முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
வாஷிங்டன்:
தீவிரவாதிகளின் செயல்களை ஒடுக்குவதில் அமெரிக்க முஸ்லிம்களின் பங்கு
நமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்திகள்
கூறியுள்ளன.
இதுகுறித்து
வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம்
தீவிரவாதத்துக்கு எதிரான தீர்வுக்கு வழி காண்பதில், நமக்கு உதவுவோராக
உள்ளனர். எனவே அவர்களால் பிரச்னை இல்லை' என, வெள்ளை மாளிகை பத்திரிகை
செயலர் ஜெய் கார்னே கூறியுள்ளார்.
அமெரிக்காவில்
முஸ்லிம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம்
ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய
ஜெய் கார்னே கூறியதாவது:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம்
தீவிரவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களாக உள்ளனர். அதனால், அவர்களின்
உதவியுடன் நாம் தீவிரவாத பிரச்னையை எளிதில் களைய முடியும். .தீவிரவாத
பிரச்னையில் காங்கிரஸ் சபை அக்கறை காட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். இது
முக்கியமான பிரச்னை என்றும் நம்புகிறோம் என்று ஜெய் கார்னே கூறினார்.
இந்த
கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமெரிக்க முஸ்லிம்கள் உட்பட ஏராளமானோர்
பங்கேற்று தீவிரவாதத்துக்கெதிரான தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment