மொபைல் மூலம் ரயில் டிக்கட் பெற வசதி!
முன்பதிவு
வசதியில்லாத சாதாரண டிக்கட்களைப் பெற நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய
அவசியமில்லை; இனிமேல் அவற்றை மொபைல் மூலமாகவே பெற இந்தியன் ரயில்வே வசதி
ஏற்படுத்தியுள்ளது.
முன்பதிவு வசதியில்லாத சாதாரண பெட்டிகளில்
பிரயாணம் செய்வதற்கான டிக்கட்பெற ரயில் நிலையங்களில் நீண்டவரிசையில்
நிற்கவேண்டியது உள்ளது. இக்குறையை நீக்க, மொபைல் மூலமாகவே டிக்கட்களைப்
பெறும் வசதியை ஏற்படுத்த இந்தியன் ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக
இந்தியன் ரயில்வேபொது மேலாளர் எஸ்.எஸ்.மாத்தூர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற
பொதுத்துறை நிறுவனங்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டபின்
செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது,
"முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்
செய்வதற்கான டிக்கெட்டை வாங்க, இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை.
மொபைல்போன் மூலமாக, டிக்கெட்டை வாங்க முடியும். இதற்கான செயல்பாடுகள்
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அனைத்துவிதமான மொபைல்போனிலும்
செயல்படத்தக்க வகையில் இவ் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்" என்று
தெரிவித்தார.நன்றி*****
இந்நேரம்.காம்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment