Wednesday, May 18, 2011

உருவாக்கப்பட்ட எதிரி.

ருவாக்கப்பட்ட எதிரி.

 
ஆரியர்கள் தங்களின் இத்தனைக் கால மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உண்மைகளை மூடி மறைத்து, சாதி அமைப்பு சீர்குலைந்து விடாமல் இருக்கவும், ஒரே வழி ஒருக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பொது எதிரியைக் காட்டி பயமுறுத்தி ஏமாற்றுவதே. இது எப்படி என்றால், உணவின் மீது நாட்டமில்லாத குழந்தைக்கு பிசாசு வருகின்றது. எனவே, உணவை உண்டு முடியென அச்சமூட்டப்படுவதுப் போல, எனவேதான் இந்த திடீர் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்!

ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி திசைதிருப்ப அன்று ஷாபானு வழக்கையும், இன்று பாபர்மசூதி பிரச்சினைகளையும் உருவாக்கி வருகின்றனர். எனவே இழந்து கொண்டிருக்கும் இந்துக்களை மீட்க, இஸ்லாமியர்களை ஒரு பொது எதிரிகளாக சித்தரிக்கின்றனர். இனிமேலும் இஸ்லாமியர் எதிர்ப்புக் கலவரங்கள் மென்மேலும் வரும். ஏனெனில், ஒவ்வொரு இஸ்லாமிய எதிர்ப்பு கலவரமும் இந்து ஒற்றுமையைப் பலப்படுத்துகின்றது!

கட்டுக்கோப்பான மதத்தில் உள்ள சிறுபான்மையினரின் இரத்தத்தை எந்நாளும் உயர் சாதியினரால் உறிஞ்ச முடியாது. எனவே இவர்கள் இராம ஜென்மபூமி போன்ற ஆரிய இந்துமத போதைகளை ஊட்டி, ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் வலையில் சிக்கவைத்து, அகப்பட்டதும் இரத்தம் உறிஞ்ச நடத்தப்படும் மிகப்பெரிய சதியே இராம ஜென்மபூமி வி(வ)காரங்கள்!

இந்தியா முழுவதிலும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் தான், உயர்சாதியினர் வாழ்வதற்கு நிலத்தில் உழுது, கட்டிடப்பணி செய்து, சல் உடைத்து, தோட்டிப்பணி செய்து வருகின்றனர். உயர் சாதியினர் உடலுழைப்பு பணிகளுக்கு பழக்கப் பட்டவர்கள் அல்லர். இவர்களை இப்படி உழைக்க விடாமல் ஆடம்பரத்துடன் வசதியாக வாழ்க்கை நடத்த அனுமதி அளித்தது ஒடுக்கப்பட்ட மக்கள்தான்! ஆனால், மண்டல் பரிந்துரையின் அமுலாக்கத்திற்குப் பிறகு தாங்கள் இந்துக்கள் அல்ல என்ற உண்மையை உணர்ந்து, ஓரணியில் நின்று உயர்சாதியினரை எதிர்க்கத் துணித்துள்ளனர். இத்தகைய எழுச்சிக்கு வித்திட்ட தந்தை பெரியார் அவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டு உள்ளோம்.

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் எழுச்சியை எப்படி நசுக்குவது? அவர்களை எப்படி மீண்டும் அடிமைப்படுத்துவது என்பதற்கான சதித்திட்டம் தான் "இந்து ஒற்றுமை" என்பது!

சிறுபான்மையினர் பங்கு

சமூக நீதி பாதுகாக்கப்பட வேன்டும் என்றால், மனித உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டுமென்றால், அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை ஏற்று, அதன்படி நடந்து உயர்சாதியினருக்கு பாடம் புகட்ட வேண்டும். மிகவும் சமத்துவம் வாய்ந்த மதங்களைச் சார்ந்த சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினர் ஆகியோர்கள் இந்துக்கள் அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும்.

நாம் இந்த கடமையை (நம்பி) சிறுபான்மையினரிடன் ஒப்படைப்பதற்கு காரணம், இவர்கள் சமத்துவம் வாய்ந்த மதத்தை சார்ந்திருப்பதால் மட்டுமல்ல, "இந்து ஒற்றுமை" என்ற பெயரால் நாள்தோறும் உயர்சாதியினர் ஒருபுறம், சிறுபான்மையினரை தேசவிரோத சக்திகள் என்று நாட்டு மக்களை நம்பவைத்து வருகின்றனர். மறுபுறம் சிறுபான்மையினரால் இந்த நாட்டிற்கு ஆபத்து என்று கூறி "இந்து ஒற்றுமை" வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

ஒரு போதும் உயர்சாதியினர் வெளிப்படையாக பெரும்பான்மை மக்களை எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் உயர்சாதியினருக்கு ஊதியமற்ற கொத்தடிமைப் பணியை செய்து வருகின்றார்கள்! எந்த ஒரு முதலாளியும் தன்னுடைய இலவச கொத்தடிமையை கொல்லத் துணியமாட்டான். ஏனெனில் , நாளை அந்த பணிக்கு ஆளற்றுப் போய்விட்டால் உயர்சாதியினரால் செய்ய இயலாது. அவர்கள் அமர்ந்திருதே உண்ணப் பழகியவர்கள்!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::