ஹதீஸை வளைப்பது யார்? Dr.அம்ரைனி (Q.H.)
அல்லாஹ்வின் பேரருளால் நாம் சென்ற மார்ச். 1993 இதழில் பக்கம் 38-ல் ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் அரபி மூலத்தையும் அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டிருந்தோம். அந்நபிமொழிப்படி நாம் நமது எண்ணம், சொல், செயல் ஏன்? தனிப் பெயர்கள் மூலமாக கூட பற்பலப் பிரிவுகளாக பிரியாமல் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திக் காட்டிய, அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனயும், நபியின் வழியையும் பற்றிப்பிடித்த ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமாக வாழ அழைப்பு விட்டிருந்தோம்.
இந்த அழைப்புக்கு நம்மை வலியுறுத்தியது திருக்குர்ஆனின் 22:78, 41:33 வசனங்களென்றால் அது மிகையாகாது. இவ்வசனங்களுக்கு விளக்கமாக இந்நபிமொழி தெள்ளத் தெளிவாக, வெள்ள வெளேறென அமைந்துள்ளதால் நாம் இதனையும் ஆதாரமாக எடுத்து வைத்திருந்தோம். கொள்கைகளற்ற நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முஸ்லிம்கள் என்ற கூட்டமைப்பிலிருந்து பிரித்துக் காட்டக் கூடாது என்ற ஒரே பேரவாவில் அறிவித்திருந்தோம்.
நாம் எடுத்து வைத்திருந்த அந்நபிமொழியை நமது சகோதரப் பத்திரிகை குறுகிய கண்ணோட்டத்தில் விமர்சித்திருக்கிறது. அவர்களது அரபி மொழி ஞானத்தைக் கொண்டு தங்களது இயக்கப்பற்றை வெளிக்காட்ட முனைந்துள்ளனர். அந்நபிமொழி மூலம் நாம் பெற்றுள்ள, பெற்றுவரும் அறிவுரைகளை மறந்து தங்களது அரபி மொழி ஞானத்தையும் குறுகிய கண்ணோட்டத்தில் காட்டியுள்ளனர். மேலும் சரித்திர பின்னணிகளைப் பற்றிய அவர்களது அறியாமையையும் வெளியாக்கியுள்ளனர். எனவே அவர்களது விமர்சனத்திற்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த விளக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவுகிறதோ இல்லையே இயக்கப் பற்றில் ஊறியுள்ளவர்களுக்கு உதவும் என நினைக்கிறோம். அவர்களது விமர்சனத்தால் குழம்பியிருப்பவர்களையும் தெளிவடையச் செய்யும். இன்ஷா அல்லாஹ்.
(தயவு செய்த மார்ச் 93 இதழில் குறிப்பிட்டுள்ள அரபி மூலத்துடனான ஹதீஸைப் பார்வையிடவும்)
இந்நபிமொழி நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்டு ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதில் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட எற்படப்போகும் ஐந்து நிலைகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. அதில் முதல் நிலை இறந்த காலம் பற்றியதாகும். இரண்டாவது நிலை நபி(ஸல்) அவர்களது காலத்தில் நிகழ்காலம் பற்றியதாகும். மற்ற மூன்ற நிலைகள் அன்றைக்கு எதிர்காலம் பற்றியதாகும். இவற்றில் இரு நிலைகள் நன்மையானதாகவும் மீதி மூன்று நிலைகள் தீயதாகவும் தெளிவுபடுத்தப்படுகின்றன. இந்நபிமொழியில் நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் ஏற்படவிருக்கும் எதிர்கால நிலைகள் விளக்கப்பட்டுள்ளதால் அவை இந்த 1400 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது இதன் பிறகு ஏற்படவும் செய்யலாம். எனவே சரித்திர பின்னணியிலும், மொழி ரீதியிலும் அதனை சிறிது தெளிவாகப் பார்ப்போம். மறுமை நாள் வரை சிறுகூட்டம் சத்தியத்தில் நிலைத்திருக்கும் எவருடைய தீங்கும் அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நபிமொழியை அணுக வேண்டுகிறோம்.
முதல் நிலை :
நபி(ஸல்) அவர்களின் வருகைக்குமுன் மக்கள் அறியாமையி(ஜாஹிலியத்தி)லும், தீமையிலுமிருந்ததாக ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களும் எவ்வித மறுப்புமின்றி அங்கீகரிக்கிறார்கள். இது பெரிதும் தீமைகளடங்கிய இறந்த காலத்தைப் பற்றிய முதல் நிலையாகும். இதில் எவரும் இதில் எவரும் வேறுபட்ட கருத்துக் கொள்ள வாய்ப்பேயில்லாதபடி திருகுர்ஆன் வசனங்கள். நபிமொழிகள், சரித்திரச் சான்றுகள் இன்றுமுள்ளன.
இரண்டாவது நிலை:
நபி(ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் அல்லாஹ்வின் பேரருளால் அவனது அருட்கொடையான அல்குர்ஆனைக் கொண்டும். அதன் செயல்வடிவான தனது வாழ்க்கை நெறிமுறை(சுன்னத்)களைக் கொண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை முழுமையான நன்மைக்கு (இஸ்லாத்திற்கு) அழைத்த பொற்காலமாகும். இது பெரிதும் நன்மைகளைக் கொண்ட (நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த) நிகழ்காலத்தைப் பற்றியதாகும் – நல்லதொரு நிலையாகும்.
இந்த நல்லதொரு பொற்கால நிலை நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த நிகழ்காலத்தை மட்டும் குறிக்குமா, அல்லது அதற்குப் பின் வந்த எதிர்காலத்தையும் குறிக்குமா? இந்த பொற்காலத்தின் வரைமுறை என்ன? என்ற கேள்விக்கு பதில் தேடாமல் அடுத்த எதிர்கால நிலைக்குச் செல்வது இந்த நபிமொழியை தெளிவாக விளங்கிக் கொள்ள வழி வகுக்காது. ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
நபி(ஸல்) அவர்களின் காலம் முஸ்லிம்களுக்கான ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த பொற்கால நல்ல நிலை எதுவரை தொடரும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் விளங்கிச் சென்றுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
நபி(ஸல்) அவர்களிடம் சிறந்த மக்கள் யார், என வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த நபி(ஸல்) அவர்கள்; (நான் அனுப்பப்பட்ட) எனது தலைமுறையும் இதனைத் தொடரும் (தலைமுறையும்) மேலும் அதனைத் தொடரும் (தலைமுறை) மக்களுமாவார்கள் என பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்கள்: இப்னு மஸ்ஊத், இம்ரான் பின் ஹுசைன் ஆதாரங்கள் : புகாரி: 3v/819; 5v/2, 3 8v/437,652, முஸ்லிம்: 4v/6150 முதல் 6159, அபூதாவூத்: 4v/4640 திர்மிதி: ஃபிதன், ஷஹாத், மனாகிப், இப்னுமாஜ்ஜா: 2/2362, அஹ்மத்: 1/378,417,434,438,442: 2/228,410,479, 4/267,276,277,426,427,436,440: 5/350.
இந்த ஹதீஸின் மூலம் நாம் எடுத்து வைத்த ஹதீஸில் கூறப்படும் நபி(ஸல்) அவர்களால் உருவான பொற்கால நல்ல நிலை மூன்று தலைமுறைகள் வரை வருவதைக் காணலாம். அதாவது நபி(ஸல்) வாழ்ந்த முதல் தலைமுறை அதனைத் தொடர்ந்தது என 3 தலைமுறைகளைக் குறிக்கிறது. இதில் நபி(ஸல்) வாழ்ந்த காலத்தைத் தவிர மற்றவை நபி(ஸல்) அவர்களைப் பொறுத்தவரை எதிர்கால செய்தியாகும். அதனை தீர்க்கத்தரிசனமாக அல்லாஹுவின் உதவியால் நல்கியுள்ளார்கள். அது நடந்ததா? சிறிது சரித்திர பின்னணிகளைப் பாருங்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த செய்தி சரியாக நிகழ்ந்துள்ளதைக் காணலாம்.
நபி(ஸல்) அவர்களைத் தொடர்ந்து நான்கு பெரும் கலீபாக்களை அபூபக்கர், உமர், உஸ்மான், அலி(ரழி-அன்கும்) அவர்களது காலங்களும் சிறப்பமிக்கதாக அமைந்துள்ளதை சரித்திரம் சான்று பகர்கிறது. அதாவது ஹிஜ்ரி 40 வரை இந்த நான்கு பெரும் நேர்வழி பெற்ற குலபாயே ராஷிதீன் காலமாக இருந்துள்ளது. இதற்குப்பின்தான் முஸ்லிம்களிடையே ஒரு சில சில்லரை சச்சரவுகள், பிணக்குகள், பிளவுகள், ஏற்படலாயின. எனவே ஹிஜ்ரி 40க்குப்பின் உருவாகப் போகும் தீய நிலைமைப் பற்றி ஹுதைஃபா(ரழி) வினவுகிறார்கள்.
மூன்றாம் நிலை
முந்திய இரு நிலைகளை ஹுதைஃபா(ரழி) அவர்களே நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்து விட்டு இதற்குப் பின் தீமையுண்டா? என வினவுகிறார்கள். நபி(ஸல்) அவர்களும் “ஆம் உண்டு” என பதிலளிக்கிறார்கள். அத்தீமைப் பற்றிய எந்த விபரமும் நாம் எடுத்து வைத்த ஹதீஸில் கூறப்படவில்லை; நபித்தோழரும் வினவவில்லை. நாமும் அப்படியே மொழி பெயர்த்திருந்தோம். ஆனால் இதனை விமர்சித்துள்ளவர்கள் இந்த நிலையை இஸ்லாம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் நிலை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த விளக்கத்தை எங்கிருந்து இவர்கள் பெற்றனரோ நாமறியோம். இவ்விதம் தாங்களாகவே இட்டுக்கட்டி கூறிவிட்டு நாம் சரிகண்டு எழுதியுள்ளதாக பொய்யையும் கூறியுள்ளனர். அதாவது இவர்களது விமர்சனப்படி 1. முழுமையான (ஜாஹிலியத்து) அறியாமைக்காலம் – தீமை, 2.நபி(ஸல்) மற்றும் நான்கு பெரும் கலீபாக்கள் காலம் நன்மை.
3.இஸ்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படும் காலம் – தீமை.
என்னே மேதாவித்தனம்! நபி(ஸல்) மற்றும் நான்கு பெரும் கலீபாக்களின் பொற்காலத்தைத் தொடர்ந்து வரும் ஆரம்ப தீமை இஸ்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படும் காலமாக இதற்கு எந்த ஆதாரத்தையும் வைக்காமல் தங்களது மனம் போன போக்கில் விளக்கம் தந்துள்ளதை அறியலாம்.
இஸ்லாத்தின் பொற்காலத்தை அடுத்து வரும் தீமை பற்றிய விளக்கத்தை ஏன் ஹுதைஃபா(ரழி) அவர்கள் கேட்கவில்லை. அதற்கான விளக்கம் ஏன் ஹதீஸில் இடம் பெறவில்லை என்ற நியாயமான கேள்விகளை முன்வைத்தால் அத்தீமையின் நிலைமை விளங்கிவிடும்.
நாம் மேலே எடுத்துவைத்த இப்னு மஸ்ஊத், இம்ரான், அபூஹுரைரா, ஆயிஷா(ரழி)-அன்கும்) அவர்களின் அறிவிப்புப்படி இத்தீய நிலையின் ஆரம்பத்தை அறியலாம். அதாவது நபி(ஸல்) மற்றும் குலபாயே ராஷீதீன்களின் காலத்திற்குப் பின் உருவான குழப்பமான சூழ்நிலையாகும். அப்போது வாழ்ந்த நபித்தோழர்களிடையே அரசியல் ரீதியாகவும், தலைமை ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்ற விஷயத்திலும் கருத்து வேறுபாடுகள் உருவாகின. நபித்தோழர்களே ஒருவருக்கொருவர் எதிராகப் போரிடத் தொடங்கினர். இதனடிப்படையில் உமைய்யாக்கள், ஷீஆக்கள், காரிஜிய்யாக்கள் என்ற பிளவுகள் முஸ்லிம்களிடையே தலைதூக்கின. இவையனைத்தும் ஒரு சிலரின் சுயநல நோக்கத்திற்காகவும், பதவி ஆசைகளுக்காகவும் ஏற்பட்டவையாகும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை அவை பிளவுபடுத்தவே செய்தன. எனவேதான் இதனை நபி(ஸல்) அவர்கள் தீமை எனக் கூறியுள்ளார்கள். இக்காலத்தில் ஏற்பட்ட பிணக்குகள், பிளவுகள் பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் குழப்பங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகையால் இதனை “தீமை” என்று கூறினார்களேயன்றி எவ்வித மேலதிகமான விளக்கமும் தரவில்லை. இதனை நன்கு விளங்கி வைத்திருந்த ஹுதைஃபா(ரழி) அவர்களும் விளக்கம் கேட்கவில்லை என்பதை அறியலாம். ஸாஹிபுஸ்ஸிர் நபி(ஸல்) மூலம் சில இரகசிய விஷயங்களை அறிந்தவர் எனப் பெயரிடப்பட்டவர் ஹுதைஃபா(ரழி) என்பது கவனிக்கத்தக்கது.
நபி(ஸல்) அவர்களாலும் நான்கு பெரும் கலீபாக்களாலும் பொற்காலமாக விளங்கிய நிலைக்குப்பின் எற்பட்ட நிலை சிறிது குழப்பமானது என்றே கொள்ளமுடியும். எண்ணவேண்டும். இஸ்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலையெனக் கூறுவதற்கு எவ்வித சரித்திர ஆதாரங்களுமில்லை என்பதை அறியவும். மிகவும் நல்லதொரு நிலைக்குப்பின் வரும் நிலை சிறிது கெட்டதாகவும் பின் படிப்படியாக சீரழிவதாகப் பார்ப்பதே சரியாகும். அதுவே இயற்கையாக ஏற்படும் நிலையாகும். அதனடிப்படையில் இந்த பொற்காலத்திற்குப்பின் சிறிது குழப்பம் ஏற்பட்டது. பின் சிறிது நன்மை ஏற்பட்டது; பின் அதிகமாக குழப்பங்கள் ஏற்பட்டன என தொடர்நிலைக் கொள்வதே இந்நபிமொழியை விளக்க வைக்கும். அப்படித்தான் இந்நபிமொழியைப் பார்க்க வேண்டும். இல்லையெனில் குழப்பமான ஹதீஸாக இது அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு குழப்பமான ஹதீஸாகவே நமது எதிர் தரப்பினர் விமர்சித்துள்ளனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.
நான்காவது நிலை:
நாம் குறிப்பிட்ட நபி மொழியில் நபி(ஸல்) அவர்களால் விளக்கப்படாதது. ஆனால் சரித்திர பின்னணியில் நிரூபணமான (சிறிய) தீமைகளுக்குப்பின் நன்மையுண்டா? என ஹுதைஃபா(ரழி) வினவுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் “தகனுன்” என்ற ஒரு அருஞ்சொல்லைக் கொண்டு சுருங்கக் கூறுகிறார்கள்.
“தகனுன்” என்றால் “புகைப்பற்றியது” அல்லது “புகையால் கறையூட்டப்பட்ட களங்கம்” என்பது சொல்லருத்தமாகும். இங்கு என்ன பொருளில் கூறப்படுகிறது என்பதை அறியாத ஹுதைஃபா(ரழி) அவர்கள் “தகனுன்” என்றால் என்ன? என வினவுகிறார்கள். “தகனுன்” என்பதை விளக்கிய நபி(ஸல்) அவர்கள் இரு விஷயங்களைக் கூறி எது நன்மையானது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவுபடுத்துகிறார்கள்.
அவ்விரு விஷயங்களில் முதலாவது மூன்றாவது நிலையில் முதிர்ந்த நிலையாகும். இரண்டாவது, நான்காவது நிலையின் ஆரம்பமாகும். முதலில் “தகனுன்” என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கிய இரு விஷயங்களைப் பார்ப்போம்.
1. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு கூட்டம் (குறிப்பிட்ட ஒரு கூட்டமென நபி(ஸல்) கூறவில்லை என்பதை இங்கு கவனிக்கவும்) என நேர்வழியல்லாததைக் கொண்டு (மக்களை) வழி நடத்துவார்கள்.
இந்தக் கூற்று நன்மையைக் குறிக்கிறதா? தீமையைக் குறிக்கிறதா? சிறிது சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக தீமையைக் குறிக்கிறது. அதாவது அன்றைய நிலையில் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்த பிரசாரகாரர்களின் தீய வழியை-நபி வழியல்லாததை உபதேசிக்கும் நிலையைக் குறிக்கிறது. எனவே இதனை நன்மையென எவரும் கூறமட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் கூறவில்லை. ஆனால் இத்தீமையை மிஞ்சும் விதமான நன்மை அப்போதிருப்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக்கி அதுவே நன்மையென நல்குகிறார்கள். அது என்ன? அதுதான் இரண்டாவது விஷயமாகும்.
நீர் அவர்களை (செயல்களின் மூலம்) கண்டறிந்து கொள்வீர். (மேலும் அவர்களை மறுத்து) நிராகரித்து விடுவீர்.
இங்கு நபி(ஸல்) அவர்கள் ஹுதைஃபா(ரழி) அவர்களுக்கு ஒருமையில் கூறியிருந்தாலும், பின் வரவிருக்கும் அனைவருக்கும் பொதுவான செய்தியாகையால் நாம் பன்மையில் குறிப்பிட்டிருந்தோம். இதே கரத்தினைத்தான் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்களும் தனது புகாரியின் விளக்கவுரையான பத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுளளார்கள்.
ஒரளவு அரபி ஞானமுள்ள எவரிடமும் இந்த வசனத்திலுள்ள தஃரிஃபு, மின்கும், வகுன்கிரு என்ற வாசகர்களுக்கு அர்த்தம் கேட்டாலும் முந்திய வசனத்தின் பொருளை விளங்கி இதே அர்த்தத்தினைக் கூறுவர் என்பது திண்ணம். தங்களது சொந்தக் கொள்கைக்கு மாற்றமாக இந்த ஹதீஸை நினைக்கும் அரபியறிந்தவர்கள் இதனை நிச்சயம் மறுப்பார்கள். தங்களது விருப்பத்திற்கொப்ப வளைத்து, திரித்து, இல்லாததைச் சேர்ந்து விளக்கம் தருவார்கள். அதே நிலையில் தான் இந்த தமிழாக்கத்தைத் தவறு எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் கூறும் மொழி பெயர்ப்பு:
தஃரிபு மின்கும் = அவர்களின் நல்லவற்றையும் காண்பீர். வதுன்கிரு = தீயவற்றையும் காண்பிர்.
இந்த வாசகர்களில் நல்லவை, தீயவை என்ற பொருளுக்கும், காண்பீர் என்ற அர்த்தத்திற்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ள அரபி சொற்கள் என்னென்ன என்பதை இவர்களால் விளக்க முடியுமா? ஒருவேளை ‘தஃரிபு’ என்பதற்கு நல்லதைக் காணுதல். ‘துன்கிரு’ என்பதற்கு தீயவற்றைக் காணுதல் எனப்பொருள் கொள்ளப் போகிறார்களா? இவ்விதம் இவ்விரு விளைச் சொற்களுக்கு அர்த்தம் கொள்வதற்கு எங்காவது இவர்கள் ஆதாரம் காட்டமுடியுமா?
நல்லதையும் காண்பீர், தீயதையும் காண்பீர்” என எந்த அடிப்படையில் இவர்கள் மொழி பெயர்த்துள்ளனர் என்பதையும் முந்திய வசனத்துடன் இணைத்துப் பாருங்கள். இவர்களது அதிகப் பிரசிங்கித்தனம் அழகாக வெளிப்படும் அதாவது:
ஒரு கூட்டம் எனது நேர்வழி (நபிமொழி)யல்லாததைக் கொண்டு வழிநடத்துவர். அவர்களில் நல்லதையும் காண்பிர்; தீயதையும் காண்பிர்.
இது பொருத்தமான அர்த்தமா? நபிவழியல்லாததில் நல்லதும், தீயதுமிருக்குமென இவர்கள் வக்காலத்து வாங்குகிறார்களா? இந்த பொருள் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்களா? என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஒரு கூட்டத்தாரிடமோ அல்லது ஒரு தனிமனிதனிடமோ உள்ள நல்லவை, தீயவை மார்க்கமாகாது என்பதை நினைவில் கொண்டு இதற்கு அர்த்தம் செய்வது அவசியமாகும்.
இவர்களது கூற்றுப்படி இதற்கு முந்திய நிலை “இஸ்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலையாகும். அடுத்து வரும் நிலை நல்லதும் கெட்டதும் கலந்த நிலையாகும். முற்றிலும் தீமை மலிந்த முந்தைய நிலையைவிட இது நல்ல நிலையாகும் என சொந்த வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். அப்படியானால் இஸ்லாம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தீமை மலிந்த முந்திய நிலையிலிருந்து நல்லது கெட்டதை அறியும் நல்ல நிலையை உருவாக்கிய பெருந்தலைவர்கள் யார்? என்பதை இவர்களால் விளங்க முடியுமா? நபி(ஸல்) அவர்கள் எனக் கூறவும் முடியாது. ஏனெனில் நபியவர்களின் காலத்திற்குப்பின் – இவர்களது கூற்றுப்படி-இஸ்லாம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு முற்றிலும் தீமை மலிந்ததாகிவிட்டது. எனவே வேறு யாராவது நல்லது கெட்டதை அறியும் அழகிய நிலையை உருவாக்கியிருக்க வேண்டும்! அவர்கள் யார்? இது பொருத்தமாகவுள்ளதா? அப்படியானால் உண்மையான பொருள் என்ன? குழப்பமற்ற விளக்கமென்ன?
‘தகனுன்” என்ற அருஞ்சொல்லுக்கு இரு விஷயங்களைக் கொண்டு விளக்கமளித்த நபி(ஸல்) அவர்கள் எது நன்மையானது என்பதை நாம் செய்திருந்த அர்த்தப்படிப் பார்த்தால் மிகவும் தெளிவாக விளக்க முடியும். அதனை நீங்களே இவ்வாறு கேட்டுப் பாருங்கள்; குழப்பமிருக்காது. நபி(ஸல்) அவர்களது நேர்வழியல்லாததைக் கொண்டு ஒரு கூட்டம் மக்களை வழி நடத்துவது (முதல் விஷயம்) நன்மையானதா? அல்லது நபி(ஸல்) அவர்களது நேர்வழியல்லாததைக் கொண்டு ஒரு கூட்டம் மக்களை (தீய) வழி நடத்தும்போது, அக்கூட்டத்தினரை தெளிவாகக் கண்டறிந்து மறுத்துவிடும் பெரும்பான்மையான முஸ்லிம்களைக் கொண்ட நிலை நன்மையானதா? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
தீயவழியைக் கண்டு தெளிவாக அறிந்து அவ்வழியையும், அவ்வழி காட்டும் தீயக் கூட்டத்தையும் விட்டும் விலகி அவர்களை மறுப்பதுதானே நன்மையாக முடியும். எனவேதான் நபி(ஸல்) அவர்கள் இதனை “தகனுன்” (புகையால் கறைபடிந்த) களங்கம் எனக் கூறி, அக்களங்கத்தை இலகுவாக தெளிவுபடுத்தும் மார்க்க ஞானமுள்ள முஸ்லிம்களின் சமுதாயத்தைக் கொண்ட நன்மையான நிலை எனக் கூறினார்கள்.
அதாவது இந்த நான்காவது நல்ல நிலையின்போது நபி வழியல்லாததைக் கொண்டு வழி நடத்தும் தீயக் கூட்டத்தினரை இலகுவாக விளங்கி, அறிந்து அவர்களை மறுத்துவிடும் தெளிவான மார்க்க அறிவுள்ள முஸ்லிம்களிலிருப்பார்கள். அவர்களிருப்பதால் எவரும் நபிவழியல்லாததைக் கொண்டு மக்களை வழிகெடுத்துவிட முடியாது. இது நல்ல நிலைதானே! எவராவது இதனை மறுக்க முடியுமா?
தனது மறைவிற்குப் பின் நிகழவுள்ள ஒரு நல்ல நிலையை விளக்கிச் சென்ற நபி(ஸல்) அவர்களது கூற்றுப்படி நிகழ்ந்ததா? என சரித்திர ஏடுகளைப் புரட்டினால் தெள்ள தெளிவாக நிகழ்ந்துள்ளதை அறியலாம்.
நபி(ஸல்) அவர்களின் பொற்காலத்திற்குப் பின் இப்னு மஸ்ஊத்(ரழி) ஹதீஸின்படி குலபாயே ராஷீதீன்களின் சிறப்பான காலத்திற்குப் பின் – முஸ்லிம்களிடையே சிறுசிறு பிளவுகள், பிணக்குகள், அரசியல் சண்டைகள் ஏற்பட்டு முஸ்லிம்கள் உமைய்யாக்கள், ஷீஆக்கள், காரிஜிய்யாக்கள் எனப் பிரியலாயினர். இந்த தீமையை வெளியிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறவில்லையெனினும், பின்னால் உருவாகும் பெரும் தீமைகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய சில்லரைத் தீமையாகும். எனவேதான் நபி(ஸல்) விளக்கவுமில்லை. ஸாஹிபுர்ஸிர் (ஒரு சில ரகசியங்களை அறிந்த) ஹுதைஃபா(ரழி) அவர்களும் விளக்கம் கேட்கவுமில்லை.
இந்த இரகசியம் அபூஹுரைரா(ரழி)அவர்களும் அறிந்ததே! அதைத் தான் அபூஹுரைரா(ரழி) கூறுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான் இரு ஞானங்களை மனனம் செய்தேன். ஒரு ஞானத்தை உங்களுக்கு தெரிவித்துவிட்டேன். மற்றொன்றை தெரிவித்தால் எனது குரல்வளை நெறிக்கப்படும்; தலை சீவப்படும். (பார்க்க புகாரி 1/121)
இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் இப்னுஹஜர்(ரஹ்) போன்ற பெரும்பான்மையான ஹதீஸ் வல்லுநர்கள் அபூஹுரைரா(ரழி) குறிப்பிட்ட இரண்டாவது ஞானம் ஹிஜ்ரி 40க்குப் பின் உருவாகும் குழப்பமான நிலையாகும் எனத் தெரிவிக்கிறார்கள். இதனைத்தான நபி(ஸல்) அவர்களின் பொற்காலத்தற்குப் பின் உருவாகும் தீமையெனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தத் தீமை சிறிது சிறிதாக வளர ஆரம்பிக்கிறது.
தலைமைக்காகவும், ஆட்சிப் பொறுப்புக்காகவும் சுய நல நோக்கில் உருவான உமைய்யாக்கள், ஷீஆக்கள், காரிஜிய்யாக்கள், நபி(ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத பற்பல நபிமொழிகளை தங்களது கொள்கைகளை உண்மையாக்க பொய்யாகவும், இட்டுக்கட்டியும் பனைய ஆரம்பித்தனர். இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் உருவாக தொடங்கின. இப்படி நபிவழியல்லாததைக் கொண்டு மக்களை – பிரிவினை வழியில் – வழி நடக்கத் தொடங்கினர்.
அல்லாஹுவின் பேரருளால் இப்படிப்பட்டவர்களை அடையாளம் காட்ட பல ஹதீஸ்கலா வல்லுநர்கள் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஹதீஸ்களை தரம்பிரித்து பலஹீனமானது, ஏற்கத்தகாதது, இட்டுக்கட்டப்பட்டது என மக்களை நேர்வழி படுத்தினர். பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை உலவவிடும் கூட்டத்தாரை அடையாளம் காட்டி மறுத்து நிராகரிக்க உதவினர். இந்த நிலை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் கடைசியில் உருவாகி விட்டது என்பதை ஐந்தாவது குலபாயே ராஷிதீன் என அழைக்கப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் கீழ்காணும் கூற்று விளக்குவதைப் பாரீர்.
உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அன்றைய தினம் வாழ்ந்த பெரும் ஹதீஸ்கலா வல்லுநரான அபூபக்கர் பின் ஹஜம்(ரஹ்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் உண்மையான ஹதீஸ்களையும், மார்க்க அறிவுரைகளையும், தொகுக்கும்படியும், ஹதீஸ் அறிஞர்கள் இறந்துவிடுவதாலும், பற்பல குழப்பங்களில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மக்களிடையே நிலவுவதாலும்-உண்மையான நபிமொழிகளைத் தவிர வேறெதனையும் எழுத வேண்டாமென அறிவுறுத்துகிறார்கள். (ஆதாரம்: அல்-ஜர்ஹு வத்தஃதீல், புகாரி 1/35 பாபு)
ஒருசில நபித்தோழர்களாலும், தாபிஈன்களாலும் உண்மையான ஹதீஸ்கள் முன்பே தொகுக்கப்பட்டிருந்தாலும் – நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட முதல் தீமையின் முடிவில் பற்பல ஹதீஸ்கலா வல்லுநர்கள் தரம் பிரித்து ஹதீஸ் நூல்களை தொகுக்கலாயினர். அதில் குறிப்பிடத்தக்க முதல்வர் இமாம் மாலிக்(ரஹ்-93-176ஹி.) என்றால் மிகையாகாது. இன்று நம்மிடையே பிரபல்யமாகவுள்ள எல்லா ஹதீஸ் நூல்களும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்டவையாகும்.
எந்த கூட்டம் தனது சுயநலநோக்கத்திற்காக புதுபுது ஹதீஸ்களைத் தொகுத்தாலும் அது தெளிவாக கண்டறியப்பட்டு அவரவர் காலத்தில் வாழ்ந்த அறிவிப்பாளர்கள் மூலமே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நபிவழியல்லாததைக் கொண்டு எந்த கூட்டம் மக்களை வழி நடத்தத் தொடங்கியபோதும் மார்க்க ஞானமிக்க பற்பல ஹதீஸ்கலா வல்லுநர்களால் அவர்கள் அடையாளம் காட்டப்பட்டு முஸ்லிம்களால் ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றும் நம்மிடையேயுள்ள அறிவிப்பாளர்கள் சரித்திரங்கள் (அஸ்மாஉர் ரிஜால்) மூலம் அறியலாம்.
இதனைத்தான் நபி(ஸல்) அவர்கள் கூறிய 4வது நன்மையான நிலையாகும். இது ஏறத்தாழ ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டுவரைத் தொடர்ந்தது. நம்மிடையேயுள்ள பெரும்பான்மையான உண்மை ஹதீஸ்களைக் கொண்ட நூல்கள் இந்த இரண்டு நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டவைகள் என்பதை நினைவில் நிறுத்துங்கள். இவ்விதமாக உண்மையான ஹதீஸ்களில் பொரும்பாலானவை சரியான அறிவிப்பாளர்களில் வரிசையில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டபின் ஒரு சிலர் தொடர்ந்த நூற்றாண்டுகளில் தொகுத்தனர். அதில் அந்த அளவு நுட்பம் மிளிரவில்லை. நபி(ஸல்) அவர்கள் தீர்க்கதரிசனமாகக் கூறிய ஐந்தாவது நிலை உருவாகத் தொடங்கியது.
ஐந்தாவது நிலையை நாம் பார்ப்பதற்குமுன் ஒரு நியாயமான கேள்விக்கு பதில் கண்டு விட்டுச் செல்வது அவசியமாகும். ஏனெனில் நம்மை விமர்சித்துள்ளவர்கள், நாம் இதுவரைக் கண்ட நிலையை நன்மையும், தீமையும் கலந்து களங்கப்பட்ட நிலை எனக் கூறிவிட்டு நன்மை கலப்படமில்லாத முற்றிலும் தீமை மலிந்த கடைசி கட்டத்தில் நீங்களோ, நாமோ இருக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல.
இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் திரும்பியிருப்பது உண்மையே! அவற்றுக்கான ஆதாரங்களை எடுத்து வைக்கும் இன்றைய மார்க்கப் பிரச்சாரங்கள் தங்களது சொந்த ஆதாரங்களை எடுத்து வைக்க முடியாது. அது ஏற்கத்தக்கதுமல்ல. நாம் எடுத்து வைக்கும் ஹதீஸ்களின் தரங்களும் நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்கலா வல்லுநர்களால் தரம் பிரிக்கப்பட்டவைகள் என்பதை மறக்கக் கூடாது. அவர்கள் தந்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நாம் சரிகண்டு தருகிறோம். அவர்களோ சம்பந்தப்பட்டவர்களை நேரிலோ, அதே காலத்திலோ அறிந்து எழுதியுள்ளனர். நாம் அவ்விதம் செய்யாமல் ஹதீஸ்கலா வல்லுநர்களின் கூற்றை மட்டும் ஆராய்ந்து கூறுகிறோம். எனவே நம்மை அவர்களுடன் ஒப்பிடுவது உழைக்காமல் ஊதியம் பெறும் செயலாகும். எனவே நாம் நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த 4வது நல்ல நிலையில் இல்லை என்பதை அறியவும்.
ஐந்தாவது நிலை :
பெரும்பாலும் தீமைகளடங்கிய நிலையாகும். இதனைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் விளக்கியபோது, நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடும் மார்க்க அழைப்பாளர்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும்படி ஹுதைஃபா(ரழி) வினவுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாகவும், நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள் என அடையாளம் காட்டுகிறார்கள்.
இதுதான் இன்றைய நிலை என்பது தொடரான சரித்திர சான்றுகளும், நபி(ஸல்) அவர்கள் கூறிய மற்றும் பல அடையாளங்களும், நடைமுறையில் நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகளும் நிரூபிக்கும் கூற்றாகும். இதனை நாம் தெளிவாக பார்ப்பதற்கு முன், விமர்சகர்கள் நமது மேற்படி அடையாளம் காட்டல் பற்றிய தமிழாக்கத்தை தவறான அர்த்தமென விமர்சித்துள்ளதைப் பார்ப்போம்.
‘நம்மைச் சேர்ந்தவர்கள், நாம் பேசுவதையே அவர்கள் பேசுவார்கள் என்று கூறினால், நபி(ஸல்) அவர்களின் முழு சமுதாயத்தைச் சார்ந்த குர்ஆன், ஹதீஸை பேசக் கூடியவர்கள் என்ற விரிந்த அர்த்தமுடையதாக கொள்ள முடியுமென்று சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட விரிந்த பரந்த அர்த்தத்தில்தான் நாமும் எழுதியிருந்தோம். ஆனால் அந்த விரிந்த அர்த்தத்தை இந்த ஹதீஸில் கொள்ளக்கூடாது என்றும், நபி(ஸல்) அவர்களில் அரபு வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும் அரபி பேசுபவர்களாகவும் நரகின் வாயிலுக்கு அழைப்பு விடுபவர்கள் இருப்பார்களென குறுகிய அர்த்தம் கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதே தொனியில்தான் இவர்கள் “கலீஃபா, இஷாரா” போன்ற திருக்குர்ஆன், ஹதீஸ் சொற்களுக்கு குறுகிய அர்த்தத்தைக் கூறி, தான் கூறியதுதான் சரியென மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். இவைப் பற்றியும் வெகுவிரைவில் சரியான ஆதாரங்களுடன் விமர்சிக்க இருக்கிறோம்.
இந்த ஹதீஸில் நரகின் வாயிலுக்கு அழைப்பு விடும் தீய மார்க்க பிரச்சாரங்கள் அரபு குலத்தவராகவும், அரபி மொழி பேசுபவராகத்தான் இருக்க வேண்டுமா? இப்படி குறுகிய அர்த்தத்தை எடுக்க இவர்களுக்கு அனுமதியளித்தவர்கள் யார்? தாம் அரபி குலத்தை, மொயியினரைச் சார்ந்தவர்களில்லை. எனவே எல்லா ஃபித்னாக்களையும் உருவாக்கலாம் என்ற இறுமாப்பார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனால் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்! ஆக்கியிருக்கிறோம். (12:2, 43:3)
அரபி மொழியில் அமைந்த இக்குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.
எத்தகைய (குறையும்) கோணலுமில்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (39:28)
எதனையும் தெளிவாக, விளக்கமாக ஆய்ந்துணர எவ்வித கோணலுமின்றிக் கூறிடும் அரபி மொழியில் நமது அருள்மறையும், நபிமொழிகளும் அமைந்திருக்க, தங்களது குறுகிய கோணல் புத்தியால் குறுகிய அர்த்தம் கூற இவர்களுக்கு அனுமதியளித்தது யார்? அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சிலோன், ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இந்தியாவென வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு இன, குலத்திலிருப்பவர்கள் அல்லாஹுவின் குர்ஆனையும், நபியின் ஹதீஸ்களையும் தங்களது விருப்பத்திற்கொப்ப மாற்றியும், திரித்தும் வளைத்தும் கூறி மக்களை நரகத்திற்கு அழைப்பு விட மாட்டார்களா? அப்படிப்பட்டவர்கள் இன்று எல்லா நாடுகளிலும், இனத்திலும், குலத்திலும், மொழியினரிலுமில்லையா? இதனை நாம் நிதர்சனமாகப் பார்க்க முடியவில்லையா? உதாரணமாக,
இன்று தங்களது ஷிர்க்கான கொள்கைகளுக்கிடையே குர்ஆன், ஹதீஸ் அரபி வசனங்களை செருகி மொளலூது, ராதீபு, யாகுத்பாவென அரபியில் தானும் ஓதி, மற்றவர்களையும் ஓத வைத்து நரகத்திற்கு அழைப்பு விடுபவர்கள் அரபிகளா? மற்றவர்களா?
தஸவ்ஃப் என்ற பெயரில் ஹகீகத், மஃரிபத், தரீகத், ஷரீஅத்தென அரபி சொற்களால் மக்களை ஏய்த்து நரகத்திற்கு அழைப்பு விடுபவர்கள் அரபிகளா? தமிழகத்திலில்லையா?
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏதாவது அரபி சொற்களை, வசனங்களை தட்டுத் தாயத்துக்களில் எழுதி வியாபாரம் செய்து மக்களை நரகத்தின் வாயிலுக்கு அழைப்பவர்கள் அரபிகளா? மற்றவர்களுமா?
நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபியில்லையென்ற தெளிவான நபி மொழியிலிருக்க அதனை தங்களது அரபிமொழித் திறனால் வளைத்தும், திரித்தும் கூறி மாடர்ன் நபிகளை உருவாக்கி அவர்களை நம்பும்படி மக்களை நரகத்தின் வாயிலுக்கு அழைப்பவர்கள் அரபிகளா? மற்றவர்களுமா?
அல்லாஹுவின் திருகுர்ஆன், நபி(ஸல்) அவர்களின் வழிமுறை (சுன்னத்) மட்டும் போதுமென இஸ்லாத்தின் அடிப்படைகளாக)க் கூற, இவை மட்டும் போதாது; இஜ்மா, கியாஸ் வேண்டும்; அதனடிப்படையில் இமாம்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமெனக் கூறி மக்களை நரகத்தின் வாயிலுக்கு அழைப்பவர்கள் அரபிகள் மட்டுமா? மற்றவர்களுமா?
நான்தான் இறுதி காலத்தில் வரவிருக்கும் மஸீஹ் என்றும் இப்னு மர்யம் என்றும் நாட்டுக்கு நாடு, ஏன் இந்தியாவிலேயே கீழக்கரை, காதியான் போன்ற ஊர்களில்(ஆப்ரிக்காவிலும்) ஒரு சிலர் உருவாகி மக்களை நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் அரபிகளா) மற்நவர்களுமா? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் குழப்பம் ஏற்படும் என நபி(ஸல்) கூறிய அபூதாவூதின் ஹதீஸை எடுத்து வைத்து தனது வாதத்தை நிரூபிக்க நாடியுள்ளார்களே! கீழ்க்காணும் நபிமொழியை எப்படி அணுகப் போகிறார்கள்.
கடைசி காலத்தில் 30 தஜ்ஜாலுகள் வருவார்கள், அவர்கள் தங்களை நபிகளென வாதிடுவார்கள். அறிவிப்பு : அபூரைரா(ரழி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், ஸஹீபா ஹம்மாம், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்.
இந்த நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள் 30 நஜ்ஜாலும் தனது இனத்திலோ, குலத்திலோ ஏன் அரபி மொழி பேசுபவர்களாகவோ வருவார்கள் எனக் கூறவில்லையே! மாறாக,
“பாரசீக போர்வைகளைப் போர்த்தியவர்களாக 70,000 இஸ்பஹான் யூதர்கள் பின்தொடர தஜ்ஜால் வருவான்” என நபி(ஸல்) அவர்கள’ கூறியிருக்கிறார்களே! அறிவிப்பு : அனஸ்பின்மாலிக்(ரழி) ஆதாரம்: முஸ்லிம் (4/7034) அஹ்மத்.
நாம் கூறிய விரிந்த, பரந்த பொருளில் ஹதீஸை அணுகினால் தான் மேலே குறிப்பிட்ட அனைவரையும் நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுபவர்கள் எனக் கொள்ள முடியும். அதில் அரபிகளும், அவர்கள் எடுத்து வைத்த அபூதாவூத் ஹதீஸில் பொருளும் அடங்கிவிடும். மாறாக அவர்கள் விமர்சித்தப்படி அரபுகுலம், அரபி மொழியினரை மட்டும் கூறினால் மேலே குறிப்பிட்டவர்கள், நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுபவர்களாக கொள்ள முடியாது. ஒரு வேளை தானும், தனது ரசிகர்களும் இந்த லிஸ்டில் மாட்டிக் கொள்ளக்கூடாது. என இப்படி குறுகிய வட்டத்தில் அர்த்தம் கொண்டார்களோ! என்னவோ! யாமறியோம். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!
இப்போது சொல்லுங்கள்! யார் தங்களது சொந்த விருப்பத்திற்கொப்ப ஹதீஸை திரித்தும், வளைத்தும், குறுகிய கண்ணோட்டத்தில் பொருள் கூறுபவர்கள் அவர்களா? நாங்களா? மேலும் இவர்கள் செய்துள்ள மோசடியைப் பாரீர்.
ஜில்ததினா வ அல் ஸினத்தினா என்ற ஹதீஸ் சொற்களுக்கு குறுகிய அர்த்தம் கொடுத்துவிட்டு அதனை நியாயப்படுத்த இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களும் கூறுவதாக இப்னு ஹதீஸ் பாதிக் கருத்தைக் கூறி பாதியை மறைத்துள்ளனர். ஜில்ததினா என்பதற்கு கெளமினா, உம்மத்தினா (எனது சமுதயாம், உம்மத்) என்றும்; அரபு வம்சம் என்றும் கூறலாமென இப்னு ஹஜர்(ரஹ்) கூறியுள்ளது. இங்கு கவனிக்கத்தக்க விஷயமாகும். இதில் விரிந்த பரந்த அர்த்தமுடைய முந்திய இரு அபிப்பிராயங்களை விட்டு விட்டு தங்களது வாதத்திற்கு கொப்பவுள்ள கடைசி அபிப்பிராயத்தை மட்டும் இவர்கள் ஆதாரமாகக் காட்ட காரணமென்ன? ஹதீஸை மறைப்பவர்கள், திரிப்பவர்கள், வளைப்பவர்கள் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்யுங்கள்.
அடுத்து
என்ற ஹதீஸ் வாசகத்திற்கு தவறான அர்த்தம் செய்துள்ளதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு கூட்டமைப்போ, ஒரு தலைவரோ இல்லையெனில்.. எனப் பொருள் கூறவேண்டுமாம். இது சரியா?
ஒரு அரபி வசனத்தில் “வாவ்” “ஃபா” எங்கு வரும்? “வாவ்” கொண்டு ஆரம்பித்தால் என்ன பொருள்? “ஃபா” கொண்டு ஆரம்பித்தால் என்ன பொருள் என்பது இவர்களுக்கு தெரியாதா? இதனடிப்படையில் முன்பொரு முறை தாங்கள் எழுதிய தவறான கருத்தை மூடிமறைக்க முனைந்தவர்களாயிற்றே! இந்த அரபி வாசகத்தின் ஆரம்பத்தில் “ஃபா” உள்ளதே! அதற்கேன் அர்த்தம் செய்யவில்லை. “ஃபா” முந்திய வசனத்தின் தொடராக வருவது என்பது இவர்களுக்கு தெரியாதா? அப்படி அர்த்தம் செய்தால் தங்களது தவறான வாதம் எடுபடாது என்பதாலா? அல்லது ஞாபக மறதியா? இப்போது முந்திய வசனத்துடன் பொருள் செய்து பாருங்கள்; நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
தல்ஸமு = நீர் பற்றிப் பிடித்துக் கொள்வீராக!
ஜமாஅத்தல் முஸ்லீமின் = முஸ்லீம்களின் கூட்டமைப்பையும்
டி இமாமஹும் = அவர்களின் தலைவரையும்.
(கவனிக்க : முஸ்லிம்கள் என்பதை மொழி பெயர்க்க வேண்டுமென வாதிட்ட அவர்களாலும் இங்கு முஸ்லிம்கள் என்ற பதம் மொழி பெயர்க்கப்படவில்லை)
ஹுதைஃபா(ரழி) உடனே தொடர்ந்து வினவுகிறார்:
ஃபஇன்லம்யகுன் = அப்படியே இல்லையெனில்
ஜமாஅத்துன் = ஒரு கூட்டமைப்போ (நகிரா)
வஇமாமுன் = ஒரு தலைவரோ (நகிரா)
அதாவது கடைசி காலத்தில் – நரகத்தில் வாயிலுக்கு மார்க்க பிரசுரகர்கள் அழைப்பு விடும்போது அவர்களைப் பின்பற்றாமல் முஸ்லிம்களின் கூட்டமைப்பையும், அதன் தலைவரையும் பற்றிப்பிடித்துக் கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் ஆணையிடுகிறார்கள். உடனே நபித்தோழர்; அப்படியொரு கூட்டமைப்போ, தலைவரோ இல்லையெனில்.. என வினவகிறார். நபி(ஸல்) அவர்கள்; அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால்…
எல்லாப் பிரிவினைக் கூட்டங்களையும் ஒதுக்கி வாழ்வீராக! எனக் கூறுகிறார்கள்.
இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது மறைவிற்குப்பின் ஏற்படும் பிரிவினைகளுக்கான காரணகாரியங்களைக் கூறிவிட்டு அதிலிருந்து தப்பிக்கும் விதத்தையும் விளக்குகிறார்கள். இவையனைத்தும் பிரிவினை வாதிகளின் கொள்கைகள் என அடையாளம் காட்டுகிறார்கள். அதைவிட்டு ஒதுங்கி வாழ ஆணையிடுகிறவர்கள். இந்த கடைசி வாசகத்திலுள்ள “தில்கல்ஃபிர்கா” (இந்த பிரிவினைக் கூட்டங்கள்) விஷயத்தை தங்களது விமர்சனத்திலிருந்து மறைத்தது ஏன்? தாங்களும் இந்த வாசகம் கூறும் ஒரு பிரிவினைக் கூட்டம் என்ற மனசாட்சியின் உறுத்தலா? அல்லது இதனை விமர்சித்தால் தம்மிடமுள்ள ஒரு சில ரசிகர்கள் உண்மையை விளங்கி விலகி விடுவார்கள் என்ற பயமா? அல்லாஹுக்கே வெளிச்சம்.
நபி(ஸல்) அவர்களின் முஸ்லிம் ஜமாஅத்; தனிப்பெயர்களால் கூட மக்களைப் பிரித்துச் செயல்படக் கூடாது. இந் நபிமொழிக்கொப்ப ஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தாக செயல்பட வேண்டுமென நாம் கூறியிருந்தோம். அதாவது நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒன்றுபட்ட ஒரிஜினல் முஸ்லிம் ஜமாஅத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கூறியிருந்தோம்.
இதனை தனக்கே உரிய பிரிவினை நினைப்பில் தாங்கள் ஏதோ ஒரு தனி முஸ்லிம் ஜமாஅத் ஆரம்பிக்கப்போவது போலவும், அவர்கள் தங்களது ஜமாஅத்தின் பெயரை ஆங்கில எழுத்துக்களில் சுருக்கி குறிப்பிடுவது போல், நாம் M.J. என அழைத்துக் கொள்வது போலவும்; அதன் மூலம் தலைமையடைய ஆசைப்படுவது போலவும் தங்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டு விமர்சனத்தை முடித்துள்ளார். வருந்துகிறோம்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
நமது அந்-நஜாத் ஆரம்பித்து 7 வருடங்கள் முடிந்து 8வது வருடம் நடக்கிறது; எங்காவது நாம் நமக்கென ஒரு ஜமாஅத் அதற்கென ஒரு தனிக்கொள்கை, கோட்பாடுகளை வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளோமா? நமது கொள்கை கோட்பாடுகள் அல்லாஹ்வின் அருள் மறையான குர்ஆனும் அதன் செயல்வடிவமான நபிவழிகளுமாகும். நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டிய எவ்வித களங்கமும், கலப்படமும், பிரிவினையுமற்ற முஸ்லிம்களின் ஜமாஅத் நமது ஜமாஅத் ஆகும். நாம் இஸ்லாம் மார்க்க விஷயத்தைப் பொறுத்தவரையில் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை – நபி(ஸல்) அவர்கள் மற்றும் குலபாயே ராஷிதீன்களின் பொற்காலத்தை – நோக்கி செல்லவே ஆரம்பம் முதல் வலியுறுத்தி வருகிறோம். இதில் ஆலிம்-அவாம் என்ற வேறுபாடுகள் இருக்காது; எந்த விஷயங்களையும் தங்களது ஊகங்களின் அடிப்படையில் தீர்வு காணமாட்டார்கள். தனி நபர்களின் ஆராதனைகள் அழிக்கப்படும். இதனையே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதனை முன்னாள் அந்நஜாத் ஆசிரியரும், இந்நாள் விமர்சகரும் கன்கறிவார். எனவே தான் அந்நஜாத்திலிருந்தால் தான் சேர்ந்த மெளலவி இனத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டு தானும் சமுதாயத்தால் ஓரம் கட்டப்படுவோம் என பயந்து இங்கிருந்து ஓடினார் போலும்.
இன்று தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு அதற்கென தனிப் பெயரிட்டு மற்ற முஸ்லிம்களின் பள்ளிகளில் தொழக்கூடாதென்றும் தங்களது ஜமாஅத்துக்கென ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகள் கட்டப்பட வேண்டுமெனவும் உபதேசித்து வருகிறார். இப்படி செய்வதன்மூலம் தன்னாளான அளவு முஸ்லிம்களை மேலும் பிளவுபடுத்தியுள்ளார் என்பதே உண்மையாகும். நாம் அப்படிப்பட்ட ஜமாஅத்தை கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தனது 23 வருடங்களில் உருவாக்கிய முஸ்லிம் ஜமாஅத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்து வைத்து அதில் இணையவே அழைப்பு விடுகிறோம். இதனையும் நாம் தெளிவாக மார்ச் 93 இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
பெயரளவில் முஸ்லிம் ஜமாஅத் எனக் கூறி கொண்டு, எங்களிடம் பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்றும், அவர்களுடன் உறவாடக் கூடாது என்றும் மக்களை மேலும் கூறுபோடும் ஒரு ஜமாஅத் எப்படி நபி(ஸல்) அவர்கள் காட்டிய முஸ்லிம் ஜமாஅத்தாக முடியும். கொடிய முனாபிக்களைக் கூட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் ஜமாஅத்தில் இல்லை எனக் கூறவில்லையே!
எவரொருவர் நமது கிப்லாவை முன்னோக்குபவராகவும்; நமது தொழுகையை தொழுபவராகவும்; நாம் அறுத்ததை உண்பவராகவுமிருக்கிறாரோ அவர் முஸ்லிமாகும். அவரது முழு பொறுப்பும் அல்லாஹுவிடமும் அவனது தூதர்(ஸல்) அவர்களிடமும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் முஸ்லிமுக்கான குறைந்த வரையறையைக் கொடுத்துள்ளார்களே!
அதனடிப்படையில் நாமனைவரும், நம்மிடையேயுள்ள சிறுசிறு சில்லரை வேறுபாடுகளை ஆதாரப்பூர்வமான குர்ஆன், உண்மையான ஹதீஸ்களின் அடிப்படையில் போக்கி ஒரே தலைமையின் கீழ்- அவர் எவராக இருந்தாலும் நமக்கு சம்மதமே-ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்தாக நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்திய ஜமாஅத்தில் இணைய அழைக்கிறோம். எங்களுக்கு தலைமை வேண்டாம். குர்ஆன், ஹதீஸ் ஆணைகளுக்கு இம்மியளவும் பிசகாமல் வழிகாட்டிச் செல்லும் எவர் தலைமை தாங்கினாலும் நாம் அத்தலைமையை ஏற்று நம்மாலான தொண்டாற்ற யார்! அல்லாஹ் நமது ஆசைகளை நிறைவேற்றி வைப்பானாக! ஆமீன்.
Saturday, February 13, 2010
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment