Wednesday, May 18, 2011

5 வயது சிறுமியை காணவில்லை!

சென்ற வாரம் (11.05.2011) சென்னை மெரினா பீச்க்கு தன் தாய் மற்றும் சகோதரனுடன் வந்த தமன்னா என்ற 5 வயது சிறுமி தன் அண்ணனுடன் அவளது தாயின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது திடீரென மாயமானாள்.
குழந்தையை எங்கும் தேடியும் கண்டு பிடிக்க முடியாத அவளது தாய் காவல்நியைலத்தில் புகார் அளித்தார்.
காணமல் போன குழந்தையை அவளது தந்தை ஸெய்யது நூர் அஹ்மது மற்றும் அவளது உறவினர்கள் இன்னும் தேடி வருகிறார்கள். தினமும் காலை 7 மணிமுதல் இரவு வரை அவளது பெற்றோர்கள் கண்ணீருடன் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் தேடி வருகின்றனர். பீச் அருகிலுள்ள மீனவர்களின் குடிகளில் எல்லாம் தேடி விட்டனர். இதுவரை கிடைக்கவில்லை.
எல்லா பத்திரிக்கை மற்றும் டிவிகளிலும் இது சம்பந்தமாக சிறுமி தமன்னாவின் பெற்றோர்கள் கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ளனர்.
தனது மகளை கடந்த ஒரு வாரமாக பறிகொடுத்து விட்டு துடிக்கும் அந்த தாயால் பேச முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறுகிறார். அவளது தந்தை மிகுந்த வேதனையுடன் பேட்டி அளித்த செய்தி வசந்த டிவியில் வந்தது. 
யாராவது இந்த குழந்தையை கண்டால் தயவு செய்து 09789929297 or 09677161672 இந்த எண்ணில் தெரிவிக்கவும்.
சிறுமியின் தாய் மொழி உருது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::