Thursday, April 1, 2010

குல்லா வியாபாரியும், குரங்குகளும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...(துவங்குகிறேன்)!




குல்லா வியாபாரியும், குரங்குகளும்!



அன்பு இஸ்லாமிய பெரியோர்கள், சகோதர, சகோதரிகளுக்கு,



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், மன்னராட்சிகாலத்தில் ஷஹீத் திப்புசுல்தான் அவர்கள் அன்றைய முஸ்லிம் மன்னர்களின் ஒற்றுமை இன்மையாலும், காட்டிக் கொடுக்கும் துரோகிகளாலும் வீரமரணமடைந்தார். இஸ்லாமியர்களின் ஆட்சி அதிகாரம் படிப்படியாக இந்தியாவில் துடைத் தெறியப்பட்டது. ஆனால், தீரர் திப்பு அவர்கள் நம் நினைவுகளில், உணர்வுகளில் கலந்து இன்றும் நம்மோடு வரலாற்றில் நிலைத்து நிறகிறார். காட்டி கொடுத்த துரோகிகள் தான் இழிவடைந்து அழிந்துவிட்டனர். இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் லஹ்னத்திற்கு (சாபத்திற்கு) ஆளாகினர்.



சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, முஸ்லிம் லீக்கின் தலைமையை பின்பற்றி மாபெரும் சாதனைகளை படைத்தனர். வட்ட மேசைமாநாட்டில் காங்கிரசுக்கு எதிராக-டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஆதரித்ததன் மூலம் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உரிமைகள் கிடைக்க முஸ்லிம் லீக் உதவியது. இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் - காங்கிரஸ் கட்சி தலித், மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காத நிலையில், முஸ்லிம் லீக் சார்பாக ஓர் தலித்தை அமைச்சராக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சுதந்திரம் பெற்றபின் டாக்டர் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம் லீக் சார்பாக அரசியல் சாசன சபைக்கு அனுப்பி சரித்திரம் படைத்தனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு மட்டும் உழைக்காமல் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடிய மாபெரும் இயக்கமான முஸ்லிம்லீக் இன்று, அத்தலைவர்களின் திறமையின்மையாலும், துணிவு இன்மையாலும், தியாகத்திற்கு தயாராக இல்லாததாலும் ஒரு 'சீட்டு' இயக்கமாக சுருங்கி அதுவும் இரவல் சின்னத்தில் MP பதவிக்கு போட்டியிட 'திருவோடு' ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.



சுதந்திர காலத்தில் 'தாய் சபையாக' வழிகாட்டியாக திகழ அன்றைய தலைவர்களின் வீரமும், தியாகமும், திறமையும் காரணமாக அமைந்தன. இன்றைய தலைவர்கள் தங்களின் பதவி சுகத்திற்காக போட்டி போட்டு பல 'லீக்குகளை' உருவாக்கி முஸ்லிம் லீக்கை 'பாட்டி சபையாக' மாற்றிவிட்டனர்.. காங்கிரஸீம், திமுகவும் முஸ்லிம ;லீக்கை சுரண்டியும், உடைத்தும், இன்றைய சுயநல தலைவர்களுக்கு பதவி 'எலும்புத்துண்டை' வீசி தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளாகவே மாற்றிவிட்டனர். உடைந்த முஸ்லிம் லீக்கையே ஒன்று சேர்க்க இயலாமல், திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே மாறி முஸ்லிம்களின் உரிமைக்காக போராட துணிவின்றி 'கையேந்தி' பல்காட்டி நிற்கின்றனர்.



காங்கிரஸ் ஆட்சியில் பாபர் பள்ளி இடிக்கப்பட்டபோது வெட்கமின்றி முஸ்லிம் லீக் காங்கிரசுடன் கேரளாவில் ஆட்சி மஞ்சத்தில் மகிழ்ந்தது. பெரியவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் இக்கேவலமான நிலையை கண்டு கொதித்து முஸ்லிம்லீக்கிலிருந்து பிரிந்து சென்றார். காங்கிரஸ் கட்சி பாபர் பள்ளி இடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை, இடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தோம் என முஸ்லிம்களை நக்கலடிக்கின்றனர்.



அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்று கூறிய உறுதிமொழி பாராளுமன்றத்தில் இன்றும் எதிரொலிக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாபர் பள்ளி இடித்த இடத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்காமல் கோவில்கட்டி சிலை வணக்கம் நடத்த அனுமதித்து, பாதுகாப்பும் வழங்குகிறது காங்கிரஸ் ஆட்சி. இக்கட்சியிலும் முஸ்லிம்கள் பெயரளவில் பதவி சுகத்திற்காக காலம் தள்ளுகின்றனர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைவிட காங்கிரஸில் 'பெரிய' முஸ்லிம் தலைவர் எவரும் இல்லை. ஆனால் அவருடைய நிலையே கேவலமானதாக இருந்துள்ளது. சுதந்திர காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு செய்த துரோகத்தை



தனது புத்தகத்தில் எழுதிய ஆசாத் அவர்கள், அந்த உண்மைகளை மூடி முத்திரையிட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு அதை பிரிக்க வேண்டும் என கூறி இறந்துவிட்டார்.



' அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் சத்தியத்தை உரைப்பதே மிகச்சிறந்த 'ஜிஹாத் என அண்ணல் நபி (ஸல்). ஆவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் மௌலானாக்கள் பதவி சுகத்திற்காக சத்தியத்தை சாப்பிட்டுவிட்டு, மறைத்துவிட்டு இறந்து விடுவது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம். சத்தியத்தை கூறுவதற்கே 50 ஆண்டுகள் தேவையென்றால் போராடுவது எப்போது, உரிமை பெறுவது எப்போது?. எனவே, முஸ்லிம் அல்லாதவர்களின் தலைமையில், கட்சிகளில் இணைந்து, முஸ்லிம்களின் உரிமையை பெற்றுத்தருவேன் என்பது மாபெரும் ஏமாற்று வேலை.



1967 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று உறுதி கூறிய திமுக, வெற்றி பெற்றபின் முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவையில் இடம் தராமல் 'வாக்கு' மாறி துரோகம் செய்தது. அன்று துவங்கி இன்று வரை முஸ்லிம்லீக்கை தன் நலனுக்காக அவ்வப்போது உடைத்து கூறுபோட்டது.



கடந்த காலங்களில் திமுக வெற்றிக்கு முஸ்லிம்களின் ஓட்டுகளே (வாக்குகளே) முக்கிய காரணம் என்பதை திமுகவே மறுக்கமுடியாது. இந்நிலையிலும் 12 சதவீதத்திற்கு மேலுள்ள முஸ்லிம்களுக்கு திமுக சார்பாக ஒரு முஸ்லிமுக்கும் MP தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முஸ்லிம்லீக் சார்பாக ஒரு முஸ்லிமுக்கு மட்டும் வேலூரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் முஸ்லிம்லீக் கூட்டணி ஒப்பந்தம் செய்யவில்லை, மாறாக அடிமை சாசணம் செய்துள்ளனர். முஸ்லிம்லீக் தலைவரே வேட்பாளராக நிற்க முடியாத அவலம், அது மட்டுமின்றி திமுக சின்னத்தில்தான் நிற்க வேண்டுமாம்! நாளை MP க்கு பாராளுமன்றத்தில் ஓட்டுபோட வேண்டும் என்று திமுக உத்தரவிட்டால் முஸ்லிம்லீக் ஓட்டுபோட வேண்டும் மீறினால் பதவி பறிபோய்விடும் இதற்கு பெயர் ஒப்பந்தமா? அடிமை சாசனமா?



இப்படிதான் முஸ்லிம்களின் மானம். 'தாய்சபை' என்ற பெயரில் மாற்றாரின் காலடியில் பதவி 'வரத்திற்காக' தவம் கிடக்கிறது. இதற்குதான் முஸ்லிம்லீக் உருவாக்கப்பட்டதா? முஸ்லிம்களின் தியாகம் யாருடைய பதவி சுகத்திற்காக பணியவைக்கப்படுகிறது. முஸ்லிம்லீக்கை உருவாக்கிய தலைவர்கள் இப்படித்தான் அரசியல் செய்ய கற்றுக்கொடுத்தார்களா? மறுமையிலும் இத்தகையவர்களை மன்னிக்கமாட்டார்கள் அத்தகைய துரோகத்தை இன்றைய முஸ்லிம்லீக்கின் 'பாட்டி சபையின்'; தலைவர் என கருதி செய்துவருகிறார்கள். பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, அவமானத்தை தனது சுயசரிதையில் எழுதி 'சீலிட்டு' 100 ஆண்டுக்கு பிறகு பிரித்து படிக்குமாறு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முஸ்லிம்லீக் முன்னோர்கள் செய்த சாதனையை பற்றி பேச பெருமைப்பட இன்றைய முஸலிம்லீக்கிற்கு உரிமை இல்லை.



இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த முஸ்லிம் அரசியல் இயக்கமும் எடுக்காத நிலைபாட்டை தமுமுக – மமக துணிந்து எடுத்துள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தனித்து போட்டியிடுகிறது. இத்தகைய துணிவு அரசியல் களத்தில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்லீக்கிற்கு இல்லை 'தாய்சபையையோ, பாட்டி சபையையோ' எங்கிருந்தோ ஒரு 'தாத்தா' ரிமோட் கண்ட்ரோலில் இயக்க மானமுள்ள வாரிசுகள் அனுமதிக்கமாட்டார்கள். மானமுள்ளவர்கள் சிந்திக்கட்டும் சுயநலம் உள்ளவர்களும், நயவஞ்சகர்களும்; அழிவை தேடிக்கொள்வர். வருங்கால சமுதாயத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர்கள் தான் தலைவர்களே தவிர சமூகத்தை தன் சுயநலனுக்காக சவக்குழிக்கு அனுப்ப முயற்சிப்பவர்கள் கேவலமான முடிவையே தேடிக்கொள்வர். காயிதேமில்லத் அவர்களின் காலத்தில் திமுகவின் சின்னத்தில் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. அதனால்தான் அவருடைய பெயர் இனறும் உச்சரிக்கப்படுகிறது.



முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மமக போராடுகிறது அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளது. அமைச்சருக்கு இணையான வக்பு வாரிய தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு சுயஉரிமைக்காக தேர்தல் களத்தில் போராட்டத்தை நடத்துகிறது. அதுமட்டுமல்ல காங்கிரஸ் தருவதாக கூறிய வெளிநாட்டு தூதர் போன்ற கவர்ச்சிகரமான பதவிகளையும் நிராகரித்துள்ளது. சாதாரண MP பதவிக்கே எப்படி வெறிபிடித்து அழைகிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கவும். அடிமை அரசியலில் இருந்து விடுதலைபெற, தொலைநோக்கு பார்வையுடன் கிடைத்த பதவியையும் இழந்து எதிர்கால சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.



தனிமனித புகழ்பாடி, எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும், காலில் விழுந்தாவது பதவியைபெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் - சகோ.பேரா.ஜவாஹிருல்லாஹ்வோ, சகோ. ஹைதர் அலியோ தனித்து ஓர்முடிவு எடுக்காமல் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுடன் நன்கு ஆலோசித்து எடுத்த ஓர் தீர்க்கமான முடிவைகண்டு துரோகிகளும், சுயநலமிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மமகவின் பலநாட்கள் ஆலோசனையும், முடிவும் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. தாம்பரம் மமக துவக்க விழாவில் மற்ற அரசியல் கட்சியினரை அழைக்காதது மிகப்பெரும் எழுச்சி ஆகும். மமக தன் சுயபரிசோதனையில் உள்ளது பாராட்டத்தக்கது.



திமுகவிற்காக ஷஹித் பழனிபாபா அவர்களை விட அதிகமாக உழைத்த வேறு ஓர் முஸ்லிமை அடையாளம் காட்ட இயலாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழனிபாபாவுக்கு NSA தடுப்பு காவல் சட்டம் பரிசாக வழங்கப்பட்டது. கோவை கலவரத்தில் 19 முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர். முஸ்லிம்களை கொன்றவர்களுக்கு திமுக அரசில் பதவி உயர்வு பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், பாக்தாத் அபுகரிப் சிறையை விட அதிகமாக கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற்றிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. நான் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சுமார் 8 1/2 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் இத்தகைய அவலங்களை நன்கு அறிவேன். சிறையிலிருந்து வெளிவந்து சுமார் 2 1/2 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2004ல் தமுமுகவிலிருந்து PJ வெளியேறிய பின் தமுமுகவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறேன். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக அரசு சிறை கைதிகளை விடுதலை செய்தபோது தமுமுக முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக பெரும் முயற்சி செய்தது, ஆனால், திமுக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் துரோகம் செய்தது.



12 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்களுக்கு 3 1/2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை கிறுத்துவர்ககள் தூக்கி வீசி விட்டனர்.



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உஹத் யுத்தத்திற்கு செல்லும்போது, நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை முஸ்லிம்ளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் வலிமையை, ஒற்றுமையை குழைக்க முயற்சி செய்தான். அதில் அவன் சிறு வெற்றியும் பெற்றான். ஆனால் வரலாற்றில் நயவஞ்சகன் என பதிவு செய்யப்பட்டான். எப்போதெல்லாம் முஸ்லிம்கள் உரிமைக்காக, ஆட்சி அதிகாரத்திற்காக போராடுகிறார்களோ அப்போதெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளனர்.



இன்றைய தமிழக அரசியல் களத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக, தனித்தன்மைக்காக, தமுமுக, மமக போராடும் போது PJ தன் துரோகத்தை வெளிப்படையாக காட்டியுள்ளார்;. இவர்தான் சமுதாயத்தின் ஒரே தலைவர் என ஆணவத்துடன் 'படம்' காட்டிவருகிறார். கடந்த காலங்களில் இவருடைய காட்டிக் கொடுத்த செயல்களையும், நயவஞ்சகங்களையும் சிறையில் இருந்தவன் என்ற முறையில் நன்கு அறிந்தவன்.



சைத்தான் தன் வேலையை செய்தால்தான் சைத்தான், செய்யாவிட்டால் சைத்தான் அல்ல. PJ தன் வேலையை செய்யாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். 'இனம் இனத்தோடுதான் சேரும்' என்பதற்கு ஏற்ப இஸ்லாமிய துரோகிகள் அனைவரும் 'கை'கோர்த்து செயல்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 3 மாதத்தில் தமுமுக -வை அழிப்பேன் என சபதம் செய்தவர் தன்னால் இயலாததால் தமுமுகவின் வளர்ச்சியை கண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டார் என்பதை அவருடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் நிரூபிக்கின்றன.



முஸ்லிம்களுக்கு தேர்தலில், போட்டியிட சரியான இடம் தராமல், மனதில் இடம் தருவதாக வசனம் பேசுவதும், கூட்டணி கட்சிகளை உடைத்து கூறுபோடுவதும் தான் திமுகவின் கூட்டணி தர்மம். இன்று தமுமுகவை, மமகவை உடைக்க முடியாததால் முஸ்லிம்களின் ஓட்டு சிதறிவிடும் என்று தோல்வி பயத்தில் 'தலையை சொறிவதற்கு கொள்ளிக்கட்டையை எடுத்தது' போன்ற நிலையில் PJ வின் ஆதரவை திமுக பெற்றுள்ளது! பலமுறை புதிய இயக்கம் கண்டு இறுதியாக? தானே (தவ்ஹீதுக்கு) நிறுவனராக கற்பனை செய்து கொண்டு உருவாக்கிய TNTJ இன்று உடைந்து மாவட்ட கிளைகளையும் கலைத்து, மாநில நிர்வாகிகளையும், நீக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு துவண்டு விட்ட PJ தனக்கு ஓர் மறுவாழ்வு கிடைக்காதா என காத்திருந்த நிலையில், தமுமுக திமுகவைவிட்டு – உரிமையை நிலைநாட்ட பிரிந்து விட்டநிலையில். PJ தனக்கு மறுவாழ்வு கிடைத்து விட்டது என்ற நப்பாசையில் திடீரென திமுகவிற்கு ஆதரவு என கூறியுள்ளார். PJ வின் மீது முஸ்லிம்களுக்கு உள்ள வெறுப்பை அறியாமல் அரசியல் சாணக்கியர் கலைஞர் மாபெரும் தவறை செய்து விட்டார். PJ வின் நட்பு தான் முஸ்லிம்களின் ஓட்டு திமுகவிற்கு அரவே கிடைக்காமல் செய்துவிட்டது என்பதை இன்ஷாஅல்லாஹ் தேர்தலுக்கு பின் உணர்வார்.



PJ. தமுமுக - வின் 'பைலா' வைப் பற்றி கூறி வழக்கு தொடருவேன் என 'பிளாக்மெயில்'; செய்கிறார்.. கடந்த காலங்களில் இவ்வாறு பலர்மீது வழக்கு தொடர்வதாக 'பிளாக்மெயில்'; செய்துள்ளார். என்மீது 1997ல் சுமார் 10,000 ரூ செலவு செய்து ரூ ஒரு லட்சம் கோரி மான நட்டவழக்கு போட்டார். இவருடைய 'பூச்சாண்டிக்கு' பயப்படாமல் வழக்கை எதிர் கொள்ள தயாரானேன். ஆனால், இவருக்கு மானமில்லை என்பதை ஒப்புக்கொண்டு வழக்கு நடத்தாமல் விட்டுவிட்டார். இதுபோல் பெரியவர் பாஷா அவர்கள்மீது தொடுத்த கிரிமினல் வழக்கும் 'புஸ்வானம்' தான்.



தமுமுக பைலா ஒன்றும் வேத புத்தகம் அல்ல. காலநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் அல்லாஹ்வின் குர்ஆனிலேயே குழப்பத்தை உருவாக்கிய PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர்; தேர்தலுக்குபின் அறிவார். வல்லத்தில் அல்லாஹ்வின் கோபத்தால் கவிழ்ந்த 'காபா' போன்ற சினிமா செட்டப்பை கட்டிய நவீன அப்ரஹா PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர்; அறியமாட்டார்.

பாலைவனத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக காபாவின் அருகில் ஜம்ஜம் நீர் ஊற்றை அல்லாஹ் அருளியுள்ளான். ஆனால் தஞ்சை தரணியில், காவிரிக்கரையில் பல நீருற்றுகள் இருந்த இடத்தில் நவீன அப்ரஹா PJ காபா போன்ற சினிமா செட் போட்டதால் அல்லாஹ்வின் லஹ்னத் - கோபப்பார்வை ஏற்பட்டு நிரூற்றுகள் வற்றிவிட்டன.



PJ. உடன் சேர்ந்த திமுக மீதும் அல்லாஹ்வின் கோபப்பார்வை இன்ஷh அல்லாஹ் ஏற்படும்.



ஓராண்டுக்கு முன் சகோ. பாக்கருக்கு எழுதிய கடிதத்தில் PJ வை பற்றிய உண்மைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையை கூறி இன்னும் எத்தனை நாட்கள் அண்ணனுக்காக பாவ மூட்டைகளை சுமக்க போகிறீர்கள் என வினவினேன். அல்லாஹ் என் போன்றவர்களின் துஆவை ஏற்று TNTJ வை உடைத்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளான்.



சகோ. ஹைதர்அலி அவர்கள் வக்பு போர்டில் ஊழல் செய்ததாக PJ கூறுவது உண்மையாக இருந்தால் வழக்கு தொடர வேண்டியதுதானே ஏன் இதுவரை ஊழல் வழக்கு தொடரவில்லை. திமுக அமைச்சர் ஒருவரே கட்டபஞ்சாயத்து செய்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் PJ தமுமுகவினர் கட்டபஞ்சாயத்து செய்ததாக ஒருவர் மீதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததுண்டா?



அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் பாவம் தீர்ந்துவிடும் என ரகசிய பத்வா கொடுத்த கள்ள ஆலிம் PJ ஜகாத் கொடுக்காத முஸ்லிம்களை கொள்ளையடிக்கலாம் என ரகசிய பத்வா கொடுத்த கள்ளஆலிம் PJ .



அடுத்தவர்கள் மீது பொய்யையும், அபாண்டமான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறும் கள்ள ஆலிம் PJ என்பதையும் உலகம் அறியும்.



ஷஹித் பழனி பாபா பற்றி எத்தகைய பொய் செய்திகளை பரப்பினார் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவர். அவர் ஷஹித் ஆனவுடன் நீலிக்கண்ணீர் வடித்த நயவஞ்சகர் என்பதை நன்கு அறிவோம்.



ஒரு குல்லா வியாபாரி மரத்தின் நிழலில் படுத்திருந்தபோது குரங்குகள் அவர் அணிந்திருந்ததுபோல குல்லாக்களை மாட்டிக்கொண்டன. தூங்கி எழுந்த குல்லா வியாபாரி தான் அணிந்திருந்த குல்லாவை எடுத்து கீழே வீசியதும் மரத்தில் இருந்த குரங்குகளும் குல்லாக்களை வீசி எறிந்தன. குல்லா வியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு நடையை கட்டினார் என ஒரு கதையை பள்ளியில் படித்துள்ளேன்..



இந்த குரங்குத் தத்துவத்தைத் தான் PJவும் கடைபிடிக்கிறார். இவர் இறையச்சமின்றி வீசி எறியும் வார்த்தைகளை இவருடைய ரசிகர் கூட்டம் பேசித்திரிகிறது. இவருக்கு சாதகம் இல்லையென்றால் தன் வார்த்தைகளையே மாற்றி கூறுவார். அப்போதும் குரங்குகளின் செயல் போல ரசிகர் கூட்டம் சிந்தித்து பார்க்காமல் அதையே பின்பற்றுகிறது.



ஜமாத் நிர்வாகிகளை மிரட்டினார்கள், சுனாமியில் ஊழல், செல்வந்தர்களிடம் மிரட்டி பணம் பறித்தனர், கட்டப்பஞ்சாயத்து செய்தனர். வக்பு வாரிய சொத்துக்களை தாரைவார்த்தனர் என ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறும் PJ ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுத்திருப்பார் என்பதை அவருடைய ரசிகர்கள் சிந்தித்தால் உணர்வார்கள்.



PJ கூறுவது உண்மைதான் என வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவு தவறுகளுக்கும் காரணமாக – ஆளும் கட்சியை தமுமுக பயன்படுத்திதாக PJ வே கூறும்போது அவ்வளவு மோசமான ஆளும்கட்சியை – திமுகவை PJ ஆதரிப்பது பெரும் பாவம் அல்லவா. அல்லாஹ்விற்கு PJ வின் ரசிகர்கள் என்ன பதில் கூறுவார்கள்? தயவுசெய்து மனிதர்போல் சிந்திக்கவும். மக்களை முட்டாளாக்க இவ்வாறு வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறார்.



1991 தேர்தலுக்கு முன் திருச்சி நடுவன் சிறையில் NSA சிறைவாசியாக ஷஹித்

பழனிபாபா இருந்தபோது டாக்டர் ராமதாஸ் அவர்களும் அன்றைய பா.ம.க பொதுசெயலாளர் தலித் எழில்மலை அவர்களும் தேர்தல் உடன்பாடு குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டபோது நானும் உடன் இருந்தேன் அப்போது பழனிபாபா அவர்கள் தேர்தல் உடன்பாட்டைவிட சமூக உடன்பாட்டையே வலியுறுத்தினார். முஸ்லிம்களும் வன்னியரும் தலித்துக்களும் ஒற்றுமையுடன் இருந்து சமூக ஒற்றுமையும், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஜிஹாத் கமிட்டிக்கு நோட்டோ, சீட்டோ தேவையில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறினார். டாக்டர். ராமதாஸ் அவர்களும் பல ஊர்களில் முஸ்லிம்களுக்கு வன்னியருக்கும் இருந்த பிரச்சினைகள் தீர உதவினார்.



1991 ல் பாபா அவர்கள் கூறிய வசனங்களை இன்று PJ கூறுகிறார். 'நோட்டும் வேண்டாம், சீட்டும் வேண்டாம்' என்று முஸ்லிம்களை 18 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறார். நோட்டு வேண்டாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 1992 பாபர் மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியாக கலவரம் அப்பாவி முஸ்லிம்கள் கைது என அடக்கு முறைகளை கண்டு பாபா அவர்கள் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் இருந்தார் என்பதை அவருடன் இருந்தவர்கள் அறிவர்.



அவ்வாறு பாபா ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் முஸ்லிம்களின் எழுச்சியை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் ஷஹிதாக்கப்பட்டார். எனவே இன்று முஸ்லிம்களின் எழுச்சியை தடுப்பதற்கான எதிரிகளின் நயவஞ்சக சதியில் PJ வும் பங்கெடுக்கின்றார். PJ வின் பித்தலாட்டங்களை நயவஞ்சகங்களை விமர்சிப்பவர்களை வழக்கு தொடுப்பேன் என மிரட்டுவதும், அவருடைய அநியாயங்களை எதிர்ப்பவர்கள் மீது மது,மாது மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு கூறி வீடியோ ஆதாரம் உள்ளது என அபாண்டமாக பழி சுமத்துவதும் PJ வுக்கு வாடிக்கை. இதுவரை யாரைபற்றியும் இவர் கூறியதுபோல் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதில்லை. இவருடைய வார்த்தையில் சில ரசிகர்கள் மட்டும் மயங்கி உள்ளனர்..



உண்மையில் PJ வின் துரோகங்கள், நயவஞ்சகங்கள் காட்டிக்கொடுத்தல் அரபிக் கல்லூரி லீலைகள் முதல் ஆற்காட்டு லீலைகள் வரை, இஸ்லாத்தை விட்டு வெளியேறி 'முர்தத்தாக' இருந்தது முதல் குர்ஆணை ஹராமான வேலைக்கு பயன்படுத்தியது வரை தொகுத்து இன்ஷாஅல்லாஹ் PJ ஓர் ஆய்வு' - தொண்டி முதல் ஆற்காடு வரை என ஒரு நூல் விரைவில் ஆதாரபூர்வமாக வெளியிட்டு அவருடைய முகமூடி கிழிக்கப்படும். அப்போது அவருடன் இருப்பவர்களும், ஆதரிப்பவர்களும் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை இன்ஷாஅல்லாஹ் ஏற்படும்.



PJ வின் மறுவாழ்வுக்காக திமுகவை ஆதரிக்கும் நிலையை தமிழக உலமாக்கள் நன்கு அறிவார்கள். தனித்து விடப்பட்ட PJ இன்று திமுக தயவில் எழுந்து நிற்க முயற்சிக்கின்றார். எனவே இதை நன்கு புரிந்துகொண்டு முஸ்லிம்கள் குறிப்பாக உலமாக்கள் ஓர் மௌன புரட்சியை இன்ஷாஅல்லாஹ் ஏற்படுத்துவார்கள்.



PJ வை பற்றிய உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு என்றுமே பதிலளித்ததில்லை. அவரைப்பற்றி வெளியீடுகளை அலட்சியப்படுத்தினார். ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து அவரை விட்டு விலகிவிட்டனர். இன்று அவரைபற்றி வெளியிட்ட வெளியீடுகளின் தாக்கம் என்ன என்பதை உணர்ந்துவிட்டார்.



சூழ்ச்சி செய்பவர் அந்த சூழ்ச்சியாலேயே அழிவார் என திருமறை கூறுகிறது. PJ தன் சூழ்ச்சிகளுக்கு யார் யாரை, எந்த அமைப்புகளை, எந்த பத்திரிக்கைகளை, எந்த டிவியை பயன்படுத்தினாரோ அவை அனைத்தும் இன்று அவருக்கு எதிராக அல்லாஹ் திருப்பி விட்டான். தற்போது உணர்வு இதழ் மட்டும் உள்ளது. அதுவும் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு எதிராக திரும்பும். முஸ்லிம் மீடியா டிரஸ்டின் சார்பாக வெளிவரும் உணர்வு இதழின் டிரஸ்டிகளில் பெரும்பான்மையானவர்கள் PJவுக்கு எதிராக உள்ளதால் இன்ஷாஅல்லாஹ் உணர்வும் அவருக்கு எதிராக திரும்பும். அல்லாஹ்வின் வாக்கு பொய்ப்பதில்லை.

'மேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். 3:54

நான் எந்தக் கட்சியிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை. தமுமுகவின் சமுதாய மார்க்க, மனிதநேய பணிகளை, போராட்டங்களை கண்டு அவர்களை ஆதரிக்கின்றேன்.. முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் தலைமையில் இயக்கம் தேவை மற்றவர்களை நம்பி ஏமாந்தது போதும் நமது உரிமைகளை நாமே பெறுவோம். அதிகாரத்தை நாமும் கையில் எடுப்போம். நேர் வழியில் நீதி வழியில் செல்வோம். மமக தனித்து தேர்தலில் நிற்பதுதான் முதல் வெற்றி. இனி,இன்ஷாஅல்லாஹ் வெற்றிகள் தொடரும்.



முஹம்மத் காமில்;

9884728520                                                                                     அபு நபிலா

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::