இந்த வாரம் மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மிகவும் கேவலப்பட்ட போலி சாமியார் நித்தியானந்தாவை முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒப்பிட்டு எழுதி முஸ்லிம்களை சீண்டி பார்த்துள்ளது நக்கீரன் இதழில்..இந்த செய்தியை அறிந்த நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் உடனே நகீரனின் நிருபரை தொடர்புக் கொண்டு உலகில் உல்ல ஒட்டு மொத்த முஸ்லிம்களுடைய கண்டனத்தை அறிவித்தது.
நக்கீரனின் தலைமை நிருபர் இளைய செல்வன் இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில துணை தலைவர் எம்.முஹம்மது முனிர் காலையில் 11:00 மணியளவில் தொடர்பு கொண்டு தங்களுடைய இதழில் வெளி வந்த செய்தி முஸ்லிம்களின் மனதை புன்படுத்துவதர்க்காக வந்த செய்தி அல்ல , போலி வேசம் போட்டு திரியும் போலி சாமியார் நித்யானந்தா முகத்திரையை கிழிப்பதர்க்காக வந்த செய்தியே போலி சாமியார் வேசம் போட்டு திரியும் நித்யானந்தா தன்னை தானே முதலில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை போன்று நான் தோற்றுவித்தேன் அப்போது வந்த வேதம் திருக்குர் ஆன்,என்றும் அதைப்போன்று இயேசுவாக தோற்றுவித்தேன் அப்போது வந்த வேதம் தான் பைபிள் என்றும் கொச்சைப் படுத்தி கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வடநாட்டில் தஞ்சம் புகுந்து தப்பித்து கொண்டிருகிறான்,அப்படிப்பட்ட முகத்திரையை கிளிப்பதர்க்காக தான் தங்களுடைய இதழில் வெளியிட்டோம் என்று தெரிவித்தனர்.
ஆயினும் அந்த செய்தியின் தலைப்பாக நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பு வைத்தது முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக நேசிக்க கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை கொச்சைப் படுத்தியது போன்று இருக்கிறது இதர்க்கான விளக்கத்தை நம்முடைய தலைமைக்கு வந்து நேரடியாக வந்து விளக்கம் தர வேண்டும் என்று விடுத்தது.
இதனை ஏற்றுக் கொண்டு நக்கீரன் கோபால் அவர்கள் தங்களுடைய இணையதளத்தில் தங்களுடைய ஆழ்ந்த மன வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொண்டது.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு.....
போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன்.
அந்த வகையில், நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப்படுத்திய நித்யானந்தாவின் போலித்தனத்தை வெளிப்படுத்தவே... நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம்.
மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
-ஆசிரியர்
இருப்பினும் நித்யாந்தாவின் முகத்திரையை கிளிப்பதர்க்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரை தலைப்பாக வைத்தது எங்களுக்கு மன வேதனைக்குள்ளாகி இருக்கிறது இது சம்மதமாக இந்திய தவ்ஹீத் ஜமா அத் இன்று மாநில நிர்வாகக் குழு ஏற்பாடு செய்துள்ளது.இந்த செய்தியின் முழு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் ...
உங்கள் கருத்துகளையும் கண்டனத்தையும் தெரிவிக்க
தொலைபேசி
+ 91 – 44 – 4399 3007
+ 91 – 44 – 4399 3000
+ 91 9677091358
மின்னஞ்சல்
news@nakkheeran.in
nakkheeran@in.com
இந்த வாரம் மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான நான் தான் நபிகள்
நாயகம் என்ற தலைப்பில் வந்த செய்தி
நன்றி:::INTJ IN
சமுதாய மக்கள் ரிப்போர்ட்
மார்ச் 26 ஏப்ரல் 01 2010
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment