும் சொன்னதில்லை (இந்த விசயத்தை மட்டும் அல்ல, அனைத்து விசயங்களையும் தான்).
ஷரியத் சட்ட நூற்களை புரட்டிப்பார்த்தால், முதல் பாடமே சுத்தம் பற்றிய பாடம் தான். இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் முதலாவதாக இருப்பது தொழுகை தான். இந்த தொழுகைக்கு மிகவும் முக்கியமானது சுத்தமே..
"சுத்தம் தொழுகையின் திறவுகோலாகும்" (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூ தாவூத், இப்னு மாஜா)

''அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்'' (அல்குர்ஆன் 5:6)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "சுத்தம் ஈமானில் பாதியாகும்" (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்-அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் உடலை எப்படி சுத்தமாக வைப்பது, வாயை எப்படி சுத்தமாக வைப்பது, தலையில் இருந்து கால் வரை எப்படி தூய்மையாக வைப்பது, நகம் எப்படி வெட்டுவது, முடி எப்படி வெட்டுவது, உள்ளத்தை எப்படி சுத்தமாக வைப்பது, வீட்டை, வெளி இடங்களை, நடைபாதைகளை எப்படி சுத்தமாக வைப்பது என்று,ஒன்றும் விடாமால் நமக்கு கற்றுத்தந்துதான் சென்றுள்ளார்கள். இந்த மாதிரி எந்த தலைவரும் சொன்னது கிடையாது.
இந்த உலகிலே அதிகம் பேசிய மனிதர் நம் நபிகள் நாயகம் தான். அந்த பேச்சுக்கள் ஏதும் பிரயோசனம் இல்லாத வெட்டி பேச்சுக்கள் அல்ல, அனைத்தும் முத்து முத்தான பேச்சுக்கள், அனைத்தும் வணக்கங்கள், நமக்கு நன்மை தரக்கூடிய செயல்கள்.
தெருவிலோ, முடுக்கிலோ இடைஞ்சலாக கல்லோ, முள்ளோ கிடந்தால் அதை அப்புறப்படுத்தினால் நமக்கு நன்மை. அதை விடுங்க, நம் நகத்தை, நம் முடியை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன முறையில் வெட்டினால் அதற்கு நன்மை. எச்சில் துப்பி அதை மணல் கொண்டு மூடினால் அதற்கும் நன்மை.. இப்படி நன்மைகள் கொள்ளை அடிக்க எந்த மார்க்கத்தில் முடியும், சொல்லுங்க.
ஆனால் இதை நாம் பின்பற்றுகிறோமா? குப்பைகள் இல்லாத முடுக்கையோ, தேருவையோ காட்டுங்கள் பார்ப்போம்...ஒவ்வொரு முக்கிலும்/சந்திலும், ரோடு ஓரங்களிலும் குப்பை கீஸ்கள். நகராட்சி குப்பை வண்டி காலையில் மட்டும் , தன் தொண்டை கரகரத்த ஹாரனை அடித்துக்கொண்டு, குப்பைகளை கலக்ட் பண்ணிக்கொண்டும், குப்பை தொட்டிகளில் இருக்கும் குப்பைகளை அள்ளியும் அதனுடைய கடமையை முடித்து விடுகின்றன.
அதற்குப்பின் சேரும் குப்பைகள் அனைத்தும் முடுக்கிலும், ரோட்டிலும் தான். குப்பை தொட்டிகளை(அதுவும் ஒரு சில இடத்தில மட்டும் தான் உள்ளது ) பார்த்தால், அது காலியாகவே தான் இருக்கும்..அப்போ..குப்பைகள்..அனைத்தும் தொட்டிக்கு வெளியில் தான்.
ஒரு நாளைக்கு தெருவின் படியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் அவதானித்துப்பாருங்கள்.
காலை 7 மணிக்கு ஒரு எச்சிவாளி தண்ணீர் தெருவுக்கு அபிசேகம் பண்ணப்படும், அது காலை நாஸ்டா சாப்பிட்ட எச்சி தண்ணீர்.
ஒரு 10 மணி அளவில், சலார் என்று ஒரு வாளி தண்ணீர் கொட்டப்படும், உடனே பல காக்கைகள் வந்தால், அது மீன் கழுவிய தண்ணீர். ஒன்று, இரண்டு காக்கைகள் மட்டும் வந்தால், சும்மா காய்கறி, கறி அலசின தண்ணீர்.
மதியம் தண்ணீர் கொட்டப்பட்டால், அது சாப்பிட்ட, வலந்து கழுவின தண்ணீர்.
மக்ரிப் பின்பு ஒரு வாளி தண்ணீர் நடு ரோட்டில் கொட்டப்படும், அது இறால் கழுவின தண்ணீர். இருட்டியதால் காக்கைகளுக்கு வேலை இல்லை.
இரவு 9 மணி முதல், தொடர்ந்து சளார்,சளார் என்று சப்தங்களையும், கதவை பட்டை போட்டு அடைக்கும் சப்தங்களையும் கேட்கலாம்.. இரவு சாப்பாட்டு வேலை முடிந்து மிச்சம் இருக்கும் எச்சி தண்ணீர், சூப்பிய முள், சவைத்த முருங்கைக்காய்...எட்c.. எட்c .... எல்லாம் ரோட்டில் கொட்டிவிட்டு அன்றைய டுட்டியை முடித்து விட்டார்கள்.
ஒருமுறை என் மேல் கூட அபிசேகம் நடக்கப்பார்த்தது. ஜஸ்ட் மிஸ்டு.. (வாழ்க்கையில் எனக்கு பல ஜஸ்ட் மிஸ்டுகள் நடந்து உள்ளன.) லேசாக மூக்கிலும், கண்ணாடி மீதும் தூவானம் மட்டும் விழுந்தது.. அந்த அம்மணி கொஞ்சம் கூட சங்கடப்படவோ, கவலைப்படவோ இல்லை..
ஐந்து அடி நடந்து கண்ணாடியை சுத்தம் செய்து, மாட்டிய போது மீண்டும் ஒரு வாளி எச்சித்தண்ணீர் கொட்டப்பட்டது, அதே அம்மணி தான்.. நான் தான் கவனக்குறைவாக ரோட்டில் நடக்கிறோமோ என்ற ஒரு ஐயம் தோன்றியது, உண்மையே..
இறால் கழுவின தண்ணீரை வீட்டில் வைத்தால் வீடு நாறிவிடுமாம்.. அதனால் முடுக்கிலும், நடு ரோட்டிலும் கொட்டுகிறார்கள். என்ன சுயநலம்..இரண்டு கீசில் நன்றாக இறுக்கி கட்டி வைத்தால் எந்த வாடையும் வராது.அந்த இறால் கழுவின தண்ணீரை வடித்து கானில் ஊற்றினால் கூட போதும்..அதற்கும் பதில் இருக்கும், கான் நிறைந்து விடுமாம்...(சகோதரிகளுக்குள் கான் சண்டை வரும் பாருங்க..அப்பப்பா...என்னத்தை எழுத..).
இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், பல வீடுகளில் ஜன்னல் கம்பிகளில், ஒரு மூன்று கம்பியின் ஒரு பகுதி மட்டும் அழுக்கு பிடித்து, துருல் ஏறி இருக்கும்.. என்னது என்று நினைக்கிறீர்கள்....அதான்..வீட்டில் இருந்து புளிச்..புளிச் என்று துப்பியத்தின் அடையாளம் தான்..
இன்னும் சிலர் இருக்கின்றார்கள்.. ஜன்னல் கம்பியில் படாமல் சூப்பராக..கரெக்ட் ஆ க துப்புவார்கள்..ஒலிம்பிக்கில் இந்த துப்பும் போட்டி இருந்தால், இதற்க்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும்.. துப்பாக்கி சுடுதல் எல்லாம் சுத்த வேஸ்ட்..
இந்த செயல்கள் எல்லாம் தவறு என்று, சுத்தத்தை சொன்ன மார்க்கத்தில் வந்த நமக்கு தெரியவில்லயே...குறைந்தது தெருவில்,முடுக்கில் ஆட்கள் செல்லுவார்களே..அவர்கள் மீது படுமே என்ற சிறு கவலை கூட கிடையாதா...
நாய் கூட போஸ்ட் கம்பியை மறைவுக்கு வைத்து தான் உச்சா போகுது. சும்மா காலை தூக்கி அடித்தால் மற்றவர்களுக்கு தெறிக்கும் என்ற சமூக அக்கறை கூட இருக்கலாம்..அதனிடம் விசாரிக்க அதன் மொழி எனக்கு தெரியவில்லை. நான் ஏதாவது கேட்க, அதற்கு புரியாமல், எதையாவது பிடுங்கி விடப்போகுது..

ஆகவே, கொஞ்சம் திருந்துங்க. இந்த சிறிய சிறிய தவறுகள் எல்லாம் மறுமையில் ஒன்று கூடி உங்களின் நல் அமல்களை தின்றுவிடும்ங்க...அங்கு போயி நாம் நஷ்டவாலியாக ஆக ஆகணுமா..சொல்லுங்க..நல்இதயம் கொண்டவர்களே...
"மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்" (அல்குர்ஆன் 19:39 )
ஆகவே சுத்தம் சோறு போடுதோ இல்லையோ, ஆனால் சுத்தம் சுகம் தரும்ங்க.
இன்ஷாஹ் அல்லாஹ், மீண்டும் சந்திக்கலாம்.
என்றும் அன்புடனும், அக்கறையுடனும்,


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::