Tuesday, May 17, 2011

கலைஞர் கருணாநிதிக்கு ஓர் ஆறுதல் கடிதம்

லைஞர் கருணாநிதி

கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு ! தமிழக முதல்வர் என அழைக்கப்பட்ட தாங்கள் இன்றிலிருந்து முன்னாள் முதல்வர் என அழைக்கப்படவுள்ளீர்கள். அரசியல் என்ற நாடக மேடையில் இவையயல்லாம் சகஜம் என் பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இவை அரசியலில் பழுத்த தாங்கள் அறியாததுமல்ல.
இருந்தும் தங்களின் வயோதிப காலத்தில் பதவி துறப்பதென்பது சாதாரணமான விடயமன்று. எங்கள் வடபுலத்தில் அறுபது வயதோடு அதி காரிகளை ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவ தென்பது முடியாத காரியமாக இருக்கும் போது எட்டுக் கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தின் முதல்வராக இருந்த தாங்கள் தங்களின் 86 வயதில் அந்த உன்னதமான பதவியை இழப்ப தென்பது தங்களை வாட்டவும் வருத்தவும் செய்யும்.
அதற்கு மேலாக, ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கும் உங்களின் கற்பனையும் உடைந்து போன வேதனை தளர்ந்துபோன உங்கள் உடலை மேலும் உபாதைக்கு ஆளாக்கும். தங்களின் இந்நிலை குறித்து எமக்கும் வேதனையே. என்ன செய்வது தீர்ப்பு அப்படியாகி விட்டது.வழங்கப்பட்ட தீர்ப்பு வேறுவிதமாக இருந்தா லும் உங்கள் மீது தமிழக மக்கள் பற்றுடையவர் களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையின் நடை முறைப் பிறழ்வுகளே உங்களின் தோல்விக்குக் காரணமாயிற்று. தசரதச் சக்கரவர்த்தியின் மரணத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை அவர் திருமணம் செய்ததே காரணமென்பது போல், தாங்கள் கடந்த தேர்தலில் தோல்வி காண்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்களும் அவற்றின் பிள்ளைகளும் காரணமாயிற்று. ஐயா! வீட்டில் இல்லத்தரசி, பக்கத்தில் மனைவி, அருகில் துணைவி. இப்படியிருந்தால் இளமைக்காலம் மகிழ்வாகக் கழிந்தாலும் முதுமையில் அவை பெரும் தொந்தரவாகி விடும் என்ற யதார்த்தம் தமிழகத்தின் முதல்வ ராகவிருந்த கலைஞர் கருணாநிதியின் வாழ்வி லும் நிஜமாகிவிட்டதென்ற செய்தி இந்த உல கிற்கு நல்ல படிப்பினையாக – அனுபவமாக அமையட்டும்.
இவை பற்றியயல்லாம் இந்நேரத்தில் கூறு வது நயத்தக்க நாகரிகமாகாதெனினும் இதை விட வேறெந்த இடத்தில்தான் அதைச் சுட்டிக் காட்ட முடியும்! உங்கள் குடும்பம், பிள்ளைகள் கூடவே ஊழல் என்ற பெருந்தொல்லைகளிலிருந்து நீங்கள் தப்பித்து தமிழக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஈழத் தமிழர்களுக்கு உதவும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருந்தது. மத்திய அரசைத் தாங்கும் பலமான தூணாக இருந்த நீங் கள் எங்கள் பொருட்டு நாடகம் நடித்தீர்கள். செம்மொழி மகாநாடு கூட்டி உலகத்தமிழர்க ளின் ஏகோபித்த தலைவர் நான்தான் என புளாங்கிதம் அடைந்தீர்கள். ஈழத்தமிழர்களை வேண்டுமென்றே கைவிட்டீர்கள். அதன் தண்டனைதான் உங்கள் பதவி இழப்பு. இனி என்ன செய்ய முடியும்? நாடகம் முடிந்துவிட்டது. திரை மூடிவிட்டது. ஆறுதலடையுங்கள்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::