Saturday, May 21, 2011

கள்ளநோட்டுகளும்-இஸ்லாமும்

ஸ்லாத்தின் பார்வையில் கள்ள நோட்டுகளும்!!!

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திலும் இத்தகைய கருத்தே சொல்லப்படுகிறது. இறைச்சட்டங்கள் அனைத்தும் அதி அற்புதமானவை. குற்றங்களே இல்லாத அழகிய சூழலை உருவாக்க அவை உதவுகின்றன.
மிருக உணர்வு கொண்ட மனிதனையும் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல்களாகவே ஷரீஅத் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.]

மனிதன் அடிப்படை நோக்கமின்றி எச்செயலையும் நிறைவேற்றுவதில்லை. எனவேதான், ஒரு செயலை அது தவறெனத் தெரிந்திருந்தும் செய்யும்போது சட்டப்படி குற்றமாகிவிடுகிறது.
‘உள்நோக்கு இல்லாத எந்தச் செயலும் குற்றமாகக் கருதப்படாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் பொதுவான விதி. இதன்படியே ஏழு வதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் மனநோயாளிகள் செய்யும் தவறுகளுக்கு தண்டணை கொடுப்பதில்லை.
இந்திய தண்டனைச்சட்டம் 489 (ஏ) 489 (பி) 489 (சி.டி.இ) ஆகிய பிரிவுகள் ரூபாய் நோட்டுகள் - வங்கி நோட்டுகள் பற்றிய குற்றங்களை விவரிக்கின்றன.
சதீஷ்கர் மாநிலத்தில் ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். தண்டனைப் பெற்றவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மாவட்ட குற்றவியல் நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்த உயர்நீதிமன்றம், தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்தது.
தண்டனைப் பெற்றவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.எம்.காதிரி, எஸ்.என்.புர்கான் ஆகியோர் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தனர்.
தண்டனைச்சட்;டம் 489 (பி) மற்றும் 489 (சி) ஆகிய பிரிவுகளின்படி தன்னிடம் இருப்பது போலியானது, கள்ள நோட்டு என்று தெரிந்திருந்தும் ஒருவர் அதை வைத்திருந்தால்தான் அவர் தண்டனைக்கு உரியவர் ஆவார். தன்னிடம் இருப்பது கள்ள நோட்டு என்று தெரியாத பட்சத்தில் அவர் அதை வைத்திருப்பதையோ, உபயோகிப்பதையோ குற்றமாகக் கருதி அவரைத் தண்டிக்க முடியாது.
மேற்காணும் சட்டப்பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி ரூபாய் நோட்டுகளுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டதாகும். எனவே இவ்வழக்கில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவருக்கு உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்படுகிறார்.
இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பை ஆழ்ந்து கவனிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தவறான உள்நோக்கத்துடன் தான் செயல்பட்டிருக்கிறார் என்பதை குற்றவழக்கு தொடர்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
கம்தா திவாரி என்பவன் ஒரு 7 வயது சிறுமியைக் கடத்திச்சென்று கற்பழித்துக் கொன்றுவிட்டான். இவ்வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.குர்டுகர், தாம் விதித்த அதிகபட்ச தண்டனைக்கான காரணத்தை விவரிக்கும்போது ‘குற்றவாளியின் உள்நோக்கம் மிகக் கொடூரமானது. குற்றமிழைக்கப்பட்டவளோ, எளிதாகக் காயமடையக்கூடிய பலவீனமான சிறுமி. எனவே இக்குற்றத்திற்கு மரணதண்டனையே மிகவும் பொருத்தமானது. இதுவே மற்றவர்கள் இதுபோன்ற குற்றத்தை செய்யாமலிருக்கவும், இத்தகைய குற்றங்கள் சமுதாயத்தின் வெறுப்பிற்குரியது என்பதை வலியுறுத்துவதற்கும் வழிகோலாக அமையும்’ என்று கூறினார்.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திலும் இத்தகைய கருத்தே சொல்லப்படுகிறது. இறைச்சட்டங்கள் அனைத்தும் அதி அற்புதமானவை. குற்றங்களே இல்லாத அழகிய சூழலை உருவாக்க அவை உதவுகின்றன. மிருக உணர்வு கொண்ட மனிதனையும் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டுதல்களாகவே ஷரீஅத் சட்டங்கள் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டுள்ளன.
டக்கர் எனும் அறிஞர் சொல்கிறார். ‘குற்றவாளிகளைத் தயார் செய்வதற்காக பல சட்டங்களை நாம் இயற்றுகிறோம். அதன் பிறகு அவனைத் தண்டிப்பதற்காக சில சட்டங்களைக் கொண்டு வருகிறோம். இத்தகைய நிலை நீங்கி குற்றங்கள் செய்யாத அளவிற்கு உள்ளம் பக்குவமடைய ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகப் பயிற்சி பெறவேண்டும். சமூக அமைப்பையும், அரசியலமைப்பையும் பற்றிய கருத்துக்கள் மட்டுமே இந்தியாவில் ஆழமாகப் பதிந்து வருகின்றன. இந்நிலை மாறி ஞானக்கருத்துகளும் நாடெங்கும் பரவ உழைக்க வேண்டும்.
கள்ள நோட்டுகள் தயாரித்து வெளியிடுவதால், பணவீக்கத்தின் மூலம் ஏற்கனவே இருக்கிற போருளாதார வீழ்ச்சி மேலும் மோசமாகி நாட்டின் நலனைக் கெடுத்துவிடும். இத்தகைய குற்றங்களை தவறான உள்நோக்கத்தோடு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.
இறைமறையின் புனித வசனத்தை நினைத்துப் பாருங்கள்: ‘மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும், தரையிலும் அழிவுகள் பரவி விட்டன. அவைகளிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களின் தீவினைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலேயே) ருசிக்கும்படி (இறைவன்) செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)
நீடூர் ஏ.எம்.ஸயீத், ரஹ்மதுல்லாஹி அலைஹி

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::