Saturday, May 21, 2011

இறைவன் தந்த மகத்தான அருட்கொடை

றைவன் தந்த மகத்தான அருட்கொடை


[ உடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படாது என்பதோடு, இறைக்கிற கேணிதான் ஊறும் என்பதுபோல் ஆண்மை பெருகும் .
அவசர உடலுறவுகளால் நித்திரைக்கு கேடு என்ற நிலைதான் ஏற்படும். முக்கியமாக பெண்கள் உடலுறவின் பால் அலட்சிய பாவம் கொண்டிருக்க காரணம், இந்த நுனிப்புல் மேய்தலும், எடுத்தேன் கவித்தேன் தனமும்தான். இதனால் பெண்ணுக்கும் பயனில்லை, ஆணுக்கு ஏதோ ஒரு வித ரிலீஃப் கிடைத்தது போலவே இருக்குமே தவிர குற்றமனப்பான்மை ஏற்பட்டு விடும். தொடர் உடலுறவுகளால் கவர்ச்சி குறையும் ஞாபக சக்தி குறையும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இதெலாம் சுத்தமான ரீல். அதவது ஒரிஜினல் பொய். அதே சமயம் ''டூ மச் ஈஸ் ஆல் வேஸ் பேட் - அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.''
நம் தலைவர்கள் அனைவரும் அவரவர் உடல் வலிமைக்கேற்ற அளவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடலுறவு செய்து வந்தார்களேயானால் அவர்களில் வன்முறை வலுவிழக்கும், பொன்னாசை, பொருளாசை, பதவி வெறி குறையும்; இறைவனின்பால் நன்றி பொங்கும்; இன்பத்தை அள்ளிவழங்கிய பெண்ணினத்துக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் செயல்படுவார்கள்.
தற்போது எவனெவன் வன்முறையை விரும்புகிறானோ, பொன், பொருள், பதவி தேடி அலைகிறானோ அவனுக்கெல்லாம் மேற்சொன்ன ஆழமான, பதட்டமற்ற உடலுறவு கிடைத்திருக்காது. செக்ஸுக்கு இத்தனை முக்கியத்துவம் தந்த இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமா என்ன?! தவாறாக விளங்கி வைத்திருக்கும் மனிதனை என்னவென்று சொல்வது?!] பெரும்பாலான ஆண்கள் செக்ஸில் வெற்றி என்பது எத்தனை முறை செய்தோம் என்பதை பொறுத்தது என்று எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். நீங்கள் ஒருவருக்கு விருந்தளிக்க எண்ணினால் காய், கறி, ஸ்வீட், அப்பளம், ஐஸ்க்ரீம், சாம்பார், ரசம், மோர் பீடா எல்லாவற்றையும் ஒன் சிட்டிங்கில்தான் பரிமாறுவீர்கள். ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடமாட்டீர்கள் அல்லவா. எண்ணிக்கைகளை அதிகரிப்பது ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு தடவை இலை போடுவது போன்றதே.  
இன்னொரு வகையில் சொன்னால் குக்கரில் அரிசி வேக வைக்கும்போது மத்தியில் கேஸ் தீர்ந்து போய் அது அணைந்து விட்டால் மாற்று சிலிண்டரை பொருத்தி வேக வைப்பதற்கு முன் அந்த அரிசி சோறு வீணாகிப்போகும்.
இது ஆயுளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. பிள்ளை பெற வேண்டிக்கொள்ளும் உடலுறவுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்.  இன்று நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை வந்துவிட்ட நிலையில் இதை பின்பற்ற தேவையில்லை. ஆனால் சாப்பாட்டுக்கு பின் உடனே என்பதை விட சாப்பாட்டுக்கு முன் முடித்து கொள்வது நல்லது. மேலும் ஒரு குட்டித்தூக்கம் போடவோ, அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக நேரம் இருக்கும்போதோ மட்டும் ஈடுபடுவது நல்லது.
தொடர்ந்து உடலுறவு கொள்வதால் (இதை சுய இன்பத்துக்கு பொருத்தி பார்க்கவேண்டாம். அந்த ஸ்கூல் வேறு) ஆண்மை குறையும் என்பது சர்வ நிச்சயமாக மூட நம்பிக்கையே. இன்னும் சொல்லப்போனால் விரதம், அது, இது என்று மாதக்கணக்கில் இடைவெளிவிடுவதால்தான் குறையும்.
ஆரோக்கியமான வாழ்வை கொண்டிருப்பவர் திருமணத்திற்கு பின் கஞ்சானாக இல்லாமல் மாதம் ஒருமுறை, இருமுறை, உடலுறவு கொண்டு வந்தவருக்கு உடலுறவுகளால் ஆண்மை குறையும் வாய்ப்பே கிடையாது. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஜிம் சென்று பாடி பில்டப் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்? உடலின் உறுப்புகளுக்கு வேலை தருகிறார்கள். அதனால்தான் அந்த பகுதிகளுக்கு ரத்தம் பாய்கிறது. ரத்தக்குழாய்கள் விரிவடைகின்றன. அப்பகுதி வலுப்பெறுகிறது.
இதே விதி உடலின் இனப்பெருக்க மண்டலத்துக்கும் பொருந்தும். என்ன ஒரு வித்யாசம் என்றால் உடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படாது என்பதோடு, இறைக்கிற கேணிதான் ஊறும் என்பதுபோல் ஆண்மை பெருகும்.

அவசர உடலுறவுகளால்
நித்திரைக்கு கேடு என்ற நிலைதான் ஏற்படும். முக்கியமாக பெண்கள் உடலுறவின் பால் அலட்சிய பாவம் கொண்டிருக்க காரணம், இந்த நுனிப்புல் மேய்தலும், எடுத்தேன் கவித்தேன் தனமும்தான். இதனால் பெண்ணுக்கும் பயனில்லை, ஆணுக்கு ஏதோ ஒரு வித ரிலீஃப் கிடைத்தது போலவே இருக்குமே தவிர குற்ற்மனப்பான்மை (அவளுக்கு ஏதும் உறைச்சாப்லயே இல்லயே), மீண்டும் ஒரு இன்னிங்ஸ் முயற்சிக்கலாமா என்ற எண்ணம். தப்பிதவறி அதில் தோற்றால் நிரந்தர ஆண்மையின்மையே கூட ஏற்பட்டு விடும். உண்டவுடன் அதில் இறங்குவது தவறு. ஜீரண மண்டலம் வேலை செய்யும்போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. ஒரு வேலை நின்றால் தான் அடுத்த வேலை துவங்கும். உண்டவுடன் அதில் இறங்கினால் ஜீ.மண்டலம் வேலை நிறுத்தம் செய்யும் இதனால் அஜீர்ணம், அசிடிட்டி, பசியின்மை, வயிற்று வலி இத்யாதி ஏற்படும்.
செக்ஸ் பவர் என்பது ஜெனரல் பாடி பவர் மீதே ஆதாரப்பட்டுள்ளது. எனவே தண்ணீர் நிறைய குடிப்பது, பசித்து உண்பது, போதிய சத்தான உணவு, தேவையான தூக்கம், தேவையான ஓய்வு, சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், உடல் சுத்தம், மனசுத்தம் எல்லாம் தேவை. இவற்றில் கோட்டை விட்டு அதே வேலையாய் இருந்தால் தொல்லைதான்.
தொடர் உடலுறவுகளால் கவர்ச்சி குறையும் ஞாபக சக்தி குறையும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இதெலாம் சுத்தமான ரீல். அதவது ஒரிஜினல் பொய். அதே சமயம் டூ மச் ஈஸ் ஆல் வேஸ் பேட் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
ஆணும், பெண்ணும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது, பெண்ணுறுப்பு ஆணுறுப்பை பிடித்து விடுவது போன்ற உணர்வு ஏற்படும். இதை சில அதி மேதாவிகள் அது சக்தியை உறிஞ்சுகிறது என்பர். இது தவறான கருத்தாகும். ஆணுக்கு வீரியம் வெளியேறும்போது இன்னும் வெளியேறாதா என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் விந்து பையில் உள்ள அளவு விந்துதான் வெளியேறும்.
நம் தலைவர்கள் அனைவரும் அவரவர் உடல் வலிமைக்கேற்ற அளவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடலுறவு செய்து வந்தேர்களேயானால் (ஆழமான, பதட்டமற்ற, இருவரும் உச்சம் பெறும் வகையில்) அவர்களில் வன்முறை வலுவிழக்கும், பொன்னாசை, பொருளாசை, பதவி வெறி குறையும். இறைவனின்பால் நன்றி பொங்கும்.
இறைவனின் அருட்கொடை பெண் என்பதை உணர்வார்கள். இன்பத்தை அள்ளிவழங்கிய பெண்ணினத்துக்கும், இறைவனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் செயல்படுவார்கள்.
தற்போது எவனெவன் வன்முறையை விரும்புகிறானோ, பொன், பொருள், பதவி தேடி அலைகிறானோ அவனுக்கெல்லாம் மேற்சொன்ன ஆழமான, பதட்டமற்ற உடலுறவு கிடைத்திருக்காது. யானைக்கு மதம் எப்போ பிடிக்கும்? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது. வீட்டு நாய் வந்தவனையெல்லாம் எப்போது கடிக்க ஆரம்பிக்கும்? அதை க்ராசிங்குக்கு அனுப்பாதபோது, சாதுவான பசுமாடு எப்போ முட்ட ஆரம்பிக்கும்? அதற்கு செக்ஸ் கிடைக்காதபோது. கல்யாணமாகாத பெண்களுக்கு, திருமணமாகி சில மாதங்களே ஆன பெண்களுக்கு அல்லது மெனோஃபஸ் நெருங்கும் வயது பெண்களுக்கு அதிகம் பேய் பிடிக்கும், சமையலறை பீங்காந்தட்டுகூட பறக்கும் இதற்கும் காரணம் அதுதான்.

டீன் ஏஜ் இளைஞனோ இளைஞ்சியோ எப்போது எரிந்து விழ ஆரம்பிக்கிறாள் அவளுக்கு செக்ஸ் கிடைக்காத போது. ஆகவேதான் இளைர்களுக்கு இளைஞ்சிகளுக்கு விரைவில் திருமணம் முடிப்பது நல்லது. (அதிலும் வயது வந்த பெண் அல்லது பையன் இருக்கும்போது பெரிசுகள் அவர்களுக்கு எதிரிலேயே கொஞ்ச ஆரம்பித்தால் இது அதிகரிக்கவே செய்யும்.
மனிதனில் உள்ளது ஒரே சக்தி. அந்த சக்தி செக்ஸ் பவராக வெளிப்பட முடியாதபோது அழிவு சக்தியாக மாறுகிறது. மனிதனில் உள்ள அடிப்படை இச்சைகள் இரண்டே அவை கொல்லும் இச்சை அல்லது கொல்லப்படும் இச்சைதான். இவை இரண்டுமே செக்ஸில் நிறைவேறுவதால் செக்ஸ் என்பது அத்யாவசியமான ஒன்றாகிறது. 
(இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறும்போது உண்மையிலேயே இரண்டற கலக்கிறார்கள். ஆழமான உடலுறவில் பல முறை உச்சத்தை தள்ளிப்போட முடியும். பேக் டு தி பெவிலியன். அவ்வாறு ஒத்திப்போட்டால் இருவரும் ஒரு மணி நேரமேனும் ஈருடல் ஓருயிராகலாம்) செக்ஸ் என்பது உயிர்களின் ஜீவாதார உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. உயிர் வாழ்தல் உயிர்களுக்கு முக்கியமாய் சிந்திக்க தெரிந்த மனிதர்களுக்கு கொடுத்துள்ள வேலைகள் இரண்டே. ஒன்று உயிர்வாழ்தல் இரண்டு இனப்பெருக்கம் செய்தல். இந்த இரண்டில் இனப்பெருக்கம் செய்தலையே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.எனவேதான் 6 மாதங்களில் உயிரிழக்க போகிறபெண்ணுக்குக்கூட மாதவிலக்கு வெளியாகிறது. 3 மாதங்களில் சாகப்போகிற ஆணுக்கு கூட குறி விரைக்கிறது. வீரியம் ஸ்கலிதமாகிறது. முட்டாள், பிறவி நோயாளி, மேங்கோ ரைஸ்டு, ஒல்லி பீச்சான், பிச்சைக்காரன், ஏன் எயிட்ஸ் நோயாளிக்கு கூட செக்ஸ் தேவைப்படுகிறது. ஆண்கள் விசயத்தில் சுமார் 13 வயது முதல் சாகும்வரை அவனில் செக்ஸ் பவரை புதைத்து வைத்திருக்கிறது. பெண் எனில் அவளால் ஒரு பருவத்துக்கு பின் (அப்போ... அந்த காலத்துல 55 வயசுல கூட ரெகுலர் பீரியட்ஸ் உண்டு. ஏன்னா ஆரம்பம் 17 வயதுக்கு மேலதான், இப்போ 8 அல்லது 9 வயதுக்கு முன்பே கூட பருவம் எய்துவதால் 35 வயசுக்கே மெனோஃபஸ் ஸ்டார்ட்) தாயாக முடியாதோ என்னவோ செக்ஸை பெற முடியும், தரமுடியும்.
செக்ஸுக்கு இத்தனை முக்கியத்துவம் தந்த இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமா என்ன?! தவாறாக விளங்கி வைத்திருக்கும் மனிதனை என்னவென்று சொல்வது?!
மனித மனம் இன உறுப்பின் பால் ஆர்வம் காட்டுவது ஒரு வளர்ச்சிக்கு அடையாளம். குழந்தை ஆரம்பத்தில் தன் ஆசனத்தின் மீதுதான் ஆர்வம் காட்டும். சிலர் தன்னிச்சையாகவும், பலர் பெற்றோரின் கண்டிப்பாலும் இன உறுப்பின் பால் ஏற்பட்ட ஆர்வத்தை அடக்கி மீண்டும் ஆசனத்தின் மீதே கவனம் வைத்து பின்பக்க மனிதர்களாகி விடுகிறார்கள்.  
(பேருந்துகளில் முட்டக்கொடுக்கும் முட்டா பயல்களும் இந்த கேஸ்தான். தாழ்வு மனப்பான்மை மற்றும் தொடர் சுய இன்பங்களால் அவர்களின் பாலுணர்வு வெறும் இன உறுப்பின் மீதே குவிக்கப்பட்டு விடுகிறது. உடலுறவு கிட்டாத குறைக்கு சுய இன்பத்தை மேற்கொண்டவர்கள் துரித ஸ்கலிதம், ஸ்வப்ன ஸ்கலிதம், உடலுறவின் பால் வெறுப்பு, இத்யாதிக்கு ஆளாவது உண்டு. இவர்களுக்கு பெண்களை எண்ணி பகல் கனவில் கலவி செய்ய விருப்பமே தவிர நேரில் தோற்பார்கள். செக்ஸ் என்பது ஜீவாதார உரிமை. கடமையும் கூட. ஆண் பெண் ஆரோக்கியமாக, எவ்வித காம்ப்ளெக்ஸுகளுக்கும் இடமின்றி வாழ்வாங்கு வாழ செக்ஸ் ஒரு அருமருந்து. அதை திருமணம் முடித்து அடைந்து கொண்டாலே நிம்மதி.
செக்ஸ் லைஃபும் கேன்சரும்
தேவையற்ற திடீர் வளர்ச்சி. பெண்கள் விசயத்தில் மார்பகங்கள், இன உறுப்பு, ஆண்கள் விசயத்தில் ஆண்குறி குறுகிய காலத்தில் திடீர் வளர்ச்சி பெறுகின்றன. பெண்களுக்கு மார்பக கேன்சர், ஆண்களுக்கு ப்ராட்டஸ்டன்ட் கேன்சர் பிரபலமாக உள்ளன.
ஒரு சந்தேகம் என்னவெனில்
, மேற்படி வளர்ச்சிகளின் பின்னான இயற்கையின் நோக்கம் உடலுறவு, குழந்தை பிறப்பு, குழந்தைக்கு பாலூட்டுதலே. இவை காலாகாலத்தில் நடக்காததால்தான் கேன்சர் ஏற்படுகிறதோ என்பதே. எனவே மார்பக, ப்ராட்டஸ்டன்ட் கேன்சர் நோயாளிகளின் செக்ஸ் லைஃபை ஆய்வுக்குட்படுத்தினால் ஆச்சர்யப்படத்தக்க முடிவுகள் வெளியாகலாம்.
மேலும் சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியில்; ஆண்குறி விரைக்கவும், இதயம் தடையின்றி இயங்கவும் தேவையான ரசாயனம் ஒன்றே என்றும் குறி விரைப்பில் பிரச்சினை இருப்பவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு. மனிதன் சாப்பாடில்லாம கூட 60 நாள் வரைக்கும் சமாளிக்கலாம் (ஆனால் தேவைப்படும்போதெல்லாம் தண்ணீர் கட்டாயம் அருந்த வேண்டும். மனித உடலில் 65 சதவீதம் தண்ணீர் தான் தெரியுமில்லையா. தண்ணி இல்லேன்னா டீ ஹைட்ரேஷனாயிரும்).
ஆனால் செக்ஸ் இல்லாமல் வாழ்வது முடியாத ஒன்று. மனதாலோ, வார்த்தையாலோ, செயலாலோ செக்ஸ் இடம் பெற்றே தீரும். ஆகவே திருமணம் செய்து கொள்ளுங்கள். அதன் மூலமாக இல்லறத்தை நல்லறமாக்குங்கள்.. அதன் மூலம் இறையருளையும் பெறுங்கள்.
வாழ்த்துக்களுடன், M.A.முஹம்மது அலீ.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::