தேர்தல் அதிகாரிகள் குடும்பத்துக்கு ஆபத்து
"தேர்தல்
பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக,''
இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்.,13 தேர்தலை
சீர்குலைக்க தி.மு.க., தயாராக உள்ளது. ஓட்டுச்சாவடிகளை கைவசம் கொண்டு வர
திட்டமிட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்தை
சிறை வைத்து காரியம் சாதிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

காளிமுத்து ஆர்.டி.ஓ., விவகாரம் இதற்கு சரியான உதாரணம். நேரடி பேட்டி
கொடுத்த ஒரு அதிகாரியை அடுத்த மூன்றாவது நாளில் மாற்றி பேச வைத்துள்ளனர்.
"தோல்வி அடைந்தாலும் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம்' என, கருணாநிதி
கூறியிருப்பது, தொண்டர்களை தூண்டிவிடும் வேலை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும்
போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். வன்முறையில்
ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும். தி.மு.க.,வினரால் காங்.,அனைத்து
இடங்களிலும் தோற்கும். சாதிக் பாட்ஷா இறப்பில் உளவுப்பிரிவு போலீசாருக்கு
முழு பங்கு உண்டு.
சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டில் தான் அனைத்து ஊழலும் வெளிவருகிறது.
மத்திய அரசு பொம்மையாக உள்ளது. புலிகள் பெயரை சொல்லி லட்சக்கணக்கான
தமிழர்களை கொன்று குவித்தனர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டினர்.
அப்போது அமைதியாக இருந்த கருணாநிதி, இப்போது சோனியாவிடம் கோரிக்கை
வைக்கிறார். "இனி அவர்கள் சுடமாட்டார்கள்' என, சோனியா சொல்கிறார் என்றால்,
இவரது கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பது உறுதியாகிவிட்டது, என்றார்.
நன்றி;தினமலர்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment